QUIZ சங்குப் பத்து QUIZ (Post No.13,076)

QUIZ சங்குப் பத்து QUIZ (Post No.13,076)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,076

Date uploaded in London – –   9 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 QUIZ சங்குப் பத்து QUIZ (Post No.13,076)

Quiz Serial Number- 116

1.கிருஷ்ணன் கையிலுள்ள சங்கின் பெயர் என்ன ?

XXXX

2. எந்த சங்கினைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள் ?

XXXX

3. எந்த ஊரில்12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் சங்கு தோன்றுகிறது ?

XXXX

4. பஞ்ச பாண்டவர் கைகளிலுள்ள சங்குகள் பெயர்களை பகவத் கீதையில் காணலாம். அவை யாவை?

xxxx

5. எந்த மாதத்தில் சிவபெருமானுக்கு 1008  சங்குகளைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்?

xxxx

6. வலம்புரிச் சங்கு என்றால் என்ன ?

xxxx

7. சங்கு பற்றி பட்டினத்தார் என்ன சொல்கிறார் ?

xxxx

8. சங்கு என்பதிலிருந்து உருவான ஆங்கிலச்  சொல் என்ன ?

XXXX

9. தமிழ்க் கல்யாணங்களில் சங்கு ஊதி தாலி   கட்டும்  வழக்கம் பற்றி ஆண்டாள் என்ன சொல்கிறாள் ? இப்போதும் திருமணங்களில் சங்கு ஊதி தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யார்?

XXXX

10. கோவிலில் தீபாராதனை காலத்தில் சங்கு ஊதுவது ஏன் ?

XXXX


விடைகள்

1.பாஞ்சஜன்யம்

XXXX

2. வலம்புரிச் சங்கினைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்

XXXX

3. திருக்கழுகுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் ௧௨ ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தோன்றும். இவ்வாறு தோன்றிய சங்குகளைக் கோவிலில் யாரும் காணலாம் ; செங்கல்பட்டுக்கு அருகில் இந்த ஆலயம் இருக்கிறது .

XXXX

4. பஞ்ச பாண்டவர்களின் சங்குகளின் பெயர்கள் பின்வருமாறு: தர்மன்- ‘அநந்த விஜயம்’ ,பீமன்- ‘பௌண்டரம்’ , அர்ஜுனன்-‘தேவதத்தம்’, நகுலன்- ‘சுகோஷம்’ , சகாதேவன்- ‘மணிபுஷ்பகம்’.

xxxx

5. கார்த்திகை மாத சோமவாரங்களில் (திங்கட்கிழமை) பெரும்பாலான கோவில்களில் சிவ பெருமானுக்கு சங்காபிஷேகம் நடக்கும் .

xxxx

6. சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் (clock wise whorls) அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர்.

xxxx

7. முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை

நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்

ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ

நாம் பூமி வாழ்ந்த நலம்.

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள்.

இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர்.

மூன்றாவது சங்கு? அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

xxxx

8. காஞ்ச் CONCH என்று சொல்லுவர். இது உண்மையில் சங்க என்ற ஸம்ஸ்க்ருதச் சொல். பின்னர் தமிழில் சங்கு ஆனது . தொல்காப்பியச் சூத்திரப்படி தமிழில் ‘ச’ எழுத்தில் சொற்களே துவங்க முடியாது ஆகையால் சங்கம், சங்கு என்பதெல்லாம் சம்ஸ்க்ருதம் தான். சங்க என்பதே சரியான உச்சரிப்பு. சி/C என்ற ஆங்கில எழுத்தை ச என்றும் க என்றும் உச்சரிக்கும் வழக்கம் இருப்பதால் ஆங்கிலத்தில் காஞ்ச் CONCH என்கின்றனர் .

xxxx

9. ஆண்டாள் ,வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—

மத்தளம் கொட்டவரி சங்கம் நின்று ஊத,

முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேதோழீ! நான்.

–ஆண்டாள் நாச்சியார் திருமொழி

வங்காளி இந்துக்கள் இப்போதும் சங்கு ஊதி கல்யாணம் செய்கின்றனர்

XXXX

Temple Tank Shanka Wonder from Tiru Kazuku Kundram

10. சங்கு ஒலி ஓம்கார ஒலியைக் குறிக்கும். வைதீக சைவர்கள் ஆத்மார்த்தமாகவோ பரமார்த்தமாகவோ செய்யும் பூஜைகளில் சங்கு பூஜை முக்கிய இடத்தைப் பெறுகிறது. நத்தார்படையின் மகிமை சொல்லுதற்கரியது. சங்குப் படைக்கு மத்தியில் அதன் அதி தேவதைகளான கங்கா தேவியும் வருணனும் வசிக்கின்றனர். சங்கின் முன்பாகத்தில் கங்கை, சரஸ்வதியும் பின்பாகத்தில் பிரஜாபதியும் வசிக்கின்றனர்.

“ பாஞ்சஜன்யமே ! நீ முன்னர் திருப்பாற் கடலில் உதித்தனை. மஹாவிஷ்ணுவினால் கையில் தரிக்கப்பட்டு எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டனை. தேவர் தம் பகைவராகிய அசுரர்களின் மனைவியரின் கருக்களை எல்லாம் உன் பேரொலியினால் ஆயிரம் தூள் தூளாகினை. உனக்கு வணக்கம் “

என்ற மந்திரத்தினால் சங்கில் தீர்த்தத்தை நிரப்பவேண்டும்.சங்கு, ஹரியின் இருப்பிடம். பணத்தைக் கொண்டுவரும். சங்கு தீர்த்தம் பற்றி பத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்றும் புராணங்கள் கூறும்.”

தட்சிணாவர்த்த (வலம்புரிச் சங்கு) சங்கு கொண்டு அர்ச்சிப்போன் ஏழு பிறவிகளில் செய்த வினைகளயும் நீக்கலாம் என்று ஸ்காந்தம் கூறும்.

–SUBHAM—

TAGS- வலம்புரிச் சங்கு, சங்கு ஊதுவது ஏன், பட்டினத்தார், சங்குப் பத்து QUIZ, திருமணம் , கல்யாணம் , ஆண்டாள், வங்காளி

Leave a comment

Leave a comment