அக்பரும் மதமாற்றமும்; ஆயுர்வேதமும் கழுதையும் (Post No.13,008)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,008

Date uploaded in London – –   14 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

அக்பர் , இந்து மதத்தைதத் தழுவ ஆசைப்பட்டார் ; இது அவருடைய அமைச்சர் பீர்பாலுக்குத் தெரிந்தது . இவர் இந்து மதத்தில் சேர்ந்தாலும் அது மதில் மேல் பூனையான கதையாக முடியும் என்பதை பீர்பால் அறிவார் . ஆனாலும் மன்னரிடம் நேரடியாகச் சொல்ல தயங்கி ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்தார்.

ஒரு நாள் யமுனை நதியின் அழகைக் கண்டு ரசிக்க அக்பர் சென்றார். அதை அறிந்த பீர்பால் , ஒரு அழுக்குப் படிந்த கழுதையை இழுத்துக் கொண்டு யமுனை நதிக்கரைக்குச் சென்றார். அக்பர், பார்க்கக்கூடிய தூரத்தில் நின்று கொண்டு, கழுதையைத் தேய்த்துக் குளிப்பாட்ட ஆரம்பித்தார் . நன்றாகத் தேய், தேய், என்று   தேய்த்துக் குளிப்பாட்டிக்கொண்டே இருந்தார் ;  அக்பருக்கு வியப்பு தாங்கவில்லை

“ஓய் அமைச்சரே ! இப்படி வாரும்; என்ன செய்கிறீர்?  என்று வினவினார்.

இந்தக் கழுதையைத் தேய்த்துக்குளிப்பாட்டி குதிரையாக மாற்றப் போகிறேன் என்றார் பீர்பால் .

“அட முட்டாளே ! கழுதையைத்தேயத்தால் அது குதிரை ஆகிவிடுமா ?  இது உமக்குத் தெரியாதா ?”  என்று பதில் கொடுத்தார்.

பீர்பால் சொன்னார் : “ஏன் முடியாது ? ஒரு முஸ்லீம் மன்னர் , இந்துவாக முடியுமானால் , ஒரு கழுதையை ஏன் குதிரை ஆக்க முடியாது ?”  என்று சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.

அக்கப்போர் அக்பருக்கு விஷயம் புரிந்து விட்டது; சிரித்துக்கொண்டே அரண்மனைக்கு நடந்து சென்றார்.

xxxx

ஆயுர்வேதத்தில் கழுதை

காஸ்யப சம்ஹிதையில் விஷத்தை முறிக்க வழிகள் சொல்லப்பட்டுள்ளன. இது பாஞ்சசராத்ர சம்பிரதாய நூல். பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் 66  ஸ்லோகங்கள் விஷ முறிவு பற்றிப் பேசுகின்றன. இருபது வகையான விஷங்களை எப்படித் தீர்ப்பது  என்பதில் கழுதை வைத்தியமும் வருகிறது. முதல் 42 ஸ்லோகங்கள் கழுதை கடித்தால் என்னே நேரிடும் என்பதையும் அதற்கான சிகிச்சைகளையும் தருகிறது . எட்டு வகையான சிகிச்சைகள் உள்ளன.

தமிழில் முனிசாமி முதலியார் வெளியிட்ட 1899  ம்   ஆண்டு நூலான மூலிகை மர்மம் கழுதைப் பால் உபயோகத்தை பல சிகிச்சை முறைகளில் குறிப்பிடுகிறது . இப்போது கழுதைப் பால் விலை உயர்ந்துவிட்டது . அந்தக் காலத்தில் இது பசும்பாலை வீட குறைந்த  விலையில் கிடைத்தது!

XXXX

திபெத்திய புத்தமதத்தில் கழுதை

கர்த்தபி என்னும் பெண் யோகினியுடன் கழுதை தொடர்புள்ளது.

சமண மத நூல்களில் கழுதை

முன்காலத்தில் வியாபாரிகள் ஊர் ஊராகப்  பயணம் செய்கையில் கழுதை மீது பண்டங்களை ஏற்றிச் சென்றதை1000ஆண்டுகளுக்கு முந்தைய சமண நூல்கள் சித்தரிக்கின்றன.

விந்தியாபுரியிலிருந்து காஞ்சிபுரிக்குச் சென்ற வியாபாரிகள் ஒட்டகம், காளை மாடுகள் , குதிரைகள் ஆகியன மீது பண்டங்களை ஏற்றிச் சுமந்து சென்ற cகாட்சியை குவலயமாலா என்னும் நூல் விளக்குகிறது.

XXXX

ரிக் வேத்தில் கழுதை

அ ஸ் வ என்ற சொல்லிலிருந்தே ஆஸ் ASS என்னும் ஆங்கிலச் சொல் வந்திருக்க வேண்டும். ஏனெனில்  அ ஸ் வ  என்ற குதிரையும் கர்த்தபஹ என்ற கழுத்தையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை..

தமிழ் சொல் கழுதை , ஸம்ஸ்க்ருதச் சொல்லான கர என்பதிலிருந்து வந்தது. ர = ல எழுத்துமாற்றம் நிறைய மொழிகளில் உள்ளதை மொழியியல் நிபுணர்கள் அறிவார்கள்  கர (கழுதை) என்பது பாரசீக மொழியிலும் இருப்பதால் தமிழ் இந்த சப்தத்திற்கு உரிமை கொண்டாட முடியாது

ரிக் வேத்தில் இதை குதிரைக்கும் மட்டமான மிருகம் என்று குறித்துள்ளனர். அதர்வ வேதத்தில் இதன் கர்ண கடூரமான குரல் பற்றி வருகிறது. வேதத்தைத் தவறாக உச்சரிப்போரை கழுதை என்று அழைத்ததும் தெரிகிறது.

Search found 21 books and stories containing Gardabha, Gardabhā, Gārdabha; (plurals include: Gardabhas, Gardabhās, Gārdabhas). You can also click to the full overview containing English textual excerpts. Below are direct links for the most relevant articles:

Rig Veda (translation and commentary) (by H. H. Wilson)

Rig Veda 1.29.5 < [Sukta 29]

Rig Veda 3.53.23 < [Sukta 53]

Rig Veda 1.34.9 < [Sukta 34]

show preview

Garga Samhita (English) (by Danavir Goswami)

Verse 6.10.4 < [Chapter 10 – In the Description of the Gomatī River, the Glories of Cakra-tīrtha]

Verses 2.11.38-39 < [Chapter 11 – The Liberation of Dhenukāsura]

17- ம்  நூற்றாண்டு நூல் போஜன குதூகலம் இதன் மாமிசம் சமைக்கப்படுவதைக் கூறுகிறது.

வாஸ்து சாஸ்திரமும் சிலையின் ஒரு பகுதியை  இந்தச் சொல்லால் குறிப்பிடுகிறது .ஹம்சதேவா தொகுத்த மிருக பக்ஷி சாஸ்திரத்தில், சம்ஸ்க்ருத நூல்களில் வந்துள்ள எல்லா மிருகங்கள்  பட்ச்சிகளையும் குறிப்பிடுகிறது;  கழுதையும் அதில் ஒன்று. குதிரையும் கழுதையும் புணர்ந்து உண்டாக்கிய கலப்பினத்தைக் கோவேறுக் கழுதை என்பார்கள். இதனால் இதை இரட்டை விந்து மிருகம் என்பர்; அதாவது குதிரையாலும் கழுதையாலும் பிறக்கும் மிருகம். வாலகில்ய சூக்தத்தில் ஒரு புலவருக்கு 100  கழுதை பரிசளிக்கப்பட்ட செய்தி உளது.

FOR MORE INFORMATION, PLEASE GO TO Wisdom Library website

–சுபம்—

Tags –குதிரை கழுதை வைத்தியம் சிகிச்சை, அக்பர் , பீர்பால் , மதமாற்றம் , கர்த்தபஹ

Leave a comment

Leave a comment