
Date uploaded in London – – 13 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Part 7
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ற பகுதியில் 60 வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி
xxxx
61. வயிற்று நோய் அல்லது வயிற்றுக் கடுப்புக்கு
இலவங்கப் பட்டையை அரைப் பலம் எடுத்து எருமைத்தயிர் விட்டரைத்து அந்த முத்தையை அரைக்கால்படி எருமை மோரில் கலந்து கொடுக்க வயிற்றுக் கடுப்பு, வயிற்று நோய் தீரும்.
xxxxxx
62 . அண்ட வாய்வுக்கு
இலுப்பை புண்ணாக்கும் சிவந்த கோழிக்காரமும் சுண்டைக்காய் அளவு எடுத்து அரைத்து பனை வெல்லத்தில் பொதிந்து வைத்துக் கொடுக்க சவுக்கியமாகும் .
xxxxx
63 . ஆனந்த வாய்வுக்கு
இலுப்பைப்பூ புண்ணாக்கு எலுமிச்சங்காய் அளவு எடுத்து ஆழாக்கு ஈறுமீளச்சாற்றில் ஊரப் போட்டு வெதுப்பிக்கொடுக்க சவுக்கியமாகும்.
xxxxx
64 .இரைப்பு இருமலுக்கு
இஞ்சிச்சார் ஈர வெங்காயச்சாறு எலுமிச்சம்பழச்சாறு இம்மூன்றும் சமநிடை எடுத்து வேளைக்கு ஒருபலமாக மூன்று நாள் இரு போதும் கொடுக்க சாந்தியாகும். இச்சாபத்தியம் .
xxxxx
65 . காதில் சீழ் வருதலுக்கு
இந்துப்பும் சுக்கும் இரண்டும் சமநிடை பொடி வெண்ணெயில் போட்டுக் காச்சி காதில் விடவும் ; இப்படி 4-5 வேளை விடவும்.
xxxx
66 . வாத குன்மத்திற்கு
இஞ்சி சிவத்தை–சீந்தில்– நிலவாகை- கொடிவேலி-கனச்சிக்கொடி-
இவைகள் மூலம், முடக்கொத்தான் சமூலம், பூண்டு திரிகடுகு வகைக்குப் பலம்1- எடுத்து அறைத்து அரைப்படி சிந்தாமணக்கெண்ணெயில் கலக்கி காய்ச்சி வடிகட்டி ஒருவேளைக்கு உச்சிக்கரண்டி அளவு கொடுத்து வர வாதகுன்மம் தீரும்.
xxxxx
67.அநேகரோகத்திற்கு
இஞ்சியை பாலில் விட்டரைத்து கெச்சைக்காயளவு எடுத்து அரைக்கால்படி பாலில் கலக்கிக் கொடுக்கவும். இப்படி காலை மாலை கொடுத்து வந்தால் இருமல்- இளைப்பு- சூலைவாதம்- குன்மசிலுமிஷம்- தாபசோபம்- மயக்கம் –பித்தம்– வாய்வு- இவை தீரும். பசியுண்டாகும்.
xxxxx
68 . நாக சுத்தி
இலுப்பை எண்ணெயில் நாகத்தை உருக்கி சாய்க்கவும்; இப்படிப் பத்து தடவை உருக்கி சாய்க்க நாகம் சுத்தியாகும்
xxxxx
69 இருப்பு சுத்தி
இரும்பு அரப்பொடியை பீங்கானிற்போட்டு அது முழுகும்படி எலுமிச்சம் பழச்சார் விட்டு மூன்று நாள் பொறுத்து எடுத்துக் கழுவ சுத்தியாகும்; பிறகு அவிழ்தங்களுக்கு உபயோகிக்கலாம்.
xxxxx
70.புறவீச்சுக்கு
இஞ்சிச் சாறு, முலைப்பால், தேன் இவைகள் சமமாக கலந்து மேற்படி வியாதி கண்டவுடன் கொடுக்கவும். மிஞ்சினால் வேப்பம் எண்ணை கொஞ்சம் விட்டுக் கொடுக்கவும். அப்படியும் மிஞ்சினால் (பார்வதி பரணீயத்தில்) சொல்லியிருக்கும் சிவநாதத் தைலத்தில் ஒரு காசிடை விட்டுக்கொடுக்க உடனே தீரும்.
புறவீச்சு என்பது நாவுதடுமாறல், பல்கிட்டுதல், திரேகத்தையும் கழுத்தையும் பின்னுக்கு வலித்துயிழுக்குதல், வியர்வை, முழிமாறாட்டம்.

—subham—-
முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள், part 7