
Post No. 13.004
Date uploaded in London – — 13 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரதத்தை ஹிந்து ராஷ்ட்ரம் என்று அழைப்பதில் என்ன தவறு?
ச.நாகராஜன்
பாகிஸ்தானைச் சேர்ந்த காலித் ஒமர் என்னும் இஸ்லாமியர் எழுதிய ஒரு கட்டுரையை அனைவரும் படிக்க வேண்டும்.
அவர் கேட்கும் கேள்வி : பாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் ஆவதில் என்ன தவறு இருக்கிறது?
காலித் ஒமர் இங்கிலாந்தில் பாரிஸ்டராகப் பணி புரிந்தவர். அவரது ஃபேஸ் புக் பக்கத்தில் இருந்து எடுக்கப்படுவது கீழே தரப்பட்டுள்ள இந்தப் பகுதி.
*
5000 வருடம் பழைமையான நாகரிகம் ஹிந்து நாகரிகம். சனாதன ஹிந்து தர்மத்தின் பிறப்பிடம். 95% ஹிந்துக்கள் வசிக்கும் இடம். தனது ஹிந்துத்வம் என்ற அடையாளத்தை அங்கீகரிப்பதில் அது தயக்கம் காட்டக் கூடாது, வெட்கப்படக் கூடாது!
கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரு மதங்களுக்குப் பிறகு உலகில் மூன்றாவது பெரிய மதமாக இலங்குவது ஹிந்து மதம். ஆனால் முதல் இரு மதங்களைப் போல் உலக வரைபடத்தில் பரவலாக அது பரவவில்லை. உலகில் உள்ள 97% ஹிந்துக்கள் இந்தியா, மரிஷியஸ் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளிலேயே வசிக்கின்றனர்.
இடதுசாரி லிபரல்கள் 53 முஸ்லீம் அதிகம் உள்ள நாடுகளைப் பற்றி எந்த பிரச்சனையையும் கொள்வதில்லை. இவற்றில் 27 நாடுகளில் இஸ்லாமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட மதம். 100+ நாடுகள் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள நாடுகள். இவற்றில் 15 நாடுகளில் அரசே அங்கீகரித்துள்ள அதிகாரபூர்வமான மதம் கிறிஸ்தவம்.
இந்தியாவில் பார்சி, ஜைனம், சீக்கியம், இஸ்லாம், ஜொராஸ்ட் ரியானிஸம் ஆகிய அனைத்துமே செழித்து வளர்ந்துள்ளன, காரணம் ஹிந்துக்கள் எந்த மதத்தையும் வெறுப்பவர்கள் அல்லர் என்பதால் தான்!
ஹிந்து மதத்தில் மதமாற்றம் என்பதே கிடையாது.
கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆகியோரை கொடுமைப் படுத்துகிறார்கள் என்று மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டும் பல கிறிஸ்தவ, இஸ்லாமிய நாடுகள் உலகில் உள்ளன. மயன்மார், பாலஸ்தீனம், யேமன் ஆகிய இடங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதை உலகம் அறியும். ஆனால் பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் என்ன நடந்தது என்பதை உலகம் அறியாது.
பாகிஸ்தானிய ராணுவத்தால் 1971இல் பங்களாதேஷில் நடந்த மாபெரும் படுகொலையில் ஹிந்துக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை யாராவது அறிவார்களா? காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதையாவது அறிவார்களா? அல்லது ஜம்மு காஷ்மீரில் 1998ல் வந்த்மா படுகொலை, பாகிஸ்தானில் படிப்படியாக ஹிந்துக்களை அழிப்பது, அராபிய உலகில் , மஸ்கட்டில் ஹிந்து மத கோவில்களை ஒழிப்பது ஆகியவற்றையேனும் அறிவார்களா?
ஹஜ் மானியம் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 2000ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பதினைந்து லட்சம் முஸ்லீம்கள் இந்த மானியத்தைப் பயன்படுத்தியுள்ளனர். சமீபத்தில் தான் சுப்ரீம் கோர்ட் இந்த மானியத்தைப் படிப்படியாக 10 ஆண்டுகளில் குறைத்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஒரு மதத்தைக் கடைப்பிடிப்பவருக்கு எந்த ஒரு நாடு தான் மதத்தின் பேரில் யாத்திரை நடத்த மானியம் கொடுக்கும்? 2008லிருந்து ஒவ்வொரு முஸ்லீமுக்கும் சராசரியாக விமானக் கட்டணமாக ஆயிரம் டாலர்கள் இந்தியாவில் வழங்கப்படுகிறது.
ஹிந்துக்கள் எப்போதுமே மைனாரிட்டிகளை வரவேற்றுப் பாதுகாத்து வந்துள்ளனர். மதசகிப்புத்தன்மை வரலாற்று ரீதியில் நாம் பார்ப்போமானா]ல் ஹிந்துக்களே பார்சிக்களை அவர்கள் ஒடுக்கப்படும் போது வரவேற்றுள்ளனர். அவர்கள் இங்கு ஆயிரம் வருடங்களாக வளமையாக வாழ்ந்துள்ளனர். யூதர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இங்கு அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வருகின்றனர். இதே போல 1800 ஆண்டுகளுக்கு முன் சிரியன் கிறிஸ்தவர்கள் இங்கு தஞ்சம் புகுந்துள்ளனர். ஜைன, புத்தம் ஆகியவை ஹிந்து மதத்திலிருந்து உருவாகி 2500 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளன.
இன்றும் இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்கிறது, ஏனெனில் இங்கு பெரும்பான்மையினர் ஹிந்துக்களாக இருப்பதனால் தான்!
ஹிந்து தேசம் என்று பிரகடனப்படுத்துவது மெஜாரிட்டியாக இருப்பவர்களை மதம் மாற்றுவதிலிருந்தும் மைனாரிட்டியாக இருப்போரை தாஜா செய்வதிலிருந்தும் பாதுகாக்கும்.
மதச்சார்பின்மையும் ஹிந்துமதமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். நாணயத்தைச் சுண்டி விட்டு எந்தப் பக்கம் விழுந்தாலும் நீங்கள் ஜெயிப்பீர்கள்!
இந்திய தீபகற்பத்தில் முகலாயர் படையெடுப்புகள் கி.பி 1000இல் ஆரம்பித்து 1739 முடியத் தொடர்ந்தது. பத்து கோடி ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலக சரித்திரத்திலேயே இது தான் மிக கோரமான படுகொலை சம்பவமாகும். இந்த ஆக்கிரமிப்பாளர்களின் வம்சாவளியினர் மீது ஹிந்துக்கள் பழிவாங்கும் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
மதச்சார்பின்மையை இயல்பாகவே கடைப்பிடிக்கும் ஹிந்து ராஷ்ட்ரம் எந்த வித முன்னுரையும் இல்லாமலேயே உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும்!
*
அருமையான பல உண்மைகளை இந்தப் பதிவில் எடுத்துக் கூறும் காலித் ஒமர் பாராட்டப்பட வேண்டியவர் தானே!
***
நன்றி : ட்ரூத் தொகுதி 90 நம்பர்1 15-4-2022