QUIZ குயில் பத்து QUIZ (Post No.13,015)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,015

Date uploaded in London – –   17 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL No.111

1.குயில்- காகம் பற்றிய பிரபல சம்ஸ்க்ருத சுபாஷிதம் என்ன சொல்கிறது ?

XXXX

2.இந்தப் பாடலுக்கு (சம்ஸ்க்ருத சுபாஷிதம்) காரணம் என்ன ?

XXXX

3.இந்தியாவின் கவிக்குயில் யார் ?

XXXX

4.சங்க இலக்கியத்தில் குயில் எங்கெங்கு வருகிறது ?

XXXX

5.குயில் பத்து பாடிய சைவப் பெரியார் யார் ?

XXXX

6.மயில் அகவும் காகம் கரையும் குயில் என்ன செய்யும் ?

XXXX

7.குயில் பழமொழிகள் -பூர்த்தி செய்யுங்கள்

………….. இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வேணும்.

………… இடக் காகம் கண்டு களிக்க.

………….. கூவுகிறான்.

XXXX

8.குயில் பாட்டு எழுதிய தமிழ்க் கவிஞன் யார் ?

XXXX

9.குயில் என்ற பெயரில்  பத்திரிக்கை நடத்தியவர் யார் ?

XXXX

10.குயிலுக்குள்ள தமிழ், ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்ன ?

XXXX

விடைகள்

1.काकः कृष्णः पिकः कृष्णः कः भेदः पिककाकयो ।

वसंत समये प्राप्ते काकः काकः पिकः पिकः ।

காகமும் கருப்பு குயிலும் கருப்பு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்

வசந்தகாலம் வந்துவிட்டால் காகம் ரகம்தான் ; கையில் குயில்தான்

வசந்த காலம் வந்துவிட்டால் காகம் கரையும்; குயில் கூவும் ; அப்போது சாயம் வெளுத்துவிடும்!

XXXX

2.குயிலுக்கு முட்டையிடத்  தெரியும் ஆனால் முட்டையை அடைகாத்து குஞ்சசுபொரிக்கத் தெரியாது .ஆகையால் காக்கையின் கூட்டில் முட்டையிடும். காக்கைக்கு வேறுபாடு தெரியாதாகையால் அதை காக்கும் ; குஞ்ச்சுகள் வெளியே வந்தபோதுதான் குரல் ஓசை வித்தியாசத்தால் உண்மை வெளிப்படும்; நிறத்தைப் பொறுத்தமட்டில் இரண்டும் கருப்புதான்.

xxxx

3.சரோஜினி சட்டோபாத்தியாயா என்ற வங்காளி பிராமணப் பெண் கவிஞர்; பின்னர் முத்யாலா கோவிந்தராஜுலு நாயுடுவைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டதால் சரோஜினி நாயுடு என்று அழைக்கப்பட்டார். சுதந்திர போராட்ட தியாகி; கவிதைகள் இயற்றியதால் இந்தியாவின் கவிக்குயில் என்று அவரை  அழைத்தனர்.

XXXX 

4.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் சுமார் 35 இடங்களில் குயில் பற்றிக் கவிஞர்கள் பாடியுள்ளனர்

XXXX

5.மாணிக்க வாசகர்

XXXX

6.குயில் கூவும் .

xxxx

7.குயில் போலப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வேணும்.

குயில் முட்டை இடக் காகம் கண்டு களிக்க.

குயிலைப் போலக் கூவுகிறான்.

XXXX

8.தேசீய கவி சுப்பிரமணிய பாரதியார்.

XXXX

9.பாரதிதாசன் ; பின்னர் தேச விரோதக் கருத்துக்கள் காரணமாக தடை செய்யயப்பட்டது .

XXXX

10.கோகிலம் ,களகண்டம், கோரகை , பிகம், பரபுட்டம் அந்நியம்

—subham—

Tags- குயில் பத்து, குயில் பாட்டு, கோகிலம்

Leave a comment

Leave a comment