Date uploaded in London – – 13 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Quiz Serial Number- 118
1.துளசி விவாஹம் என்றால் என்ன ? எப்போது நடத்த வேண்டும்?
xxxx
2.ஏன் துளசி கல்யாணம் செய்கிறார்கள் ?
xxxx
3.துளசி விஷ்ணுவுக்குப் பிரியமானது; அதை சிவ பிரானுக்கும் சூட்டலாமா ?
xxxx
4.துளசி இலைகள்,கிருஷ்ணனைவிட சக்தி வாய்ந்தவை என்பதை விளக்கும் சம்பவம் எது?
xxxx
5.பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம், துளசி இலைகள் பிரசாதமாகக் கொடுப்பது ஏன் ?
xxxx
6.துளசி இலைகள் பற்றி ஆயுர்வேத நூல்களில் குறிப்புகள் உண்டா ?
xxxx
7. பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தத்தை உட்கொள்வது எப்படி?
xxxx
8.துளசி என்ற பெயர்களை பெண்களுக்கு வைப்பது ஏன் ?
xxxx
9.துளசியில் எத்தனை வகைகள் உள்ளன ?
xxxx
10. துளசிக்கு உள்ள வேறு பெயர்கள் என்ன ?
xxxx
விடைகள்
1.பிரபோதினி ஏகாதசி ( கார்த்திகை வளர்பிறை பதினோராம் நாள்) இருந்து கார்த்திகை பூர்ணிமா (கார்த்திகை முழு நிலவு) வரை , ஏதேனும் ஒரு நாளில் இந்துக்கள் துளசி கல்யாணத்தைக் கொண்டாடுகிறார்கள் . துளசியின் மற்றோரு பெயர் பிருந்தா. துளசியை மஹா லட்சுமியாக இந்துக்கள் வழிபடுகிறார்கள் . இதே போல சங்கு அல்லது சக்கரம் பதிந்த கண்டகி நதிக் கல்லை சாளக்கிராமம் என்ற பெயரில் விஷ்ணுவின் அம்சமாக இந்துக்கள் வழிபடுகிறார்கள் . சாளக்கிராமம் என்பது அம்மோனைட் எனப்படும் பாசில் FOSSIL கற்கள் ஆகும். அதாவது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நீரில் வாழ்ந்த பிராணிகளின் படிம அச்சு.
வழக்கமாக பதினோராம்/ஏகாதசி அல்லது பன்னிரண்டாம் நாள்/ துவாதசி அன்று கொண்டாடப்படுகின்றது .சுக்ல பக்ஷ த்வாதசிக்கு ப்ருந்தாவன த்வாதஸி என்று பெயர் .
துளசி கல்யாணத்தை இந்து சம்பிரதாயத்திலுள்ள எல்லா திருமணச் சடங்குகளையும் பின்பற்றி செய்கிறார்கள். மகாலெட்சுமி வடிவிலுள்ள துளசிச் செடியையும் சாளக்கிராம கல்லையும் மணமகள் , மணமகன் போல அலங்கரித்து விவாகத்தைச் செய்வார்கள் சாளக்கிராமம் இல்லாத இடங்களில் நெல்லிக்காய் மர கிளையை விஷ்ணுவாக பாவித்து திருமணம் செய்வார்கள் . இது வட இந்திய மாநிலங்களில் அதிகம் நடைபெறுகிறது துளசி செடி அருகில் விஷ்ணு படம் அல்லது விக்ரஹம் வைத்து பூஜிக்கலாம். நெல்லிக்காய் கிளையை ஒடித்து துளசி செடிக்கு பக்கத்தில் நட்டும் பூஜிக்கலாம். தம்பதிகளாகவும் பூஜிக்கலாம்.
( ஐப்பசி / கார்த்திகை மாதங்கள் பற்றிய ஒரு குழப்பத்தையும் அறிதல் வேண்டும். இந்துக்கள், ஒரு மாதத்தின் துவக்கத்தை இரண்டு முறைகளில் கணிக்கிறார்கள் . அமாவாசைதான் மாதத்தின் முதல் நாள் என்பது ஒரு முறை. சூரியன் குறிப்பிட்ட ராசியில் பிரவேசிக்கும் நாள்தான் மாதப்பிறப்பு என்பது இன்னுமொரு முறை )
xxxx
2.கல்யாணம்- திருமணம் என்பதை சம்ஸ்க்ருதத்தில் கன்யா தானம் என்பார்கள்; அதாவது ஒரு பெண்ணை தனமாகக் கொடுத்தல்; அது ஒரு புண்ணியம் சம்பாதிக்கும் செயல்; இரண்டாவது, எந்த வீட்டில் துளசி கல்யாணம் நடக்கிறதோ அந்த வீட்டில் மங்களகரமான செயல்கள் நடக்கும் ; அதாவது திருமணம் — நடக்கும். மேலும் துளசி அருகில் ஒருவர் இருந்தாலே அவர்களுக்கு ஆரோக்கியம் பெருகும் என்று சம்ஸ்க்ருத ஸ்லோககங்கள் சொல்கினறன. துளசி-விஷ்ணு கல்யாணம் முடிந்தவுடன் கல்யாண சீசன் ஆரம்பமாகிவிடும்.
துளசி கல்யாண வைபோகமே!
xxxx
3.சிவபுராணத்தில் அப்படித்தான் சொல்லியுள்ளார்கள்; சிவ பிரானுக்கும் உகந்தது துளசியும் வில்வமும் என்று சிவ புராணம் சொல்கிறது . விநாய சதுர்த்தியன்று கணபதியை பூஜிக்க உதவும் 21 தாவரங்கள் / பத்திரங்களில் துளசியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.— Śivapurāṇa 2.1.13:, Śivapurāṇa 2.1.14:
பிள்ளையார் பூஜைக்கான 21 பத்திரங்கள் (21 இலைகள் (பத்ரம்):
பிள்ளையார் சதுர்த்தி அன்று 21 இலைகளைப் போட்டு பூஜை செய்வது விசேஷம்
இதோ 21 இலைகள் (பத்ரம்):-
மாசீ பத்ரம், ப்ருஹதி பத்ரம், வில்வ பத்ரம், தூர்வாயுக்ம (அருகம்புல்) பத்ரம், துத்தூர பத்ரம், பதரீ பத்ரம், அபாமார்க பத்ரம், துளசி பத்ரம் சூத (மாவிலை) பத்ரம், கரவீர பத்ரம், விஷ்ணுகிராந்தி பத்ரம், தாடிமீ (மாதுளை) பத்ரம், தேவதாரு பத்ரம், மருவ பத்ரம், சிந்துவார பத்ரம், ஜாஜீ பத்ரம், கண்டகீ பத்ரம், சமீ (வன்னி) பத்ரம், அஸ்வபத்ரம், அர்ஜுன பத்ரம், அர்க (எருக்கு) பத்ரம்.
xxxxx
4.துளசி சத்யபாமா ருக்மிணி கதை
ருக்மணி, சத்யபாமா ஆகிய இருவரும் கிருஷ்ண பரமாத்மாவின் மனைவியர். லெட்சுமியின் மறு அவதாரம் ருக்மணி ஆவார். ஒரு நாள், கலக மன்னன் நாரதர், சத்யபாமாவைப் பார்க்க வந்தார். ஆகவே இனி வரும் பிறவிகளிலும் கிருஷ்ணன் தனக்கு கணவனாக வேண்டும் என்றும் அதற்கு வழி என்ன என்றும் கேட்டார்.
அவர் சொன்னார்: பிராமணர்களுக்கு தானம் கொடுத்தால் அது இனி வரும் ஜன்மங்களில் பன்மடங்காகக் கொடுத்தவருக்கே திரும்பிவரும் என்ற நம்பிகை உள்ளது. ஆகவே கிருஷ்ணனை எனக்கு தானம் கொடுத்துவிடு. நீ எத்தனை பிறவி எடுத்தாலும் அவர் உனக்கே கிடைத்து விடுவார்.
சத்யபாமா சொன்னாள்: அப்படியே ஆகட்டும், ஸ்வாமி! உங்களுக்கே கொடுத்துவிட்டேன்.
கிருஷ்ணரும் நாரதருடன் புறப்பட்டார். நாரதருக்கு எடுபிடி வேலை செய்யும் ஆளாக கிருஷ்ணன் இருந்தார்.
தேவலோகம், வைகுண்டம், கைலாசம், குபேரனின் அளகாபுரி, இந்திரனின் அமராவதி, பிரம்ம லோகம் முழுதும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. கண்ணன் மீது தீராக்காதல் கொண்ட ஏனைய பெண்களும் மனைவியரும், அவரை உடனே திருப்பித் தரவேண்டும் என்று நாரதரிடம் முறையிட்டனர். அவர்கள் அனைவரும் சத்யபாமாவிடம் சென்று அனல் பறக்கப் பேசினர். அப்பொழுதுதான் தெரிந்தது அவர் செய்தது தவறு என்று. உடனே அவரும் நாரதரிடம் ஐயா, என் கணவரை உடனே திருப்பி அனுப்பவும் என்று செய்தி அனுப்பினாள்.
நாரதர் சொன்னார்:- பிராமணர்களுக்குத் தானம் கொடுத்த எந்தப் பொருளையும் திரும்பி வாங்குவது தவறு. வேண்டுமானால் உங்களுக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. கிருஷ்ணனின் எடைக்குத் தக்க அளவு தங்கக் கட்டிகள் தரவேண்டு மென்றார்.
உடனே கிருஷ்ணனை தராசின் ஒரு தட்டில் உட்காரவைத்து, அங்குள்ள பெண்கள் அனைவரும் தங்களுடைய நகைகளை தராசின் அடுத்த தட்டில் வைத்தனர். இப்படியாக துலாபாரம் ஆரம்பமானது. கிருஷ்ணனின் எடைக்குப் பக்கத்தில்கூட வரவில்லை அவர்களுடைய நகைகளின் எடை! மேலும் மேலும் தங்க கட்டிகளைச் சேர்த்தும் பலனில்லை.
உடனே அவர்கள் எல்லோரும் ருக்மணிக்குச் செய்தி அனுப்பினர். அவள் விரைந்தோடி வந்து எல்லோர் நகைகளையும் எடுங்கள் என்று உத்தரவிட்டாள். தான் கொண்டுவந்த ஒரே ஒரு துளசி இலையை அந்தத் தராசுத் தட்டில் வைத்தார். கிருஷ்ணன் உட்கார்ந்த தட்டும் மிகவும் லேசாகி மேலே எழும்பியது. எல்லோரும் துளசியின் மகிமையை அறிந்தனர். நாரதரும் சிரித்துக் கொண்டே யாருக்கும் தெரியாமல் நழுவிவிட்டார்.
xxxx
5.துளசி என்பது மிகவும் சக்தி வாய்ந்த, எளிதில் கிடைக்கும் மூலிகை; வளர்ப்பதும் எளிது; செலவுமில்லை ; வீடுகளின் பின்புறத்தில் ஒரு மேடை எழுப்பி மாடம் கட்டி வளர்ப்பது தமிழர் பண்பாடு; அதைக் கோவிலாகக் கருதி கோலமிட்டு அலங்கரித்துக் குளித்த பின்னரே அதை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள்; கிருஷ்ணனாகவும் மஹாலெட்சுமியாகவும் கருதி சகல சம்பத்துக்களையும் வேண்டுவார்கள் (மாதவிலக்கு தீட்டு காலங்களில் பெண்கள் பக்கத்தில் கூட வரமாட்டார்கள் . இது கலந்த நீரை / தீர்த்தத்தை பெருமாள் கோவிலில் பிரசாதமாகத் தருவார்கள் ; துளசி இலையையும் கொடுப்பார்கள் . இதை வெறும் வயிற்றில் சிறிதளவு உட்கொள்வது கபம், இருமலைப் போக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும்; அந்தக் காலத்தில் கிழவன், கிழவிகள் நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்ததற்கு தினமும் துளசி ஜலத்தை அருந்தி வந்ததும் ஒரு காரணம் ஆகும்
xxxx
6.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சரக, சுஸ்ருத சம்ஹிதைகளில் துளசி பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
xxxx
7. பெருமாள் கோவிலில் வலது உள்ளங்ககைக்கு கீழாக இடது கையை வைத்துக்கொண்டு பய பக்தியுடன் தீர்த்தத்தை வாங்கி பெ ருமாள் சந்நிதியிலிருந்து மெதுவாகப் பின்புறமாக நகர்ந்து வந்து , உறிஞ்சாமல், அதாவது எச்சில் படாமல் வாயில் ஊற்றிக்கொள்ளவேண்டும். கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் தீர்த்தத்தால் தலையில் ப்ரோக்ஷித்துக் கொண்டு/ தெளித்துக் கொண்டு, பின்னர் கண்களில் ஒற்றிக்கொள்ளவேண்டும் . இது சம்பிரதாயம்; அந்தக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் மூன்று முறை கொடுத்தார்கள் ; இப்பொழுது பக்தர் கூட்டம் பெருகிவிட்டதால் அது நடைமுறையில் இல்லை. மேல்துண்டு அணிந்திருந்தால் அதையும் கைகளுக்குக் கீழே வைத்தல் மரபு; புனித நீர் கீழே விழாமல் தடுக்க இந்த ஏற்பாடு.
xxxx
8.பதினாறு புனிதப் பெண்களின் பெயர்களை திவ்ய நாரீ (DIVINE WOMEN) என்பார்கள்; அதில் ஒன்று துளசி; ஆகையால் பெண்களுக்கு இந்தப் பெயரைச் சூட்டுவது இந்துக்களின் வழக்கம் ( என் பாட்டியின் பெயர் துளஸி ; அவர் பெயரில் இப்போதும் மாதம்தோறும் நீர்க்கடன் / தர்ப்பணம் செய்கிறேன்.) 16 தெய்வீகப் பெண்கள் :(சிவ புராணம்the Śivapurāṇa 2.3.50) –சரஸ்வதி, லெட்சுமி, சாவித்ரி, ஜானவி, அதிதி, சசி, லோபாமுத்துரா, அருந்ததி, அஹல்யா, துளசி, சுவாஹா, ரோகிணி, வசுந்தரா, சதரூபா, ஸம்க்ஞா, ரதி
xxxx
9. கருந்துளசி, வெண்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி,சிவ துளசி, பெருந்துளசி, சிறு துளசி, கல் துளசி, நல் துளசி, நாய் துளசி, நில துளசி, முள்துளசி, கற்பூர துளசி என நிறைய வகைகள் உள்ளன. எல்லோரும் வெண் துளசியை பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.
xxxx
10.நிகண்டு சொல்லும் வேறு பெயர்கள் — பிருந்தை என்பது மரங்கள் நெருங்கி அடர்ந்திருப்பதை குறிக்கும். . துளசி ஓரிடத்தில் நெருங்கி அடர்ந்திருப்பதால் பிருந்தை என கூறுகிறார்கள். மேலும்
Rājanighaṇṭu (verse 10.148-149), சுரஸா , சுரபி, சுபகா, சுகந்தா, சுரதுந்துபி, சுரேஜியா, விஷ்ணுவல்லபா, வைஷ்ணவி, ஹரிப்ரியா, ப்ரேதராக்ஷஸி, அபேத ராக்ஷசி, அம்ரிதா, தேவ துந்துபி, புண்யா, பவித்ரா பாவனி, பூத பத்ரி, பகு பத்ரீ , பூத கேசி, தீவ்ரா, பூதக்கனி, கரஹ்னா, கரதிலாகா கதிநிஜாரா, காயஸ்தா, பாரவி, மஞ்சரி, கெளரி, திட சமிக்ஞரி
Surasā, Surabhi, Subhagā, Sugandhā, Suradundubhi, Surejyā, Viṣṇuvallabhā, Vaiṣṇavī, Haripriyā, Pretarākṣasī, Apetarākṣasī, Amṛtā, Devadundhubhi, Puṇyā, Pavitrā, Pāvanī, Pūtapattrī, Bahupattrī, Bhūtakeśī, Tīvrā, Bhūtaghnī, Garaghna, Kaṭhillaka, Kaṭhiñjara, Kāyasthā, Bhāravi, Tridaśamañjarī, Mañjarī and Gaurī.
தமிழ்நாட்டில் பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா விஸ்வபாவநி, புஷ்பஸாரா, நந்தினி, துளசி, க்ருஷ்ண ஜீவனீ ,பிருந்தா
தாவரவியலில்
Tulasī (तुलसी)Ocimum tenuiflorum (holy basil), Ocimum sanctum ,
Ocimum americanum, Ocimum basilicum, Ocimum gratissimum.
xxxx
துளசியின் மஹிமை பற்றிக் கூறும் சம்ஸ்க்ருத நூல்கள் எவை ?
தேவி பாகவதம், பத்ம புராணம், துளசி பற்றிய சம்ஸ்க்ருத துதிகள்.
—subham—-
Tags- துளசி, Quiz, துளசி சத்யபாமா ருக்மிணி கதை, துளசி கல்யாணம், விவாகம், 16 தெய்வீகப் பெண்கள் :(சிவ புராணம்)