அறிவியல் புதிர்கள்! (Post No.13,036)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.036

Date uploaded in London – — 25 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அறிவியல் புதிர்கள்!

 ச. நாகராஜன் 

சயின்ஸ் ஃபிக் ஷன் – அறிவியல் கற்பனைக் கதைகள் – கடந்த நூற்றாண்டில் ஆயிரக் கணக்கில் உருவாகி விட்டன.

அறிவியல் கற்பனையை அடிப்படையாகக் கொண்டு மார்டின் கார்ட்னர் ஏராளமான புதிர்களை உருவாக்கி உள்ளார்.

கார்ட்னர் பிரபல அறிவியல் பத்திரிக்கையான ‘சயின்டிபிக் அமெரிக்கன்[ பத்திரிக்கையில் புதிர்களை எழுதுவார். கணிதப் புதிர்களை அமைப்பதில் வல்லுநரான இவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அவரது அறிவியல் கற்பனை புதிர்கள் அறிவுக்கு விருந்து. லேசில் அவிழ்க்க முடியாதவை. மாதிரிக்கு இரண்டு இதோ:

1)  ரொபாட் அழகிகள்

ரொபாட்டை வடிவமைக்கும் பேராசிரியர் மூன்று அழகிய பெண் ரொபாட்டுகளை வடிவமைத்து வகுப்பறைக்குக் கொண்டு வந்தார்.

மூன்று ரொபாட்டுகளுமே நல்ல அழகிகள். உருவத்தில் அப்படியே ஒத்திருப்பர்.

பேராசிரியர் கூறினார்: “மாணவர்களே! உங்கள் முன் இருக்கும் மூன்று அழகிகளில் ஒருத்தி உண்மையையே கூறுபவள். இன்னொருத்தி பொய்யே பேசுபவள். மூன்றாமவள் சில சமயம் உண்மையையும் சில சமயம் பொய்யும் பேசுபவள். கணினி மூலமாக இவர்கள் ஏதோ ஒரு இடத்தில் – இடது, வலது, நடு இடம் என்று உட்கார்ந்திருக்கிறார்கள்.  எந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். குறைந்தபட்ச கேள்விகளே அவர்களிடம் கேட்கலாம்.”

மாணவர்களில் புத்திசாலியான ஒருவன் எழுந்திருந்தான். ஒவ்வொரு அழகியிடமும் ஒரு கேள்வி கேட்டான்.

1.   இடது பக்கம் இருந்த அழகியிடம் அவன் கேட்ட கேள்வி : “உனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் யார்?”

பதில் வந்தது : “உண்மை விளம்பி”

2.   நடுவில் அமர்ந்திருந்த அழகியிடம் அவன் கேட்ட கேள்வி : “நீ யார்?”

வந்த பதில் : “சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் பேசுபவள்”

3.   வலது பக்கம் அமர்ந்திருந்த அழகியிடம் அவன் கேட்ட கேள்வி: “உனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் யார்?”

வந்த பதில் : “பொய் பேசுபவள்”.

மூன்று கேள்விகளுக்கும் பதிலைப் பெற்ற அவன், உடனே யார் யார் என்று அவர்களை சரியாக இனம் கண்டு கூறி விட்டான். எப்படி?

2. எதிர்காலம் உரைக்கும் கணினி

செயற்கை அறிவு – ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் – துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒரு புதிய கம்ப்யூட்டரை வடிவமைத்திருந்தார்.

“லாபரட்டரியில் அது இருக்கும் இடத்திலிருந்து பத்து மீட்டர் சுற்றளவில் அடுத்து வரும் ஒரு மணி நேரத்தில் ஒரு நிகழ்ச்சி நடக்குமா, நடக்காதா என்று கேட்டால் கச்சிதமாக அது பதில் கூறி விடும். நூற்றுக்கு நூறு சதவிகிதம் இது சரியாக இருக்கும்” – என்று இப்படி பெருமிதப்பட்டார் பேராசிரியர்.

ஒரு நிகழ்ச்சி நடக்கும் என்று கம்ப்யூட்டர் கணித்தால் ஆம் என்பதற்கு அடையாளமாக சிவப்பு விளக்கை அது எரியவிடும்.

ஆனால் விளக்குகள் மறைவிடத்தில் இருக்கும். ஒரு மணி நேரம் கழித்த பின்னரே அதை சரி பார்க்க முடியும். இது ஏன் என்றால், ஒரு கரப்பான் பூச்சி சுவரை நோக்கிப் போகுமா என்ற கேள்விக்கு ஆம் என்று அது பதில் அளித்த போது யாரேனும் ஒருவர் பூச்சியை சுவரை நோக்கிப் போக விடாமல் செய்யலாமே! அதைத் தடுப்பதற்காக ஒரு மணி நேரம் கழிந்த பின்னரே விளக்கைப் பார்க்க முடியும் என்று விளக்கினார் பேராசிரியர்.

கணினியின் அறிமுக நிகழ்ச்சி பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்டு ஆரம்பமாக இருந்தது.

அப்போது பேராசிரியரின் உதவியாளர் லைலா அவரிடம் வந்து, “சார், நூறு சதவிகிதம் இது வெற்றி பெறும் என்று அறிவிப்பது தவறு” என்றாள்.

கோபமடைந்த பேராசிரியர், “எத்தனை முறை இதை நான் சோதித்திருக்கிறேன். இப்போது வந்து எனக்கு எதிராக இப்படிச் சொல்கிறாயே” என்றார்.

“சார், உண்மையிலேயே எனக்கு இப்படிச் சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் வருபவர்கள் முன்னிலையில் நீங்கள் அவமானப்படக் கூடாதே. அதனால் நான் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யச் சொல்கிறேன்” என்றாள் லைலா.

அதோடு கணினியை ஒரு கேள்வியும் கேட்டாள். பேராசிரியர் திகைத்து மயக்கமடைந்தார்.

லைலா கேட்ட கேள்வி என்ன?

மேற்கண்ட புதிர்களுக்கான விடைகள்:

முதலாவது புதிரின் விடை:

உண்மை விளம்பியை ‘உ’ எனக் குறிப்போம்.

பொய் பேசுபவளை ‘பொ’ எனக் குறிப்போம்.

சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் பேசுபவளை ‘உபொ’ எனக் குறிப்போம்.

இடது, நடு, வலது ஆகிய மூன்று இடங்களால் ஆறே ஆறு அமைப்புகள் தான் ஏற்பட முடியும். அவை வருமாறு:

 இடதுநடுவலது
01)பொஉபொ
02)உபொபொ
03)பொஉபொ
04)பொஉபொ
05)உபொபொ
06)உபொபொ

ஆறு அமைப்புகளில் ஒவ்வொன்றாக எடுத்துக் கேள்விகளையும் பதில்களையும் அவற்றில் பொருத்திப் பாருங்கள்.

ஆறாவது அமைப்பில் தான் ஒருவித முரண்பாடும் இல்லாமல் இருக்கிறது.

ஆகவே இடது பக்கம் இருப்பவள் சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் பேசுபவள்.

நடுவில் இருப்பவள் பொய்யே பேசுபவள்.

வலது பக்கம் இருப்பவள் உண்மை விளம்பி.

இரண்டாவது புதிரின் விடை:

“கணினி , தனது அடுத்த கணிப்பிற்கு சிவப்பு விளக்கை எரிய விட்டு பதில் சொல்லுமா?”

இது தான் லைலா கேட்ட கேள்வி!

தர்க்கரீதியான முரண்பாட்டை எதிர்நோக்கும் கணினியின் பாடு தர்மசங்கடமானது தான்!

‘இல்லை’ என்று சிவப்பு விளக்கை எரிய விட்டால், அது கேள்விக்குத் தகுந்த உண்மையான பதில் ஆகாது!

ஏனென்றால் பச்சை விளக்கை எரிய விட்டு பதில் தந்தால், அது தவறாக ஆகி விடும். ஏனெனில் அங்கு விளக்கு எரியாததால்!

கம்ப்யூட்டரிடம் லைலா இந்தக் கேள்வியைக் கேட்க அது ‘ஆம்-இல்லை’

லூப் வழியே மீண்டும் மீண்டும் சென்று ஒரு பெரிய முனகல் சப்தத்தைத் தந்தது.  தொடர்ந்து லூப் வழியே சென்றதால் உஷ்ணம் ஏறி கம்ப்யூட்டர் வெடித்தது!

பேராசிரியர் தான் ஏற்கனவே மயக்கம் அடைந்திருந்தாரே!!

நிகழ்ச்சி நடக்கவில்லை!!!

***

Leave a comment

Leave a comment