QUIZ  மயில் பத்து QUIZ (Post No.12,998)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,998

Date uploaded in London – –   10 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Quiz Serial No.110

1.மயில் வளர்க்கும் சாதாரணக் குடிமகனை,  கோபக்கார குடுமிப் பார்ப்பான் சாணக்கியன் அழைத்து , பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். அலெக்சாண்டரை நடுங்க வைத்த அந்த சாம்ராஜ்யத்தின் பெயர் என்ன ?

xxxx

2.மயில் வளர்க்கும் அதே குலத்தில் பிறந்த அசோகன் , எத்தனை மயில்களை தினமும் வெட்ட உத்தரவிட்டான் ?

xxxx

3.மயில் கொடி, மயில் வாகனம் உடைய இந்துக் கடவுள் யார் ?

xxxx

4.மயில் பற்றி குறிப்பிடும் புகழ்பெற்ற சம்ஸ்க்ருத நூல் எது ?

xxxx

5.மயில் பறவை மூலம் இந்துக்கள், பாபிலோனியர்களை வியப்படைய வைத்தது எப்படி ?

xxxx

6.மயிலுடன் தொடர்புடைய சங்க கால மன்னன் யார் ?

xxxx

7.மயிலின் பெயர் உடைய இரண்டு மாவட்டங்கள் யாவை ?

xxxx

8. மயிலுக்கு சம்ஸ்க்ருதத்தில் பல சொற்கள் உள்ளன ; அதில் ஒன்று எபிரேய/ Hebrew மொழியில் உள்ளது. அது என்ன?

xxxx

9.மயில் பறவையின் பெயர் உடைய கவிஞர் இயற்றிய புகழ்பெற்ற சம்ஸ்க்ருத சதக நூல் எது?

xxxx

10.மயில் குறித்து கம்பன் சொல்லும் அதிசயச் செய்தி என்ன ?

XXXX

விடைகள்

1.மெளரிய சாம்ராஜ்யம். மயூர என்றால் சம்ஸ்க்ருதத்தில் மயில் என்று பொருள். இது ரிக் வேதத்தில் உள்ளது .மயூர என்ற சொல்லிலிருந்து வந்தது மெளரிய.

xxxx

2.அசோகன், சந்திர குப்தன் ஆகியோர் எல்லாம் மயில் மாமிசப் பிரியர்கள் அசோக மாமன்னன், புத்த மதத்தில் சேருவதற்கு முன்னர் அரண்மனையில் நூற்றுக் கணக்கான மான்களையும் மயில்களையும் வெட்டி கறி சமைத்து உண்டனர் . ஆனால் புத்த மதத்தில் சேர்ந்த பின்னர், அரண்மனையில்  இரண்டே மயில்களை மட்டுமே வெட்டி கறி சமைக்கலாம் என்று உத்தரவிட்டதாக அசோகன் கல்வெட்டு கூறுகிறது .

மகத தேச மக்களுக்கு மயில் மாமிசம் ‘பிடித்த உணவு’ என்று புத்த கோஷரும் குறிப்பிடுகிறார் .

Formerly, in the kitchen of Beloved-of-the-Gods, King Piyadasi, hundreds of thousands of animals were killed every day to make curry. But now with the writing of the Dhamma edict, only three creatures, two peacocks and a deer, are killed, and the deer not always. And in time, not even these creatures will be killed.(Asokan Inscription)

xxxx

3.முருகப்பெருமான் 

xxxx

4.காளிதாசன் இயற்றிய மேகதூத காவியத்தில் (46) மயில் வாகன முருகன் பற்றிப் பாடியுள்ளான் அவனுடைய காலம் சம்ஸ்க்ருத அறிஞர்களின் கூற்றுப்படி கி.மு முதல் நூற்றாண்டு .

xxxx

5.இந்தியாவின் தேசீய பறவை மயில்; அதை வளர்த்து சாப்பிட்ட வம்சம் வட இந்திய மெளரிய வம்சம்.  அவர்களுடைய  முன்னோர்கள் பாபிலோனியா என்னும் மத்தியக் கிழக்கு பிரதேசத்துக்கு மயில் பறவையைக் கொண்டு சென்று அரசவையில் ஆட வைத்தனர். மேகம் கர்ஜித்தால் மயில்களாடும் என்பது இயற்கை விதி. மேளம், மத்தளம் கருவிகள் மூலம் மேகம் உறுமும் சப்தத்தை உண்டாக்கி மயிலை ஆட வைத்தவுடன் பாபிலோனிய மன்னர்கள் அசந்து போனார்கள் . இது பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன.

Xxxx

6.மயிலுக்குப் போர்வை ஈந்த பேகன் ; இவனை கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்று சங்க கால நூல்கள் செப்புகின்றன.

xxxx

7.தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் ; ஒடிஷாவில் மயூர்பஞ்ச் Mayurbhanj district in Odisah (Orissa).

மயிலை/ மயிலாப்பூர் என்பது சென்னையின் ஒரு சிறிய பகுதி; ஆனால் மாவட்டம் அல்ல .

xxxx

8.சிகித்வஜன் என்றால் மயில்கொடியோன் இது முருகனின் ஒரு பெயர்.  சிகி.என்பது ஹீப்ரு மொழியிலும் பிற மொழிகளிலும் ‘தகி’ என்று மாறும் ; இன்றும் கூட சம்ஸ்க்ருத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கில மொழியில் Tion = Sion என்பதை நாம்,  Sion ஷன் என்றுதான் உச்சரிக்கிறோம். இதே  விதியைப் பின்பற்றி சிகி என்பது ஹீப்ரு Hebrew மொழியில் துகி Siki=Tuki  என்று ஆகியது ; பன்  மொழி அறிவற்ற அரை வேக்காடுகள் இதை தோகை,  என்று நினைத்துப் பிதற்றிவிட்டன.

xxxx

9.மயூர கவி இயற்றிய சூரிய சதகம் 

xxxx

10.கம்பராமாயண அயோத்தியா காண்டப் பாடலில் மயில் தனது குலமுறையை, மனு நீதி நூல் சொல்வதுபோல செய்கிறது என்கிறான் கம்பன்; அதாவது குலத்தில் மூத்தவனுக்கே அரசன் பட்டம் அல்லது குலத்து தலைமை !!

1470.  ‘வெயில் முறைக் குலக் கதிரவன்

     முதலிய மேலோர்,

உயிர் முதல் பொருள் திறம்பினும்,

     உரை திறம்பாதோர்;

மயில் முறைக் குலத்து உரிமையை,

     மனு முதல் மரபை;

செயிர் உற, புலைச் சிந்தையால்,

     என் சொனாய்? – தீயோய்!

XXXXX

பாடலின் பொருள்

கொடியவளே! சூரியன்; முதலாகிய  உயர்ந்தோர்கள், உயிரே

போவதாயினும்  சத்தியத்தினின்றும்  மாறுபடார்; மயிலினது முறைமையைக் கொண்ட அரசகுலத்து உரிமையை உடைய 

மனுவின் வழித் தோன்றல்களாக உள்ள அயோத்தியின்  அரச பரம்பரையை கீழ்மைப் புத்தியால்  யாது பேசினாய்?’

(தீய எண்ணம் கொண்ட மந்தரை என்னும் கூனியை நோக்கி கைகேயி சொன்ன சொற்கள் இவை.)

XXXXX

பாடலின் விளக்கம்

மயிலின் குஞ்சுகளுள், முதற் பார்ப்புக்கே (குஞ்சுக்கே) , தோகையின் பீலி பொன்னிறம் பெறும். ஏனைய குஞ்சுகளுக்கு அவ்வாறாகாது. அதுபோல் மூத்த மகன்  அரசுரிமை பெறுதலும், ஏனையோர் பெறாதொழிதலும் நடக்கிறது . அவ்வுரிமையை உடைய மரபு ‘மனுமுதல் மரபு’ என்றார். எனவே, மூத்த மகனாகிய இராமன் அரசுரிமை பெறுதலும்,  பரதன்,  இலக்குவன்,  சத்துருக்கனன் முதலியோர் பெறாதொழிதலும் அம்மரபின் வழிப்படியே  என்றாளாம். இனி, கேகயம் என்பது மயிலைக் குறிக்கும்சொல் ‘யான் பிறந்த கேகய குலத்துக்கும் அதுவே விதி , மனு மரபுக்கு  குற்றம் தரக்கூடிய  என்ன வார்த்தை சொன்னாய்?’ என்று கூனியைக் கடிந்தாள் கைகேயி எனலாம்.

XXXX

பிற்காலத்தில் எழுதப்பட்ட தணிகைப் புராணமும் கம்பன் சொன்ன கருத்தையே மொழிகிறது

ஒரு தாய் உயிர்த்த பல மயிற்கும்,  கலாவம் புனைந்த களிமயில் மூத்தது எனக் கருத” என்ற   பாடல் (தணிகைப்.  களவு. 244) பொருந்துவதாகும்.

xxx SUBHAM xxx

Tags- மயில் தோகை, சிகி ,மெளரிய சாம்ராஜ்யம் அசோகன்  மயூர கவி, மயூரநாதர், மயில் கொடி , வாகனம், பாபிலோனியா , சங்க இலக்கியத்தில் மயில் , கம்ப ராமாயணம் , மயில் குல முறை

Leave a comment

Leave a comment