QUIZ ஜெய்ப்பூர் பத்து QUIZ (Post No.12,994)

Hawa Mahal,Jaipur 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,994

Date uploaded in London – –   8 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial Number 109

Amber Palace, Jaipur

1.ஜெய்ப்பூர் நகரம் எங்கே இருக்கிறது?அதன் சிறப்பு என்ன ?

xxxx

2.ஜெய்ப்பூரில் கோவில்கள் உள்ளனவா முக்கியக் கோவில்கள் எவை ?

xxxx

3.குரங்குக் கோவில் எங்கே இருக்கிறது?

xxxx

4.ஜெய்ப்பூர் அரண்மனைகளில் ஹவா மஹால் ஏன் மிகவும் பிரசித்தமாகியது?

xxxx

5.ஜல் மஹால் என்று அழகிக்கப்படும் நீர் அரண்மனையை யார் காட்டினார்?

xxxx

6.முதல் சுதந்திர போரில் சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் கோட்டை எது?

xxxx

7.ஜெய்ப்பூருக்கு அருகில் பவானி அம்மனின் பெயர்தாங்கிய கோட்டை எது ?

xxxx

8.நகரிலுள்ள முக்கிய மியூசியத்தில் பெயர் என்ன அங்கே என்ன என்ன பார்க்கலாம் ?

xxxx

9. சிட்டி பாலஸ் அரண்மனையை யார் கட்டினார் அங்கே இப்போது என்ன உள்ளது?

xxxx

10.ஐந்து நகரங்களில் ஜந்தர் மந்தர் Jantar Mantar என்ற பெயரில் ஜெய்ப்பூர் மன்னர் வானாராய்ச்சிக் கூட்டங்களைக் கட்டினார் ஜெய்ப்பூர் நிலையத்தின் சிறப்பு என்ன?

xxxx

Jaipur Bag

Jal Mahal, Water Palace

விடைகள்

1.இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் தலை நகரம் ஜெய்ப்பூர்  இங்குள்ள கட்டிடத்தின் நிறம் இளம் சிவப்பு; ஆகையால் இதை பிங்க் சிட்டி Pink City என்று அழைக்கிறார்கள் . இங்குள்ள அரண்மனைகள் காரணமாக இது மிகவும் புகழ்பெற்றது . அத்தோடு இங்கு தயாரிக்கப்படும் துப்பட்டிகள், கம்பளங்கள், நெய்யப்படும் புடவைகள், செய்யப்படும் பளிங்குக்கல் பெட்டிகள் , நகைகள், வளையல்கள்  ஆகிய அனைத்தும் ஒப்பற்ற ராஜஸ்தான் பாணியில் கண்ணைக் கவரும் பொருட்களாக மிளிரும் . பல வண்ணங்கள் ஜொலிக்கும். டில்லியிலிருந்து 288 கிமீ தொலைவில் இருக்கிறது.பிர்லா மந்திர் முதலிய கோவில்கள் இருக்கின்றன. 

Xxxx

2.பத்து கி.மீ தொலைவில் ஆரவல்லி குன்றுகளின் பாறைகளிடையே அமைந்த கல்தாஜி கோவில் மிகவும் பிரசித்தமான வைஷ்ணவ கோவில் ஆகும். இது 500 ஆண்டு பழமையான ராமானந்த சம்ரதாயத்தினரின் புனிதத் தலம்  . பல மாநில பக்தர்கள் இங்கு வருகிறார்கள். ராமானந்த சம்பிரதாய மகான்களின் புனித குகைகள் உள்ளன. மேலும் ஏழு புனித ஊற்றுகளிலிருந்து வரும் நீர் கல்தா குண்டத்தில் சேருகின்றன. அங்கே குளிப்பது புனித நீராடல் ஆகும்.  மகர சங்கராந்தி / பண்டிகையின்போது பல்லாயிரக் கணக்கானோர் நீராட வருகின்றனர் . மலை மீதும் இயற்கை நீரூற்று உண்டு. அங்கிருந்துநகர் முழுதையும் காணலாம்; சூரியன் கோவிலும் இருக்கிறது .

xxxx

3.கல்தாஜி கோவில் வளாகத்தில் சீதாராம் கோவில் இருக்கிறது; இங்கு சுமார் 200  குரங்குகள் இருக்கின்றன. இதனால் இதை ஆங்கிலேயர்கள் குரங்குக் கோவில் என்று அழைத்தனர் .

xxxx

4.ஹவா என்றால் காற்று ; இதில்  சுமார் ஆயிரம் ஜன்னல்கள் இருப்பதால் இதை காற்று வீசும் அரண்மனை என்று அழைத்தனர். இதை 200  ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய்ப்பூர் மன்னர் சவாய பிரதாப் சிங் கட்டினார். இளம் சிவப்புக் கற்களினால் கட்டப்பட்ட இங்தக கட்டிடம் காலை சூரிய ஒளியில் பொன்போல தகதகக்கும் .  953 சிறிய ஜன்னல்களை ஜரோகாக்கள் என்று கூறுவர். ஐந்தடுக்குக் கட்டிடத்தின் மேல்புற ஜன்னல்களிலிருந்து ராணியும் அவருடைய தோழிகளும் நகரின் முக்கியவீதியைப் பார்க்கும் வண்ணம் இது அமைக்கப்பட்டது ராஜஸ்தானி/ மார்வாரி குடும்ப பெண்கள் வெளியே வரமாட்டார்கள் .

ஜெய்ப்பூர் நகரத்தை  திட்டமிட்டு  உருவாக்கிய லால் சந்த் உஸ்தா இந்த ஹவா மஹாலையும் திட்டமிட்டார்.

Xxxx

(5).  300 ஏக்கர் பரப்பளவு கொண்ட மன்  சாகர் ஏரியின் நடுவில் அமைக்கப்பட்டது ஜல மஹால்; இதை 200 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் ஜெயசிங் என்ற மன்னர் கட்டினார். மாழைக்காலத்தில் கட்டிடத்தின் ஐந்து அடுக்குகளில் 4 அடுக்குகள் தண்ணீரில் மூழ்கிவிடும்.

Xxxx

(6). 1857-ல்  பிரிட்டிஷாரை எதிர்த்து இந்தியப்படையினர் புரட்சி செய்தனர். இதை  சிப்பாய் கலகம் என்று வெள்ளைக்காரர்கள் மட்டம்தட்டி இகழ்ந்தபோதும் இந்தியாவின் முதல் சுதந்திர போர் என்று வீர சாவர்க்கர் அழைத்தார். மராத்திய படைகளையும் ஆங்கிலப் படைகளையும் சமாளிப்பதற்காக ஜெய்ப்பூர் மன்னர் சவாய் இரண்டாம் ஜெய்சிங், கிபி 1734ல் நாகர்கர் கோட்டையை  நிறுவினார். 1857 ல் இந்தியாவின் முதல் சுதந்திர போர் நடந்த போது, ஆங்கிலேய ஆட்சியாளர்களின் குடும்பங்கள் இக்கோட்டையில் பாதுகாப்பாக தங்கின. இது நகருக்கு அருகில் இருக்கிறது.

xxxx

7.நகரிலிருந்து 11 கி.மீ தொலைவிலுள்ள கோட்டை அம்பாளின் (பவானி அம்மன்) பெயரில் ஆம்பர் கோட்டை என்று அழைக்கப்படுகிறது ; இது ஆயிரமாண்டுகளுக்கும் மேலான பழமை உடையதால் யுனேஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் குலத்தினர் முதலில் அமைத்த சிறிய கட்டிடத்தை 1000  ஆண்டுகளுக்கு முன் ராஜ மான் சிங் அரண்மனையாகக் கட்டினார். பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டது.  அருகில் பெரிய ஏரி இருக்கிறது; ஆமேர்  என்னும் ஊரில் இருப்பதால்  ஆமேர்  கோட்டை என்றும் சொல்லுவார்கள் .

xxxx

8.ஜெய்ப்பூரில் பத்து மியூசியங்கள் இருக்கின்றன . அவைகளில் மிகவும் புகழ்வாய்ந்தது ஆல்பெர்ட் ஹால் மியூசியம். இது இரண்டு அடுக்குமாடி கட்டிடம் . ராஜஸ்தான் மாநில ம்யூசியமாக கருதப்படும் இங்கு ஓவியங்கள் கம்பளங்கள், நகைகள், தந்தத்தினாலான பொருட்கள், கற்சிலைகள், உலோக விக்கிரகங்கள், கிரிஸ்டல் என்னும் பலிங் கு கற்களிலான உருவங்கள் முதியவற்றைக் காணலாம்.இவை அனைத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. பல கைவினைப் பொருட்களையும் காணலாம்.

xxxx

 9.ஜெய்ப்பூர் சமஸ்தான தலைநகரை ஆம்பர் நகரிலிருந்து ஜெய்ப்பூருக்கு மாற்றியவுடன் இரண்டாம் ஜெய் சிங் 1732- ல் இதை வாஸ்து சாஸ்திரப்படி கட்டினார் . அதுமுதல் மன்னர் குடும்ப வசிப்பிடமாகவும் நிர்வாக அலுவலமாகவும் திகழ்கிறது.

இளஞ்சிவப்பு கற்களைக் கொண்டு கட்டப்பட்டது; அரண்மனை சுவர்களையும் , கூரைகளையும் பல வண்ணக் கண்ணாடி சில்லுகள்  அலங்கரிக்கின்றன.

ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தின் மேற்கு பகுதியில் அமைந்த சந்திர அரண்மனை ஏழு தளங்கள் கொண்டது. இவ்வரன்மனை அழகிய ஓவியங்கள், பல நிறக் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய பூக்களால் ஆன சுவர்கள், தரைகளைக் கொண்டது..

சந்திர மகாலின் நான்காம் தளத்தை, சோபா நிவாஸ் என்பர். இது கண்ணாடி மாளிகை .ஐந்தாம் தளத்தில் படிமங்களின் மாளிகை உள்ளது. ஆறாம் தளத்தை ஸ்ரீ  நிவாஸ் என்பர். ஏழாம் தளத்தை மணி மகுடக் கோயில் என்பர். அரண்மனைக்குள் கிருஷ்ண கோவில் இருக்கிறது ப்ரீத்தம் நிவாஸ் சதுக்கத்தில் இந்துக் கடவுளர்களைக் காணலாம்.

இங்கு ஒரு மியூசியமும் இருக்கிறது; அரச குடும்பத்தினர் 500 ஊழியர்கள், சேவகர்களுடன் வசிக்கின்றனர் . திவானி ஆம், திவானிகாஸ் என்று பல பகுதிகளைக் கொண்ட விஸ்தாரமான அரண்மனை இது.

Xxxx

10.இங்குள்ள சன் டயல்,Sun Dial,  கருவிதான் உலகிலேயே மிகப்பெரியது ; சூரியனின் நிலையையும் துல்லியமான நேரத்தையும் காட்டுவது சன் டயல் என்னும் சூரிய கடிகாரம் ஆகும்.

City Palace

–சுபம்–

Tags- சிட்டி பாலஸ், சன் டயல், கண்ணாடி மாளிகை, ஆல்பெர்ட் ஹால் மியூசியம், குரங்குக் கோவில், ஹவா மஹால், ஜெய்ப்பூர், அரண்மனை

Leave a comment

Leave a comment