QUIZ கிளி பத்து QUIZ (Post No.13,020)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,020

Date uploaded in London – –   19 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ  SERIAL No 112.

1.கிளியைக் கையில் வைத்திருக்கும் கடவுள்கள் யார் யார் ?

XXXX

2.கிளியின் பெயர் உடைய, வியாசரின் மகன் யார் ? அவர் ஏன் விஷ்ணு பக்தர்களிடம் பிரபலம் அடைந்தார் ?

xxxxx

3.கிளியை வாகனமாக உடையவர் யார் ?

xxxx

4.ஆதிசங்கரர் கதையில் கிளி வரும் இடம் எது ?

xxxx

5.அருணகிரிநாதர் வாழ்வில் கிளி எங்கே வருகிறது?

xxxx

6.கிளியின் வேறு பெயர்கள் என்ன? வாத்ஸ்யாயனர் காம சாஸ்திரத்தில் கிளிகள் பற்றி என்ன சொன்னார்?

xxxx

7.சங்க இலக்கியத்தில் கிளிகள் பற்றிய குறிப்புகள் உள்ளனவா ?

xxxx

8.வேதத்தில் கிளிகள் பற்றிய குறிப்புகள் உள்ளனவா ?

XXXX

9.கிளி மாமிசம் சாப்பிடலாமா ?

XXXX

10.கிளிகள் பிராமணர் வீடுகளில் வேதம் ஒதுவதாக பாடியது யார்? தேவாரத்தில் கிளிகள் பற்றி என்ன சொல்லப்படுகிறது?

xxxx

விடைகள்

1.மீனாட்சி , காமாட்சி கையில் கிளி இருக்கிறது; அடியார்கள் என்று எடுத்துக்கொண்டால் ஆண்டாள் கையிலும் கிளி உண்டு. கையில் இல்லாத இடங்களில் தோள் மீது கிளி நிற்கும் . பெரும்பாலும் பார்வதியின் பல வடிவங்களாக உள்ள தேவி சிற்பங்களில் கிளியைக் காணலாம்.

xxxx

2.வியாசரின் மகன் சுகர் ; அவர் கிருஷ்ணரின் பெருமை பேசும் பாகவத புராணத்தை பரீட்சித் மன்னனுக்கு எடுத்துரைத்தார் ; இதனால் பாகவதம் படிப்போர் சுகரின் பெயரை மறவார் . இப்பொழுதும் ஏழு  நாட்களில் பாகவதத்தை முற்றோதும் பாகவத சப்தாஹம் ஊர்தோறும் நடைபெற்றுவருகிறது. சுக/ர் என்றால் கிளி.

xxxxx

3.மன்மதன், ரதி ஆகிய இருவருக்கும் கிளி வாகனம்; குபேரனுக்கும் கிளி வாகனம் ஆகும்

xxxx

4.மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்ய சங்கரர் சென்று கொண்டிருந்த சமயத்தில் நர்மதை நதிக்கரையில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர் ; அவர்களிடம் மண்டனமிஸ்ரர் வீடு எங்கே? என்று சங்கரர் வினவினார். வயதில் சிறியவரான ஆதி சங்கரனைப் பார்த்து அவர்கள் கிண்டலாக சம்ஸ்க்ருத மொழியில்  ஒரு புதிர் போட்டார்கள் ; எந்த வீட்டுத்  திண்ணையில் கிளிகள் வேதங்களை இடைவிடாமல் முழங்குகின்றனவோ அந்த வீட்டுக்குப் போ என்றார்கள் பெண்மணிகள் ; சங்கரரும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் கேள்வி கேட்டார்.

xxxx

5.அருணகிரிநாதர் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் பல போட்டிகளில் தோல்வி அடைந்தான்; இறுதியில் அருணகிரியை மடக்குவதற்காக பாரிஜாத மலரைக் கொண்டுவரும்படி கேட்டான். அருணகிரி தனது  உடலை விட்டு, ஒரு இறந்த கிளியின் உடலில் புகுந்து பாரிஜாதம் வளரும் விண்ணுலகம் சென்றார். அதற்குள் சம்பந்தாண்டான் அருணாகியின் உடலை எரித்துவிடவே அருணகிரிநாதர் கிளியின் உருவத்திலேயே இறுதிக்காலத்தைக் கழிக்க நேரிட்டது .

xxxxx

6.கிளியின் வேறு பெயர்கள் : கிஞ்சுகம் , தத்தை, சுகம், அரி, காரி, கீரம் , கிளி, கிள்ளை;

வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரத்தில் பெண்கள் கல்விக்கான சிலபஸ் கிடைக்கிறது. இதுதான் உலகிலேயே  முதல் பெண்கள் கல்வி பாடத்திட்டம் (WORLD’S FIRST SYLLABUS FOR WOMEN) . அதில் பெண்கள் கற்கவேண்டிய 64 கலைகள் பட்டியலில் கிளிகளையும் மைனா பறவைகளையும்  பேசவைக்கும் கலையும் பெண்களுக்குரியது என்று எழுதியுள்ளார் . இது 2000  ஆண்டுப்பழமையான நூல் .

xxxx

7.கிளி , கிள்ளை   என்ற பெயர்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் எழுபதுக்கும் மேலான இடங்களில் கிளி வருகிறது

(பிற்காலத்தில் தூது இலக்கியத்தில் கிளி இடம்பெறுகிறது அழகர் கிள்ளை விடு தூது என்ற நூலின் ஆசிரியர் பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளை).

xxxx

8.வேதத்தில் கிளி

ரிக் வேதத்தில் சுக என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல் இருக்கிறது மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மந்திரத்தில் இது வருகிறது ; கிளியின் மீது மஞ்சள் நிறத்தை ஏறச்செய்யும் மந்திரம் அது. யஜுர் வேதத்தில் அச்வமேத யாகத்தில் கிளியும் பலியிடப்படுவதாக மந்திரம் இருக்கிறது .

அதர்வ வேதத்தில் சாரி சாகா என்ற சொல்லிலும் கிளி குறிப்பிடப்படுவதாக ப்ளூம்பில்ட் கருதுகிறார் .

Śuka (शुक, ‘parrot’) is mentioned in the Rigveda, where a desire is expressed to transfer to the Śuka and the Ropaṇākā the yellowness of jaundice. The bird is included in the list of sacrificial victims at the Aśvamedha (‘horse sacrifice’) in the Yajurveda-saṃhitās. It is described as yellow and as ‘of human speech’ (puruṣa-vāc). According to Bloomfield, this word is the correct reading for the second half of the obscure Śāriśākā of the Atharvaveda.

xxxx

9.பதினேழாம் நூற்றாண்டு போஜன குதூகல நூலில் கிளி மாமிசம் குறிப்பிடப்படுகிறது. சரக சம்ஹிதையிலும் இதைக்காணலாம்

கிளி மாமிசம் புளிப்புச் சுவை உடையது;குளிர்ச்சி தருவது; காச நோய் , இருமல்,மலச்சிக்கல், பசியின்மை ஆகியவற்றைத் தீர்க்கும்

The meat of the parrot (śuka) is astringent-sour, rūkṣa (kaṭu) in Vipāka, śītala, useful in phthisis, cough and wasting; constipating, light and appetiser.

xxxx

10.சம்பந்தர்; அவர் பாடிய திருமுறைப்பாடல்களில் ஏராளமான இடங்களில் கிளியைக் குறிப்பிட்டு அவைகள் பிராமணர் வீடுகளில் வேதத்தைக் கேட்டுக் கேட்டு, திரும்பிச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன என்கிறார் .

தேவாரத்தில் கிளிகள்

வேதப் புலவர்கள் பல நாள்களும் தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிப்பதைக் கேட்டுத் தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும் வேதங்களுக்குப் பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்- என்று பாடுகிறார் சம்பந்தர்

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று

நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோ னின்றகோயில்

பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசைகேட்டு

வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லு மிழலையாமே.

கிளி வாழைப் பழத்தைக் கீறி உண்ணும் ; சொற் பயின்று (இறைவ னைத்  ) துதிக்கும். திருநின்றியூர் என்னும் தலத்திற் கிளிகள் செந்தமிழ் பயின்றிருந்தன. தேவி திருக் கரத்திற் பந்தும் கிளியும் தங்கும். ஆரூர்ப் பெருமானே உணர்த்தத் தலைவி கிளியைக் தூது அனுப்புகின்றாள். கிளியின் பேச்சு மாதர்களின் பேச்சுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

தேவி

                உள்ள மாருரு காதவரூர்விடை 

                வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாந்

தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங்

கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.

     பைங்கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள் – இக்கிள்ளையும்

பூவையும் மக்கள் தத்தம் மாளிகை முதலியவற்றில் வளர்ப்பவை.

கிளிகள் தாம் பயிலும் மக்கள்பாற் கேட்ட பழக்கத்தால்

பதிகங்களைப் பாடுவன. “சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை”

என்பது வழக்கு. “பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது

மோசை கேட்டு. வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்

பொருட்சொல்லும் மிழலையாமே” என்பது தேவாரம்.

“பண்மொழியா லவனாமம் பலவோதப் பசுங்கிள்ளை

வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும்                                வெண்காடே”

                  – திருஞான – சீகாமரம் – 6

“வேதத் தொலியாற் கிளிசொற் பயிலும் வெண்காடே”

                     – மேற்படி காந்தாரம் – 2

என்ற தேவாரங்களும் காண்க.

     பூவை – நாகணவாய்ப்பறவை. மக்கள்பாற் கேட்டுப்

பயின்றவற்றைக் கிளிகள் பாட, அவ்வினத்தைச் சேர்ந்த பூவை

கேட்பன என்றார்.

XXXXXX

BONUS Q

10.கிளிகள் பற்றிய பழமொழிகளை பூர்த்தி செய்யுங்கள்

ஸம்ஸ்க்ருதப் பழமொழி :

ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்

நூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் ……….கிளி போலப் பேச முடியாது.

1. ………..காத்த கிளி போல

2.கிளியை வளர்த்து ………….. கொடுக்கலாமா

3…………………….. பேச்சும் மயிலைப் போல நடையும்

4.மாமரம் பழுத்தால்……………………, வேப்ப மரம் பழுத்தால் …………………………..

ANSWERS

ஸம்ஸ்க்ருதப் பழமொழி — கொக்கு,

1.இலவு ; 2. பூனை கையில்; 3. கிளியைப் போல; 4. கிளிக்காகும்காக்கைக்காகும்

xxxx

 xxx subham xxxx

Tags- கிள்ளை விடு தூது , காம சூத்திரம், 64  கலைகள்,கிளி , வாகனம், தேவி கைகளில் , வேதம், ஆதிசங்கரர், அருணகிரி, சுகர், சம்பந்தர், தேவாரம், பழமொழிகள்

Leave a comment

Leave a comment