முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் -16 (Post No.13,079)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,079

Date uploaded in London – –   10 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 150  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

PART 16

xxxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—16

xxxxx 

151.மூலச்சூடு தணிய

151. கற்றாழைச் சோறும் ஆவின் பாலும் கலந்து காலை மாலை புன்னைக்காயளவு உண்டு வந்தால் மூலச்சூடு தணியும். விந்து கட்டும் ; சொறி நமை சோகையிவை தீரும் .

xxxxx

152 லிங்க வீக்கத்திற்கு

கற்றாழைச் சோற்றை ஏழுதரம் கழுவியெடுத்து கொருக்குரிணம் கண்டு … ற்குமேல் வீக்கமுண்டாயிருக்கும் லிங்கத்தின் மீது ஒரு ராத்திரி வைத்துக்கட்ட வாடிப்போகும் .

xxxx

153. பிள்ளைகள் அடித்தள்ளினதற்கு

கரிசலாங்கண்ணியும் பழம்புளியும் சரியிடைவைத்தறைத்து கெச்சக்கரவு அல்லது புன்னைக்காயளவு எட்டு நாள் கொடுக்கத் தீரும்.

xxxx

154. சீத சுரத்திற்கு

கண்டங்கத்திரி சீந்தில் தண்டு தாமரை வளையம் மூன்றும் கிஷாயம் வைத்து சுக்கு கோரைக்கிழங்கு பொடி செய்து கொஞ்சம் கொடுக்கவும்; இப்படி 2-3 வேளை கொடுக்கத் தீரும் .

xxxx

155.விக்கல் வாந்தி சுரத்திற்கு

கண்டங்கத்திரி விரை அமுக்குரா சமூலம் திப்பிலி இவை சமநிடை போட்டு கிஷாயம் வைத்து தேன் முலைப்பால் விட்டுக் கொடுக்கத் தீரும்.

xxxx

156.பல்வலிக்கு

கண்டங்கத்திரி சமூலத்தைச் சுட்டுக்கரியாக்கி பொடித்து வைத்துக்கொண்டு அந்தி சந்தி  பல் துலக்கி வந்தால் பல் வலி சாந்தியாகும்.

xxxx

157.பீனிசத்திற்கு தைலம்

கண்டங்கத்திரி பழம்  துளசி வெற்றிலை இவைகளின் சாறு கஞ்சா கிஷாயம் நல்லெண்ணெய் வகைக்கு படி அறைத்து ஒன்றாய் கலந்து காய்ச்சி வடித்து தலை முழுகி வர ரத்த பீனிசம், சிராய் பீனிசம் இவை தீரும்; இச்சா பத்தியம்.

xxxx

158.சுரத்தின் பேரில் கொடுக்கும் பேதி கிஷாயம்

கற்றாழைச் சருகு வேம்பின் பட்டை கடுக்காய்  கார் கோலரிசி இவைகளை சிதைத்துக் கிஷாயம் செய்துகொடுக்க இரண்டோரு விசை விரோசனமாகி சுரம் தணியும்.

xxxx

159.உட்சுரம் கால் எரிவுக்கு

கற்றாழைச் சாறு நெல்லிக்காய் சாறு முசுமுசுக்கைச் சாறு வகைக்கு அரைக்கால்படி  நல்லெண்ணெய் ஒரு படி  அதிமதுரம் ஒரு பலம் அறைத்துபோட்டுக் காய்ச்சி முழுகிவந்தால் நிவர்த்தியாகும்

xxxx

160.அண்ட வாய்வுக்கு

கழச்சிப்பருப்பு வெள்ளுள்ளி முருங்கைப்பட்டை சுக்கு கருங்காணம் வகைக்கு இரண்டு களஞ்சி எடுத்து இடித்து ஒரு படி தண்ணீரில் போட்டு அரைக்கால் படியாகக் காய்ச்சி இறக்கிக் கொடுக்கவும். இப்படி ஆறு வேளை  கொடுக்க சாந்தியாகும்

இதுவுமது

கழச்சிப்பருப்பு சித்திர மூல வேரின் பட்டை மாவிலிங்கம் வேர்ப்பட்டை, வகைக்கு பலம் ஒன்றெடுத்து  இடித்துப்பொடித்து அண்டவெள்ளைக் கருவால் கிளறி களஞ்சிக் காயளவு கொடுக்க சாந்தியாகும் .

இதுவுமது

கழச்சிப்பருப்பு  சாத்திரசாரனைக்கிழங்கு  மிளகு இந்துப்பு பெருங்காயம்  வெள்ளுள்ளி வசம்பு இவைகளை ஓர்  நிரையாய் இடித்து வெள்ளாட்டுப் பாலில் அறைத்துக் கொடுத்துவர சாந்தியாகும்

. xxxx

 161. அஜீரண வாய்வுக்கு

கருவேப்பிலை ஈர்க்கு  சுக்கு சீரகம் ஓமம்  வகைக்கு விராகநிடை  மூன்றும் ஒருபடி தண்ணீரில் போட்டு அரைக்கால் படியாக வற்றக் காய்ச்சி வடித்துக் கொஞ்சம் சக்கரையிட்டுக் கொடுக்க சாந்தியாகும்.

—சுபம்—-

TAGS- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 16, கழச்சிப்பருப்பு ,கண்டங்கத்திரி 

Leave a comment

Leave a comment