காக்கா ஜோஸ்யம்: 1500 ஆண்டுகளுக்கு முன் வராஹமிஹிரர் சொன்னது (Post.13,110)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,110

Date uploaded in London – –   20 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனி நகர் அருகில் வாழ்ந்த வராஹ மிஹிரர் இரண்டு உலகப் புகப்பெற்ற நூல்களை 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்; அவரே சொல்லிவிட்டார்; இவை அவருக்கும் முன்னால் எழுதப்பட்ட நூல்களின் சம்மரி SUMMARY / சுருக்கமான தொகுப்பு என்று!

ஜோதிடம் பற்றி அவர் எழுதிய நூலுக்கு பிருஹத் ஜாதகம் என்று பெயர்; விஞ்ஞானம் பற்றி அவர் எழுதிய நூலுக்கு பிருஹத் சம்ஹிதா  என்று பெயர்.

பிருஹத் சம்ஹிதையில் காகம் கரைவதன் பொருள் என்ன என்று 62  சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் எழுதியுள்ளார் . முழுவதையும் சம்ஸ்க்ருதத்திலும் ஆங்கிலத்திலும் கடந்த 3 நாட்களில் .கொடுத்துள்ளேன் . இங்கு அவைகளை அலசி ஆராய்வோம்.

காகம் பற்றிப் பாடாத கவிஞர் இந்தியாவில் இல்லை ; வள்ளுவர் பாடினார்; பாரதியார் பாடினார் ; அவர்களுக்கு முன்னர் பாடியவர் , காகம் என்னும் பறவையிடமிருந்து கற்க வேண்டிய ஆறு குணங்கள் என்ன என்றும் சம்ஸ்க்ருதத்தில் எழுதிவிட்டார். இப்பொழுது வராஹ மிஹிரர் செப்பியதை ஆராய்வோம்

முதல் ஸ்லோகத்தில் ஒரு வியப்பான செய்தியைப் பகர்கிறார் ; கிழக்குப் பகுதி மக்களுக்கு காகத்தை வலது பக்கம் பார்த்தால் நல்லது ; ஏனைய பகுதி மக்களுக்கு இடது பக்கம் பார்த்தால் நல்லது ( அவரே இன்னும் ஒரு அத்தியாயத்தில் இந்தியாவின் கிழக்கு, மேற்குப் பகுதிகள் எவை என்றும் சொல்லிவிட்டார் ; இதில் வியப்பான செய்தி என்னவென்றால் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல்  இலக்கண புஸ்தகத்தை சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய பாணினியும் , அவருடைய அஷ்டாத்யாயீ புஸ்தகத்தில் கிழக்குப் பகுதி மக்களின் இலக்கண வேறுபாடுகளை மொழிந்துள்ளார் .

வைகாசியில் கூடு கட்டினால்

காகங்கள் நல்ல பசுமையான மரத்தில் வைகாசியில் கூடு கட்டினால்  நாட்டில் வளம் பெருகும்; மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் ; பட்டுப்போன அல்லது முள்  மரங்களில் கூடு கட்டினால் வறுமையும் பஞ்சமும் தாண்டவம் ஆடும் (ஸ்லோகம் 2)

மரத்தின் கிழக்கில் கூடு இருந்தால் ஐப்பசி கார்த்திகையில் மழை கொட்டும் ; மேற்கில் இருந்தால் அந்தந்த பிரதேசத்தின் வழக்கமான மழைக்காலத்தில் மழை பெய்யும். தெற்கிலோ வடக்கிலோ  கூடு  இருந்தால் புரட்டாசி ஐப்பசி மாதங்களில் மழை பெய்யும் .

இதற்குப் பின்னர் மற்ற திசைகள் பற்றியும் புகல்கிறார் ; இப்படி அவர் புகல்வது , 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக்கள் எவ்வளவு விஷயங்களை உன்னிப்பாக கவனித்தனர் என்பதற்கு சான்றாகத் திகழ்கிறது. இந்துக்கள் இவைகளை ஆராய்ந்து புள்ளி விவரங்களை வெளியிட்டால் இப்பொழுதும் அவை சரியா என்பதை அறியலாம் .

வீட்டிலோ , புதரிலோ கூடு கட்டினால் திருடர் பயம், நோய்கள், வறட்சி அதிகரிக்கும் என்று பின்னர் ஒரு ஸ்லோகத்தில் மொழிகிறார் .

ஒரே காக்கைக்கு 3,4 குஞ்சுகள் இருந்தால் உணவுக்கு பஞ்சசமே இராது.5 குஞ்சுகள் இருந்தால் அரசாங்கம் மாறிவிடும் ; முட்டைகளே இடாவிடில் அபசகுனம் .

பின்னர் காகத்தின் நிறம் பற்றிப் பேசுகிறார். பின்னர் ஊரின் நடுவில் காரணமே இல்லாமல் காகங்கள் கூடி கா கா கா என்று கரைந்தால் பஞ்சம் வரும் என்கிறார்.

காரணமே இல்லாமல் ஒருவரைக் காகம்  தாக்கினால் அவருக்கு எதிரிகள்  ஏற்படுவர் .ஒருவரை வலமாகச் சுற்றினால் சொந்தக்காரர்களிடமிருந்து தொல்லை;  ஒருவரைச் சுற்றி இடமாக வட்டமிட்டால் எதிரிகளிடமிருந்து தொல்லை வரும்.

ஒரு காகம் ஒரு மனிதனின் படுக்கையில் எலும்பு, மயிர் சாம் பலைப் போட்டால் மரணம் ஏற்படும் . ரத்தினம், பூ முதலிய நல்ல பொருட்களைப்  போட்டால் மகன் பிறப்பான். வேறு நல்ல பொருட்களைப்  போட்டால் மகள்  பிறப்பாள் .

ஒரு காகம் தானியம், பூ முதலியவற்றுடன் பறப்பதை பார்த்தால் உங்களுக்கு செல்வம் (லாட்டரி பரிசு) கிடைக்கும் .மனிதர் வசிப்பிடத்திலிருந்து இவைகளை காகம் திருடினால் அபாயம் வரப்போகிறது என்று அர்த்தம்..

மஞ்சள்  நிறமான ஒரு பொருளை உங்கள் அருகில் கொண்டுவந்தால்/ பறந்தால் உங்களுக்கு தங்கமும், வெள்ளை நிறமான பொருளானால் உங்களுக்கு வெள்ளியம் கிடைக்கும்   ; இவைகளை உங்களிடமிருந்து திருடிச் சென்றால் (தங்கம், வெள்ளி) நஷ்டம்தான்.

மஞ்சள்  நிறமான ஒரு பொருளை உங்கள் அருகில் கொண்டுவந்தால்/ பறந்தால் உங்களுக்கு தங்கமும், வெள்ளை நிறமான பொருளானால் உங்களுக்கு வெள்ளியும் கிடைக்கும்   ; இவைகளை உங்களிடமிருந்து திருடிச் சென்றால் (தங்கம், வெள்ளி) நஷ்டம்தான் .

பயப்பட வேண்டாம் ; பரிகாரம் இருக்கிறது !

ஒரு அபசகுனத்ததைப் பார்த்துவிட்டால் பயப்பட வேண்டாம் ; பரிகாரம் இருக்கிறது என்று 62ஆவது ஸ்லோகத்தில் சொல்லி முடிக்கிறார் வராஹமிஹிரர் .; 11 அல்லது 16 பிராணாயாமம் செய்தால் போதும் . மிகவும் மோசமான அபசகுனமாக இருந்தால் வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டு நல்ல நேரம் பார்த்துக் கிளாம்பினால் போதும் . பொதுவாக பிராணாயாமம் (மூச்சை இழுத்து உள்ளுக்குள் நிறுத்தி பின்னர் விடுதல் பிராணாயாமம். இதை குறிப்பிட்ட விகிதத்தில் செய்வார்கள் ); செய்யும் போது காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பது சம்பிரதாயம். (பிராமணர்கள் இதை தினமும் மூன்று வேளைகளில் செய்வதால் அவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம் )

ஏனைய காகம் பற்றிய அதிசயங்களை எனது பத்தாண்டுக் கால பத்து கட்டுரைகளில் எழுதிவிட்டதால் இங்கே சேர்க்கவில்லை; கீழே உள்ள இணைப்புகளைக் காண்க )

xxxxx

பத்து ஆண்டுகளில் நான் எழுதிய ‘கா கா’ கட்டுரைகள் :

1.காக்கா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா! (Post No.7206)Date: 12  NOVEMBER 2019

2.கா…கா…கா…!!! கா..கா..கா..!!! மார்ச் 18, 2013

3.பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!! Dated 27 February 2015.

4.காகம் மீது சாணக்கியன் (வசை) பாடியது! (Post No.4734) Date:12 FEBRUARY 2018

5.காகத்திடம் கற்க வேண்டிய ஆறு விஷயங்கள்! (Post no.3880)Date: 5 May 2017

My articles on Crows

6.INDIAN CROW by Mark Twine ; 9 February 2013

7.What can a Crow Teach You? Date : 5  August  2015

8.Strange Belief about Crows in India and Britain!! No. 1678; Dated 26 February 2015.

9.Strange Bird Stories in Mahabharata! 1711; dated 12 March 2015

10.காக்கை, குருவி எங்கள் ஜாதி -பாரதி ; குதிரை, யானை எங்கள் ஜாதி- வேத முனிவன்! (10,557) 13 JANUARY   2022         

—subham—

Tags-

காகம் பற்றி,  வராஹமிஹிரர், பிருஹத் சம்ஹிதா , ‘கா கா’ கட்டுரைகள், காக்கா ஜோஸ்யம்

Leave a comment

Leave a comment