
காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவில்

Date uploaded in London – – 25 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Quiz Serial Number- 115
1.தமிழ்நாட்டில் எந்த இரண்டு பிரபல வைணவக் கோவில்களில் தங்கத்தினால் செய்த பல்லிகளைக் காணலாம் ?
xxxx
2.வரதராஜப்பெருமாள் கோவிலில் பல்லிகளின் தங்கச் சிலை இருப்பது ஏன்?
xxxx
3.வரதராஜப்பெருமாள் கோவிலில் பல்லி தரிசனத்துக்கு நீண்ட பக்தர் வரிசை நிறப்பது ஏன்?
xxxx
4.பஞ்சாங்கத்தில் பல்லி படம் இருப்பது ஏன் ?
xxxx
5.இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன ?
xxxx
6.பல்லி பற்றிய பழமொழிகள் உண்டா ?
xxxx
7.பல்லிக்கு வேறு என்ன பெயர்கள் இருக்கின்றன ?
xxxx
8.எந்தக் கோவிலில் திருமண நேர்த்திக் கடனாக வெள்ளியால் செய்த பல்லியைக் கொடுக்கிறார்கள் ?
xxx
9.இந்தியாவைப்போல வேறு எந்த நாட்டில் பல்லியை வழிபடுகிறார்கள் ?
Xxxx
xxxx
10.பல்லி விழுந்த உணவு விஷமாகுமா ? பல்லியும் பாம்பு தேள் போல விஷ ஜந்துவா?
xxxx

ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில்
விடைகள்
1.ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவில்
xxxx
2.அயோத்தி மன்னனின் பிள்ளையின் பெயர் அசமஞ்சன். அவனும் அவன் மனைவியும் ஒரு முனிவரின் சாபத்தால் பல்லிகளாக மாறினர். பின்னர் உபமன்யு முனிவரின் உதவியோடு அவர்கள் சாப விமோசனம் பெற்று சொர்க்கம் சென்றனர் . அந்தப் பல்லிகளை முனிவர் தங்கத் தலையுடைய பல்லிகளாக மாற்றினார் என்பது ஒரு கதை. ஆனால் கோவில் போர்டில் notice board வேறு ஒரு கதை எழுதப்பட்டுள்ளது; கெளதம முனிவருக்கு தண்ணீர் கொண்டுவந்த இரண்டு சீடர்களும் அந்த தண்ணீரில் பல்லிகள் விழுந்து இருப்பதை பார்க்கவில்லை ; கோபம் அடைந்த முனிவர் அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். அவர்கள் மன்னிப்புக் கேட்டவுடன் காஞ்சி நகரில் தவம் செய்தால் பாப விமோசனம் கிடைக்கும் என்றார். அவர்களும் அப்படியே செய்து முக்தி பெற்றனர் . அந்தப் பல்லிகளை மட்டும் பஞ்ச லோக விக்கிரகங்களாக முனிவர் மாற்றினார் . அவைகளில் ஒரு பல்லி மட்டும் கோவில் கூரையில் இருக்கிறது .
xxxx
3.தங்க நிறம் கொண்ட பல்லிகளைத் தொடுவோருக்கு நோய் நொடிகள் வராது ; நல்ல செல்வமும் கிட்டும் என்று வரதராஜப் பெருமாள் சொன்னதாகக் கோவில் அறிவிப்பு பலகை சொல்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த பலன் சூரிய சந்திரன் உள்ளவரை நீடிக்கும் என்று பெருமாளே சொன்னதாகவும் போர்ட் board கூறுகிறது கூரையில் ஒரு பல்லி உருவத்தோடு சூரிய சந்திரன் பிம்பங்களும் வரையப்பட்டுள்ளன. இதைத் தொடுவதற்காக இரண்டு ரூபாய் டிக்கெட் வாங்க நீண்ட கியூ நிற்கிறது.
xxxx
4.பல்லி ஒருவர் மீது விழுந்தால் , அது அவர்களின் எந்த அங்கத்தின் மீது விழுகிறதோ அதன்படி பலன் கிடைக்கும் என்று கெளலி சாஸ்திரம் கூறுகிறது . அதுமட்டுமல்ல ; அது எந்த திசையிலிருந்து சப்தம் எழுப்புகிறதோ அதற்கு ஏற்ப பலனும் உண்டு ; இதை பல்லி சொல்லுக்குப் பலன் என்று எழுதி இருப்பார்கள் .
xxxx

5. சங்கத் தமிழ் இலக்கியத்திலே இதற்கு ஆதாரம் இருக்கிறது ; அது 2000 ஆண்டு பழமையான நூல். அகநானூறு நற்றிணை ,கலித்தொகை ஆகிய நூல்களில் பல்லி சொல் பற்றி குறைந்தது எட்டு படலகளில் பாடல் புலவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பல்லி சொல் பற்றி அகம் 9, ,88, 151, 351, 289, 387 பாடல்களிலும் நற்றிணை 98, 169,, 246 , 333 மற்றும் கலித்தொகை 11 பாடல்களிலும் காணலாம் ; புற நானூறு 120, 256 பாடல்களும் குறுந்தொகை 16 ம் பள்ளியைக் குறிப்பிடுகின்றன.
சங்க இலக்கியத்தில், காட்டில் வேட்டை ஆடப் புறப்பட்ட காட்டுப் பன்றி கூட சகுனம் பார்த்ததாக உள்ளது:-
பாடல் 98. குறிஞ்சி
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, 5
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- 10
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!
நற்றிணை 98
xxxx
6.உண்டு ;ஊருக்கெல்லாம் சோதிடம் சொல்லும் கெளலி (பல்லி ) கழனிப் பானையில் விழுந்ததாம் –
பல்லி சொல்வதெல்லாம் நல்லது; முழுகுவதெல்லாம் கழுநீர்ப்பானை -இப்படி நிறைய உள்ளன.
xxxx

7.கெளலி , துந்துமாற, பால, குண்டுநாச்சி , கிருஹ கோலக (மார்க்கண்டேய புராணத்தில்).
कुण्डृणाची f. house-lizard
धुन्धुमार m. house-lizard
पल्ली f. small house-lizard
Gaulī (गौली) refers to a “lizard”
pāla (पाल).—f (palli S) The common house-lizard.
in Sanskrit golaka- m. ‘lizard’ (cf. gṛhagolaka- m. ‘house lizard’, attested in Mārkaṇḍeya-Purāṇa 15,24), golikā- f
xxxx
8.வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் சிவன் கோவிலுக்கு வரும் இளைஞர்கள் திருமணம் ஆனவுடன் நேர்த்திக் கடனாக வெள்ளி யினாலான பல்லியை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்து கின்றனர் .
xxxxx
9.இத்தாலியின் தலைநகர் ரோமாபுரியில் சாலுஸ் Salus என்ற பாதுகாப்புத் தெய்வத்தின் சின்னமாகக் கருதுகின்றனர் ; அங்கே பழங்கால நாணயங்களில் பல்லியைக் காண முடியும்.
xxxx
10.வீட்டிலுள்ள பல்லிகள் விஷமுடையவை அல்ல; அது விழுந்த உணவால் மரணமும் ஏற்படாது 5000 வகை பல்லி இனப் பிராணிகளில் நூறு மட்டுமே விஷம் உடையவை. அவைகள் வீட்டில் வசிப்பவை அல்ல. சீனர்கள் பல்லியை விரும்பிச் சாப்பிடுகின்றனர். வியட்நாமில் இது தினசரி உணவு . தாய்லாந்து , ஜப்பான், நிகராகுவா, கேமரூன், போர்ட்டோரிக்கோ ஆகிய நாடுகளிலும் பல்லியை சர்வ சாதாரணமாகச் சாப்பிடுகின்றனர்.
–subham–
tags- பல்லி பத்து , quiz , வழிபாடு, விஷமா, உணவு