.

அதிமதுரம்
Date uploaded in London – – 27 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Part 2
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன
XXXXX
இந்த நூலில் எனக்குப்பிடித்த விஷயங்கள் ;
நாம் சாதாரணமாகக் கேள்விப்படாத பல மூலிகைகளின் பெயர்கள் வருகின்றன. மேலும் ஓரிரு வரிகளில் செய்தி கிடைக்கிறது.
மூன்றாவதாக அகர வரிசையில் மூலிகைகள் இருப்பதால், நாம் தேடும் மூலிகையைக் கண்டுபிடிப்பது எளிதாகிறது.
XXXXX
11. அதிமதுரம்-கடுக்காய்-மிளகு மூன்றும் சமனிடை எடுத்து இளம் வறுப்பாய் வறுத்து சூரணம் செய்து , ஒரு வேளைக்கு துட்டிடை சூரணம் எடுத்து தேனில் குழைத்துக் கொடுக்க சூட்டிருமல் நிவர்த்தியாகும்.

அதிமதுரம்
XXXX
12. அக்கிரா காரத்தைதை பொடி செய்து , பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் , நா வறட்சி, தோஷம், ஜன்னி, தோஷம்- வாந்தி, கபம்- இவைகள் நிவர்த்தியாகும்.
XXXX
13. ஆண்குறி கெட்டிப்பட : அபினி– அக்கிரா காரம்- மரு தோன்றி விறை — இதுகள் சமனிடை எடுத்து தேன்விட்டு அறைத்து பத்துப்போடுவது போல ஆண்குறி மீது தடவிவருவது . இப்படி 15 நாள் தடவினால் ஆண்குறி பெருத்தும் நீண்டும் நன்றாய்க் கெட்டிப்படும். தாது புஷ்டி பற்றி அநேகமான விசேஷ முறைகள் பார்வதி பரணீயத்தில் சொல்லியிருக்கிறது.
XXXXX
(பார்வதி பரணீயம் என்னும் நூலில் கண்ட விஷயங்களைத் தான் தருவதாக ஆசிரியர் முன்னுரையில் கூறியிருக்கிறார் ).
XXXX
எச்சரிக்கை – இந்தக் கட்டுரையில் நான் எழுதும் விஷயங்களை தகுதி பெற்ற டாக்டரின்/ வைத்தியரின் ஆலோசனையைக் கேட்டுப் பயன்படுத்தவும் .
ஒரு சுவையான விஷயத்தைச் சொல்கிறேன் . பெண்களுக்கு முடியை அகற்ற சில வகைக் கிரீம்கள் / களிம்புகள் Hair Removing Creams உள்ளன. ஒரு ஆண்மகன் கல்யாணத்துக்கு முதல் நாள், கீழ்ப்பகுதியில் உள்ள முடிகளை கற்ற, அந்த க்ரீமை தடவிக்கொண்டு எரிச்சல் காரணமாக தவியாய்த் தவித்துவிட்டார் ; கொஞ்சமும் கூச்சப்படாமல் இதை ஆங்கிலப் பத்திரிக்கையில் எழுதி மற்ற கல்யாண மாப்பிள்ளைகளை எச்சரித்து இருந்தார் ; வாழ்க அந்த ஆண்மகன்!
XXXX
சஞ்சீவி மூலிகை !!!
14 . அழுக்கண்ணிச்செடியை ஆதிவாரத்தில் சந்திரன் கடக ராசியில் இருக்கும்போது தன்னுடைய நிழல் செடியின் மேல் படாமலே பிடிங்கிவந்து ஐந்து நாள் ராத்திரியில் பனியில்வைத்து எடுத்து, நிழலில் உலர்த்திஇடித்து வஸ்திரகாயம் செய்து ஒரு வேளைக்கு ஒரு விராகன் எடை சூரணம் எடுத்து , அதற்குச் சமபாகம் கற்கண்டுத் தூளும் தேனும் இழைத்துச் சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டியுண்டாகும் . தாது புஷ்டியுண்டாகும்; பசியதிகரிக்கும் ; சகல ரோகங்களும் தீரும். இதனால் ஒரு பொல்லாங்கு வராது. இந்த அழுக்கண்ணிச்செடியின் நிறமும் …. இலைகளின் அளவும் இது இருக்கும்படியானயிடமும் அதனுடைய ருசிபாகமும் பார்வதி பரணீயம் என்னும் சாஸ்திரத்தில் பார்த்துக்கொள்ளவும் .
XXXX
15. இளைத்த உடம்புக்கு : அயக்கம்பியை சிவக்க காய்ச்சி பசும் மோரில் தோய்த்து சாதத்திற்கும், வேண்டியபோது தாகத்திற்கும் உபயோகித்து வந்தால் , பழைய சுரம் , சகல கழிச்சல், பழைய பேதி இவைகள் நிவர்த்தியாகும்.
XXXX
16.மயிர் வேண்டாத இடத்திற்கு :- அரிதாரம் இரண்டு பங்கு சுண்ணாம்பு ஒரு பங்கு இவ்விரண்டும் சேர்த்து தண்ணீர் விட்டறைத்து , மயிர் வேண்டாத இடத்தில் சந்தனம் பூசுவது போல் நன்றாய்த் தடவி சற்றுநேரம் கழித்துக் கழுவிப்போடவும் ;உதிர்ந்துவிடும் .
XXXX
17.வயிற்றில் இறந்த பிள்ளை கீழே விழ : அதிமதுரம், தேவதாரம் வகைக்குப் பலம் 1 வெந்நீர் விட்டரைத்துக் கலக்கி இரண்டு வேளை உள்ளுக்குக் கொடுக்க பிள்ளை கீழே விழும்.
XXXXX
இந்த மூலிகை மர்மத்திற்குத் தாய் நூலாகிய பார்வதி பரணீயமென்னும் சாஸ்திரத்தை சகலமான வெளிநாட்டிலுள்ளவர்கள் யாவரும் பிராணாதாரமாய் கையில் வைத்திருக்கவேண்டியதவசியம்.
XXXX
ஆ
18.பால் உண்டாக :- ஆலம் விழுதும் ஆலம் விரையும் சம அளவு கொண்டு பாலில் காய்ச்சியுண்டால் பாலில்லாத பெண்களுக்குப் பால் உண்டாகும். முகத் தேஜசு உண்டாகும்.
XXXX
19. சிலந்தி வீக்கத்திற்கு :- ஆளி விரையை முலைப்பால் விட்டறைத்து வெண்ணெயில் மத்தித்து சிலந்தி , வீக்கம் இதுகளில் தடவ வற்றிப்போகும்.
XXXX
20.ஆவாரைப் பஞ்சாங்க சூரணம் மூன்று பங்கும், கோரைக்கிழங்கு கிச்சிலிக் கிழங்கு சூரணம் ஒரு பங்கும் கூட்டி தினந்தோறும் உடம்பிற்குத் தேய்த்துக் குளித்துவந்தால் கற்றாலை நாற்றம் தீரும் .
XXXX
குறிப்பு – இந்தக் காலத்தில் நிறைய மருந்துகள் வந்துவிட்டதால் மேற்படி விஷயங்கள் தேவை இல்லாமல் போகலாம். ஆயினும் அந்தக் காலத்தில் நம்மவர்கள் என்னெவெல்லாம் செய்தனர் என்பதையும் அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் எவை என்பதையும் அறிய இவை உதவும் ; இக்காலத்தில் இந்த மூலிகை அனைத்தையும் அடையாளம் காணக்கூடியவர்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகமே ; கிராமப்புற்ற சந்திக்களில் மூலிகை விற்போரிடம் இவைகளை அறிந்து வீடியோ படங்களுடன் வெளியிட்டால் ஆராய்ச்சி செய்வோருக்கு பேருதவியாக இருக்கும். . அவைகளை ஒப்பிட்டு குறைகளையும் நிறைகளையும் அறியலாம் . லணடனிலுள்ள வெல்கம் லைப்ரரியில் ஏராளமான ஓலைச் சுவடிகளை படம் எடுத்துக் பாதுகாத்து வருகின்றனர் ; அங்குள்ள ஒரு ஆராய்ச்சியாளருக்கு தமிழ் சுவடிகளை மொழிபெயர்த்துத் தந்தேன் . லண்டன் நகரிலுள்ள உலகப் புகழ் பெற்ற கியூஉ தாவர வியல் பூங்காவில் அனைத்து உலக தாவர விஷயங்களையும் , தாவர விதைகளையும் சேமித்து வைத்துள்ளனர் ; இது போன்ற பயனுள்ள பணிகளைத் தமிழர்கள் செய்யவேண்டும்.
–subham—
Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள், பார்ட்2, part 2, அதிமதுரம் , Munisami Mudaliyar