முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!- 1 (Post No.12,955)

பொன்னாங்காணி

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,955

Date uploaded in London – –   25 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் மூலிகை மர்மம் ,

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலின் பின்னணி : இது, நான் பிரிட்டிஷ் நூலகத்தில் கண்டு (British Library in London) எடுத்த நூல் . சுமார் 20  ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் பிரிட்டிஷ்  லைப்ரரியில் பத்து வெவ்வேறு சப்ஜெக்ட்  நூல்களை   எடுத்து டிஜிட்டல் வடிவில் (Digitalize)  ஏற்றவேண்டும் என்று பிரிட்டனில் உள்ள நேஷனில் லாட்டரிக்கு தமிழ் ஹெரிட்டேஜ் பவுண்டேஷன் TAMIL HERITAGE FOUNDATION (THF) சார்பில் (தமிழ் மரபு அறக்கட்டளை) மனுச் செய்தேன்  ; பணம் கிடைத்தவுடன் பத்து நூல்களையும் மின்னணு வடிவில் THF  சைட்டில் ஏற்றினோம் . இப்போதும் யாரும் அந்த பத்து நூல்களையும் இலவசமாகப் படிக்கலாம் ; மூலிகை நூலில் உள்ள சுவையான விஷயங்களை மட்டும் தருகிறேன்.

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன

xxxx

1.பொன்னாங்காணி சமூலத்தை ஒருவர் அதிகாலையில் எழுந் வாய்கொண்டமட்டும் தின்றுவரவும்  . இப்படி மண்டலக்   கணக்  காய் அருந்தினால் உடலில் குளிர்ச்சி  உண்டாகும். கண் குளிர்ச்சி உண்டாம். பகலில் நட்சத்திரம் தெரியும்.

xxxx

2.அரசம் விதையை பாலில் காய்ச்சி உண்டு வந்தால் நீர்க்கடுப்பு மேக சிலுமிஷம் தீரும் . இதை மண்டக்கணக்காக பெண்கள் சாப்பிட்டு வந்தால் கெர்ப்பந்தரிக்கும் . கெர்ப்பந்தரிக்க அனுபோகமான எண்ணெய்  முறை பார்வதீ பரணீயத்தில் சொல்லியிருக்கிறது .

xxxx

3.அகத்திக் கீரையை யாவரேனும்  வாரத்திற்கு இருமுறை சமைத்து உண்டி யோடு உபயோகி த்து வந்தால் பித்தகம்- பித்தாதிக்கம் – பித்த மயக்கம் இவை அணுவேனும் அணுகாது.

xxxx

4.அருநெல்லியை வடகம் செய்து வைத்திருந்து துவையல் முதலிய காரசாரத்துடன் உபயோகித்து வந்தால் பித்த சாந்தியும் தேகக் குளிர்ச்சியும் நேத்ராப் பிரகாசமும் உண்டாகும்.

xxxx

5.ரசம் கட்ட :-அம்மான் பச்சரிசியை அரைத்து குகை செய்து சூதகத்தை கிரமப்படி சுத்தி செய்து உருக்கினால் கட்டிவிடும்.

xxxx

6.அழிஞ்சி வேர் ,சித்திரமூலம் வேர், செவியம் , பேராமுட்டி, முருங்கைப்பட்டை, பூசணி வேர் வகைக்கு -வ- பலம் எடுத்து படி தண்ணீரில் போட்டு கேட்டுக்கொன்றாய் காய்ச்சி வடித்துக் கொடுக்கவும் . அதிக வேர்வை , வெருப்பு, மயக்கம், நாக்கு வழுவழுப்பு , மலஜலம் வெளுப்பு முதலிய சேத்துமஜென்னி தீரும்.

xxxx

7.அப்பைக் கோவைக்கிழங்கைக் கொட்டைப்பாக்களவு எடுத்து பசும் பாலில் அறைத்துகே கொடுக்க முலைக்குத்து – கடிவிஷம்- கரப்பான் வியாதிகள் தீரும். புளிப்பும் கரப்பான் பதார்த்தங களையும்  நீக்கி பத்தியமிருக்கவேண்டியது.

xxxx

8.அலரிச் செடியின் சமூலமும் கடுக்காயும் சுட்டுக்காரியாக்கி நல்லெண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் யில் குழைத்து சிரங்குகளுக்குத் தடவ உலர்ந்துபோகும்.

xxxx

9.அமுக்கனாங்கிழங்கு– நீர்முள்ளி வித்து -குறுந்தொட்டி வேர் சமனிடை எடுத்து பசும் வெண்ணெயில் குழைத்துச் சாப்பிடவும், இப்படி இருவேளையும் 20 நாள் சாப்பிட தாது விருத்தியுண்டாகும் .

xxxx

அவுரி இலை – வசம்பு- உள்ளி- இம்மூன்றும் சமனிடை எடுத்து சிதைத்து நாசியில் நஸ்யம் செய்தால் ஜன்னி, புரயிசுவு , வலி, கழுத்து வலி இதுகள்  தீரும் .

To be continued………………………..

tags- மூலிகை மர்மம் , 1899, வெளியிட்ட ஆண்டு, முனிசாமி முதலியார்

Leave a comment

Leave a comment