முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—19 (Post No.13,107)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,107

Date uploaded in London – –   19 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில்181வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

PART 19

xxxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—19

xxxxx

அரை= grind

182. அமரத்திற்கு

கடுக்காயைத் தட்டி துணியில் முடிந்து ஆமணக்கெண்ணெயில் சூரிய புடம் வைத்து கண்ணில் பிழிய கண் அமரம் தீரும்.

XXXXX

183.ரத்தம் கட்டிய வீக்கத்திற்கு

கல்லுருவி இலை அரைத்து  காயங்கள் ரத்தம் கட்டிய வீக்கங்களுக்குப் போட்டு வந்தால் கரைந்து நிவர்த்தியாகும்.

XXXXX

184. மாந்தங்களுக்கு

கற்பூரவள்ளி/ கற்பூரவல்லி இலை  பிட்டவித்து சாறு பிழி ந்து அதில் குன்றியிடை ரோசனம் இளைத்து பிள்ளைக்கு வார்த்துவந்தால் மாந்தம் அஜீரணம் சுரங்கள் அணுகாது . அத்துடன் சில மாத்திரைகளும் இழைப்பதுண்டு. மாந்தங்களுக்கு அனுபோகமான மாத்திரைகளை (பார்வதி பரணீயத்தில்)பி\அர்த்துக்கொள்ளவும் .

XXXX

185.கபம் அறுக்க

கம்மாறு வெற்றிலையை தாம்பூலத்திற்கு சதா உபயோகித்து வந்தால் கப கோழை  அறுக்கும்  சீதளம் பிரிக்கும்  இதை பிட்டவியல் செய்து சாறு பிழிந்து கஸ்தூரி கோரோஜனம் சேர்த்து பிள்ளைக்கு வார்ப்பதும் உண்டு.

XXXX

186.பலவீனத்திற்கு

காட்டுக்கொடியை அரைத்துப்  பாலில் கலக்கி சாப்பிட்டுவந்தால் இந்திரியம் காட்டும் இடுப்பு வலிவு உண்டாகும் நீர் வொழுக்கு கண்டிக்கும்

XXXX

187.கம்மலுக்கு

கருப்பு மணத்தக்காளியைப் பாலில் அரைத்து இரண்டு மூன்று வேளை உட்கொண்டுவந்தால்  தீர்க்க அழலை வாய்வு இவைகள் போகும் குரல் கம்மலை  நீக்கும்.

XXXX

188,நீர் சுருக்குக்கு

கல் சுண்ணாம்பை வாய்நீர் வீட்டிலைத்து  அதிக நீர் சுருக்கு கண்டிருக்கும் போது தொப்புளை சுற்றிலும் இரண்டு கால் பெருவிரல் நகத்தின் பேரிலும் கள்மாய்ப்பூசினால் உடனே நீர் சுருக்கு தீரும் .

XXXX

189.அழுக்கு நீங்க

களாவேரை  கிஷாயமா வைத்து எட்டுக்கொருப்  பங்காயிறக்கி  4-5 நாள் கொடுக்க  பிரசவித்த பெண்கள் வயிற்றிலுள்ள அழுக்கு  நீங்கும்

XXXX

190,பித்தம் தீர

களாவேரைப் பாலில் அரைத்துக் குடித்து வந்தாலும் அல்லது மேற்படி

வேரை இடித்தது  சூரணித்து சரியிடை சக்கரை கூட்டி திருக்கடிப் பிரமாணம்  இரு வேளையும் தின்று வந்தால் பித்தம் அரோசகம் தாக்கம்  அதிக வேர்வை சில விஷங்கள் யாவும் தீரும்

XXXX

191.தொண்டைக் கம்மலுக்கு

கற்பூரவள்ளிச் சாற்றில் கற்கண்டு தூள் ஒரு சிட்டிகை போட்டு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல்  நிவர்த்தியாகும் .

XXXX

192.சுவாசத்திற்கு

கருமுள்ளி சமூலத்தை  உலர்த்தியிடித்து வஸ்திரகாயம் செய்து  சீனி கூட்டி வைத்துக்கொண்டு ஒருவேளைக்கு திருக்கடிப் பிரமாணம் எடுத்து தேனில் குழைத்து தின்று வரவும் கபம் , கோழை , இருமல் சுவாசம் ஈளை தீரும் .

XXXX

193. இரத்தக் கடுப்புக்கு

கவுதும்பை சமூலத்தை பாலில் அரைத்துக் கலக்கி உட்கொண்டுவந்தால்  இரத்தக் கடுப்பு மூலச் சூடு மூலம் இவை சா ந்தியாகும் .

XXXX 

TAGS- முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—19

Leave a comment

Leave a comment