
Post No. 12,993
Date uploaded in London – — 8 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புத்தக அறிமுகம் 131
ச.நாகராஜன்
செப்புமொழி 500 + நூலில் உள்ள எனது என்னுரை இது:
என்னுரை
சிந்தனையாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள்,
நடிக, நடிகையர் என பலரும் காலம் காலமாக முத்திரை
வாக்கியங்களைச் சொல்லி அனைவரது உள்ளங்களையும்
கொள்ளை கொள்கின்றனர்.
இவைகளில் பல பொன் மொழிகள்; சில FUN மொழிகள்!
சிந்தனைக்கு விருந்தாகவும் வழிகாட்டியாகவும் அமைபவை
பல; எனில் வேடிக்கையாகவும் நையாண்டி மொழிகளாகவும்
மிளிர்பவை பல.
காலம் காலமாக பல்வேறு நாடுகளிலும் பழமொழிகளும்
சுவையானவை; சிந்தனைக்கு விருந்தளிப்பவை.
அவ்வப்பொழுது இவற்றைப் பயன்படுத்தி அனைவரையும்
மகிழ்விக்கலாம். உத்வேகமூட்டும் மொழிகளால் வாழ்க்கைப்
பாதையை நல்ல விதமாகவும் வகுத்துக் கொள்ளலாம்.
இவற்றையெல்லாம் அவ்வப்பொழுது படித்து அவற்றைத்
தொகுத்துச் சேர்ப்பது எனது வழக்கமாக இருந்தது; ஆனால்
இப்போதோ இவை இணைய தளத்தில் ஏராளமாக
மிதக்கின்றன.
இவற்றில் 500 + மொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து இங்கு
தொகுத்துத் தருகிறேன்.
ஆங்கிலத்தில் மூலம் உள்ளது; தமிழாக்கம் என்னுடையது.
இவை அனைத்து செப்பு மொழி பதினெட்டு, பத்தொன்பது,
இருபது என்று பற்பல கட்டுரைகளாக அவ்வப்பொழுது
http://www.tamilandvedas.com தளத்தில் வெளி வந்தன. இவற்றை
வெளியிட்ட லண்டன் திரு.ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
இந்த செப்பு மொழிகளைப் படித்து அவ்வப்பொழுது பாராட்டி
ஊக்கமூட்டிய அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றி
உரித்தாகுக.
இதை நூல் வடிவில் அழகுற வெளியிட முன் வந்த pustaka
Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ்
அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
நன்றி.
பங்களூர் ச.நாகராஜன்
14-12-2022
*
நூலில் உள்ள அத்தியாயங்கள்
என்னுரை
அத்தியாயங்கள்
1. செப்பு மொழி முதல் நூறு (1 முதல் 100 முடிய)
2. செப்பு மொழி 101 முதல் 200 முடிய
3. செப்பு மொழி 201 முதல் 300 முடிய
4. செப்பு மொழி 301 முதல் 400 முடிய
5. செப்பு மொழி 401 முதல் 500 + முடிய
6. வாழும் வழி :கட்டளை புதிது
*
இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணையதளத்தில் அறியலாம்.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**