தனம் ப்ராணஹரம் த்யஜேத் | ஒரு வரி சுபாஷிதங்கள் (Post No.13,109)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.109

Date uploaded in London – — 20 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஒரு வரி சுபாஷிதங்கள்

தனம் ப்ராணஹரம் த்யஜேத் |

ச.நாகராஜன்

அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ள சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் மேலும் சில இதோ:

1.      க்ஷீணா நரா நிஷ்க்ருணா பவந்தி |

மிகவும் க்ஷீணமான தசையில் இருப்பவர்கள் கருணையற்றுக் கொடுரமாக நடந்து கொள்வர்.

2. க்ஷுதாதுராணாம் ந ருசிர்ன பவ்வம் |

கடும் பசியில் உள்ளவர்கள் ருசியையோ அல்லது பழம் பழுத்திருக்கிறதா என்றோ பார்க்க மாட்டார்கள்.

3. கண்டிதா ஏவ ஷோபந்தே வீராதரபயோதரா: |

வீரர்கள், உதடுகள், மார்பகங்கள் காயத்துடன் இருந்தால் சோபிக்கின்றன.

4. கஜானாம் பங்கமக்னானாம் கஜா ஏவ துரந்தரா: |

சேற்றில் மாட்டிக் கொண்ட ஒரு யானையைக் காப்பாற்ற இன்னொரு யானையாலேயே முடியும்.

5.குணாதர்மவிஹீணாம் யோ நிஷ்பலம் தஸ்ய ஜீவனம் |

நல்ல குணங்கள், தர்மம் ஆகியவை பற்றி மதிப்புக் கொண்டிராமல் இருப்பவனின் வாழ்க்கை வீணே.

6. குணைர்விஹீனா பஹு ஜல்பயந்தி |

நல்ல குணமில்லாதவர்கள் உளறத்தான் செய்வார்கள்.

7. கேஹே நர்தா – கேஹே சூர: |

வீட்டிலிருக்கும் கழுதை சூரத்தனமானது தான்.

8. த்ருதகும்பசமா நாரீ தப்தாங்கா சம: புமான் |

ஒரு பெண்ணானவள் குடத்தில் இருக்கும் நெய் போல, ஒரு ஆணானவன் எரியும் கொள்ளி போல!

9. சதுர்வேதோபி துர்வ்ருத்த: ஷூத்ராதல்பதர: ஸ்ம்ருத: |

நான்கு வேதமும் அறிந்திருந்தாலும் ஒருவனது குணம் மோசமாக இருந்தால் அவன் நான்காவது வர்ணத்தை விட இழிவானவன் ஆவான்.

10. சித்தே வாசி க்ரியாயாஞ்ச சாதூனாமேகசித்ததா |

மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் ஒரு சாது ஒரே தன்மையில் இருப்பான்.

11. சிந்தாசமம் நாஸ்தி சரீரஷோஷணம் மாதாசமம் நாஸ்தி சரீர போஷணம்!

கவலையைப் போல உடலை அழிக்கும் இன்னொன்று இல்லை; தாயாரைப் போல உடலை போஷிப்பவர் இன்னொருவர் இல்லை.

12. ஜானன்னாபி நரோ தைவாத்ப்ரகரோதி விகர்ஹிதம் |

அறிவாளியாக இருக்கும் ஒரு நல்ல மனிதன் விரும்பத்தகாதவற்றைச் செய்ய மாட்டான்.

13. தாவச்ச ஷோபதே மூர்கோ யாவத்கிஞ்சின்ன பாஷதே |

ஒரு முட்டாள் அவன் வாயைத் திறக்காத வரை பெரிய ஆள் தான்!

14. தேஜஸாம் ஹி ந வய: சமீக்ஷயதே |

தைரியமானவர்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல.

15. த்யஜேத்தர்ம தயாஹீனம் |

கருணை இல்லாத தர்மத்தை ஒருவன் விலக்க வேண்டும்.

16. தயா மாம்ஸாஷின: குத: |

மாமிசம் சாப்பிடும் ஒருவனுக்கு தயை இருக்காது.

17. தர்பாந்தேன புதேன கிம்|

கர்வத்தினால் குருடனாக இருக்கும் ஒரு அறிவாளியால் ஒரு பயனும் இல்லை.

18. தாரித்ர்ய தோஷோ குணாராஷிநாஷி |

வறுமை என்னும் தோஷம் நல்ல குணங்களை நாசம் செய்கிறது.

19. திவா நிரீக்ஷய வக்தவ்யம் ராத்ரௌ நைவ ச நைவ ச |

எதைச் சொல்லும் முன்பாகவும் பகலில் அதைப் பார்த்துச் சொல்ல வேண்டும். ஒரு போதும் இரவில் அல்ல, இரவில் அல்ல!

20. தீனோ ரிபுரப்யனுக்ரஹா: |

ஒருவன் எதிரியாக இருந்தாலும் மிக மோசமான காலங்களில் அவன் உதவி பெறத் தகுந்தவனே.

21. துக்ததௌதோபி கிம் யாதி வாயஸ: கலஹம்ஸதாம் |

பாலைப் போல அதி வெண்மையாக ஒரு பசு இருந்தாலும் அது ஒருபோதும் ஹம்ஸமாகாது.

22. துர்ஜனஸ்ய குத: க்ஷமா|

துர்ஜனங்களுக்கு பொறுமை எங்கிருந்து வரும்?

23. துர்லப: குருர் லோகே சிஷ்யசிந்தாபஹாரக: |

சிஷ்யனின் கருத்தைத் திருடும் குருவானவர் உலகிலேயே அபூர்வமாகத் தான் காணப்படுவார்.

24. தூரத: ஷோபதே மூர்கோ லம்பஷாட்படாவ்ருத: |

ஆடைகளை அணிந்து கொண்டு கையில் பையுடன் இருக்கும் ஒரு மூர்க்கனை தூரத்தில் பார்க்கும் போது அவன் கவர்ச்சிகரமாகத் தான் தெரிவான்.

25. தேவா ஹி நாந்யாத்திதரந்தி கிந்து ப்ரசம்ஹா தே சாதுதியம்

ததந்தே |

தேவர்கள் எதையும் வழங்குவதில்லை, அவர்கள் மகிழ்ந்தார்கள் என்றால் அறிவை வழங்குவர்.

26. தோஷா வாச்யா குரோரபி|
குற்றமுடையவராக இருந்தார் எனில் குருவையும் கண்டிக்கலாம்.

27. தனம் ப்ராணஹரம் த்யஜேத் |

உயிரை அபகரிக்கும் செல்வத்தை ஒதுக்கி விடு.

28. தனஹீன: ஸ்வபத்னீபிஸ்த்யஜ்யதே கிம் புன: பரை: |

பணம் இல்லாமல் ஏழ்மையில் இருக்கும் ஒருவனை சொந்த மனைவியே திரஸ்கரித்து விடுகிறாள் என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம்?!

***

Leave a comment

Leave a comment