கோதி பார: சமர்தானாம்? (Post No.13,106)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.106

Date uploaded in London – — 19 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஒரு வரி சுபாஷிதங்கள் 

கோதி பார: சமர்தானாம்?

 ச.நாகராஜன்

அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ள சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் மேலும் சில இதோ:

 1.      ஹஸன்னபி ந்ருபோ ஹந்தி மான்யன்னபி துர்ஜன: |

அவன் சிரித்தாலும் கூட அரசன் அவனைக் கொன்று விடுவான். ஒரு ரௌடி கூட நமக்கு மரியாதை காட்டிக் கொண்டே அதே மாதிரி செய்து விடுவான்.

2.      ஹாஸ்யாத்ருதே கிமன்யத்ஸ்யாததிலௌல்யவதாம் பலம் |

அலைபாயும் மனமுள்ளவனுக்கு விளைவும் விசித்திரமாகத்தான் இருக்கும்.

3.      ஹிதம் மனோஹாரி ச துர்லபம் வச: |

மகிழ்ச்சியை அளித்து ஒருவரைக் கவரக் கூடிய வார்த்தைகள் துர்லபம் தான்.

4.      ஹேலா ச்யாத்கார்யநாஷாய புத்திநாஷாய நிர்தனம் |

விளையாட்டு குறிக்கோளை நாசம் செய்யும். வறுமையானது புத்தியை நாசம் செய்யும்.

5.      ஹ்ரோகோ குண: கலு நிஹந்தி சமஸ்ததோஷான் |

ஒரு நல்ல குணமானது அனைத்து குற்றங்களையும் நீக்கி விடும்.

6.      ஏகஸ்சார்தான்ன சிந்தயேத் |

செல்வத்தைப் பற்றி ஒருவன் சிந்திக்கக்கூடாது.

7.      ஏகா க்ரியா த்வயர்தகாரி ப்ரசித்தா |

ஒரே ஒரு செயலானது இரண்டு விஷயங்களை நடத்தி விடும்.

8.      ஏததேவ ஹி பாண்டித்யம் யதாயான்னாதிகோ வ்யய: |

வருவாய்க்கு அதிகமாகச் செலவழிக்கக் கூடாது என்பது (சாதாரண) உலகியல் அறிவாகும்.

9.      கன்யானாம் மஹத் துக்கம் திகஹோ மஹதாமபி |

பெரிய மனிதர்கள் கூட கன்னிப் பெண்களை பெரும் சுமையாகவே கருதுகிறார்கள்.

10. கரதலகதமபி நஷ்யதி யஸ்ய ஹி பவிதவ்யதா நாஸ்தி |

ஒருவனுக்கு நல்ல விதி இல்லையென்றால் கையில் இருப்பது கூட நழுவி விடும்.

11. கர்ம சமஸ்தம் குரு சோத்சாஹம் |

உற்சாகத்துடன் ஒருவன்  வேலை முழுவதையும் செய்ய வேண்டும்.

12. காதரா ஏவ ஜல்பந்தி யத்பாவ்யம் தத்பவிஷ்யதி |

நடப்பது என்னவானாலும் நடக்கட்டும் என்று பலஹீனனே கூறுவான்.

13. காமம் வ்யசனவ்ருக்ஷஸ்ய மூலம் துர்ஜனசங்கதி: |

துன்பம் என்ற மரத்தின் அடியானது நிச்சயமாக துர்ஜனங்களோடு சகவாசம் கொள்வதேயாம்.

14.  கார்யகாலே யதா சக்தி குர்யான்னது விசாரயேத் |

சோதனைக்காலம் வரும் போது ஒருவன் அதிகம் சிந்திக்காமல் தனது வலிமை எவ்வளவோ அவ்வளவைக் கொண்டு செயல்பட வேண்டும்.

15. கிஞ்சித்காலோபபோக்யாநி யௌவனானி தனானி ச |

இளமையும் செல்வமும் எல்லைக்குட்பட்ட காலத்தில் மட்டுமே அனுபவிக்க முடியும்.

16. கிம் தூரம் வ்யவசாயினாம் |

தொழில் முனைப்புள்ளவனுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல.

17.  கிமப்யாஸே ஹி துஷ்கரம் |

ஒருவன் மறுபடியும் ஒரு செயலைச் செய்ய விழைந்து விட்டான் எனில் எதுவுமே முடியாதது கிடையாது.

18. குபுத்ரோ ஜாயேத் க்வசிதபி குமாதா ந பவதி |

ஒரு கெட்ட பிள்ளையைப் பெறலாம் ஆனால் ஒரு கெட்ட தாயாரை பெற்று விடக் கூடாது.

19. க்ருதந்தே நாஸ்தி நிஷ்க்ருதி: |

நன்றி கெட்டவனுக்கு விடுதலையே கிடையாது.

20. க்ருஷே கஸ்யாஸ்தி சௌஹ்ருதம் |

பலமற்றவனுடன் எந்த ஒருவன் தான் நட்பு கொள்ள முடியும்?

21. கைரஜீர்ணபயாத் ப்ராத போஜனம் பரிஹீயதே |

ஓ! சகோதரா! ஜீரணமாகாது என்ற பயத்தினால் எவன் தான் சாப்பாட்டை தவிர்ப்பான்?

22. கோதிபார: சமர்தானாம் |

சமர்த்தனுக்கு எது தான் அவனது திறனைத் தாண்டி இருக்க முடியும்?

23. கோ ந யாதி வஷம் லோகே முகே பிண்டேன பூரித: |

ஒரு கவளம் உணவு வாயை நிரப்பி விட்டால் எவன் தான் தூண்டப்படாமல் இருப்பான்?

24. கோ ஹி ஸ்வார்தமுபேக்ஷதே |

எவன் தான் சொந்த லாபத்தை புறக்கணிப்பான்?

25.  க்வாபி ந கச்சேத்நாஹூத: |

துணையின்றி ஒருவர் எங்கும் செல்லக்கூடாது.

**

Leave a comment

Leave a comment