
Date uploaded in London – – 25 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
QUIZ SERIAL No.99
1.சப்த புரி என்று போற்றப்படும் ஏழு புனித நகரங்களில் ஒன்றான புரி நகரம் எங்கே இருக்கிறது ? அதன் முக்கியத்துவம் என்ன?
xxxx
2.புரி நகரத்திலுள்ள ஜகந்நாதர் ஆலயத்தில் யார், யாரைத் தரிசனம் செய்யலாம்?
3.ஜகந்நாதர் கோவில் ரத யாத்ரா எப்படி உலகம் முழுதும் பிரசித்தம்அடைந்தது ?
xxxx
4.அண்மைக்காலத்தில் ஜகந்நாதர் ரத யாத்திரையை உலகெங்கும் நடத்துவது யார் ?
xxxx
5.ரத யாத்திரை எவ்வளவு நாட்கள் , எப்போது நடக்கும் ?
xxxxx
6.ஜகந்நாதர் ஆலயத்துக்கு எத்தனை வாசல்கள் ? கோபுரத்தின் உயரம் என்ன ?
xxxx
7.கோவிலின் கிழக்கு வாசலுக்கு எதிரேயுள்ள அருண ஸ்தம்பத்தின் விளக்கம் என்ன ?
XXXX
8.ஜகந்நாதர் கோவிலில் வணங்கப்படும் மூர்த்திகளின் தனிச் சிறப்பு என்ன ?
XXXX
9.ஜகந்நாதர் கோவில் சமையல் அறை உலகிலேயே பெரிய சமையல் அறையா ?
XXXX
10. ஜகந்நாதர் (PURI நகர்) கோவில் பற்றிச் சொல்லப்படும் அதிசயங்கள் என்ன ?
XXXX


விடைகள்
1.ஒடிசா (ஒரிஸ்ஸா) மாநிலத்தில் புரி நகரம் இருக்கிறது. மாநிலத் தலைநகரம் புவனேஸ்வரிலிருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கிறது .
சைதன்ய மஹா பிரபு இங்கு மாயமாய் மறைந்தார் ; தற்காலத்தில் தினமும் கடற்கரை ஆர்த்தி நடக்கிறது .
ஆதி சங்கரர் ஸ்தாபித்த நான்கு மடங்களில் இங்கு கோவர்த்தன மடம் உள்ளது
xxxx
2.கிருஷ்ண பரமாத்மா , அவருடைய அண்ணன் பலபத்ரா (பலராமன்), தங்கை சுபத்ரா ஆகிய மூவரை தரிசிக்கலாம் .
xxxx
3.ஆங்கில அகராதியில் ஜக்கர்னாட் என்ற சொல்லைத் தோற்றுவித்தது ஜகந்நாதர் ஆலயம். இந்த ரத யாத்திரையின்போது மக்கள் தேர்ச் சக்கரத்தில் சிக்கி இறப்பது வாடிக்கையாக இருந்தது . இதை ஆங்கிலத்தில் எதையும் நசுக்கித் தள்ளி முன்னேறும் விசை அல்லது பொருள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தத் துவங்கினர் .
1: a massive inexorable force, campaign, movement, or object that crushes whatever is in its path
an advertising juggernaut, a political juggernaut
2.chiefly British : a large heavy truck
xxxx
4.பக்திவேதாந்த பிரபுபாதா துவக்கிய ஹரே கிருஷ்ணா இயக்கம், தற்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பெரிய நக ரங்களில் ஜகந்நாதர்/கிருஷ்ணா, பலபத்ரா, சுபத்ரா உருவங்களுடன் ரத யாத்திரையை முக்கிய வீதிகளின் வழியே நடத்துகிறது .
xxxx
5.உலகப் புகழ்பெற்ற புரி ஜகந்நாதர் ரத யாத்திரை ஆஷாட (ஜூன்-ஜூலை) மாதத்தில் ஒன்பது நாட்கள் நடக்கும் ; மூன்று ரதங்களை லட்சக் கணக்கானோர் இழுத்து வருவார்கள் .தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.
Xxxx
6. கோபுர உயரம் 190 அடி. கோவிலுக்கு நான்கு வாசல்கள் உண்டு,
கிழக்குப் பகுதியில் சிங்கத்தவார என்னும் சிங்க வாசல் ; இதுதான் கோவிலின் நுழைவாயில். தெற்கு திசையில் அஸ்வத்துவார் என்னும் குதிரை வாசல்; மேற்கில் வியாக்ர வாசல், அதாவது புலி வாசல்; வடக்கில் யானை வாசல் (ஹாத்தி த்வார் ); இவை தர்மம், ஞானம், வைராக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றைக் குறிக்கின்றன.
XXXXX
7. அருணன் என்றால் சூரியன் (Aruna Stambha {Solar Pillar} . இந்தக் கல் தூணின் உச்சியில் தியான நிலையில் இருக்கும் சூரியனின் உருவம் இருக்கும். 16 பட்டைகள் கொண்ட இந்த குளோரைட் தூணை கோனார்க் நகரிலுள்ள சூரியன் கோவிலிலிருந்து எடுத்து வந்து இங்கே நிறுவி இருக்கிறார்கள்.
XXXX
8. பொதுவாக, கோவில்களில் கல் அல்லது லோகத்தால் ஆன சிலை அல்லது விக்கிரகம் வழிபாட்டில் இருக்கும். ஆனால் இங்கோ வேப்ப மரத்தினால் ஆன மூர்த்திகள் வழிபாட்டில் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உருவங்களை செதுக்குவார்கள் ; பெரிய முழிகளுடன் , வர்ணங்கள் தீட்டப்பட்ட இவை, கோவில் சிலைகள் போல வடிவாக இராது .
XXXX
9. ஆமாம். அமிர்தசரஸ் பொற்கோவில் சமையல்அறை போல ஒரு லட்சம் பேருக்கு இலவச அன்னதானம் செய்தாலும் இங்குதான் 500 வகையான உணவு வகைகளைச் செய்கின்றனர் . வேறு எங்கும் இத்தனை வகைப் பிரசாதங்கள் கிடையாது ; மிஞ்சிய உணவை வீணடிக்கக்காமல் காயவைத்து பிரசாதமாகவும் விற்று விடுகிறார்கள் . ரசோய் கர் என்று அழைப்பார்கள். மஹாலெட்சுமியே கண்காணிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள் .
XXXXX
10.கோவிலின் நிழல் கீழே விழாது.
கோவில் கோபுர கொடியை அர்ச்சகர் தினமும் மாற்றவேண்டும் ; இது 1800 ஆண்டுகளாக தினமும் நடக்கிறது .
கோவில் கோபுர கொடி, காற்று வீசும் திசையை நோக்கிப் பறக்கும் . ஏனைய இடங்களில் இப்படி இல்லை
கோபுரத்துக்கு மேல் பறவைகள் உட்காராது; பறக்காது .
கடலோர நகரங்களில் காலையில் காற்று கடலிலருந்து வரும்; மாலையில் கடற்பரப்பை நோக்கி வீசும் ; இங்கு இது நேர்மாறாக நடக்கிறது .
கோவில் கடற்கரையில் இருக்கிறது ; ஆயினும் கோவிலுக்குள் நுழைந்துவிட்டால் இந்த சப்தம் கேசமும் கேட்காது .
கோபுரத்தின் உச்சியில் ஒரு டன் எடையுள்ள கல் சக்கரம் சுழல் கிறது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இதை இவ்வளவு உயரத்துக்கு ஏற்றினர் என்பது அதிசயமே .
உலகிலேயே பெரிய சமையல் அறை உள்ளது; தினமும் 56 வகை பிரசாதங்கள் நைவேத்தியம் செய்யப்படுகின்றன. ஆண்டில் மொத்தம் 500 வகையான பிரசாதங்கள் செய்யப்படுகின்றன.
–SUBHAM —
TAGS- புரி, ரத யாத்திரை, ஜகந்நாதர், பலபத்ரா சுபத்ரா, கோபுர அதிசயங்கள் , பெரிய சமையல் அறை