
உத்தாமணி
Date uploaded in London – – 18 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Part 9
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ற பகுதியில் 80 வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………
xxx
81 .பித்த சுரத்திற்கு
ஈச்சங்குத்து- வெட்டிவேர்- கோவைக்கிழங்கு -விளாமிச்சம் வேர்- வில்வம் வேர்- சித்தாமுட்டி- தாமரைக்கிழங்கு- சந்தனத்தூள்- இலுப்பைப்பூ- இவை சமன்கொண்டு இரண்டுபடி தண்ணீர் வைத்து கால்படியாக கிஷாயம் வடித்து இருவேளை கொடுக்க எப்படிப்பட்ட பித்தமும் சாந்தியாகும்; சுரம் தணியும்
XXXXX
82.கண் சதை வளர்த்திக்கு
ஈருள்ளியும் குறிஞ்சாநிலையும் சமயிடை எடுத்து சிதைத்து கண்ணில் 4-5 துளி பிழியவும். இப்படி இரு இரண்டோரு வேளை பிழியத் தீரும்.
XXXX
83 .வைசூரியினால் மலஜலம்காட்டினால்
ஈருள்ளி- கற்கண்டு- வகைக்கு விராகனிடை 5 இவை இரண்டும் அரைத்து அரைக்கால் படி ஆமணக்கெண்ணெயில் கலக்கி கொஞ்சம் கொஞ்சம் உட்கொண்டு வந்தால் மலஜலக்கட்டு உப்பிசம் இவை தீரும்
XXXX
84 .கணக்கழிச்சலுக்கு
ஈருள்ளி பத்து திரி – கருவேப்பிலை ஈர்க்கு- ஒரு பிடி – சீரகம் விராகநிடை 1 வெந்தயம் விராகநிடை 2 – இவைகளை வறுத்துக் கிஷாயம் வைத்துக் கொடுக்கவும் தீரும்
XXXX
85 . வைசூரியினால் ரத்த பேதி கண்டால்
ஈருள்ளியை ஆவின் நெய்யில் வேகவைத்துக் கொடுத்தால் நிவர்த்தியாகும் .தேக திடமறிந்து 3-4 வேளை வரை நிதானமாய் கொடுக்கவேண்டியது .
இதுவுமது
ஈருள்ளிச்சாறும் பசு நெய்யும் சமனாய்க் கலந்து வீசம்படி வீதம் மூன்று பொழுது கொடுத்தால் , கடுப்பு- இரத்தம்- சீதம் இவை நிவர்த்தியாகும்
XXXX
86 . க்ஷயத்திற்கு
ஈனாத எருமைக்கிடாவின் சாணிப்பாலை வடிகட்டி ஆவின் பாலும் நெய்யும் சமன் கலந்து அரைக்கால்படி வீதம் அந்தி சந்தி கொடுத்துவர தீரும். க்ஷயம் 96 -ம் சாந்தியாகும் . பத்தியம் புளி தள்ளவும் .
XXXX
87 .நேத்திரபேதி
ஈனாத எருமை சாணிப்பாலில் சித்தாமணக்குப் பருப்பை இழைத்து கண்ணில் தடவ துர்நீர் யாவும் நீங்கிவிடும்; நேத்திரம் சுத்தியாகும்
XXXXX

உ
88 .ஆமைகணத்துக்கு
உத்தாமணி – பாவட்டை- காவட்டை- சங்கு- முருங்கை- துனா- பொடுதலை — இவைகளின் ஈர்க்கு வகைக்கு ஒரு பிடியிடித்து ஒரு படி தண்ணீர் விட்டு- ஓமம் -திப்பிலி- வசம்பு- ஆமையோடு- கருஞ் சீரகம் – ஓர் நிரையாய் அறைத்து துணியில் முடிந்து கூடப்போட்டு எட்டொன்றாய் வற்றக்காய்ச்சி மேற்படி மருந்தையெடுத்து அந்த கிஷாயத்தினால் அறைத்து கழச்சிக்காயளவு மூன்று வேளை கொடுத்துவர தீரும்.
இதுவுமது
உத்தாமணிக் கொழுந்து- வசம்பு- உள்ளி– விளாம் ஓடு –ஓமம்- ஆமையோடு- வகைக்கு இருகளஞ்சி எடுத்து இடித்து வறுத்து விளாங்காய்ப் பிரமாணம் வெண்ணெயில் போட்டுக் காய்ச்சிக் கொடுக்கத் தீரும் .
இதுவுமது
உத்தாமணி- சங்கு- தூதுவளை- கொடும்பை – இவைகளின் வேர் வகைக்கு ஒரு பிடி நறுக்கி ஒரு படி தண்ணியில் போட்டு பொடுதலை- ஓமம்- திப்பிலி- வசம்பு- மிளகு- பூண்டு- ஆமையோடு ஓர் நிறையாய் இடித்து துணியில் முடிந்து போட்டுக் காய்ச்சி மேற்படி மருந்தை அறைத்துக் கொடுத்து வந்தால் ஆமை கணம் சுரம் தீரும் .
XXXXX
89.பிள்ளைகள் கழிச்சல் வாந்திக்கு
உத்தாமணிச் சாறு- எருமை வெண்ணெய் – வகைக்கு கால் படி- கருஞ்சீரகம்- ஒரு களஞ்சி அறைத்துப் போட்டு காய்ச்சி மேற்படி மருந்தை அறைத்துக் கொடுத்துவரத் தீரும் .
XXXX

90 .மாந்தக் கழிச்சலுக்கு
உத்தாமணி வேளை, நாய் வேளை, குப்பைமேனி -இவைகளைத் தட்டி சாறு வாங்கி துட்டு இடை உள்ளுக்குள் கொடுத்து மேலுக்கு துவாலையிடவும்
—சுபம்—
Tags- உத்தாமணி, முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்-, part 9