மப்புலோ ஏமுண்டி, நா மனசுலோ ஏமுண்டி? (Post No.12,988)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,988

Date uploaded in London – — 6 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மப்புலோ ஏமுண்டிநா மனசுலோ ஏமுண்டி?

ச.நாகராஜன்

சும்மாவா சொன்னார் மகாகவி பாரதியார் –

“சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடி வருவோம்” என்று?!

சுந்தரத் தெலுங்கினில் உள்ள ஆயிரக் கணக்கான பாடல்களை கேட்டால் மனம் சொக்கி விடும்.

1963இல் வெளியான லக்ஷாதிகாரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக என்.டி.ராமாராவும் கதாநாயகியாக கிருஷ்ண குமாரியும் நடித்தனர்.

அதில் வரும் ஒரு பாட்டு பிரபலமானது. அதை எழுதியவர் நாராயண ரெட்டி. இவர் புகழ்பெற்ற தெலுங்கு கவிஞர், எழுத்தாளர், திரைப்பட பாடலாசிரியர். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களுக்காக இவர் எழுதிய பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றன.

(பிறப்பு : 29-7-1931 மறைவு 12-6-2017)

1973இல் சாகித்ய அகாடமி விருது, 1988இல் விஸ்வாம்பரா என்ற படைப்பிற்காக ஞானபீட விருது, 1977இல் பத்ம ஶ்ரீ 1992இல்  பத்ம பூஷண் என ஏராளமான விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

பாடல் இது தான்:

பல்லவி

Mabbulo emuṁdi…


nā manasulo emuṁdi..

nā manasulo emuṁdi?

Mabbulo kannīru..


nī manasulo panniru.. nī manasulo pannīru..


avunā..uhu..ū..ū…

.

சரணம் 1

Toḍalo emuṁdi.. nā māḍa lo emuṁdi? nā māḍalo emuṁdi?

Toḍalo malliyalu.. nī māḍalo teniyalu.. nī māḍalo teniyalu ..


uhu..ū..ū..ū..
ūhu..ū..ū..ū..

சரணம் 2

Senulo emuṁdi?.. nā menulo emuṁdi?.. nā menulo emuṁdi?


senulo baṁgāraṁ.. nī menulo siṁgāraṁ… nī menulo siṁgāraṁ

சரணம் 3

Eḍilo emuṁdi?.. nā pāḍalo emuṁdi?… nā pāḍalo emuṁdi?


eḍilo galagalalu.. nī pāḍalo sarigamalu… nī pāḍalo sarigamalu

Nenulo emuṁdī?.. nīvulo emuṁdi?… nīvulo emuṁdi?


nenulo nīvuṁdi… nīvulo nenuṁdi… nīvulo nenuṁdi

Nenulo nīvuṁdi nīvulo nenuṁdi


nīvulo nenuṁdi nenulo nīvuṁdi…
aha..ā..aha..ā..
aha..ā..aha..ā..

கதாநாயகி நாயகனை சீண்டும் அருமையான பாடல் இது.  அருமையான நடிப்பு அருமையான படப்பிடிப்பு.

மேகத்தில் என்ன? கண்ணீர்! என் மனதில் என்ன? பன்னீர்.

நாயகி கேட்கக் கேட்க நாயகன் பளீர் பளீரென்று பதில் அளிக்கிறான். சிங்காரம் சொட்டுகிறது.

கடைசியில் நேனுலோ ஏமுண்டி நீவுலோ ஏமுண்டி என்று கேட்க

நேனுலோ நீமுண்டி நீவுலோ நேமுண்டி என்று பாடல் முடிகிறது.

உன் மனதில் யார்? என் மனதில் யார்?

உன் மனதில் நான்; என் மனதில் நீ!

பாடலை இன்றும் கூட யூ டியூபில் கேட்டு மகிழலாம்;

படப்பிடிப்பின் போது இந்தப் பாடலின் ஒரு காட்சி கிண்டி எஞ்சினியரிங் காலேஜில்  நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்டது. கதாநாயகி பத்மா (நடிகை கிருஷ்ணகுமாரி) நீச்சல் உடையில் தோன்றி நடிக்கும் காட்சி. ஆனால் அப்போதைய சென்ஸார் போர்ட் இந்தக் காட்சியை அனுமதிக்கவில்லை. ஆகவே கட் செய்யப்பட்டது.

வடபழனியில் அந்தக் கால சந்தமாமா கட்டிடம் கல்லூரிக்காக காட்டப்பட்டது. பாடலின் இறுதி வரிகளில் ராமாராவும் கிருஷ்ணகுமாரியும் ஒருவரை ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் போகும் காட்சி இருந்தது. ஆனால் திடீரென்று ஒரு அலைவந்து அவர்களை இழுக்க கிருஷ்ணகுமாரி  அலையில் இழுக்கப்பட்டு கிட்டத்தட்ட முழுகியே விட்டார். ஆனால் என் டி ராமாராவ் அவர் கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அவரை காப்பாற்றினார்.

இந்தப் படத்திற்கு முன்னால் 1960இல் வந்த பார்த்திபன் கனவு தமிழ்ப் படத்தில் ஒரு பாடல்: கண்ணாலே நான் கண்ட கணமே  என்று.

படத்தில் ஜெமினிகணேசன் மற்றும் வைஜயந்திமாலா நடித்திருந்தனர். கதையை எழுதியது கல்கி.  பாடலை எழுதியவர் மருதகாசி

பாடல்

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
என்னோடு வாவென்று சொல்லுதே
எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
என்னோடு வாவென்று சொல்லுதே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

யாரென்று கேட்காததேனோ
யாரானால் என்னென்று தானோ
யாரென்று கேட்காததேனோ
யாரானால் என்னென்று தானோ

நேராக நின்று யாரென்று கேட்டால்
கூரான வேல் பாயும் என்றோ
நேராக நின்று யாரென்று கேட்டால்

கூரான வேல் பாயும் என்றோ

யாரான போதென்ன கண்ணே
நான் உண்ணும் ஆனந்த தேனே
யாரான போதென்ன கண்ணே
நான் உண்ணும் ஆனந்த தேனே

நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல
நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல
இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே
இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே

என் இதயம் எல்லாம் உமக்கே
என் இதயம் எல்லாம் உமக்கே

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
இது முன்னாளில் உண்டாண உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

இந்தப் பாடல் பெரிய ‘ஹிட்’ பாடல்!

பாடலின் இறுதியில் வரும்

நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல

என்ற வரிகள் மப்புலோ ஏமுண்டி பாடலின் இறுதி அடிகளை ஒத்திருப்பதைக் காணலாம்.

*

நாயகி நாயகன் கேள்வி- பதில் பாடல்கள் பற்பல.

உதாரணத்திற்கு ஒன்று 1963இல் வெளியான இருவர் உள்ளம் படத்தில் வரும் நதி எங்கே போகிறது என்ற பாடல்.

நாயகி :நதி எங்கே போகிறது
நாயகன் :கடலைத் தேடி
நாயகி : நாளெங்கே போகிறது
நாயகன் : இரவைத் தேடி

நாயகி : நிலவெங்கே போகிறது
நாயகன் :மலரைத் தேடி
நாயகி :நினைவெங்கே போகிறது
நாயகன் :உறவைத் தேடி (2)

சிவாஜிகணேசன், சரோஜாதேவி நடித்த இந்தப் படத்தில் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

பாடியவர்கள் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா.

ரசிக்கும்படியான இப்படிப்பட்ட பாடல்கள் ஒரு காலத்தில் ஓஹோ என்று இசையுடன் விளையாடி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டது!

காலத்தை வென்று நிலை நிற்கும் காதல் பாடல்கள் இவை!

***

Leave a comment

Leave a comment