WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.103
Date uploaded in London – — 18 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரு வரி சுபாஷிதங்கள்
சர்வ: சர்வம் ந ஜானாதி !
ச.நாகராஜன்
அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ள சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் மேலும் சில இதோ:
1. ஸ்வ கார்யமத்ய கர்த்தவ்யம் |
நாளைய வேலையை ஒருவன் இன்றே செய்ய வேண்டும்.
2. சம்வ்ருதான்யேவ ஷோபதே ஷரீராணி குலாநி ச |
உடலையும், நமது குலத்தையும் பற்றியும் மறைத்து வைத்திருந்தால் அவை சோபிக்கும்.
3. சம்சர்கஜா தோஷகுணா பவந்தி |
ஒருவனின் நல்லதும் கெட்டதும் (தோஷமும் குணமும்) மற்றவர்களுடன் சேரும் போது சேர்கிறது.
4. சக்ருதபி த்ருஷ்ட்வா புருஷம் விபுதா ஜானந்தி சாரதாம் தஸ்ய |
ஒரு பார்வையினாலேயே புத்திசாலியானவன் அடுத்தவனை எடை போட்டு விடுவான்.
5. சதாம் ஹி சந்தேஹபதேஷு வஸ்துஷு ப்ரமாணமந்த: கரணப்ரவ்ருத்தம் |
சந்தேகம் எழும் போது சத்துக்களுக்கு (மிகவும் நல்லவர்களுக்கு) அவர்கள் உள்ளத்தில் ஏற்படும் எதிர்வினையே வழிகாட்டும்.
6. சதி குட்யே சித்ரம் |
ஒரு சித்திரம் வரைய சுவர் தேவை. (சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பது தமிழ்ப் பழமொழி)
7. சத்யம் கண்டஸ்ய பூஷணம் |
சத்யம் பேசுவது கழுத்துக்கு ஆபரணம்.
8. சந்திம் க்ருத்வாது ஹந்தவ்ய: சப்ராப்தேவசரே புனK
ஒரு உடன்படிக்கையை (சமரச ஏற்பாடு செய்து கொண்ட பின்னர் (சமயம் பார்த்துப்) பின்னால் எதிரியை ஒழித்து விட வேண்டும்.
9. ச பிதா யஸ்து போஷக: |
போஷித்து வளர்ப்பவன் தந்தையே தான்.
10. ச பந்துர்யோ விபன்னாநாமாபத்துத்தரணே க்ஷம: |
ஆபத்துக் காலத்தில் காப்பவனே பந்து ஆவான்.
11. சமானஷீலவ்யஸ்னேஷு சக்யம் |
நட்பு என்பது ஒரே மாதிரி பழக்கவழக்கங்களும் தொழிலும் கொண்டவர்களிடையே தான் இருக்கும்.
12. சமானே ஷோபதே ப்ரீதி: |
ஒருவரை பாராட்டி அன்பு காட்டுதல் சமமானவர்களிடையே தான் சரியாக இருக்கும்.
13. சம்பத்தௌ ச விபத்தௌ ச மஹதாமேகரூபதா |
செல்வம் கொழிக்கும் காலத்திலும் ஆபத்துக் காலத்திலும் பெரியோர் ஒரே மாதிரியாகத் தான் இருப்பார்கள்.
14. சம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே |
நன்கு நிரூபிக்கப்பட்ட அவமானச் செய்கை ஒருவனுக்கு மரணத்தை விட அதிக வேதனையைத் தரும்.
15. சர்வ: சர்வம் ந ஜானாதி |
எல்லோருக்கும் எல்லாம் தெரியாது.
16. சர்வ: ஸ்வார்த்தம் சமீஹதே |
எல்லோரும் தனது சொந்த லாபத்தையே பார்க்கின்றனர்.
17. சர்வநாஷே சமுத்பன்னே அர்த்தம் த்யஜதி பண்டித: |
சர்வநாசமும் ஒருவனை எதிர் கொள்ளும் போது பண்டிதனானவன் பாதி போனால் போகட்டும் என்று முடிவெடுப்பான்.
18. சாஹஸே ஶ்ரீ: ப்ரதிவஸதி |
தைரியமான (சாஹஸ) செயல்களிலேயே ஶ்ரீ (மேன்மையும் செல்வமும்) உறைந்துள்ளது.
19. சித்தமன்னம் பரித்யஜ்ய பிக்ஷாமடதி துர்மதி: |
முட்டாளானவன் ஏற்கனவே இருக்கின்ற அன்னத்தை விட்டு விட்டு பிச்சை எடுக்கச் செல்வான்.
20. சுகுலே யோஜயேத் கன்யாம் |
நல்ல குலமுடைய குடும்பத்திற்கே ஒரு பெண்ணை (மணமுடித்து) அனுப்ப வேண்டும்.
21. சுகார்தின: குதோ வித்யா குதோ வித்யார்தின: சுகம் |
இன்பத்தை விரும்புகின்றவர்களுக்கு அறிவு எப்படி வரும்? அறிவை விரும்புகின்ற ஒருவருக்கு இன்பம் எப்படி வரும்?
22. சுசிந்திதம் சௌஷதமாதுராணாம் ந நாமமாத்ரேண கரோத்யரோகம் |
நன்றாகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரு மருந்து அதன் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே வியாதியைக் குணப்படுத்தி விடாது.
23. ஹடம் ந குர்யாத்துராபேர்தே |
மூர்க்கத்தனமான பிடிவாதம் கொண்ட ஒருவனை கஷ்டமான பணியைச் சாதிக்க ஒருவன் ஈடுபடுத்தக் கூடாது.
24. ஹதா ரூபவதீ வந்த்யா |
மிகுந்த ரூபவதியாக (அழகியாக) ஒருத்தி இருந்தாலும் அவள் மலடி என்றால் பயனற்றவளே ஆவாள்.
25. ஹதோ யக்ஞஸ்த்கதக்ஷிண: |
தக்ஷிணை கொடுக்காமல் செய்யப்படும் ஒரு யாகம் பயனைத் தராது.
***