ஹிந்தி திரைப்பட மெட்டில் மலர்ந்த சூப்பர் சிறுவர் பாடல்கள்! – 2 (Post.13,088)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.088

Date uploaded in London – — 13 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹிந்தி திரைப்பட மெட்டில் மலர்ந்த சூப்பர் சிறுவர் பாடல்கள்! – 2

கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும்!

ச. நாகராஜன்

மீடி மீடி பாதோ சே பச்னா ஜரா

1959-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான திரைப்படம் கைதி நம்பர் 911 ஷேக் முக்தார்,  நந்தா ஆகியோர் நடைத்த படம் இது.  செய்யாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒருவரின் கதை இது.

இதற்கு இசை அமைத்தவர் தத்தாராம். பாடலை எழுதியவர் ஹஸ்ரத் ஜெய்பூரி 3.28 நிமிடம் ஒலிக்கும் பாடல் இது.

பாடலைப் பாடியவர் லதா மங்கேஷ்கர்

ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளிவந்த இது மூன்று மொழிகளிலும் வெற்றிக் கொடி நாட்டியது. தெலுங்கில் 1962-ல்  கைதி கன்னையா என்ற படமாக இது வெளி வந்தது.

Mithi Mithi Bato Se Bachna Zara – मीठी मीठी बातों से बचना ज़रा

mithi mithi baato se, bachna zara
duniya ke logo mein hai, jaadu bhara

mithi mithi baato se, mithi mithi
mithi mithi baato se, bachna zara
duniya ke logo mein hai, jaadu bhara
mithi mithi

khub tej hai, ilam jise
koi chor bhi le na sake
khub tej hai, ilam jise
koi chor bhi le na sake
bhar le khazana, tera zamana
jag mein rahega, tera naam sada

mehnat se din raat padhunga
pahla number pass karunga, shabash

mithi mithi baato se, bachna zara
duniya ke logo mein hai, jaadu bhara
mithi mithi baato se, bachna zara
duniya ke logo mein hai, jaadu bhara

khel kud mein khona nahi
baat baat mein rona nahi
khel kud mein khona nahi
baat baat mein rona nahi
tu hai sitara, chanda se pyaara
karna jahan mein, koi kaam bada

hindustan ki shaan banunga
desh ka uncha naam karunga, shabash

mithi mithi baato se, bachna zara
duniya ke logo mein hai, jaadu bhara
mithi mithi

jhoom jhoom tufa ki nazar
raahe gher le teri agar
jhoom jhoom tufa ki nazar
raahe gher le teri agar
hoga andhera, koi na tera
fir tu bachega kaise, humko bata

tufano se nahi darunga
himmat se main nikal padunga, shabash

mithi mithi baato se, bachna zara
duniya ke logo mein hai, jaadu bhara
mithi mithi baato se, mithi mithi
mithi mithi baato se, bachna zara
duniya ke logo mein hai, jaadu bhara

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1960-ம் ஆண்டு வெளியான கைதி கண்ணாயிரம் படத்தில் இடம் பெற்ற பாடல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்.

இசையை அமைத்தவார் கே.வி. மகாதேவன்

பாடலை இயற்றியவர் கவிஞர் மருதகாசி

பாடலைப் பாடியவர்கள் பி.சுசீலா. 

3.58 நிமிடம் ஒலிக்கும் பாடல் இது.

ஆர்.எஸ். மனோகர், ராஜசுலோசனா, பி.எஸ். வீரப்பா, கே.ஏ. தங்கவேலு.ஈ.வி.சரோஜா ஆகியோர் நடித்த படம் இது.

படத்தில் இந்தப் பாடலின் காட்சியில் வருபவர் ராஜ சுலோசனா.

பாடல் இது தான்:

ஆஆஆ….ஆஆ…..ம்ம்ம்..

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்

வஞ்சகரின்  உலகம் வலை விரிக்கும்

ஆஆஆ….ஆஆ..

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சிப்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்

வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சிப்

ஆஆஆ…ஓஓஓ..ஓ

ஆஆஆ…ஓஓஓ..ஓ

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்

நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்

நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்

உண்மை இதை உணர்ந்து

நன்மை பெறப் படித்து

உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா

பள்ளி சென்று கல்வி பயின்று

பலரும் போற்ற புகழ் பெறுவேன்

சபாஷ்..                    (கொஞ்சி)

ஆஆஆ…ஓஓஓ..ஓ

ஆஆஆ…ஓஓஓ..ஓ

அக்கம் பக்கமே பாராது

ஆட்டம் போடவும் கூடாது

அக்கம் பக்கமே பாராது

ஆட்டம் போடவும் கூடாது

அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு

எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்

இந்த நாட்டின் வீரன் ஆவேன்

சபாஷ்..                  (கொஞ்சி)

ஆஆஆ…ஓஓஓ..ஓ

தன்னந்தனிமையில்  நீ இருந்தால்

துன்பப் புயலுமே  உனைச் சூழ்ந்தால்

தன்னந்தனிமையில்  நீ இருந்தால்

துன்பப் புயலுமே  உனைச் சூழ்ந்தால்

கண் கலங்குவாயா  துணிந்து நிற்பாயா,

கண்மணி எனக்கதைச் சொல்லிடு

புயலைக் கண்டு  நடுங்க மாட்டேன்

முயன்று நானே வெற்றி கொள்வேன்

சபாஷ்..                      (கொஞ்சி)

பாடலின் இசை அமைப்பு அனைவரையும் கவர்ந்தது.

சிறுவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் வரிகள் பாடலில் இடம் பெறவே, இன்று வரை விரும்பிக் கேட்கப்படும் பாடல்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

ஆக இப்படி சிறுவர்களை வைத்து வரும் பாடல்களில் தீதார் மற்றும் கைதி நம்பர் 911 தமிழ்ப் பாடல்களுக்கு வழி வகுத்து வெற்றியைத் தந்தது!

***

Leave a comment

Leave a comment