முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!-5 (Post No.12,989)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,989

Date uploaded in London – –   6 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!-5

Part 5

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

XXXXX

கட்டிகளுக்கு

41.ஆளிவிறையை அறைத்துகிளறி கட்டிகளுக்கு காட்டுவதும் உண்டு; கட்டிகள் பழுத்து உடையும் .

XXXX

சூட்டுக்கு

42 .ஆத்து முள்ளங்கியை  பில்லை பில்லையாக அறுத்து வஸ்திரகாயம் செய்து பின்னரே, மிளகு தூளில் தொட்டு சாப்பிட்டவும். இப்படி காலையில் சாப்பிட்டுவந்தா நீர் சுத்தியாகும். சூடு தணியும், சிறு பெயருடன் சமைத்து சாப்பிடுவதும் உண்டு .

XXXX

பொருமல் கழிச்சலுக்கு

43 . ஆமையோடு அதிவிடயம் ,அசமாதாக்கம், வட்டத்திருப்பி, பாவட்டை, மிளகு, சுக்கு சமமாக  சேர்த்து வெந்நீர் வீட்டாரைத்து முலைப்பாலில் கொடுக்க நிவர்த்தியாகும் .

XXXX

குழந்தைகள் வளர

44 . ஆமணக்கெண்ணெயுடன் பேயன் வாழைப்பழத்தைப் பில்லை பில்லையாக அறுத்து , ஊரப் போட்டு , கற்கண்டுப் பொடிசெய்து போட்டு தினந்தோறும் காலையில் இரண்டிரண்டு வாழைப்பழமும் கொஞ்சம்  எண்ணெயும் கொடுக்கவும்  . இப்படி வழக்கமாய்க் கொடுத்து வந்தால் சகல சூடும் தணிந்து குழந்தைகள் புஷ்டியாய் வளரும்.

XXXX

கட்டிகளுக்கு 

45 . ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கி கட்டிகளில் வைத்துக்கட்ட அவை பழுத்து உடையும்.

XXXX

மலச்சிக்கல் நீங்க

46 . ஆமணக்கின் முத்தை மேற்றோல் நீக்கி காரசாரம் வைத்து துகையல் செய்து களஞ்சிக்காயளவு கொடுத்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்; பேதியாகும்

XXXX

கண் ஒளிவுக்கு

47 . இருவாட்சி சமூலத்தைப் பசும்பால் விட்டரைத்து புன்னக்காயளவு எடுத்து அரிக்கால்படி பாலில் லந்து காலையில் உட்கொண்டு வந்தால் கண்களில் மங்கல் நீங்கி நல்ல ஒளி உண்டாகும். மூர்ச்சை ரோகம், சுவாச ரோகம் வரவாட்டாமல் பாதுகாக்கும். நேத்திர ரோகம் தொண்ணூற்றாறுக்கும் அனுபோகமான தைல முறையை பார்வதி பரணீயத்தில் சொல்லியிருக்கிறபடி அவரவர் செய்துகொள்ளவும் .

XXXX

நீர்க்கடுப்பு வெள்ளைக்கு

48 . இலவம் பிஞ்சியும் இலவம் கொழுந்தும் ஒருபிடியெடுத்துப் பால்விட்டரைத்து பாலில் கலந்து காலையில் சாப்பிடவும். இப்படி மூன்று நாள் சாப்பிடவும்.  நீர்க்கடுப்பு வெள்ளை விழுதல் தீரும். மேகந்தீரும்; விந்து கெட்டிப்படும்.

XXXX

நமைச்சலுக்கு 

49 . இந்துப்பு ஒருபலம் எடுத்து பொடி செய்து ,கால்பலம் வசம்பு பொடி செய்து, இரண்டும் கலந்து வெண்ணெய் போட்டுக் குழைத்து காலையில் உடம்பில் முழுமையும் தேய்த்துப் பகலில் சீயக்காய்த் தேய்த்துக் குளிக்கவும் ; நமை, தடிப்பு, சொறி இவைகள் தீரும் .

XXXX

குழந்தைகளுக்கு மலஜலம் கட்டிவிட்டால்

50 . இலைக்கள்ளி வேர்ப்பட்டை ஒரு இடை , சுக்கு-மிளகு – உள்ளி வகைக்கு கால் இடை , இவைகளையிடித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொண்டு முலைப்பாலிலாவது வெந்நீரிலாவது ஒரு காசிடைக்  கலந்து கொடுக்கவும். இப்படி மூன்று வேளை கொடுத்து வந்தால் மலஜலம் உதயமாகும். பிள்ளைகள் வியாதிகள் சகலத்திற்கும் ஒரே மாத்திரை பார்வதி பரணீயத்தில் பார்த்து செய்து கொள்ளவும்  .

XXXX

பெண்கள் பெரும்பாட்டுக்கு

51 . இலவம் பிஞ்சும் கொழுந்தும்  சரியாய் சேர்த்துப் புளிப்புத்தயிர் விட்டு, ஒன்றிரண்டாயிடித்து ஒரு ராத்திரி வைத்திருந்து  காலையில் பிழிந்து அந்த ரசத்தை குடிக்கவும். இப்படி சில தினங்கள் குடித்து வர பெரும்பாடு ரோகம் தீரும் .

–சுபம்—

TAGS- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள்!- PART 5, 

Leave a comment

Leave a comment