
Date uploaded in London – – 26 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
QUIZ SERIAL No.100
1.சப்த புரி என்னும் ஏழு புனித நகரங்களில் துவாரகா எங்கே இருக்கிறது ? அதன் சிறப்புக்குக் காரணம் என்ன ?
XXXX
2.பேட் துவாரகை எங்கே இருக்கிறது ? அங்குள்ள விசேஷம் என்ன ?
xxxx
3.துவாரகா கோவிலை இடித்த முஸ்லீம் மத வெறியனின் பெயர் என்ன ?
XXXX
4.வைணவத் திருத்தலங்களில் ( 108) ஒன்றாக விளங்கும் துவாரகாதீசர் கோவிலைப் பாடிய ஆழ்வார்கள் யார் ?
xxxx
5.கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்ட துவாரகாவில் என்ன கிடைத்தது?
xxxx
6.துவாரகா பற்றி மஹாபாரதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
xxxx
7. கிருஷ்ணர் இறந்த இடம் எங்கே உள்ளன ?
xxxx
8. மதுராவிலிருந்து 800 மைல் தூரத்திலுள்ள துவாரகாவுக்கு ஏன் கிருஷ்ணா குடிபெயர்ந்தார் ?
XXXX
9.துவாரகா , சைவர்களுக்கும் முக்கிய இடமாகத் திகழ்வது எப்படி?
xxxxx
10.துவாரகா ஏன் கடலில் மூழ்கியது?
XXXX


விடைகள்
1.துவாரகா நகரம், குஜராத் மாநிலத்தில் கோமதி ஆற்றின் வலது கரையில் அரபிக் கடற் கரையில் இருக்கிறது ; யது குல அரசர்கள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகராக விளங்கியது. மோட்சம் அடையும் வாயிலாக இருப்பதால் துவாரகை என்ற பெயர் ஏற்பட்டது. கோவிலுக்கு அருகில் கோமதி நதி கடலில் சங்கமம் ஆகிறது.போர்பந்தர், ஜாம்நகர் ஆகியன அருகிலுள்ள விமான நிலையங்கள்.
மூலவர்- கல்யாண ராமன், த்வாரகாதீசன், த்வாரகா நாத்ஜீ , நின்ற திருக்கோலம்
தாயார்- கல்யாண நாச்சியார், லெட்சுமி, ருக்மிணி, அஷ்ட மஹிஷிகள் என்னும் எட்டு மனைவியர்
XXXX
2.. துவாரகை நகரிலிருந்து 32 கி. மீ., தொலைவில் உள்ள ஒகா கடற்கரை வரை பேருந்தில் சென்று, பின் அங்கிருந்து விசைப்படகு மூலம் பேட் துவாரகையை அடையலாம். கட்ச் வளைகுடாவில் உள்ள ஒரு சிறு தீவு பேட் துவாரகை; இங்கு கிருஷ்ணர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். கிருஷ்ணனின் மாளிகை இது. இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி, நாராயணன் என மொத்தம் ஐந்து கோவில்களும் சங்க தீர்த்தம் என்னும் தீர்த்தமும் இருக்கின்றன. சிந்து-சரஸ்வதி நாகரீக தடயங்கள் இங்கே கிடைத்திருக்கின்றன.
XXXXX
3.மகமது பேகடா Mahmud Begada என்னும் சுல்தான் 1473 ஆம் ஆண்டில், கிருஷ்ணரின் கோவிலை இடித்து, உள்ளேயிருந்த செல்வங்களைக் கொள்ளை அடித்தான்.
xxxx
4.பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்கள 13 பாசுரங்களைப் பாடியுள்ளனர்.
xxxx
5. பேட் துவாரகையில் 1982-இல் அகழாய்வு செய்த போது, சிந்து-சரஸ்வதி நாகரீக மட்பாண்டங்கள் கிடைத்தன. 1500 BCE ஆண்டுகளுக்கு முற்பட்ட 580 மீட்டர் நீளம் கொண்ட சுவர் கடலில் அமிந்திருப்பது கண்டெடுக்கப்பட்டது. மேலும் சிந்து-சரஸ்வதி நாகரீக முத்திரைகள், எழுத்துக்கள் பொறித்த குடுவை, செப்புக் கலைஞரின் அச்சு, செப்பு மீன் கொக்கி, கப்பல்களில் அழிந்த பாகங்கள், கல் நங்கூரம் ஆகியன கிடைத்தன .
XXXX
6.துர்வாச முனிவர் நீண்டகாலம் துவாரகையில் தங்கி தவமிருந்தார். (மகாபாரதம்; 13, 160)
பாண்டவர்கள் வன வாழ்க்கை காலத்தில் அர்ஜுனன் சில ஆண்டுகள் தங்கி சுபத்திரையை மணந்தான்.
மஹாபாரதப் போரில் துவாரகையின் கிருதவர்மன், கௌரவர் அணியிலும்; சாத்தியகி பாண்டவர் அணியிலும் நின்று போரிட்டனர்.
மௌசல பர்வத்தில், சாம்பனால் யாதவர்கள் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் பலராமர் துவாரகையை தீயிட்டு அழித்த பின் சரசுவதி ஆற்றை நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார்.
xxxx
7.கிருஷ்ணன் , வைகுண்டத்துப்போக தயாரானவுடன் , ஒரு வேடனின் அம்பினால் உயிர்நீத்தார்; அதற்கு முன் அவர் அரச மரத்துக்கு அடியில் படுத்திருந்த சயன கோலத்தை பாலகா என்னும் இடத்தில் காணலாம்.
XXXX
8. ஜராசந்தன் என்னும் மன்னன் மக்களைகத் துன்புறுத்தியதால் ,கிருஷ்ணன் யாதவ குடிகளை உத்தரப்பிரதேசத்திலிருந்து குஜராத்துக்கு அழைத்து வந்தான். விஸ்வகர்மாவைக்கொண்டு துவாரகை நகரை நிர்மாணித்தான்.
xxxx
9.ஆதி சங்கரர், பாரத நாட்டின் நான்கு மூலைகளில், நான்கு மடங்களை நிறுவி பாரத நாடு ஒன்றே என்று காட்டினார். அவர் மேற்கு திசையில் ஸ்தாபித்த பீடம் துவாரகா பீடம் . மேலும் வெராவால் ஸ்டேஷனில் இறங்கி, கஜினி முகமது அழித்து பின்னர் வல்லப்பாய் படேல் முயற்சியில் எழும்பிய, புகழ்பெற்ற சோமநாதர் ஆலயத்தைக் கண்டு, சிவ பெருமானைத் தரிசிக்கலாம் .ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான நாகேஸ்வரர் கோவில் 16 கி.மீ தொலைவில்தான் இருக்கிறது.
xxxx
10.துவாரகை என்னும் இடத்தைக் கிருஷ்ணன், சமுத்திர ராஜனிடம் வாங்கி , புதிய நகரை எழுப்பியதாக ஸ்தல புராணம் கூறும்; இதே போல கேரளத்தைப் பரசுராமர் கடலிலிருந்து மீட்டதாகவும் சொல்லுவர் . இதன் பொருள் என்னவென்றால், கட ல் பின்வாங்கிய இடத்தில் புதிய குடிஏற்றம் நிகழ்ந்தது என்பதேயாகும் . கடல் பின் வாங்கி வருவதையம் சுனாமி போன்ற சீற்றங்களால் நகரங்கள் மூழ்குவதையும் வரலாறு காட்டுகிறது. .
—subham—
Tags- துவாரகை துவாரகா , கிருஷ்ணர், சிந்து-சரஸ்வதி நாகரீக தடயங்கள், பேட் துவாரகை