தம் மாரோ தம்; மிட் ஜாயே கம்! (Post No.13,012)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.012

Date uploaded in London – — 16 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தம் மாரோ தம்மிட் ஜாயே கம்!

ச.நாகராஜன்

தேவ் ஆனந்த் நடித்து உலகெங்கும் பிரபலமான படம் ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா!.

1971இல் வெளியான படம் இது.

சந்துபொந்துகளில் எல்லாம் இந்தப் படத்தின் பாடல்கள் பாடப்பட்டன. முக்கியமான ஒரு பாடல் தம் மாரோ தம்; மிட் ஜாயே ஹம்!

பாடல் இது தான்:

தம் மாரோ தம்

மிட் ஜாயே கம்

போலோ சுப ஷ்யாம் ஹரே க்ருஷ்ணா, ஹரே ராம்

துனியா நே ஹம் கோ தியா க்யா

துனியே சே ஹம் நே லியா க்யா

ஹம் சப் கி பர்வா க்ரே க்யோ

சப் நே ஹமாரா கியா க்யா

தம் மாரோ தம்

மிட் ஜாயே கம்

போலோ சுபஹ் ஷாம் ஹரே க்ருஷ்ணா, ஹரே ராம்

பாடலின் பொருள்:

ஒரு இழுப்பு இழு (தம்மை இழு)

துயரங்கள் எல்லாம் போய்விடும்

காலை மாலை சொல்

ஹரே க்ருஷ்ணா ஹரே ராம்

உலகம் நமக்குத் தந்தது என்ன?

உலகிலிருந்து நாம் எடுத்துச் செல்வது என்ன?

மற்றவர்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்.

மற்றவர்கள் எனக்குச் செய்தது என்ன?

ஒரு இழுப்பு இழு (தம்மை இழு)

துயரங்கள் எல்லாம் போய்விடும்

காலை மாலை சொல்

ஹரே க்ருஷ்ணா ஹரே ராம்

(யூ டியூபில் இதைக் கேட்கலாம்)          

·          

பாடலைப் பாடியது ஆஷா போன்ஸ்லே.

படத்தை எழுதி, இயக்கி, நடித்தவர் தேவ் ஆனந்த்.

ஹிப்பி கல்சர் பரவிய காலம் அது. அதை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க எண்ணினார் தேவ் ஆனந்த்.

ஹிப்பிகளின் அடைக்கல பிரதேசமாக அப்போது திகழ்ந்தது இமயமலையில் உள்ள நேபாளம்.

நேராக அங்கே சென்றார் தேவ் ஆனந்த். நேபாள மன்னரைச் சந்தித்தார்.

அவரது தம்பியிடம் ஹெலிகாப்டரைப் பெற்று வானிலிருந்து நேபாளத்தைப் பார்த்தார்.

சந்து பொந்துகளில் எல்லாம் இருந்த ஹிப்பிகளைப் பார்த்து வியந்தார்.

தேவ் ஆனந்தின் தங்கையைத் தேடி அவர் அலைவது தான் கதையின் மையம்.

ஜஸ்பிர் என்ற தங்கையாக நடித்தது ஜீனத் அமன். காதலி சாந்தியாக நடித்தது மும்தாஜ். கதாநாயகன் ப்ரசாந்தாக நடித்தது தேவ் ஆனந்த்.

பாடலின் தாக்கத்தைப் பார்த்து பயந்தே போன தேவ் ஆனந்த், ‘எங்கே இந்தப் பாடல் படத்தின் கதையின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடுமோ என்ற எண்ணத்தில் முழுப் பாடலையும் திரையில் காட்டவில்லை. எடிட் செய்து விட்டார். இரண்டரை நிமிடம் தான் பாடல் என்று ஆனது.

உலகமெங்கும் பாடல் தம் மரோ தம் என்று முழங்க எங்கும் ஒரே ஆட்டம்.

இதைப் பற்றி பின்னால் விமர்சித்த ஹரே க்ருஷ்ணா இயக்கத்தின் ஸ்தாபகர் ஶ்ரீலஶ்ரீ பிரபுபாதா, “தம் போய்விடும்; ஆனால் ஹரே க்ருஷ்ணா” நிலைத்து நிற்கும் என்றாராம்! அவர் வாக்கு பொய்க்கவில்லை!

படத்தில் ஹிப்பிகள் வரும் காட்சிகளுக்காக தனது உதவியாளர்களை அன்றாடம் காலையில் நேப்பாளத்தில் காத்மாண்டுவில் சுற்ற விடுவாராம் தேவ் ஆனந்த்.

ஹிப்பிகளை அவர்கள் பார்த்து அன்றைய காட்சியில் வந்து பங்கு பெற்றால் அவர்களுக்கு “வேண்டியது” கிடைக்கும் என்று சொல்ல ஹிப்பிகளுக்கு ஒரே ஆனந்தம்.

சந்தோஷமாக படப்பிடிப்பில் வந்து கலந்து கொண்டனர்.

இந்தப் பாடல் பிரபலமாக ஆகி விட்ட போது அதன் தாக்கமும் இருந்தது.

படம் வெளியான பல நாட்களுக்குப் பின்னர் தேவ் ஆனந்திற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு பெண்ணின் தந்தை கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி இருந்தார். அதில் அவருக்குத் தந்ன் நன்றியைத் தெரிவித்திருந்தார். அவர் தேடிக் கொண்டிருந்த அவரது அருமை மகள் அந்தப் படத்தில் ஒரு காட்சியில் வருகிறார். உலகில் எந்த மூலையில் தன் மகளைத் தேடுவது என்று தெரியாமல் தவித்த தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் ஒரே மகிழ்ச்சி! படத்தில் அவளைப் பார்த்ததால் அவள் நிச்சயம் நேபாளத்தில் தான் இருக்க வேண்டும் என்று தெரிய வர அவர்கள் நேபாளத்தில் தேட ஆரம்பித்தனர். அவளை காபூலில் கண்டுபிடித்தனர்.

இதை தேவ் ஆனந்த் தனது சுயசரிதையில் (பக்கம் 234) குறிப்பிடுகிறார்.

 26-9-1923ல் பிறந்த தேவ் ஆனந்த் 3-12-2011இல் மறைந்தார்.

Romancing with Life – An autobiography என்ற அவரது சுயசரிதை ஏராளமான சுவாரசியமான சம்பவங்களைக் கொண்டுள்ள நூல். 438 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் 2007இல் வெளியானது.

திரை இசைப் பிரியர்களும், சினிமா ஆர்வலர்களும் படிக்க வேண்டிய சுவாரசியமான நூல் இது!

***

Leave a comment

Leave a comment