
Date uploaded in London – – 15 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Part 8
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ற பகுதியில் 70 வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………
Xxxx
குழந்தை இளைப்பு இருமலுக்கு
71 . இரண்டு சமூலம் தூதளை கண்டங்கத்திரி , வகைக்கு ஒரு பிடி திப்பிலி பூண்டு வகைக்கு துட்டிடை ஒரு படி தண்ணீரில், தட்டிப் போட்டுக் காய்ச்சி அந்தி சந்தி பதமாய் கொடுத்துக்கொண்டுவர நிவர்த்தியாகும். பெரியோர்க்குமாகும்.
இதுவுமது
இண்டம் வேர் தூதனம் வேர் வகைக்கு ஒரு பலம் , சுக்கு- திப்பிலி- வெந்தயம் விராகநிடை வகைக்கு அரை இடித்து ஒருபடி நீரில் போட்டு காய்ச்சி வடித்து அந்தி சந்தி கொடுத்துவரத் தீரும் .
xxxxx
மாலைகாசத்திற்கு
72 .இந்துப்பு மஞ்சள் சாரடை வேர் துத்தம் இவைகளை ஓர் நிரையா எடுத்து பழச்சாறு விட்டரைத்து கயறுபோல் திரித்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொகொண்டு முலைப்பாலில் இழைத்து கண்ணில் தீட்டி வந்தால் மாலைகாசம் கண் படலம் தீரும். இந்தக் கண் வியாதிகள் 96-ஆரின் பெயரும் அதுகளுக்கு மருந்து முறையும் பார்க்க வேண்டியவர்கள் (திருநேத்திர சிந்தாமணி என்னும்) சாஸ்திரத்தில் பார்த்துக்கொள்ளவும் .
xxxxx
விக்கலுக்கு
73 . இம்பூராவேரைத்தட்டி பசும்பால் விட்டு அறைத்துக் கலக்கி இரண்டொரு வேளை கொடுத்தால் விக்கல் வயிற்றிரைச்சல் பித்தம் இவை தீரும்.
xxxxx
ஈ
சீழ்மூலத்திற்கு
74. ஈருள்ளி ஐந்து பலம் எடுத்து சிறுக அரிந்து பண்ணி நெய்யில் பொறித்து ஐந்து நாள் கொடுக்க சீழ்மூலம் சவுக்கியமாகும்.
xxxxxx
இரத்தமூலத்திற்கு

75 . ஈருள்ளிச் சாறு பசும்பால் வகைக்கு அரைப்படி பசும் நெய் கால் படி ஒரு பலம் அதிமதுரத்தை பால் விட்டரைத்து யாவும் ஒன்றாய்க்கலந்து பதமாய்க்காய்ச்சி இறக்கி ஒரு வேளைக்கு உச்சிக்கரானடி வீதம் இருவேளையும் ஐந்து நாள் சாப்பிட்டால் சீழ் மூலம், இரத்த மூலம் சாந்தியாகும். பத்தியம் – கைப்பு- புளிப்பு- தள்ளவும்
xxxxxx
காது குத்தலுக்கு
76 . ஈருள்ளியை சிதைத்து வெதுப்பி துணியில் முடிந்து பிழிந்து இரண்டு மூன்று துளிகள் காதில் விட்டால் காது குத்தல் சயித்தியம் தீரும்.
XXXX
77 . சயித்தியத்திற்கு
ஈருள்ளியை சிதைத்து ஐந்து துளிகள் முலைப்பால் விட்டு கசக்கிப்பிழிந்து காதின் பின்புறத்தில் தடவி அனலில் காட்டினால் சயித்தியம் காதுவலி இவை தீரும்.
XXXXX
78 . இருமலுக்கு கிஷாயம்
ஈயத்தண்டு இலை –தூதுவளையிலை – நல்வசங்கனிலை — சுக்கு–திப்பிலி– முட்டது முழுதும் சமநிட்டை கொண்டுஇடித்து கேட்டுக்கொன்றாய்க் கிஷயமிட்டுக் கொடுத்தால் நிவர்த்தியாகும்.
XXXX
79 .நீர்க்கடுப்புக்கு
ஈருள்ளிச்சாறு ஒரு பலம் பொரித்த வெண்காரம் பொடி ஒரு விராகநிடை இவை ஒன்றாய்க் கலந்து கொடுக்கவும். இப்படி மூன்று நாள் இருவேளையும் கொடுக்கவும் .
இதுவுமது
ஈர வெங்காய சாறு அரைக்கால்படி பனங்கற்கண்டு ஒரு பலம் போட்டுக்கலக்கி வடிகட்டிக்கொடுக்க உடனே நீர்க்கடுப்பு நிவர்த்தியாகும்.
XXXX
80 . மேகத்திற்கு
ஈச்சங்கள்ளு அதிகாலை உபயோகித்து வரவும், மேகம்-வெட்பம்-மேக ஒழுக்கு இவைகள் தீரும். இடைவிடாமல் சதா உபயோகித்தால் திரேகம் வீக்கமுண்டாகும் .
XXXX SUBHAM XXXX
TAGS- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள, PART -8,
மூலிகை மர்மம்