Date uploaded in London – – 18 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
சங்க இலக்கியத்துக்கும் காளிதாசனுக்கும் உள்ள ஒற்றுமைகள்
1.சந்தன மரத்தில் தொங்கும் பாம்பு
2.முலையில் சந்தன ஓவியம் எழுதல்
3.மன்னர்கள் மார்பில் சந்தனம்
4.மலய மலையில் சந்தனம்
5.சந்தன மரத்தை உவமையாகப் பயன்படுத்தல்
6.சந்தன மரம் உயர்ந்த குணத்திற்கு எடுத்துக் காட்டு; அரைக்கினும் தன மணம் குன்றாது
7.செஞ் சந்தனம்
8. சந்தன மரத்தில் கொடிகள்
XXXX
முலையில் ஓவியம்
காளிதாசனில் ஆண்கள் சந்தனம் இட்டுக்கொள்வதையும் பெண்களின் முலைகள் மீது ஆண்கள் சந்தனம் பூசி ஓவியம் வரைவதையும் காண்கிறோம். இமயம் முதல் குமரி வரையுள்ள இந்த வழக்கம் பற்றி , தமிழ் சம்ஸ்க்ருத நூல்களைத் தவிர வேறு எங்கும் காண முடியாது
முலைகளில் தொய்யில் / படம் எழுதுவது தொய்யில் எழுதல் அல்லது வரைதல் எனப்படும். ஆண்கள் மார்பில், சந்தனத்தை வெறுமனே பூசிக்கொள்ளுவர் . கலித்தொகை நூலில் இது பற்றி நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன. இதோ சில இடங்கள் :
கலித்தொகை – 18, 54, 64, 142, 143, 144
குறுந்தொகை 276
நற்றிணை- 225
அகநானூறு- 389
மதுரைக் காஞ்சி – வரி 416
xxxx
பாண்டிய மன்னனின் சந்தன மாலை, முத்துமாலை – அகம் 13
ஆண் மார்பில் சந்தனம் – அகம் 26, 36 ,48, 236, 224, 249, 282, 354
பரத்தை முலையில் சந்தனம் –அகம் 186
குடகு மலை சந்தனம் – 340
சந்தன மரம் -388
Meaning
தொய்யில், பெயர்ச்சொல். மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு; மகளிர் தனங்களில் சந்தனக் குழம்பால் எழுதும் கோலம் .Figures drawn upon the breast of women with sandal solution.
குமார சம்பவம் 3-33
ரகு வம்சம் 3-55, 9-29, 16-67
स निर्विश्य यथाकामं तटेष्वालीनचन्दनौ|
स्तनाविव दिशस्तस्याः शैलौ मलयदर्दुरौ॥ ४-५१ 4-51
असह्यविक्रमः सह्यं दूरान्मुक्तमुदन्वता|
नितम्बमिव मेदिन्याः स्रस्तांशुकमलङ्घयत्॥ ४-५२ 4-52
மலய மலை தர்துர மலை என்ற இரண்டு மலைகளும் அவைகளிலுள்ள சந்தன மரங்களால் சந்தனம் தீட்டிய முலைகள் போல இருக்கின்றன ரகு அவைகளை அனுபவித்தான் .தடுக்க முடியாத வீரச் செயல்களை உடைய அவன் சஹ்யாத்ரி என்னும் மேற்குத்தொடர்ச்சி மலையை வென்றவன்; அதன் சிகரத்தை அவன் மட்டம் தட்டியது அதன் மேலாடையை அகற்றியது போல இருத்தது ; அந்த மேலாடைதான் அலைவீசும் கடல் !
ரகு தென்னாட்டையும் வெற்றி கொண்டான் என்பதை மலைகளையும் கடலையும் பயன்படுத்தி வருணிக்கிறான் காளிதாசன் ; அவனுடைய பூகோள அறிவு அஸ்ஸாம் முதல் ஈரான் வரை இருப்பதை ரகுவம்சத்தில் காணலாம் . மேற்குப்பகுதியை வருணிக்கையில் சந்தன மரங்களை மறக்கவில்லை. தமிழில் 10 அல்லது 15 பாடல்களில் காணப்படும் முலையில் தொய்யில் எழுதல் காளிதாசன் பாடல்களினுள் இருப்பதை இங்கே காணலாம் 4-51/ 52
XXXX
முலையில் சந்தனம்
அகநானூறு–389
அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும், 5
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
மனைவயின் இருப்பவர் மன்னே துனைதந்து, 10
………………………………………..
தோழி, இதனைக் கேள். உனக்குத் தெரியாது போலும். அதனால்தான் அவர் பிரிவைப் பொறுத்துக்கொண்டு இருக்குமாறு வற்புறுத்துகிறாய்.
நெளி நெளியான என் கூந்தலுக்குச் சந்தனப் புகை ஊட்டி அவர் கோதிவிட்டார். மலரும் பூக்களைச் சூட்டிவிட்டார். இனிய மணம் கமழும்படி என் நெற்றியில் திலகம் வைத்தார். பல்வேறு மலர்களை அல்லி மலருடன் கிள்ளிக் கொண்டுவந்து என் முலைமேல் அப்பிவிட்டார். என் தோளில் தொய்யில் எழுதினார். கால் பரட்டில் செம்பஞ்சுக் குழம்பு படிந்திருக்குமாறு ஊட்டிவிட்டார். இப்படியெல்லாம் என்னை ஒப்பனை செய்து அழகு பார்த்து மகிழ்ந்தார்.
அத்துடன் உன்னையும் பாராட்டினார்.
பல்வகைப் பூக்கள் பரப்பிய மெத்தையில் பகல் காலத்தில் கூட என்னோடு இருந்தார்.
இப்படி இருந்தவர்தான் இப்போது என்னை விட்டுவிட்டு விரைந்து சென்றுவிட்டார்.அகநானூறு 389
xxxx
நற்றிணை Natrinai 225
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை 5
இரந்தோர் உளர்கொல் தோழி! திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?
முருகக் கடவுள் போன்ற வலிமையோடு தன் சினத்தால் செருக்குற்று போரிட்ட யானையின் வெள்ளைக் கொம்பு கரை படிந்து சிவப்பாக ஏந்திய (மேலே வளைந்த) நிலையில் காணப்படுவது போலவும்,
தன் கூரிய முனையுடன் காணப்படும் வாழைப்பூ மொட்டு போலவும்,
மென்மை இயல்புடைய மகளிரின் ஓதிக் கொண்டை போலவும்,
தோன்றும் முலை, திருந்திய அணிகலனும், எழுதிய தொய்யிலும் கொண்ட முலை ,
உடையவர் யாரேனும் நாடனை தன் பருவரல் திணவு தீரும்படி முயங்கும்படி கேட்டுகொண்டவர் உண்டோ,
நற்றிணை 225
Xxxxx
குறுந்தொகை 276 Kurunthogai 276
இந்தக் குறுமகள் பருத்த தோள் கொண்டவள்
வண்டல் மண்ணில் பாவை செய்து கோரைப் புல்லில் கிடத்தி விளையாடுகிறாள்
இவள் முலையில் தொய்யில் எழுதி அழகுபடுத்தியுள்ளனர்
இது ஆண்களைக் கவர்கிறது
இவளைக் கவர்ச்சி உள்ளவளாக மாற்றிய குற்றத்தை அரசவையில் முறையிட்டால் இந்த ஊர் நிலைமை என்ன ஆகும்
பணைத் தோட் குறுமகள் பாவை தையும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்?
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானே இவ் அழுங்கல் ஊரே!– குறுந்தொகை 276
கோழிக் கொற்றன் பாடல்
***********
चन्दनेनाङ्गरागन् च मृगनाभिसुगन्धिना।
समापय्य ततश्चक्रुः पत्रन् विन्यस्तरोचनम्॥ १७-२४
chandanenA~NgarAgan cha mR^iganAbhisugandhinA |
samApayya tatashchakruH patran vinyastarochanam|| 17-24
கஸ்தூரி கலந்த சந்தனத்தை அவன் உடலில் பூசினர் பின்னர் கோரோசனம் கொண்டு மஞ்சள் வர்ணத்தில் இலை போன்ற கோடுகளால் உடலை அலங்கரித்தனர் ; பட்டாபிஷேக காலத்தில் பெண்களைப்போல ஆண்கள் உடலிலும் தொய்யில் எழுதப்பட்டது போலும் !
ரகு வம்சம் [17-24]
*****
Malaya Mountain
ताम्बूलवल्लीपरिणद्धपूगास्वेलालतालिङ्गितचन्दनासु|
तमालपत्रास्तरणासु रन्तुम् प्रसीद शश्वन्मलयस्थलीषु॥ ६-६४
tAmbUlavallIpariNaddhapUgAsvelAlatAli~NgitacandanAsu |
tamAlapatrAstaraNAsu rantum prasIda shashvanmalayasthalIShu || 6-64
வெற்றிலைக்கொடிகள் தழுவிய பாக்கு மரங்களுடையனவும் ஏலக்கொடிகள் அணைக்கும் சந்தன மரங்களுடையனவும் தமால இலைகளை உடைய விரிப்புகளுடையனவும் ஆன இயற்கை அழகுமிக்க மலய மலை ப் பிரதேசத்தில் எப்போதும் ஆனந்தத்துடன் இருப்பாய்.[6-64]
காளிதாசன் தென்னாட்டிற்கு நேரில் வராவிடில் இவ்வளவு துல்லியமாக வருணிக்க முடியாது.
காளிதாசன் லவங்கக் கொடி படர்ந்த சந்தன மரம் பற்றிப் பாடுகிறான். மிளகுக்கு கொடி படர்ந்த சந்தன மரம் – அகம் 2
- கொழுத்த இலையை உடைய வாழைமரப் பெருங்குலையில் நன்றாக முதிர்ந்த வாழைப்பழம் தானே உதிரும்.
- தெவிட்டி உண்ணமுடியாமல் போன பலாச்சுளையும் கிடக்கும்.
- இரண்டும் பாறையில் இருக்கும் ஆழமான சுனைநீரில் ஊறும். ‘தேறல்’ என்னும் கள்ளாக விளையும். அங்கு மேயும் கடுவன் என்னும் ஆண்குரங்கு அறியாமல் அதனை உண்ணும். மயக்கம் ஏறும். மிளகுக்கொடி படர்ந்திருக்கும் சந்தன மரத்தில் ஏற முடியாமல் தள்ளாடும். இது எண்ணிக்கூடப் பார்க்காத நிலையில் அதற்குக் கிடைத்த குறியா இன்பம். இத்தகைய இன்பத்தைப் பிற விலங்கினங்களும் பெறும் நாட்டை உடையவன் தலைவன்.
- குறியா இன்பத்தை விலங்கினங்களும் பெறும் நாட்டை உடைய தலைவன் குறித்த இன்பத்தை (நாடிவரும் இன்பத்தை)ப் பெறுவது கடினமா? இல்லையே.
[1]
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது 5
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
***************
காளிதாசனுடைய தாவரவியல் அறிவை சாகுந்தல நாடக த்தின் ஏழாவது அங்கத்தில் காணலாம்.
சகுந்தலாவின் வளர்ப்புத் தந்தையான கண்வ மகரிஷி, மன்னன் துஷ்யந்தன் அரண்மனைக்கு வழியனுப்பும் காட்சி அது. சகுந்தலை தன தோழிகளையும் கூட அனுப்ப வேண்டும் என்று வேண்டுகிறாள் . அதற்கு பதில் அலைக்கும் கண்வ மகரிஷி உன்னைப்போல அவர்களையும் ஒரு ஆடவனுக்கு ஒரு நாள் மனம் புரிவிக்க வேண்டும்; ஆகையால் கெளதமி உன்னுடன் வருவாள் என்கிறார் . அப்போது சகுந்தலை சொல்லும் பதில்
தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு
காட்டிலுள்ள என்னுடைய தந்தையின் மடியிருந்து என்னை இப்படி அரண்மனைக்கு அனுப்புவது மலய மலையில் வளரும் சந்தன மரத்தை வேருடன் பிடுங்கி வேற்றிடத்தில் நடுவயது போல உள்ளதே ! அந்நிய மண்ணில் நான் எப்படி வாழ முடியும் ? ( அழுதுகொண்டே)
இந்த வாசகம் அந்நிய மண்ணில் என்பது , சந்தன மரமும் மலய மலையைத்தவிர வேறு எங்கும் வளராது என்ற தாவரவியல் அறிவைக் காட்டுகிறது . ஒரு விமானி பயிற்சி பெறுகையில் அவன் முதல்தடவை விமானத்தை இறக்குகையில் பூமியே அவன் மீது மொத வருவதுபோலத் தோன்றும். இந்தக் காட்சியையும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காளிதாசன் வர்ணிப்பதை எடுத்துக் காட்டியுள்ளேன். அவன் சகல கலா வல்ல வன் என்பதறகு வேறு சான்றே தேவை இல்லை
****
இந்திரன் உடலில் சந்தனம்
ततः प्रकोष्ठे हरिचन्दनाङ्किते प्रमथ्यमानार्णवधीरनादिनीम्|
रघुः शशाङ्कार्धमुखेन पत्रिणा शरासनज्यामलुनाद्बिडौजसः॥ ३-५९
tataḥ prakoṣṭhe haricandanāṅkite pramathyamānārṇavadhīranādinīm|
raghuḥ śaśāṅkārdhamukhena patriṇā śarāsanajyāmalunādbiḍaujasaḥ || ரகு வம்சம் 3-59
பிறை வடிவிலுள்ள அம்பினால் இந்திர வில்லின் நாணை ரகு மன்னன் அறுத்தான்; தேவ லோக சந்தனம் பூசப்பட்ட இந்திரன் கையில் இருந்த வில் , அறுபட்டபோது பாற் கடலை அமிர் தத்துக்காக கடைந்தபோது எழுப்பிய ஓசையை உண்டாக்கியது —ரகு வம்சம் 3-59
செஞ்சந்தனம்
மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன்
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்
நடுநாள் வந்து நம்மனைப் பெயரும்
மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணை
மன்ற மரையா இரிய ஏறட்டுச்
செங்கண் இரும்புலி குழுமும் அதனால்
மறைத்தற் காலையோ அன்றே
திறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே.( குறுந்தொகை – பாடல் 321
Red Sandal wood paste and tigers roaming forest route are mentioned. Kalidasa also mentions RED sandalwood.
****
புறநானூறு 380
தென்பவ் வத்து முத்துப் பூண்டு
வட குன்றத்துச் சாந்தம் உரீ இ
. . . . . . . ங்கடல் தானை
இன்னிசையை விறல்வென்றித்
தென்னவர் வயமறவன் 5
மிசைப்பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து
நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய
தேறுபெ. . . . . . . . த்துந்து
தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்
வல்வேல் சாத்தன் நல்லிசை
. . . சிலைத்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
அன்னன் ஆகன் மாறே இந்நிலம்
இலம்படு காலை ஆயினும்
புலம்பல் போயின்று பூத்தஎன் கடும்பே
உரை: தென் கடலிலிருந்து எடுத்த முத்துக்களாலான மாலையைச் சூடிய, வடமலையிலிலிருந்து பெற்ற சந்தனத்தைப் பூசிய ……. கடல் போன்ற படையும்……………………………………
இங்கு வட மலை என்பதை தமிழ் நாட்டிற்கு வடக்கேயுள்ள என்றும் கொள்ளலாம். கிழக்குத் தொடர்ச்சி மலையில் வளரும் செஞ் சந்தன வகையாகவும் இருக்கலாம் (Red Sandalwood– Pterocarpus santalinus commonly known as Red Sandalwood, is a native and endemic to India and can only be found in the southern parts of the Eastern Ghats.)
****
அகநானூறு 340
. வடநாட்டு மக்கள் கொண்டுவந்து தந்த சந்தனக் கல்லில், குடநாட்டில் விளைந்த சந்தனக் கட்டையைத் தேய்த்துச் சந்தனம் பூசிவிடுவோம்.
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து,
…………………………………………………………………
வடவர் தந்த வான் கேழ் வட்டம் Line 16
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர்
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், Line 20
………………………………………………………………………..
எங்களிடம் மீனை விற்றுக் கொண்டுவந்த நெல் இருக்கிறது. தயிர் இருக்கிறது. தயிர்ச் சோறு உண்ணத் தருவோம். வடநாட்டு மக்கள் கொண்டுவந்து தந்த சந்தனக் கல்லில், குடநாட்டில் விளைந்த சந்தனக் கட்டையைத் தேய்த்துச் சந்தனம் பூசிவிடுவோம்.
Here the stone for grinding from north and the sandalwood from the western hills (ccorg= Kudagu of Karnataka) are mentioned.
xxxx
REFERENCES
Kurunthokai 321- anonymous குறுந்தொகை – பாடல் 321
Purananuru 380- by Karuvur kathappillai புறநானூறு 380
Akananuru – 340 by Nakkirar and many more அகநானூறு 340
In Kalidasa we find more references than Tamil works
Raghuvamsam- 11-64, 12-32, 17-24; Sakuntalam – 7-18;
****
Other references to sandal wood–
Kumarasambhavam – 8-25
Raghuvamsam – 4-48, 51; 6-64; 8-71; 10-42, 164; 3-59 red sandal wood
Sakuntalam – 4-18; 7-18
Vikramorvaseeyam 1-7
—subham—
Tags- ரகு வம்சம், சங்க இலக்கியம், காளிதாசன், பாம்பு , முலையில் சந்தனம் , செஞ் சந்தனம்