Date uploaded in London – – 16 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
pictures are from wikipedia; thanks
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ற பகுதியில் 170 வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………
PART 18
xxxxx
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—18
xxxxx
அரை= grind
171. சிரசு நீர் இறங்க
கடம்பு விதையை பாலில் அரைத்து கலக்கி உட்கொண்டு வந்தால் இருமல், இளைப்பு எலிக்கடி விஷம், சிரஸிலுள்ள நீர் தோஷம் வாதம் இவை தீரும்.
XXXX
172.வெட்டைக்கு
கல்லத்தி விதையை பசும்பாலில் அரைத்துக் கலக்கி இருபோதும் உட்கொண்டு வந்தால் இந்த்ரியத்திலிருக்கும் தோஷம் நிவர்த்தியாகும்.மேகம், வெட்டை இவை நீங்கும்.
XXXX
173. அண்ட வாதத்திற்கு
கழச்சி வித்திலுள்ள பருப்பை ஈடுத்து பசும்பாலில் அரைத்துக் கலக்கி காய்ச்சி அருந்தி வந்தால் அண்ட வாதம் பக்க சூலை இவை தீரும்
XXXX
174.தாக சுரத்திற்கு
கருவாகை மூலத்தை பாலில் அரைத்துக் கலக்கி இருபோதும் உட்கொண்டுவந்தால் பெரு விஷம் சிறு விஷம் அனல் ருணம் தாகசுரம் நாக்கு …ச்சரம் இவை தீரும்.
xxxx
175.இருமல் சாந்தி
கடுக்காய் பச்சையாகக் கொண்டுவந்து பாலில் அரைத்து அருந்தினால் இருமல் புகையிருமல் ஈளை சீதக் கடுப்பு இவை தீரும்.
XXXX
176. உடம்பு தணிய
கசகசாவைப் பாலில் அரைத்துக் கலக்கி சற்று அனலிலிட்டுக் காய்ச்சி உட்கொண்டுவந்தாலும் காய்ச்சாமல் அருந்தினாலும் மேகவெட்டை சூடு இவை நீங்கும்.
XXXX
177. நாவறட்சி நீங்க
கடுக்காய்ப் பூ திரு கடுகு சிறுதேக்கு தாணிக்காய் கோஷ்டம் இந்துப்பு இவை சமன் கொண்டு வெதுப்பிப் பொடித்து திருகடிப்பிரமாணம் தேனிலாவது முலைப் பாலிலாவது உட்கொண்டுவந்தால் நாவறட்சி சுரம் தீரும் .
XXXX
178. மூல முளை நீங்க
கல்மதத்தைப் பசு வெண்ணெயிலரைத்து விரலில் தொட்டு பவன வாயிற் சுற்றித் தடவ மூல முளை நீராய்க் கரைந்துவிடும் .
XXXX
179. கண் வலி நீங்க
காரியுப்பைப் பொடியாய் நசுக்கி துணியில் முடிந்து நீராகாரத்தண்ணீரில் தோய்த்து இரண்டு நாழிகைக்கொரு தபா கண்ணில் பிழிய கண்வலி உடனே நீங்கும் .
XXXX
180. வண்டு கடி நீங்க
கருங் கம்பளி சுட்ட சாம்பலையும் சமையல்கட்டு மேலே ஒட்டியிருக்கும் புகையூரலும் வசம்பு கருகின சாம்பலும் வேப்பெண்ணெயில் குழைத்து வண்டு கடி மேல் தடவ நீங்கும்.
XXXX
181.கண்நோய் தீர
கற்கண்டைப் பொடித்து துணியில் முடிந்து புளிப்பு மாதுளம்பழச் சாற்றில் தோய்த்துக் கண்ணில் பிழிய கண்வலி நீங்கும்
–சுபம்–
tags–முனிசாமி முதலியார் ,மூலிகை அதிசயங்கள்18 ,