இமய மலையில் வளரும் ஜடா மான்ஸி (Nardostachys Jatamansi ) மூலிகை அருகி வருகிறது . ஆகையால் இதன் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்துவிட்டது. ஆயினும் மூலிகை அடங்கிய மருந்துகளை ஏற்றுமதி செய்யலாம் .
இதை ஸ்பைக்னார்ட் என்றும் நார்ட் Jatamansi (also called Spikenard or Nard) என்றும் சொல்லுவார்கள் . இமய மலையில் அதிக உயரத்தில் (1௦௦௦௦ அடி முதல் 16,,400 அடி வரை ) மட்டும் வளரும் . இந்தியா , பூட்டான், நேபாளம் , பர்மா,சீனா ஆகிய நாடுகளில் வளர்கிறது .
இந்தியாவில் கிழக்கு இமயமலைப் பகுதியிலும் , சிக்கிமிலும் , குமாவோன் மலைகளிலும் விளைகிறது ; பூக்கும் தாவர பிரிவைச் சேர்ந்த இந்தச் செடியை ஹனிசைக்கிள் honeysuckle family குடும்பத்தில் சேர்க்கிறார்கள். பூக்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும்
பூக்கள் மணிகள் போன்ற வடிவம் உடையவை . தமிழ் உள்பட பெரும்பாலான இந்திய மொழிகளில் இதை ஜடா மான்சி என்றே அழைக்கின்றனர் . சம்ஸ்க்ருதத்தில் தபஸ்வினி அல்லது பியாட ஜடா என்றும் இந்தியில் பல் சார என்றும் பெயர்கள் (Tapaswani and Bhytajata in Sanskrit; Balchara in Hindi).
இது கேப்ரிபோலியேசி Caprifoliaceae or Valerianaceae குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும் . இதை மஸ்க் ரூட் , நார்ட் Muskroot, Nard என்ற பொதுப்பெயர்களிலும் அழைப்பார்கள் .
இதிலுள்ள ரசாயன பொருட்கள்
acaciin
ursolic acid
octacosanol
kanshone A
nardosinonediol
nardosinone
aristolen-9beta-ol
oleanolic acid
பீட்டா -சிட்டோஸ்டெரோல் என்பன ஆகும் .
xxxxx
மருத்துவ உபயோகங்கள்
மூளைக்கு பலம் தரும் ( brain protective property).
வலிப்பு, கிறுகிறுப்பு , காய்ச்சல் ஆகியவற்றை நீக்கும் seizures, vertigo etc., in fever
ஜடா மான்சி எண்ணெய் ( oil of jatamansi ) பளபளப்பான தலை முடி வளர உதவும் .
ரத்த அழுத்த நோய்க்கும் மருந்து .
தேள் கடி சிகிச்சையிலும் இதை பயன்படுத்துகின்றனர் .
பொதுவாகச் சொல்லவேண்டுமானால் உடலிலுள்ள எல்லா அவயவங்களுக்கும் நல்லதைச் செய்யும்.
தூக்கமின்மை insomnia நோய்க்கும் இதை மருந்தாக உபயோகிக்கின்றனர் .உடலி லுள்ள செல்களை சேதம் அடையாமல் தடுக்கும் ரசாயனங்களை ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் Anti-oxidants என்பர் . இது ஜடாமான்சியில் அதிகம் இருப்பதால் இதை மருத்துவர்கள் நாடுகின்றனர் . உடலைச் சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் (Anti-oxidants) இவர்கள். இயற்கையில் இது பழங்களில் அதிகம் காணப்படுகிறது
xxxxx
விலை என்ன ? 100 கிராம் 250 ரூபாய் ஆகும்
– जटामांसी (100 Grams)
Jatamansi has been found to have anxiolytic effects, reducing anxiety symptoms in individuals. source: ncbi
Jatamansi has been shown to regulate neurotransmitters in the brain, improving mood and emotional well-being. source: ncbi
Jatamansi has been shown to have anti-convulsant effects, reducing the frequency and severity of seizures. source: ncbi
Jatamansi extract has been shown to improve sleep quality in individuals with. source: ncbi
National Center for Biotechnology Information= N C B I
1.இந்தியாவில் ஐஸ் கட்டி மூலம் ஆண்டுதோறும் தோன்றும் பனிக்கட்டி லிங்கம் எங்கே இருக்கிறது ?
XXXX
2.நெய் அபிஷேகம் செய்து செய்து முழுக்க, முழுக்க நெய் மலையாகி விட்ட நெய் லிங்கம் எங்கே இருக்கிறது ?
xxxx
3.ஆண்டுதோறும் சித்திரை மற்றும் ஆவணி மாதத்தில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்ச்சி நடைபெறும் கோவில் எங்கே இருக்கிறது ?
xxxx
4.உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் எங்கே இருக்கிறது ?
xxxx
5.கேரளத்தில் பெரிய சிவலிங்கம் உள்ள இடம் எது ? லிங்கத்தின் உயரம் என்ன ?
xxxx
6.தலையில் துளை உடைய லிங்த்தை எங்கே காணலாம் ?
xxxx
7.திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எத்தனை லிங்கங்கள் உள்ளன? அவை யாவை ?
xxxx
8. நீரூற்று அல்லது தண்ணீர் இடையே உள்ள சிவலிங்கங்களை எங்கே தரிசனம் செய்யலாம் ?
Xxxxx
9 . தஞ்சசைப் பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்வளவு பெரியது?
Xxxx
10.சிவலிங்கத்தின் பொருள் என்ன ?
Xxxx
Bhojeswar, Bhojpur
விடைகள்
1.காஷ்மீரில் அமர்நாத் குகையில் வருடம் தோறும் ஆகஸ்ட் மாதம் ஐஸ் லிங்கம் உண்டாகி பின்னர் மறைந்துவிடும் .
XXXX
2.திருஸூர் வடக்குநாதன் சிவன் கோவிலில் நெய் லிங்கம் இருக்கிறது
xxxx
3.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண காலத்தில் ஒரு முறையும், தட்சிணாயன காலத்தில் ஒரு முறையும் தொடர்ந்து 5 நாட்கள் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி நிகழும்.
xxxx
4.அஸ்ஸாம் மாநிலத்தில் நவகாவ்ன் என்னும் இடத்தில் எழுப்பப்பட்ட சிவலிங்கத்தின் உயரம் 126 அடி. இதுதான் மிக உயரமான சிவலிங்கம் .
xxxx
5. திருவனந்தபுரத்துக்கு அருகில் செங்கல் என்னுமிடத்திலுள்ள சிவன்-பார்வதி கோவிலில் 111. 2 அடி உயரமுள்ள சிவலிங்கம் கான்க்ரீட்டினால் அமைக்கப்பட்டுள்ளது .
xxxx
6.பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டார். அதன் அடிப்படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திருநல்லூரில் காணலாம். நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்றும் சோமநாதரை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு நுழையும் அளவிற்கு துளை உள்ளது.
8. திருச்சி அருகிலுள்ள திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில், சீர்காழி திருக்காளமுடையார் கோவில், திருவேடகம் ஆலயம் ஆகியவற்றில் நீர் சுரக்கும் லிங்க சந்நிதிகளைக் காணலாம்.
xxxx
9.சிவலிங்கத்தின் உயரம் 12 அடிகள் ; பீடத்தின் உயரம் 18 அடிகள். மொத்த உயரம் 30 அடிகள் .
xxxx
10. இறைவனை உருவமற்றவராகவும் வழிபடலாம் என்பதை சிவலிங்கம் காட்டுகிறது. இறைவனுக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை என்பதையும் லிங்க உருவம் காட்டுகிறது . இயற்கையில் ஆறுகளில் கிடைத்த வட்ட வடிவான , வழ வழப்பான கற்களை சுயம்பு லிங்கம் என்று வழிபடுவது எளிதாக இருந்தது . இதே போல லிங்க வடிவிலுள்ள கயிலாயம், சிவலிங்க மலை, லிங்க வடிவிலான பாறைகளை வணங்குவதும் இறைவன் ‘அடி, முடி இல்லாதவர், ஆதி அந்தம் அற்றவர்’ என்பதை காட்டுகிறது.
வாழ்க்கையில் வெற்றி பெற வெற்றிக்கான மந்திரத்தைத் தந்தவர் அமெரிக்கரான தாமஸ் ஆல்வா எடிஸன்.
“தோல்வி என்பது தோல்வியே அல்ல; அதை நீ ஒப்புக் கொள்ளாதவரை” என்று கூறியதோடு அப்படியே வாழ்ந்து காட்டிய மேதை எடிஸன்.
ஏராள்மான கண்டுபிடிப்புகளைத் தன் வாழ்நாளில் கண்டுபிடித்த எடிஸன் பெரிய உடல் குறைபாடுடன் வாழ்ந்தவர். ஆம், அவருக்குக் காது கேட்காது.
பள்ளியிலும் அவர் பயிலவில்லை. என்றாலும் கூடத் தளராத தனது உழைப்பினாலும், உற்சாகத்தினாலும் உலகை ஒளிர வைக்கும் மின்சார பல்பை முதலில் உருவாக்கினார். போனோகிராபை (கிராமபோன்) அவர் உருவாக்கினார். அனைவரையும் மனம் கவர வைக்கும் திரைப்படத் துறைக்கான காமராவையும் அவரே கண்டுபிடித்தார்.
பிறப்பும் இளமையும்
அமெரிக்காவில் ஓஹையோ மாகாணத்தில் மிலன் என்ற ஊரில் 1847ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் நாளன்று சாமுவேல் எடிசன் மற்றும் ஜான்சி மேத்தியூஸ் ஆகிய இருவருக்கும் 7 வது மகனாக பிறந்தார் எடிசன். நான்கு வயது வரை அவருக்குப் பேச்சே வரவில்லை.
இளம் வயதில் ஸ்கார்லெட் எனும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட எடிசனுக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது. பின்னால் ஒரு ஆபரேஷன் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம் என்ற போதும் கூட அதை அவர் விரும்பவில்லை. ‘என் வாழ்க்கையில் ஒரு பறவையின் ஒலியையும் கூட நான் கேட்டதில்லை’ என்று பின்னால் அவர் குறிப்பிட்டார்.
மேஜையின் மீது தலையை வைத்து அங்கு எழும் அதிர்வுகளை அவர் மூளை கிரகித்தது. அதை வைத்தே நுட்பமான ஒலி அலைகளை அவர் துல்லியமாகக் கணித்தார். இந்த வியப்பூட்டும் திறனைக் கண்டு அனைவரும் பிரமித்தனர்.
தாயார் தந்த ஊக்கம்
அவர் ஏழாவது வயதில் பள்ளியில் சேர்ந்து படித்தது 12 வாரங்கள் மட்டுமே. ஹைபர் ஆக்டிவ் குழந்தை என்று சொல்லி அவரது தாயாரை பள்ளி நிர்வாகம் அழைத்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி விட்டது.
அவரது தாயாரே அவருக்குக் கல்வி கற்றுத் தர ஆரம்பித்தார்.
‘என் வாழ்க்கையை வடிவமைத்தவர் எனது தாயார்’ என்று உளமுருகப் பின்னால் குறிப்பிட்டார் அவர்.
வீட்டின் அருகில் இருந்த ஒரு நீரோடையில் மூழ்கி இறக்கவிருந்தார் அவர்.
எதிலும் மிகவும் ஆழ்ந்து கவனத்தைச் செய்யும் எடிஸன் நூலகத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தார்.
புதிய தொழில்நுட்பத்தில் ஈடுபாடு
ஆரம்ப காலத்தில் டெலகிராப் ஆபரேட்டராக அவர் பணி புரிந்தார்.
பதிமூன்றாம் வயதில் புகைவண்டியில் நாளிதழ்களை விற்க ஆரம்பித்தார். பின்னர் கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட் என்ற பத்திரிகையை பிரசுரித்து அதை புகைவண்டியில் விற்க ஆரம்பித்தார்.
புகைவண்டியில் ஒரு நாள் மூன்று வயது குழந்தையை விபத்திலிருந்து அவர் காப்பாற்றவே குழந்தையின் தந்தை அவருக்கு டெலகிராபியை கற்றுத் தந்தார். இதனால் அவருக்கு அந்தத் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது.
1876ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் மென்லோ பார்க்கில் தனக்குத் தானே ஒரு சிறிய சோதனைச் சாலையை அவர் அமைத்துக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடலானார்
மின்சார பல்பு
ஒன்றரை வருடம் அரும்பாடு பட்டு உலகின் முதல் இன்காண்டஸ்சென்ட் பல்பை – வெப்பத்தால் ஒளிரும் பல்பை – கண்டுபிடித்தார்.
அது உலகையே மாற்றியது; உலகமே ஒளிமயமாக வழி வகுத்தது. 1879ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தனது சோதனைச்சாலையிலேயே பல்பை அமைத்து ஒளிர வைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ருதர்போர்டு பி. ஹேயஸ் அவரை அழைக்கும் அளவு அவர் புகழ் பரவ ஆரம்பித்தது.
அடுத்து போனோகிராப் (கிராமபோன்), திரைப்பட காமரா ஆகியவற்றை அவர் கண்டுபிடிக்கவே உலகம் பிரமித்தது. 1896ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உலகின் முதல் திரைப்படத்தை அவர் திரையிட்டுக் காட்டினார்.
ஹென்றி போர்டின் மாடல் டி காருக்காக செல்ஃப் ஸ்டார்டருக்கான பேட்டரியையும் அவர் உருவாக்கித் தந்தார்.
தனது பகுதியில் வாழும் மக்களுக்கு மின்சார விநியோகத்திற்கான கருவிகளையும் அவர் கண்டுபிடித்துத் தரவே மக்கள் வெகுவாக அவரைப் பாராட்ட ஆரம்பித்தனர்.
ஸ்டாக் டிக்கர் என்ற அவரது கண்டுபிடிப்பு தகவல் பரிமாற்றத்திற்கு வெகுவாக உதவ ஸ்டாக் மார்க்கட் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தது. 40000 டாலரை அவர் பெற்றார். இது அவரது வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது.
அதிலிருந்து அவருக்கு வெற்றி மேல் வெற்றி தான் வந்தது.
தோல்வியே வெற்றிக்கான முதல் படி
மின்சார பல்பைக் கண்டுபிடிப்பதில் ஆயிரம் முறை தோல்வி அடைந்து விட்டீர்களே என்று அவரைப் பார்த்துக் கேட்ட போது, “யார் அடைந்தது தோல்வி, ஆயிரம் வழிகளில் இதைச் செய்ய முடியாது என்று நான் கண்டுபிடித்திருக்கிறேன்” என்று பதில் கூறினார்.
தோல்வி என்பதை அவர் ஏற்கவே இல்லை. நாளுக்கு பதினெட்டு மணி நேரம் உழைத்த அவர் 1093 கண்டுபிடிப்புகளுக்கு வடிவமைப்பு உரிமையைப் பெற்றார். 2500 குறிப்பு புத்தகங்களில் தனது சோதனைகளை அவர் எழுதி வைத்திருந்தார்.
திருமண வாழ்வு
ஆயிரத்தி எண்ணூற்று எழுபதுகளில் தனது நிறுவனத்தில் வேலை பார்த்த 16 வயது பெண்ணான மேரி ஸ்டில்வெல்லை எடிஸன் திருமணம் செய்து கொண்டார். இரு குழந்தைகள் பிறந்தன. டெலகிராபி மீதுள்ள ஆர்வத்தினால் ஒரு குழந்தைக்கும் டாட் என்றும் இன்னொரு குழந்தைக்கு டேஷ் என்றும் செல்லமாகப் பெயரிட்டு அழைத்தார். மேரி 1884ஆம் ஆண்டு மரணமடையவே 1886இல் மினா மில்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் அவர் நியூ ஜெர்ஸியில் வெஸ்ட் ஆரஞ்ச் என்னுமிடத்திற்குச் சென்று அங்கு ஒரு பெரிய சோதனைச் சாலையை நிறுவினார். முதலில் ஐந்து கட்டிடங்களாக இருந்த ஆய்வுக்கூடம் 25 ஏக்கர் பரப்பளவில் பத்தாயிரம் பேர்களை வேலைக்கு அமர்த்திய பெரும் நிறுவனமாக வளர்ந்தது.
அதிகமாக சம்பளம் தராத போதும் கூட இளைஞர்கள் அவரிடம் வேலை பார்க்க போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.
இந்துக்களின் மகத்தான ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்று ரவூல்பியா ஸர்பென்டினா என்னும் சர்ப்பகந்த மூலிகை ஆகும். இதை இன்று மேலை நாட்டினரும் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகின்றனர். வேத காலம் முதல் இந்துக்கள் பயன்படுத்தும் மூலிகை இது .
மஹாத்மா காந்திஜி இந்த மூலிகையை தினமும் தேநீரில் போட்டு சாப்பிட்டு வந்தார் (The Indian political leader Mahatma Gandhi was known to employ Rauwolfia, reportedly using the root to make a tea that he consumed in the evening to help relax after a busy, overstimulated day.)
எப்படி அபூர்வ குளிகையான சோம லதா என்னும் அபூர்வ தாவரம் மறைந்துவிட்டதோ அதுபோல சர்ப்பகந்த என்னும் மூலிகையும் மறையும் ஆபத்து உள்ளது. அரிய மூலிகை அருகிவருகிறது ஆயினும் இதில் உள்ள ரசாயனத்தைக் கண்டுபிடித்துவிட்டதால் அது இருக்கும் வேறு சில தாவரங்ககளை உலகம் நாடி ஓடுகிறது.
வோல்சா நிறுவனம் (As per Volza’s Global Export data) வெளியிடும் ஏற்றுமதி இறக்குமதி தகவலின்படி,Rauwolfia serpentina ரவூல்பியா/ சர்ப்பகந்த ஏற்றுமதி மிக மிகக் குறைவு; அதாவது 191 கப்பல்களில் தான் இந்தச் சரக்கு ஏற்றப்பட்டுள்ளது அவைகளை 32 நிறுவனங்கள் ஏற்றுமதி செய்தன . 53 நிறுவனங்கள் அதை விலைக்கு வாங்கின (export shipments stood from World at 191, exported by 32 World Exporters to 62 Buyers).
ஜெர்மனி, பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து ஆகியன அதிகமாக இறக்குமதி செய்தன (விலைக்கு வாங்கின)
இந்தியாவுக்கு முதலிடம்
இந்தியா 172 கப்பல் லோடு-களையும் ருமேனியா 13 கப்பல்களிலும் ஜெர்மனி 2 கப்பல்களிலும் இதை அனுப்பின.
(World exports most of it’s Rauwolfia serpentina to Germany, Pakistan and Switzerland; The top 3 exporters of Rauwolfia serpentina are India with 172 shipments followed by Romania with 13 and Germany at the 3rd spot with 2 shipments).
இந்த மூலிகை அருகி வருவதால் இந்திய அரசு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்த 29 மூலிகைகளில் இதுவும் உள்ளது. இதே துணைக்கு குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைகளை ரவூல்பியா என்ற பெயரில் ஏற்றுமதி செய்கின்றனர்.அல்லது ரிசர்பைன் ரசாயனம் உள்ள தாவரங்களை அனுப்புகின்றனர்.
சர்பகந்த மூலிகையிலுள்ள ரசாயனப் பொருள் (Rauwolfia alkaloids) உயர் ரத்த அழுத்த நோயை (hypertension/ high blood pressure ). குணப்படுத்த பயன்படுகிறது .
Rauwolfia serpentinaமூலிகையின் பொதுப் பெயர் இந்தியன் ஸ்னேக் ரூட் என்பதாகும் (Indian Snakeroot) இதை முதலில் தூக்கமின்மையை ( insomnia )அகற்ற பானங்களில் பயன்படுத்தினார்கள். இதிலுள்ள ரிசெர்பைன் reserpine என்னும் ரசாயனம்தான் முக்கியமானது.
Side Effectsஎதிரிடை விளைவுகள்
இதை அதிகமாக உபயோகித்தோருக்கு புற்றுநோய் மற்றும் மனத் தொய்வு ஏற்படுத்தியதாக சில ஆய்வுகள் காட்டியவுடன் இதற்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. ஆயினும் பிற் கால ஆராய்ச்சிகள் சரியான அளவு எடுத்தால் குணங்களே அதிகம் என்று காட்டின. இதிலுள்ள ரிசர்பைன் என்ற ரசாயனம் இன்றுவரை மருத்துவ உலகில் கொடிகட்டிப் பறக்கிறது.
இந்த மூலிகை எப்போதும் பசுமையாக வளரும் செடி(evergreen shrub) . இதை அபோசயனேசி(Apocynaceae family) குடும்பத்தில் வைத்துள்ளனர். இதன் துணைப் பிரிவில் (Genus) இதே போல 100 தாவரங்கள் இருக்கின்றன. இவை மித வெப்ப மண்டல ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் காணலாம். ஆஸ்திரேலியாவிலும் தென், மத்திய அமெரிக்க நாடுகளிலும் உண்டு. இது அதிகம் வெப்பம் இல்லாத இமயமலைப் பகுதிகளிலும் தென் பகுதியில் அடர்ந்த காடுகளிலும் வளர்கிறது இது இளம் சிவப்பு, வெள்ளை மலர்களுடனும் கருஞ் சிவப்பு காய்களுடனும் காணப்படும் . இலைகள் நீள் வட்ட அல்லது முட்டை வடிவில் இருக்கும்.
சுமார் 3,000 ஆண்டுகளாக நாட்டுப்புற/ இயற்கை வைத்தியத்தில் இந்துக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர் பாம்புக் கடிக்கும், பூச்சிக் கடிக்கும் மருந்தாக பயன்படுத்தியதால் இதற்கு பாம்புக்கடி வேர் Snake Root ஸ்னேக் ரூட் என்ற பொதுப்பெயர் ஏற்பட்டது . மலேரியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகிய சிகிச்சையிலும் இதைப் பயன்படுத்தினர் . மன நோய்களைக் குணப்படுத்தவும் இது பயன்படுகிறது .
இதன் மற்றோரு பெயர் சந்திரிகா (also known as sarpagandha and chandrika)
R serpentina was used in folk medicine in India for centuries to treat a wide variety of maladies, including snake and insect bites, febrile conditions, malaria, abdominal pain, and dysentery.
400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த ஜெர்மன் மருத்துவர் Dr Leonhard Rauwolf டாக்டர் லெனார்ட் ரவூல்ப் இதை உலகிற்கு அறிமுகப்படுத்தியதால் அவருடைய பெயர் இந்த மூலிகைக்கு சூட்டப்பட்டது உண்மையில் இந்தியா அல்லது இந்துக்களின் பெயரை சூட்டியிருக்க வேண்டும்.
இந்திய மருத்துவர் டாக்டர் ருஸ்டம் ஜல் வகீல் (The Indian physician Rustom Jal Vakil is considered responsible for introducing Rauwolfia to Western medicine). இதை மேலை நாட்டு மருத்துவ சிகிச்சையில் அறிமுகப்படுத்தினார் . அவர் நீண்ட ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டதால் அவர் சொன்னதை மேலை உலகம் ஏற்றது .
Fifty Alkaloids
ஐம்பதுக்கும் மேலான ரசாயனப் பொருட்களை இந்த மூலிகையிலிருந்து பிரித்தெடுத்துள்ளனர்
The identified indole and indole alkaloids include ajmalidine, ajmaline, ajmalinine, ajmalicine, aricine, canescine, coryanthine, deserpidine, isoajmaline, isoserine, isoserpiline, lankanescine, neoajmaline, papaverine, raubasine, raucaffricine, rauhimbine, rauwolfinine, recanescine, rescinnamine, reserpiline, reserpine, reserpinine, sarpagine, serpentine, serpentinine, thebaine, yohimbine, and yohimbinine.
அவைகளில் மிகவும் பயன்படுவது ரிசர்பைன் (Reserpine). அது செடியின் வேரில் அதிகம் காணப்படுகிறது
Reserpine is one of the major alkaloids of the plant. The reserpine content has been found to be highest in the root and lower in the stems and leaves.
Reserpine has been classified as an indole alkaloid. It is a white-to-yellow powder that becomes darker when exposed to light. It is odorless, insoluble in water, slightly soluble in alcohol, and freely soluble in acetic acid. It has a chemical formula of C33H40N209, a molecular mass of 609 g, and a bitter taste.
இது பற்றிய நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் வருடம் வாரியாக மருத்துவ சஞ்சிகைகளில் உள்ளன. பெரும்பாலான ஆராய்ச்சிகளை நடத்தியவர்கள் இந்திய மருத்துவர்களே என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம் .
–சுபம்–
Tags- சர்ப்பகந்த, ரவூல்பியா செர் பென்டினா , வேத கால மூலிகை, காந்திஜி, இருதய நோய், இரத்த அழுத்தம், ரிஸர்பைன்
The 108-feet long incense stick that spreads good fragrance up to 50 kilometre range.The incence stick weighs 3,610 kg and almost 3.5 feet wide;It took more than six months to prepare the incense stick in Vadodra, Gujarat. Cow dung, ghee, essence and extract of flowers, Ayurvedica products and herbs were used in it.
XXXXX
BIGGEST BELL
The temple has a bell weighing 2,400 kg. The monumental bell has been made of ‘ashtadhatu’ (eight metals) and costs ₹ 25 lakhs.
Made by a diverse team of approximately 30 skilled workers in Uttar Pradesh, the bell is composed of eight metals: gold, silver, copper, zinc, lead, tin, iron, and mercury. The bell will produce a resonant sound audible within a two-kilometre radius and measures an impressive six feet in height and five feet in width.
xxxxx
GOLDEN DOORS
Ram temple has 46 doors. And 42 of them will have are coated with gold. About 100 kilo gold is used for this. the first majestic golden door, measuring 12 feet in height and 8 feet in width, has been successfully installed on the upper floor of the sanctum sanctorum..
XXXXX
SITA DEVI SENDS 3000 GIFTS FROM NEPAL
More than 3,000 gifts for Lord Ram from Sitaji’s birthplace in Janakpur, Nepal, have arrived in Ayodhya. The gifts, including silver shoes, ornaments, and clothes, were handed over to the Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust by Ram Roshan Das, the priest of Ram Janki Temple in Janakpur.
XXXXX
161 feet HIGH
The Ram temple is 161 feet tall .
Temple occupies an area of 2.7 acres (1.1 ha)
One central temple with 6 more joined around it as one temple complex.
Total area of temple complex- 71 acres
xxxx
Where is Ayodhya?
It is in Uttar Pradesh on the banks of River Sarayu.
The city is about 130 k.m. from Lucknow, 200 k.m. from Varanasi, 160 k.m. from Prayagraj , 140 k.m. from Gorakhpur and about 636 k.m. from Delhi. Buses are frequently available from Lucknow, Delhi and Gorakhpur.
XXXXX
Date of Consecration/ Kumbabishekam
22 January 2024.
XXXXX
ARUN RAJ IDOL SELECTED
The idol of ‘Ram Lalla’ has been carved by Karnataka’s renowned sculptor Arun Yogiraj. The idol is 51 inches tall and weighs 1.5 tonnes. The idol is dark in complexion and is in standing posture. “The idol made of Lord Shri Ram Lalla is in the form of a five-year-old child.
XXXXX
Common Factor between Ram, Krishna, Vyasa and Draupadi
All the epic characters were black. Their black skin gave a severe blow to Aryan- Dravidian theory. So the anti Hindu foreigners never talk about the colour of epic heroes. Except Vyas, other three were very beautiful.
1.ராமர் பிறந்த ஊர் அயோத்தி; அது எந்த மாநிலத்தில் எந்த நதியின் கரையின் மேல் இருக்கிறது?
XXXX
2.ராமர் கோவில் மீது முஸ்லீம் மன்னன் பாபர் கட்டிய மசூதி அகற்றப்பட்ட பின்னர், 500 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?
XXXX
3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் என்ன ?
XXXX
4.அயோத்தி ராமர் கோவிலில் உள்ள சிலையைச் செய்தவர் யார்?
XXXX
5.ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோரிடையே உள்ள ஒற்றுமை என்ன?
XXXX
6.ராம பிரான் பிறந்தது நவமி திதியில்; புதிய கோவிலில் நவமி நாட்களில் நடைபெறும் பொறியியல் அதிசயம் என்ன?
XXXX
7. ராமர் கோவில் கோபுரத்தின் உயரம் என்ன?
xxxxx
8.ராமர் கோவிலில் எத்தனை கதவுகள் ?
XXXX
9.ராமர் கோவில் மணி எவ்வளவு பெரியது?
xxxx
10.ராமர் கோவில் த்வஜ ஸ்தம்பம் எத்தனை அடி உயரம் உடையது ?
xxxx
BONUS QUESTIONS
11. ராம பிரானின் வைர நெக்லஸ் (கழுத்துக்கு மாலை) எவ்வளவு பெரியது?
xxxx
12.சீதா தேவி பிறந்த ஜனக்பூர் நேபாளத்தில் உள்ளது. அங்குள்ள கோவிலும் மக்களும் அனுப்பும் பரிசுகள் என்ன?
xxxx
13.உலகிலேயே பெரிய ஊது பத்தியை / வர்த்தியை யார் அயோத்திக்கு அனுப்புகின்றனர் ?
xxxx
14.ராமர் கோவில் விளக்குகளில் மிகப்பெரியது எது?
xxxx
விடைகள்
1.உத்தர பிரதேசத்தில் சரயூ நதிக்கரையில் அயோத்தி நகரம் இருக்கிறது .
XXXX
2.அயோத்தி நகர ராமர் கோவில் கும்பாபிஷேகம் -ஜனவரி 22, 2024.
XXXX
3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் சாகேதம்; முஸ்லீம்கள் சூட்டிய பெயர் பைசாபாத்.
XXXX
4.மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய சிலை தான் அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ளது .இந்த சிலையின் உயரம் 51 அங்குலம்;இதன் எடை என்பது 1.5 டன் ;. ராமரின் தலையில் கிரீடம் இருக்கும்.
xxxx
5. ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோர் கருப்பு நிறத் தோல் உடைய கருப்பர்கள் ; வியாசர் தவிர மற்ற மூவரும் பேரழகு வாய்ந்தவர்கள்; ஆரிய- திராவிட வாதம் பேசிய அரை வேக்காடுகளுக்கு இவர்களுடைய நிறம் செமை அடி கொடுக்கிறது.
xxxx
6.நவமி நாட்களில் ராம பிரானின் முகத்தில் சூரிய ஒளி விழும் வண்ணம் லென்ஸ்கள் மூலம் வடிவமைத்துள்ளனர் .ராமர் ஸூரிய குல / ரவி குல திலகம் என்பதை இது காட்டும்..
.XXXX
7.கோபுர உயரம் 161 அடி. கோவிலின் நீள அகலம் 380 அடிக்கு 250 அடிகள் ஆகும் (250 feet wide, 380 feet long and 161 feet (49 m) high கோவிலின் பரப்பளவு 2.77 ஏக்கர் ; கோவில் வளாகத்தின் பரப்பளவு 71 ஏக்கர் .
XXXX
8.ராமர் கோவிலில் 46 கதவுகள் இருக்கின்றன. அவைகளை 100 கிலோ தங்கத்தைக் கொண்டு முலாம் பூசுகின்றனர் .ராமர் கருவறையில் 12 அடி உயரத்திலும் 8 அடி அகலத்திலும் தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள்
XXXXX
9.உத்தர பிரதேச மாநிலம் ஜலேசரில் மிக பிரமாண்டமான மணி ஒன்றை எட்டு வகையிலான உலோகத்தால் செய்துள்ளனர்.அந்த மணியின் எடை 2100 கிலோ ! இந்த மணியை தயார் செய்ய இரண்டு ஆண்டுகள் ஆனது.
XXXX
10. இந்தக் கொடி மரத்தின் (த்வஜ ஸ்தம்பம்) உயரம் 44 அடி. அதன் எ டை 5500 கிலோ. பித்தளையால் ஆனது . குஜராத்திலுள்ள ஆமதாபாத் நிறுவனம் இதை உருவாக்கியது.
xxxxx
BONUS QUESTIONS
11.சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5000 அமெரிக்க வைரங்கள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளியை கொண்டு ராமர் சிலைக்கு நெக்லஸை உருவாக்கியுள்ளார். 40 கைவினைஞர்கள் 35 நாட்களில் இதைச் செய்து முடித்தார்கள்.
xxxx
12.ஜனகபுரி மக்களும் சீதை கோவிலும் 2 லாரிகள் நிறைய 3000 பரிசுகளை அயோத்திக்கு அனுப்பினர் . அவை வெள்ளிப் பாத்திரங்கள் , உலர்ந்த பழங்கள் , துணி மணிகள் ஆகும். இலங்கையில் சீதையை ராவணன், அசோக வனத்தில் சிறை வைத்தான். அங்கிருந்து புனித பாறை ஒன்றை இலங்கை நாடு அனுப்பிவைத்துள்ளது .
xxxx xxxx
13.குஜராத் வடோதரா நகரிலுள்ள நிறுவனம் 108 அடி நீளமுள்ள ஊது பத்தியை / வர்த்தியை அயோத்திக்கு அனுப்பியிருக்கிறது. இதன் குறுக்களவு மூன்றரை அடி; எடை 3610 கிலோ. இது 50 கிலோமீட்டர் தொலைவுக்கு வாசனையைப் பரப்பும் .
xxxx
14.வதோதராவை சேர்ந்த அரவிந்த் பாய் மங்கள் பாய் பட்டேல் என்ற விவசாயி 1100 கிலோ எடையுள்ள ராட்சத விளக்கை வடிவமைத்துள்ளார். பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட இந்த விளக்கு 9.25 அடி உயரமும் 8 அடி அங்குலமும் கொண்டது . இதை ராமர் கோவிலுக்கு அனுப்பியுள்ளார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
KARMA RAHASYA – 1
S. Nagarajan
One’s Karma is the cause for one’s rise and fall.
In this regard there is an ancient story of the conversation between Mrithyu and Gautami with Kala and a Hunter (Fowler) and the serpent.
The story was told by Bhishma to Yudhishthira. In Mahabharata, the first chapter of Anusasana Parva narrates this story.
There was an old lady of the name of Gautami, who was possessed of great patience and tranquillity of mind. One day she found her son dead in consequence of having been bitten by a serpent. An angry fowler, by name Arjunaka, bound the serpent with a string and brought it before Gautami. He then said to her-‘This wretched serpent has been the cause of your son’s death. Tell me quickly how this wretch is to be destroyed. Shall I throw it into the fire or shall I hack it into pieces? This infamous destroyer of a child does not deserve to live longer.’
Gautami replied, ‘ O Arjunaka, release this serpent. It does not deserve death at your hands. Those that have made themselves light by the practice of virtuous deeds, manage to cross the sea of the world even as a ship crosses the ocean. But those that have made themselves heavy with sin sink into the bottom, even as an arrow thrown into the water.’
The fowler said, ‘I know, O lady, that knowing the difference between right and wrong, that the great are afflicted at the afflictions of all creatures. But these words which you have spoken are fraught with instruction for only a self-contained person. Therefore, I must kill this serpent. Those who value peace of mind, assign everything to the course of Time as the cause, but practical men soon assuage their grief (by revenge). Therefore, O lady, assuage your grief by having this serpent destroyed (by me).
Gautami replied, ‘The death of the boy was predestined: therefore, I am unable to approve of the destruction of this serpent.’
At this point of time the serpent, painfully bound with the cord, sighing a little and maintaining its composure with great difficulty, then uttered these words slowly, in a human voice.’
“The serpent said, ‘O Arjunaka, what fault is there of mine? I have no will of my own, and am not independent. Mrityu sent me on this errand. By his direction have I bitten this child, and not out of any anger or choice on my part. Therefore, if there be any sin in this, O fowler, the sin is his.’
The fowler said, “As in the making of an earthen vessel the potter’s wheel and rod and other things are all regarded as causes, so O serpent, (cause in the production of this effect). He that is guilty deserves death at my hands.’
“The serpent said, ‘As all these, viz., the potter’s wheel, rod, and other things, are not independent causes, even so I am not an independent cause. Therefore, this is no fault of mine, as you should grant.”
The serpent directed by Mrityu having said this, Mrityu himself appeared there and addressing the serpent spoke thus.
Mrityu said, ‘Guided by Kala, I, O serpent, sent you on this errand, and neither you nor am I the cause of this child’s death. Even as the clouds are tossed hither and thither by the wind, I am like the clouds, O serpent, influenced by Kala. All creatures, mobile and immobile, in heaven, or earth, are influenced by Kala. All acts in this world and all abstentions, as also all their modifications, are said to be influenced by Kala, Surya, Soma, Vishnu, Water, Wind, the deity of a hundred sacrificer, Fire, Sky, Earth, Mitra and Parjanya, Aditi, and the Vasus, Rivers and Oceans, all existent and non-existent objects, are created and destroyed by Kala. Knowing this, why you, O serpent, consider me to be guilty? If any fault attaches to me in this, you also would be to blame.’
Thus folwer blamed the snake and snake blamed Mritu and Mritu blamed Kala.
Then Kala arrived at that scene of disputation on this point of morality, and spoke thus to the serpent and Mrityu and the fowler Arjunaka assembled together.
Kala said, ‘Neither Mrityu, nor this serpent, nor I, O fowler, am guilty of the death of any creature. We are merely the immediate exciting causes of the event. O Arjunaka, the Karma of this child formed the exciting cause of our action in this matter. There was no other cause by which this child came by its death. It was killed as a result of its own Karma. It has met with death as the result of its Karma in the past. We all are subject to the influence of our respective Karma. Karma is an aid to salvation even as sons are, and Karma also is an indicator of virtue and vice in man. We urge one another even as acts urge one another. As men make from a lump of clay whatever they wish to make, even so do men attain to various results determined by Karma. As light and shadow are related to each other, so are men related to Karma through their own actions. Therefore, neither you, nor am I, nor Mrityu, nor the serpent, nor this old Brahmana lady, is the cause of this child’s death. He himself is the cause here.”
Upon Kala expounding the matter in this way, Gautami, convinced in her mind that men suffer according to their actions, spoke to Arjunaka.’Neither Kala, nor Mrityu, nor the serpent, is the cause in this matter. This child has met with death as the result of its own Karma. I too so acted (in the past) that my son has died (as its consequence). Let now Kala and Mrityu retire from this place, and you too, O Arjunaka, release this serpent.’
Then Kala and Mrityu and the serpent went back to their respective destinations, and Gautami became consoled in mind as also the fowler.
Thus Bhisma convinced Yudhishthira that Men attain to heaven or hell as the result of their own Karma.
Karma Rahasya is subtle.This can not be understood easily.
Even to read this Karama Rahaya article one should have done some good Karma, is it not?
***
Thanks to Kisari Mohan Ganguly who translated Mahabharata first in English between 1883 and 1896. Condensed from his version.
வின்கா ரோசியாVinca rosea என்ற பூ ஆப்பிரிக்காவின் பக்கத்தில் உள்ள மடகாஸ்கர் (Madagascar, now called Malagasy) என்ற தீவிலிருந்து உலகம் முழுதும் பரவியதாக தாவர வியல் அறிஞர்கள் செப்புவர்; இன்று இதை வீடுகளிலும் தோட்டங்களிலும், குறிப்பாக இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், எங்கும் காண்கிறோம்.
இதற்கு தமிழ் நாட்டில் நித்ய கல்யாணி, நயன்தாரா, சுடுகாட்டுப்ப்பூ என்று பல பெயர்கள் உள்ளன. இதை சாகுபடி செய்தால் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் எந்த விதக் கவனிப்பும் இல்லாமல் எளிதில் வளரக்கூடிய தாவரம் / செடி இது. இதற்கு வாசனை என்ற சிறப்பு இல்லை. ஆயினும் நிறைய நோய்களைப் போக்கும் சக்தி இருப்பதால் இதற்கு மதிப்பு அதிகம் .
xxxxxxxxxxxxxxxx
எச்சரிக்கை
மருத்துவக் கட்டுரைகளைப் படித்துவிட்டு, நேரடியாக தனக்குத்தன் தானே வைத்தியம் செய்வது ஆபத்தில் முடிய வாய்ப்பு உண்டு. எதையும் பயன்படுத்துவதற்கு முன்னால் , பதிவு செய்த உண்மை மருத்துவர்களைக் கலந்து (REGISTERED MEDICAL PRACTITIONERS) ஆலோசியுங்கள் .
அவர்கள் சொன்னாலும்கூட, உங்கள் தேகம் அந்த மருந்தை ஏற்கிறதா , எதிரிடை விளைவை உண்டாக்குகிறதா (மலச்சிக்கல், வாந்தி, கிறுகிறுப்பு, அதிக தூக்கம்) என்பதை தேதிவாரியாக குறித்து வையுங்கள்; அதிகப்பாதிப்பு இருந்தால் மருந்தை எடுக்காதீர்கள்.
உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமாவது நீங்கள் எடுக்கும் புதிய மருந்து பற்றிச் சொல்லி விட்டு மருந்தினை எடுங்கள் .
பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் , பலன்கள் உண்மையானால் டாக்டர்களுக்கு வேலையே இராது. ஆகையால் பத்திரிகையில் படிப்பதை அப்படியே பின்பற்றாதீர்கள் . மருத்துவர்கள் சொல்லுவதைக் கேளுங்கள்
Xxxxxxxxxxxxxxxxxxxxxxx
நித்தியக் கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்றும் அழைக்கப்படும் செடி, மடகாஸ்கரில் (LARGE ISLAND COUNTRY NEAR AFRICA; MALAGASSY) இருந்து பரவியது ; தாவரவியலில் இதை அபோசயனேசி (Apocynaceae ) குடும்பத்தின் கீழ் வைத்துள்ளனர் . காதராந்தஸ் ரோசியஸ் Catharanthus roseus என்பது தாவரவியல் லத்தீன் மொழிப்பெயர்.
வெள்ளை நிறம் அல்லது இளம் சிவப்பு நிறத்தில் கவர்ச்சிகரமாகத் தோன்றும் ; கண் போல இருப்பதால் நயன(கண்) தாரா (நட்சத்திரம்) என்றும் எப்போதும் பூப்பதால் நித்ய கல்யாணி என்றும் ஸம்ஸ்க்ருத்தில் அழைக்கின்றனர். தமிழில் நல்ல பெயரைச் சூட்டவில்லை . ஆங்கில மொழியில்Periwinkle பெரிவின்க்கில் என்று சொல்லுவார்கள்
ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களை உடையது இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை.
இம் மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும்.. இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் மேற்பரப்பு பளபளப்பாகவும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும்.
இந்தி மொழியில் இதை சதாபஹார் सदाबहार Sadabahar என்று அழைப்பர் ;
ஏனைய மொழிகளில் Shavam Naari (Malayalam), सदाफूली Sadaphuli (Marathi), নযনতাৰা Nayantara (Bengali); బిళà±ళ à°—నà±నేరà± (Telugu).
நித்தியகல்யாணி மருத்துவப் பயன்கள்
நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.
இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தும் (In the acute leukemias and lymphoblastosarcomas, cytomorphologic and quantitative studies demonstrated that the oncolytic effects correlated well with the magnitude of metaphasic blockade)
ஹா ட்கின்ஸ் நோய் என்னும் புற்று நோயை யும் குணப்படுத்தும் Hodgkin’s disease, lymphosarcoma, and acute leukemia have been studied after treatment with the Vinca rosea alkaloids (vinblastine and vincristine),
நித்ய கல்யாணியிலிருந்து ஆல்கலாய்ட் என்னும் ரசாயனப் பொருட்கள் 70 கிடைக்கின்றன (The stem of Madagascar periwinkle produced a milky sap which is the source of over 70 different indole alkaloids. அவற்றில் நான்கினை மருத்துவ உலகம், புற்று நோய் சிகிச்சையில்( cancer fighters.)பயன்படுத்துகின்றன ; அவையாவன
: வின் ப்லாஸ்டின் Vinblastine (VBL),
வினோரெல்பை ன் vinorelbine (VRL),
வின்கிரிஸ்டின் vincristine (VCR) and
வின்டெசின் vindesine (VDS).
இவைகளில் VCR, VBL and VRL என்பன அமெரிக்காவிலும் வின் ப்லுனைன் Vinflunine என்பதை ஐரோப்பாவிலும் பயன்படுத்துகின்றனர் .புற்று நோயைத் தீர்க்கும் மருந்துகளில் இரண்டாவது இடத்தை வகிப்பது நித்ய கல்யாணி என்றால் இதன் மதிப்பை அறியலாம் .
மனநோய்களை குணமாக்கும்;
இரத்த அழுத்தம் , நீரிழிவுநோய் கட்டுப்படும்; been used for various treatments, e.g. diabetes mellitus, high blood pressure and infection
மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும்;
அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும்.
பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.
xxxxxxxxx
இதில் கிடைக்கும் ஆல்கலாய்ட் என்னும் ரசாயனப் பொருட்கள்: அஜ்மாலின்,ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine)
இது தவிர மருந்து செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து கிடைப்பதாலும் இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.,
xxxxxx
வருமானம் தரும் நித்யகல்யாணி
ஏற்றுமதி தகவல்கள்
வோல்சா நிறுவனம் திரட்டிய (As per Volza’s Global Export data), தகவலின்படி (Vinca rosea export shipments) 283 கப்பல்களில் நித்ய கல்யாணி ஏற்றப்பட்டது . 58 ஏற்றுமதி நிறுவனங்கள் அதை அனுப்பின.( stood from World at 283, exported by 58 World Exporters to 61 Buyers.). அதை 61 வியாபார நிறுவனங்கள் வாங்கின
பெரும்பாலான வின்கா ரோசியா செடிகளை பிரான்ஸ், ஜப்பான், பெரு ஆகிய நாடுகள் வாங்கின.
(France, Peru and Japan)
இந்தியா முதலிடம்
இந்தியா 184 கப்பல்களிலும் காஸ்டாரிகா 23 கப்பல்களிலும் , வியட் நாம் 21 கப்பல்களிலும் நித்ய கல்யாணி சரக்குகளை அனுப்பின
The top 3 exporters of Vinca rosea are India with 184 shipments followed by Costa Rica with 23 and Vietnam at the 3rd spot with 21 shipments.
xxxx
தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
நித்தியகல்யாணியின் இலைகளும், வேரும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. . நித்ய கல்யாணியின் இலைகள் அமெரிக்கா ஹங்கேரிக்கு ஏற்றுமதியாகிறது. இதன் வேர்கள் மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எற்றுமதி செய்யப்படுகிறது.
நித்ய கல்யாணி செடியினை நேரடியாக உட்கொள்வது ஆபத்தானது .
–subham—
Tags- நித்ய கல்யாணி, Vinca rosea, Periwinkle, சதாபஹார் सदाबहार Sadabahar, புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் , குணமாகும், மருந்து ஏற்றுமதி , நயனதாரா
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் என்ற இந்தக் கட்டுரைத் தொடர் 57-ஆவது பகுதியுடன் நிறைவடைகிறது ஆயிரக் கணக்கில் பகவதி, ஐயப்பன் , சிவன், விஷ்ணு , கணபதி, முருகன், நாகர் கோவில்கள் உள்ள மலையாள தேசத்தில், பழைய சேர நாட்டில் 108 கோவில்களை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான பணியே. ஆயினும் மக்கள் ஏராளமாகச் செல்லும் கோவில்களைக் கருத்தில் கொண்டு 108-க்கும் அதிகமான கோவில்களை தேர்ந்தெடுத்தேன்.
xxxx
111. திருவனந்தபுரம் சிவன் கோவில்கள்
Chenkal Siva Parvathi Temple with tallest Linga
திருவனந்தபுரம் நகரிலிருந்து கொல்லம் செல்லும் பாதையில் கழக் கூட்டம் மஹாதேவர் கோவில் இடம்பெறுகிறது. இது ஒரு பழங்கால சிவன் கோவில் ஆகும். 14 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது இது.
இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம் டிசம்பரில் வரும் திருவாதிரை உற்சவம் ஆகும். திருவாதிரை நாளன்று, பெண்கள் கேரள பாணியில் பட்டுப்புடவை உடுத்திக் கொண்டு திருவாதிரைக் களி ,கை கொட்டிக் களி என்ற நடனங்களை பாடிக்கொண்டு ஆடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும் இந்த பத்து நாள் திருவிழாவில் கேரள பாணி நடனங்களும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
xxxxx
ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவன் கோவில்
ஸ்ரீ கண்டேசுவரம் மகாதேவன் கோவில் (Sreekanteswaram Mahadeva Temple) சுமார் 1500 ஆண்டு வரலாறு உடையது. பழைய நூல்களில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன.
திருவனந்தபுரம் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இதே பெயரிலுள்ள பழைய கோவில் பழைய கோவில் புத்தன்சந்தை என்ற பகுதியில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் 10 நாள் உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது .
சிவன் மூலவர் ஆவார். மகா கணபதி, முருகன், ஆஞ்சநேயர், ஸ்ரீ கிருஷ்ணர், அய்யப்பன், நாகராசர் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன.
அதிகாலையில் நடை திறந்ததும், முதல் நாள் இறைவனுக்குப் போடப்பட்ட மாலைகளையும், பூக்களையும் எடுத்து, மாற்றிச் சுத்தப்படுத்தும் இருபது நிமிடங்கள்தான் நிர்மால்ய தரிசன நேரம். இதைக் கண்டு தரிசிப்பதற்கு அதிகாலையில் இருந்தே பக்தர்கள் வந்து சேர்கிறார்கள்.
திருவிழாக்கள்
ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. சிவபெருமானின் பிறந்த நாளாகக் கருதப்படும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆராட்டு இருக்கும். சிவராத்திரி பண்டிகையும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அப்போது சிவபெருமானின் சிலையை நாள் முழுவதும் தூய நெய்யால் அபிஷே கம் செய்கிறார்கள் .
xxxxxxx
58 அடி உயர ‘கங்காதேஸ்வரர்’ சிலை உள்ள ஆழிமலை சிவன் கோவில்
தற்காலத்தில் எழுப்பப்பட்ட புதிய கோவில்களில் பக்தர்களைக் கவர்வ து 58 அடி உயர ‘கங்காதேஸ்வரர்’ சிலை உள்ள ஆழிமலை சிவன் கோவில் ஆகும் .
2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி, தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நடைபெற்று, 2020-ம் ஆண்டு இறுதியில் நிறைவுபெற்றது.
இந்த சிலையில், சிவபெருமான் ஒரு காலை தரையில் ஊன்றியும், மற்றொரு காலை மடித்தும் வைத்திருக்கிறார். தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை ஏந்துகிறார் .
தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் இருந்து பூவாறு – கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் 58 அடி உயரத்தில் கங்காதரேஸ்வர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாநிலத்தில் இருக்கக்கூடிய சிவன் கோவில்களில் மிகவும் உயரமான சிலை, இக்கோவிலில் மட்டுமே உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தக் கோவிலுக்கு வருகின்றனர்.
xxxxx
பாரசாலா மகாதேவர் கோவில்
கேரள – தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள பாரசாலா என்ற சிறிய கிராமத்தில் கோவில் அமைந்துள்ளது. திருவன ந்தபுரம்- கன்னியாகுமரி சாலையில் 30ஆவது கிமீ.யில் கோவில் அமைந்துள்ளது இங்கு மூலவரான சிவபெருமான் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார், இது ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது வேணாடு அரச குடும்பத்தைச் சேர்ந்த மல்லன் செண்பகராமன் தேலவா என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயிலில் பார்வதி கிழக்கு நோக்கிய நிலையில், பின்புறத்தில் உள்ளார்.
400 ஆண்டுகள் பழமையானதாகும். அரிய கல் கட்டிடக்கலையைச் சேர்ந்தது. அரிய சடங்குகளுக்கு புகழ் பெற்றதாகும். சாதி, மதம் போன்றவற்றிக்கு அப்பாற்பட்டு அனைத்து சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களும் இக்கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.
xxxx
112. பழவங்காடி கணபதி கோவில்
திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் பழவங்காடியில் பிள்ளையார் கோவில் இருக்கிறது மகாகணபதி கிழக்கு நோக்கிப் பார்த்தபடி, வலது காலை மடித்து வைத்து அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் .. இக்கோவிலுக்குள் விநாயகரின் முப்பத்திரண்டு திருவுருவங்களை அழகிய ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர் இந்திய ராணுவத்தின் பராமரிப்பில் இருக்கும் இந்தக் கோவிலை, மிலிட்டரி பிள்ளையார் என்றும் அழைப்பார்கள். . திருவனந்தபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
கரிக்ககம் சாமுண்டிதேவி கோவில் சக்தி வழிபாட்டுக்காரர்களுக்கு முக்கியமான கோவில் ஆகும். ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் சாமுண்டிதேவி கோவில், கரிக்ககம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பிற்கால சேர மன்னனான ராமவர்மா காலத்தில் உருவானது. தேவியானவள் , உக்கிரமாக இருக்கும் ரத்த சாமுண்டியாக தரிசனம் தருகிறாள். திருவிதாங்கூர் மன்னனின் படைவீரர்கள் களரிச் சண்டை பயிற்சி பெறும் களமாக விளங்கிய இடம் என்பதால், இந்தப் பகுதிக்கு ‘களரிக்களம்’ என்று பெயர் வந்தது. பின்னர் அதுவே ‘கரிக்ககம்’ என்று மருவியது . திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் இந்த ஆலயம் இருக்கிறது.
xxxx
114. நாராயண குரு கட்டிய சிவன் கோவில் , அருவிப்புரம்
திருவனந்தபுரத்திலிருந்து 26 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற அருவிப்புரம் சிவன் கோவில் இருக்கிறது. அங்கு நாராயண குரு தவம் செய்த குகையும் இருக்கிறது சிவராத்திரி ஏனைய சிவன் கோவில் உற்சவம் போலவே சிறப்புடன் நடைபெறுகிறது. அப்போது கலை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சமய மகாநாடுகளும் நடைபெறும். இந்த விழாவினைத் தவிர, நாராயண குரு பிறந்த தினத்தை ஜெயந்தியாகக் கொண்டாடிவருகின்றனர்
கேரளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் ‘குரு’வாக விளங்கியவர் நாராயண குரு என்னும் மகான் ஆவார் . இந்து சமயத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாறாத மாபெரும் பணியைச் செய்தவர். தாமே பல இந்தக் கோவில்களைக் கட்டினார்.
1888-ல் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்கிற மலைகளும் காடுகளும் சூழ்ந்த இடத்தில் நெய்யாறு ஓடும் இடத்திற்கு அருகில் ஒரு இடத்தில் தனது சீடர்கள் உதவிகளுடன் அந்த ஆற்றில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்து அந்தக் கல்லை சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்தார். இந்தக் கோவிலுக்கு முதலில் தென்னை மரக்கிளைகள் மற்றும் மாமரத்து இலைகளைக் கொண்டு மேற்கூரை அமைக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் தீண்டத் தகாதவர்களுக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப்பட்ட காலத்தில் இந்த அருவிப்புரம் சிவன் கோவில் அமைக்கப்பட்டது ஒரு புரட்சிகரமான செயலாக இருந்தது.
xxxxx
மொழி ஆராய்ச்சிக்கு உதவும் கேரள கோவில்கள்
கேரள / சேர/ மலையாள இந்துக்கள் பழைய தமிழ் மரபுகளையும் , தமிழ் மொழிச் சொற்களையும் பாதுகாத்துவருகின்றனர் . சிலப்பதிகாரத்தில் உள்ள பழைய வழிபாடுகளை இன்றும் காண முடிகிறது
27 நட்சத்திரங்களில் இரண்டே விண்மீன்களுக்கு மட்டும் திரு என்ற சிறப்பு அடைமொழி சேர்க்கப்பட்டதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தனது உபந்யாஸத்தில் அழகாக விளக்கியுள்ளார். அந்த திரு ஒணத்தையும் திரு ஆதிரையையும் இன்றும் பழைய சம்பிரதாயப்படி மலையாள இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். அம்பலம், களி , தளி போன்ற பழந் தமிழ் சொற்களை சர்வ சாதாரணமாகக் கையாண்டு வருகின்றனர் .
எல்லா கோவில்களிலும் யானைகள் பவனி வருவது பழைய ராஜாக்களை நினைவுபடுத்தும்.
சோழர்கள் பெரிய கோவிலை தஞ்சையில் கட்டிய பின்னர், தெலுங்கு நாயக்கர்கள் மதுரை, திரு அண்ணா மலையில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பிய பின்னர், புதிய கட்டிடக்கலை உண்டானது. அதற்கு முன்னர் இருந்த கட்டிடக் கலையை கேரள கோவிலில் காண்கிறோம். இது அஸ்ஸாம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவியது ஆராய்ச்சிக்குரிய விஷயம். மத்திய, தென் அமெரிக்க நாகரீகம் வரை இது சென்றுள்ளது .
தமிழ் நாட்டிலுள்ள பல ஊர்ப்பெயர்களும் கோவில் பெயர்களும் இருப்பதும் ஆராய்ச்சிக்குரிய விஷயம்
நிறைவுரை
கேரளத்தின் புவியியலைக் கொண்டு பரசுராமரின் காலத்தை நிர்ணயிக்க வேண்டும் .
கேரள கோவில்களில் நடக்கும் ஆயிரக்கணக்கான புதிய சடங்குகளை ஆராய்ச்சி ரீதியில் வீடியோ எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் .
சிலப்பதிகார வழக்கங்கள், தெய்வங்கள் ஆகியவற்றை கேரளத்துடன் ஒப்பிட்டு ஆராய வேண்டும்.
ஏராளமான கோவில்களில் அற்புதமான மரச் சிற்பங்களும் சுவர் ஓவியங்களும், விளக்குகளும் உள்ளன. அவைகளை புகைப்படம், வீடியோ எடுத்தது ஆவணப்படுத்த வேண்டும் .
கோவில் கல்வெட்டுகளை, மன்னர் பங்கு பணிகளை கால வரிசைப்படி எழுத வேண்டும்.
திப்பு சுல்தான் முதல், வெள்ளைக்காரர்கள் வரை கோவில்களைத் தாக்கி அழித்ததை வரலாற்றுப் பாடத்தில் சேர்க்கவேண்டும்.
கேரள கட்டிடக்கலை அஸ்ஸாம் , தென்கிழங்கு ஆசிய நாடுகள் , மாயா நாகரீகம் வரை சென்ற காலத்தையும் பாதையினையும் ஆராய வேண்டும்
திருவாதிரைக் களி , கும்மி பாடல்களையும் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும் .
ஓட்டந்துள்ளல் , கதகளி , சாக்கியர் கூத்து அனைத்தையும் கோவில் வாரியாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்..
உலகிலேயே அதிக பொக்கிஷங்களை உடைய திருவனந்த புர பத்மநாப சுவாமி கோவில் புதையல்களை தக்க பாதுகாப்புடன் வெளி உலகிற்குக் காட்சிப்படுத்த வேண்டும் . இது ஏராளமான வரும்படியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை .
சபரி மலை திருவாபரண ங்களையும் , கோவில் நகைகளையும் போட்டோ, வீடியோ மூலம் பதிவு செய்து ஆராய வேண்டும் .
எல்லாவற்றுக்கும் மேலாக அரிய , பழைய பொக்கிஷங்களை இந்து விரோத அரசுகள் அழிக்காதபடி பார்த்துக்கொள்ள மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டும்.
இந்தக் கட்டுரைத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது .
–Subham—
Tags- மொழி ஆராய்ச்சி, அருவிப்புரம் , கரிக்ககம் ,சாமுண்டிதேவி,
பழவங்காடி கணபதி, கோவில் , கேரள, புகழ்பெற்ற, 108 கோவில்கள், PART 57, கழக் கூட்டம் மஹாதேவர் கோவில் பாரசாலா மகாதேவர் ஸ்ரீகண்டேஸ்வரம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 3
ச.நாகராஜன்
கர்ம ரகசியத்தை விளக்கும் நூல்கள் சனாதன தர்மத்தில் ஏராளமாக உள்ளன.
அவற்றில் மிக முக்கியமான ஒன்று யோக வாசிஷ்டம்.
அதில் மரணத்தைப் பற்றிய ஏராளமான செய்திகள் கூறப்படுகின்றன.
ராமருக்கு வசிஷ்டர் மரணம் பற்றிக் கூறுவதை இங்கு பார்க்கப் போகிறோம்.
முதலாவதாக ‘மரணம் ந பயாவஹம்’ என்று கூறப்படுகிறது.
இதன் பொருள் :
‘மரணம் பயத்தை (அல்லது அபாயத்தை) தருவதல்ல’.
அடுத்து வருவது:-
உபசயோ மஹான்
IT IS A GREAT PROPERITY.
அது மிகப்பெரும் வளமை.
இறந்து போகும் ஒருவன், திருப்பிப் பிறக்கவில்லையெனில் அது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம்.
உத்ஸவோ வா!
It is a Joyous occation.
இது ஒரு சந்தோஷகரமான வைபவம்.
உடல் மறைந்து போகிறது என்பதால் அது ஆத்மாவிற்கான ஒரு சந்தோஷகரமான தருணம்.
புது உடல் கிடைக்கிறது என்றால் அதுவும் கூட சந்தோஷத்திற்குரிய ஒரு விஷயம் தானே!
முட்டாள்களே!
சந்தோஷம் தரும் ஒரு தருணத்தால் ஏன் வருந்துகிறீர்கள்?
மூர்த்தி ஸ்வரூபம்
மரணத்தின் ஸ்வரூபம் என்று அடுத்து சொல்லப்படுவது இது:
மரணம் சர்வநாஷாத்ம ந கதாசன வித்யதே!
Death is not, at anytime, of the nature of complete destruction.
மரணம் ஒரு போதும் சர்வநாசத்தை விளைவிப்பதல்ல.
இறந்து போன ஒருவனை நஷ்டமடைந்து விட்டதாகக் கூறுகிறோம். ஆனால் இது உண்மையல்ல. அதுமட்டுமல்ல, இது தவறான கூற்று.
திருப்பித் திருப்பிப் பிறப்பதால் காலத்தாலும் இடத்தாலும் அவன் பிரிக்கப்பட்டவனாகவே பார்க்கப்பட வேண்டும்.
குரங்கானது காட்டில் உள்ள ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்திற்குப் போவது போலவே இதைப் பார்க்க வேண்டும்.
ஆத்மாவானது ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குப் போகிறது.
ஓ, ராமா! ஆத்மாக்கள் தனிப்பட்ட ஆசைகளினாலும்,தங்களது வாசனைகளாலும் (மனப்பதிவுகள்) இன்னொரு இடத்தில் இன்னொரு காலத்தில் இருக்கிறது.
கனவு காணும் ஒருவன் கனவுலகத்தில் தனது சாவைச் சந்தித்த பிறகு விழிப்படைந்த பிறகு இன்னொரு கனவைப் பார்க்க எப்படி உயிர்த்தெழுகிறானோ அப்படியே தான் விழிப்புலகில் சாவை அடையும் ஒருவன் இன்னொரு முறை பிறந்து இன்னொரு விழிப்புலகில் ஒரு கனவைக் காண்கிறான்.
சாவில் பிரக்ஞையை இழந்த பிறகு ஆத்மாவிற்கு அனைத்து உலகங்களும் உடனடியாக, கண்களை விழித்தவுடன், தெரியக் கூடிய உலகங்களாகத் தெரிகின்றன.
சாவில் பிரக்ஞையை இழந்த பிறகு மூன்று உலகங்களில் உள்ள எல்லாப் பொருள்களும் ஒரு க்ஷணத்தில் வந்து தெரிகின்றன.
பிறகு ஆகாயம் உள்ளிட்ட முடிவற்ற விஷயங்கள் அனைத்தும் அவனுக்குத் தெரிகின்றன.
மரணத்தைப் பற்றிய ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கூட ஶ்ரீராமருக்கு வசிஷ்டர் பிட்டுப் பிட்டு வைக்கிறார் இப்படி.
கர்ம ரகசியத்தை அறிய அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்று யோக வாசிஷ்டம்.