ஶ்ரீ ராமருக்கு வெற்றி! (Post No.12,991)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,991

Date uploaded in London – — 7 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஶ்ரீ ராமருக்கு வெற்றி!

ச.நாகராஜன்

ஶ்ரீ ராமருக்கு வெற்றி!

சொந்த வீட்டை விட்டு வெளியிலே தங்க வைக்கப்பட்ட ராமர் கடைசியில் கடும் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் பின்னர் அமர்க்களமாக சொந்த வீட்டில் அமர வைக்கப்பட்டு விட்டார்.

நீண்ட நெடிய போராட்டம்! 

ஏராளமான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டன.

கொடுங்கோலன் பாபரால் (1483-1530) அயோத்தியில் உள்ள ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்ட பின்னர் கடந்த ஐநூறு ஆண்டுகளாக அதை மீட்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை ஒவ்வொரு ஹிந்துவும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பாபர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் நான்கு முயற்சிகள்

ஹுமாயூன் ஆண்ட காலத்தில்    பத்து முயற்சிகள்

அவுரங்கசீப் ஆண்ட காலத்தில் முப்பது முயற்சிகள்

ஷக்தர் அலி ஆண்ட காலத்தில் ஐந்து முயற்சிகள்

நசீர் – உத்- தின் ஹைதர் ஆண்ட காலத்தில் மூன்று முயற்சிகள்

பிரிட்டிஷார் காலத்தில் இரண்டு முயற்சிகள்

சுதந்திரம் கிடைத்தபின்னர் பி.வி. நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்த போது ஒரு முயற்சி

என்று இப்படி பல தடவைகள் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி.

மக்கள் கூட்டம் திரளாகத் திரண்டது. அப்போது முலாயம்சிங் யாதவின் அரசு. உத்தரபிரதேச போலீசார் அமைதியாகத் திரண்டிருந்த கூட்டத்தின் மீது கடுமையான அடக்கு முறையைக் கையாண்டது.

பாப்ரி மஸ்ஜித்தை இடித்து அயோத்தியில் ராமர் கோவில் மீண்டும் கட்ட வேண்டும் என்று கரசேவகர்கள் குழுமினர்.

ராம் (வயது 23) மற்றும் சரத் (வயது 20) ஆகிய இரு இளைஞர்களே முதன் முதலாக பாபர் மசூதியின் மீது காவிக் கொடியைப் பறக்க விட்டனர்.

நவம்பர் மூன்றாம் தேதி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, “ராஜஸ்தானில் உள்ள ஶ்ரீகங்காநகரைச் சேர்ந்த அடையாளம் தெரியாத கர சேவக் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழுந்தார்.” என்று கூறியது.

சாலையில் அவரது ரத்தத்தினால் ‘சீதாராம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

அவர் தனது பெயரைத் தான் எழுதினாரா அல்லது ஶ்ரீ ராமர் அவரை சீதாராம் என்று எழுத ஊக்குவித்தாரா என்பது இன்றும் விளங்காத ஒரு மர்மமாகவே இருக்கிறது!

அறிக்கை தெளிவாகச் சொல்லும் ஒரு விஷயம் அவர் குண்டடி பட்டுக் கீழே விழுந்த பின்னரும் கூட CRPF நபர்கள் அவரது மண்டையைக் குறி பார்த்து ஏழு முறை சுட்டனராம்.

அதிகாரபூர்வமான ஆவணத்தின் படி 16 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். உண்மையில் இன்னும் அதிகமான பேர்கள் கொல்லப்பட்டனர் என்பதே அனைவரது ஊகமாக இருக்கிறது.

அமைதியான போராட்டம் நடத்தியவர்களுக்கு இந்தக் கொடூர தண்டனை! தங்கள் மதக் கோட்பாட்டைப் பின்பற்றி பஜனை செய்தவர்களுக்கு இந்த அநியாய தண்டனை!! அடுக்குமா இது!!!

ஆனால் அவர்களுக்குத் தெரியாது, தங்கள் உயிர் தியாகத்தினால் இந்த பாரத தேசம் நெடுக ஒரு பெரும் எழுச்சி அலையைத் தாங்கள் உருவாக்கப் போகிறோம் என்று!

25 மாதங்கள் ஓடின.

வந்தது 1992ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி.

விஸ்வஹிந்து பரிஷத் அயோத்தியில் அமைதியான கர சேவை ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. வழிபாட்டிற்கென்று ஒரு இடம் திட்டமிடப்பட்டது.

நாடெங்கிலுமிருந்து கரசேவகர்கள் அயோத்தி நோக்கி வரலாயினர்.

அவர்களை ஒழுங்குபடுத்த ஏராளமான பாதுகாப்புகள் வேறு!

அன்று நடந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த மஹந்த் ப்ரஜ்மோஹந்தாஸ் எங்கும் ஒரே உற்சாகம், சந்தோஷம் தான் என்கிறார். கடவுளின் சக்தி என்றால் என்ன என்று தெரிந்தது என்று மேலும் அவர் கூறுகிறார்.

அனைவருக்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

கடைசியில் ஹனுமன்கார்கி அருகே உள்ள பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு காலியான பஸ்ஸில் ஒரு கரசேவகர் ஏறினார். வெகு வேகமாக எல்லாத் தடைகளையும் மோதித் தகர்த்து பாப்ரி மஜ்ஜித்தை நோக்கி முன்னேறினார்.

எல்லா கரசேவர்கர்களுக்கு வழி கிடைத்தது. அனைவரும் முன்னேறினர்.

ஆறே ஆறு மணி நேரத்தில் சிதிலமடைந்திருந்த பாபர் மசூதிக் கட்டிடங்கள் மூன்றும் இடிக்கப்பட்டன.

இதில் ஒரு பெரிய ஜோக் என்னவென்றால் அரசியல் புத்திசாலிகள் அனைவரும் பாப்ரி மஜ்ஜித் இருந்த இடத்தில் அயோத்தி ராமர் கோவில் அமைப்பது தப்பு என்கின்றனர்.

இந்த அறிவு ஜீவிகள் அந்த இடத்தில் முதலில் இருந்தது ராமர் கோவில் என்பதை வசதியாக வேண்டுமென்றே மறக்கின்றனர்; மறைக்கின்றனர்.

உலகமே இதுவரை கண்டிராத “வரலாற்று ஆராய்ச்சியாளர்களான”

ஆர்.எஸ். சர்மா, விபன் சந்த்ரா. ரொமிளா தாபர், இர்ஃபான் ஹபீப்  ஆகியோர் பொங்கி எழுகின்றனர். வரலாற்றின் முதல் பாகத்தை மறந்தும் மறைத்தும் பேசும் இவர்கள் கரசேவகர்கள் இப்படிச் செய்யலாமா என்று பொங்கிக் கேட்கின்றனர்.

போலி செக்குலர்வாதம் பேசும் இவர்களை நாடே மன்னிக்கட்டும்; ஏனெனில் நமது பண்பு அது தான்!

ராமர் தனது இடத்திற்கு வந்து விட்டார்.

இதற்கு ஊக்கமும் உத்வேகமும் ஊட்டிய எல்.கே.அத்வானிஜிக்கு பாரத ரத்னா பட்டம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பான மாமனிதருக்கு உரித்தான சரியான விருது.

வாழ்க எல் கே அத்வானிஜி.

ஶ்ரீ ராம் ஜெய் ராம்  ஜெய் ஜெய் ராம்!

***

Leave a comment

Leave a comment