முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!- 6 (Post No.12,996)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,996

Date uploaded in London – –   9 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 6

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 51  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி

XXXX

குறிப்பு

என்னைப் பொருத்த வரையில்  இதிலுள்ள மொழியில்தான் , மொழிப் பிரயோகத்தில்தான் ஆர்வம் அதிகம் ; அந்தக் காலத்தில் நிலவிய கிராமீய வைத்திய பாஷை இதில் இருக்கிறது . ஏராள மான மருந்துச் சரக்குகள் , மருத்துவ மூலிகைகள் பற்றிய விஷயங்களும் உள. ஆனால் வரிக்கு வரி எழுத்துப் பிழைகள் ; இதைப் படித்தால் தமிழே மறந்து விடும்!!! எதிர்கால மருத்துவ மொழி ஆராய்ச்சியாளருக்கு இந்த நூல் உதவும். 100  ஆண்டுகளுக்கு முந்தைய பத்திரிகைகளில் வந்த மருத்துவ விளம்பரங்களைப் பார்த்தால் இதே மொழி பயன்பட்டதைக் காணலாம்; யுனானி மருத்துவ விளம்பரங்களை ஒரு டாக்டர் படிப்பு மாணவர்க்கு நான் லண்டன் வெல்கம் சென்டரில் மொழி பெயர்த்துக் கொடுத்தேன் ; இன்றுள்ள தமிழர்க்கு பல விஷயங்கள் புரியாது என்று அப்போது அவருக்கு சொல்லிக் கொடுத்தேன் .

XXXX

52 .பிள்ளையில்லாதவற்கு

இலவம் சருகையிடித்து எட்டுக்கொரு பாகமாய்க் கஷாயம் வைத்து  ஒரு வேளைக்கு இரண்டு பலம் கியாழத்திற்குக்குறையாமல் குடித்து வந்தால் பித்தம் பயித்தியம் இவைகளை போக்கிவிடும். கெற்பக்குழியை சுத்தம் செய்து கருத்தரிக்கச் செய்யும்.

XXXX

53 .அதிசார பேதிக்கு

இலவம் இலையை யிடித்து சாறு பிழிந்து அதிகாலையில் சாப்பிட்டுவந்தால் அநேக மருந்துகளால் தீராத அதிசாரபேதியை நிவர்த்தியாக்கும் .

XXXX

54 . இஞ்சி சர்பத்து

இஞ்சியை மேல் பரணி சீவிவிட்டு துண்டு துண்டாய் அறுத்து ஆரே க …..ல் ரூபா இடைநிறுத்து பொங்கப்பொங்க கொதி வரும்படி காச்சி இறக்கி அரைக்கால்படி ஜலத்தில் மேற்படி இஞ்சிகளைப் போட்டு நாலு மணி நேரம் ஊரவைத்து வடிகட்டி அந்த ஜலத்தையடுப்பிலேற்றி 75  ரூபாயிடை வெள்ளை சக்கரை போட்டு கலக்கி பாகுபதத்தில் எடுத்து சீசாவில் வைத்துக்கொண்டு வேளைக்கு அரை ரூபாயிடை சாப்பிட்டு வரவும்; பித்த சாந்தி, மனோ தைரியம் உண்டாகும் .

XXXX

55 . ஈளை இருமலுக்கு

இஞ்சிச் சாறும், மாதுளம் பூச்சாறும் தேனும் சமனாய்க் கலந்து ஒருவேளைக்கு  அரைக்கால் படி வீதம் சாப்பிட்டுவர மேற்படியிருமல் சாந்தியாகும்.

XXXXX

56. இண்டந்தண்டை ஊதின தண்ணீர் அரைக்கால்படி திப்பிலிப் பொகடி திருகடி பொரித்த வெங்காரப்பொடி மூன்று களஞ்சி இதுகளை ஒன்றாய்க்கூட்டி கொடுக்கவும்; ஈளை இருமல் சாந்தியாகும்.

XXXX

57 .இந்துப்பும் கற்கண்டும் பொடித்து திருகடிப் பிரமாணம் ஒருவேளைக்கு கொடுத்து கொஞ்சம் வெந்நீர் கொடுக்கவும். இப்படி 5-6-10  வேளை வரையில் கொடுக்கவும்; (இருமல்) சந்தியாகும்

XXXX

58 . பித்த சாந்தி

இஞ்சி- திரிகடுகு- ஏலம்- அதிமதுரம்- சீரகம்- சந்தனத்தூள்  வகைக்கு வராகநிடை 1 எடுத்து சிதைத்து ஒரு படி தண்ணியில் போட்டு அரைக்கால் படியாகக் கஷாயமிட்டு இறக்கி கொஞ்சம் சீனி கலந்து கொடுக்கவும். இப்படி5-6 வேளையில் கொடுக்க பித்த சிலுமிஷம் சாந்தியாகும்.

XXXX

59 . பித்தஎரிவுக்கு

இஞ்சிச் சாறும் கழுதைப்பாலும் ஒரேயளவாய்க்கலந்து வேளை ஒன்றுக்கு அரிக்கால்படி வீதம் உள்ளுக்குக் கொடுத்து ஆதளை யிலையும் முத்தெருக்க ..செவியும் ஓர் நிறையெடுத்து ஒரு வருஷத்துக் காடிவிட்டு மைபோலயிடித்து உச்சி முதல் பாதம் வரை யில் பூசிவைத்து மாலையில் நீராடிவரவும். இப்படி பத்து நாள் செய்ய அசாத்தியமான உடம்பெரிவு தீரும் .

XXXX

60 .எரிவாதத்திற்கு

இலந்தன் இலையை அறைத்து காடியில் கரைத்து மத்தால் கடைந்து அதில் வருகிற நுரையை உடம்பில் பூச எரிச்சல் மாறிவிடும்.

XXXX

தொடரும் ……………………………..

மூலிகை,  மர்மம் , அதிசயம் , பகுதி 6 

Leave a comment

Leave a comment