
Kalpeshwar/ Kapileshwar temple
Date uploaded in London – – 3 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

Kalpeshwar
QUIZ SERIAL No.106
1.பஞ்ச கேதார் என்று அழைக்கப்படும் ஐந்து கேதார ஸ்தலங்கள் எங்கே உள்ளன ?
XXXX
2.கேதார்நாத்தின் சிறப்பு என்ன?
XXXXX
3.இரண்டாவது கேதார் ஸ்தலமான துங்க நாத் எங்கே இருக்கிறது ? அதன் சிறப்பு / விசேஷம் என்ன?
XXXXX
4.ருத்ரநாத் எங்கே இருக்கிறது ?
XXXXX
5.நாலாவது ஸ்தலமான மகா மத்யேஸ்வர் கோவில் எங்கே இருக்கிறது ?
XXXX
6.கடைசியில் தரிசிக்கும் கல்பேஷ்வர் Kalpeshwar Temple (कल्पेश्वर) சிவன் கோவிலின் சிறப்பு என்ன ?
XXXXX
7.ஐந்து கேதார்களையும் ஐந்து பிரயாகைகளையும் சார் தாம் தலங்களையும் இணைக்கும் அம்சம் எது?அதற்கு என்ன சான்று?
XXXXX
8.பஞ்சகேதார் தலங்களை சிவபெருமானின் உடலில் உள்ள அங்கங்களாகவும் சொல்லுவார்கள்; அவை யாவை ?
XXXXX
9.ஐந்து கோவில்களும் எப்போதும் திறந்திருக்குமா ?
xxxxx
10.இந்த ஐந்து தலங்களுக்கும் நேபாளத்துக்கு உள்ள தொடர்பு என்ன ?
xxxx


Tunganath Shiva Temple
விடைகள்
1.இமய மலையில் உத்தர கண்ட் மாநிலத்தில் ஐந்து கேதார ஸ்தலங்கள் உள்ளன. அவை :
கேதார் நாத் கோவில்
துங்கநாத் கோவில்
ருத்ரநாத் கோவில்
மத்திய மஹேஸ்வர் கோவில்
கல்பேஷ்வர் கோவில்.
இவை அனைத்தும் சிவன் கோவில்கள்
Kedarnath – 1st Panch Kedar
Tungnath – 2nd Panch Kedar
Rudranath – 3rd Pancha Kedar
Madhyamaheshwar, –4th Pancha Kedar
Kalpeshwar, –5th Pancha Kedar
இவைகளை மேற்கூறிய வரிசையிலேயே தரிசிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம் .
XXXXX
கேதார்நாத் கோவில் மிகவும் பிரசித்தமானது ; 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்று. பனி மூடிய ஆறு காலம் கோவில் மூடப்படும். ரிஷிகேஷ் நகரிலிருந்து 223 கி.மீ தொலைவு. மந்தாகினி நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இருக்கிறது ( சார் சதாம்- கேதார்நாத் 10) கட்டுரையில் விவரம் உள்ளது .
XXXXX
3. केदारनाथ கேதார்நாத் உயரம் 3,583 மீட்டர்11,755 அடிகள் ; துங்கநாத் (तुङ्गनाथ)(3,680 m or 12,070 ft),அதையும் விட மேல் இருக்கிறது.
இந்தியாவில் உயரமான சிவன் கோவில் துங்கநாத் கோவில் ஆகும் ; இங்குள்ள சிவலிங்கம் ஸ்வயம்பு லிங்கம்; அதாவது மனிதன் செதுக்கவில்லை. தானாக பூமியில் தோன்றிய லிங்கம். ஆதியில் பாண்டவர்கள் கட்டிய கோவில் ; போரில் தங்கள் செய்த பாவங்கள் தொலைய அவர்கள் இதை எழுப்பினார்கள் . பாண்டவர் உருவங்களும் உள. பிற்காலத்தில் ஆதி சங்கரர் இதை புனர் நிர்மாணித்தார் . அவருடைய சிலையும் இங்கே கருவறையில் உளது . மேலும் உள்ள பல சிலைகளில் கால் பைரவர் , வேத வியாசரை சிலைகள் குறிப்பிடத்தக்கன.
XXXXX
4.இங்கும் இயற்கையில் அமைந்த சிவன் உருவமே ; இந்தக் கோவிலில் சிவன் , முகத்துடன் அருள்பாலிக்கிறார் ; மற்ற இடங்களில் உருவமற்ற லிங்கமே உளது. இதை நீலகண்டன் என்று உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள்; 2286 மீட்டர் உயரத்தில் இமய மலையின் அடர்ந்த காடுகளுக்கு இடையே இந்தக் கோவில் இருக்கிறது இங்கிருந்து இமயமலைச் சிகரங்களான நந்த தேவி, நந்த கண்டி , திரிசூலி, ஹாத்தி பர்வத் ஆகியவற்றைக் கண்டு களிக்கலாம் . அருகில் அனுசுயா தேவி கோவில் இருக்கிறது . கோவிலுக்குப் பின்னால் வைதரணி நதி ஓடுகிறது. கோவிலுக்கு அருகில் சூர்ய குண்டம், சந்திர குண்டம், தாரா குண்டம் ஆகிய புனித நீர்நிலைகளைக் காணலாம். தாரா என்றால் நட்சத்திரம்.
பஞ்ச ஸ்தலங்களில் இதுதான் கடினமான பாதை உடைய கோவில். கோபேஸ்வர் வரை சாலையுள்ளது ; இங்கிருந்தோ ஜோஷிர்மட் என்னும் இடத்திலிருந்தோ மைல் கணக்கில் நடந்து செல்ல வேண்டும்
XXXXX
6.பஞ்ச கேதார் ஸ்தலங்களில் மிகவும் எளிதில் தரிசிக்கக்கூடிய கோவில் கல்பேஷ்வர் கோவில்தான். ரிஷிகேஷிலிருந்து உக்ரம் உர் கம் என்னும் கிராமத்துக்குச் சென்றால் அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் கோவிலை அடையலாம். இங்கே ஜடாதார் என்ற பெயரில் சிவனை வணங்குகிறார்கள்.
உர்கம் பள்ளத்தாக்கு மிகவும் இயற்கை வனப்புமிக்கது. அகஸ்தியர் தவம் செய்ததும், துர்வாசர் கற்பக விருட்சத்தை தின் கீழ் தவம் செய்ததும் இங்குதான் . ஊர்வசி தோன்றியது , குந்தி வரம்பெற்றது இல்லம் இங்குதான் என்றும் செப்புவார்கள்.
ஐந்து கேதார்களுக்கும் சென்றபின்னர் கட்டாயம் பத்ரிநாத்துக்குச் சென்று விஷ்ணுவை வணங்க வேண்டும் என்ற சம்பிரதாகாயமும் இந்தப் பிரதேச மக்களிடம் உளது.
XXXXX

7.ஆதிசங்கரர் இந்த எல்லா கோவில்களிலும் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆதிகால கோவில்களை புனர் நிர்மாணம் செய்திருக்கிறார் ; தென் இந்திய அர்ச்சகர்களை நியமித்தது வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் ஒற்றுமைப்படுத்தியுள்ளார். நாடன் நாட்டின் நான்கு மூலைகளில் நான்கு படங்களை நிறுவி பாரதம் ஒன்றே என்றும் காட்டியுள்ளார். பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதாரையும் அர்ச்சகராக நியமித்து புரட்சி செய்து இருக்கிறார் . மேற்கூறிய பல கோவில்களில் அவரது சிலை அல்லது சந்நிதி இருக்கிறது
XXXXX
8.கேதார்நாத்* ~ ஈசனின் உடல்;
துங்கநாத்* ~ ஈசனின் புஜம்;
ருத்ரநாத்* ~ ஈசனின் முகம்;
மத்மஹேஷ்வர்* ~ ஈசனின் தொப்புள்;
கபிலேஷ்வர்* ~ ஈசனின் தலைமுடி.
XXXXX
9.இல்லை. கல்பேஷ்வர் கோவில் மட்டும்தான் ஆண்டு முழுதும் திறந்திருக்கும். ஏனைய நான்கு கேதார்களும் பனிக்காலத்தில் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும். உற்சவ மூர்த்திகளை மட்டும் உகிமத்தில் வைத்து வழிபடுவார்கள் .
XXXXX
10.நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் பசுபதிநாதசிவன் கோவில் இருக்கிறது. முன் காலத்தில் கேதார்நாத் இந்தப் பட்டியலில் இல்லை ; பசுபதிநாத் கோவில்தான் இருந்தது பிற்காலத்தில்
கேதார் நாத்தை சேர்த்துவிட்டார்கள். இந்த ஐந்து கோவில்களில் பெரும்பாலானவை நேபாள கோபுர அம்சத்தினைக் கொண்டு இருப்பது இதற்குச் சான்று என்பது ஒரு வாதம். மேலும் நேபாள கோரக்நாத் சம்பிரதாயத்தின்ர் பின்பற்றும் நடைமுறைகள், இந்த யாத்திரையிலும் பின்பற்றப்படுகிறது..
–subham—
Tags- கல்பேஷ்வர் கோவில், துங்கநாத், காளிமத் கோவில், பஞ்ச கேதார் பத்து, Quiz,