யாத்திரையில் செல்லும் போது யார் யார் செல்ல வேண்டும்? (Post.13,112)

 Pandaripuram Yaththirai (Pandharpur Yatra)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.112

Date uploaded in London – — 21 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்

20. யாத்திரையில் செல்லும் போது யார் யார் செல்ல வேண்டும்?

ந கச்சேதாம் பிதாபுத்ரௌ ந கச்சேத்சோதரத்வயம் |

நவ நார்யோ ந கச்சேயுர்ன கச்சேத்ப்ராஹ்மணத்ர்யம் |\

ஒரு யாத்திரையை மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை இந்த சுபாஷிதம் தெரிவிக்கிறது.

ஒரு யாத்திரையை மேற்கொள்ளும் போது தந்தையும்  மகனும் சேர்ந்து செல்லக் கூடாது. இரு சகோதரர்கள் சேர்ந்து செல்லக் கூடாது. ஒன்பது பெண்கள் ஒன்றாக ஒரு குழுவாகச் செல்லக் கூடாது.  மூன்று பிராமணர்கள் ஒன்று சேர்ந்து செல்லக் கூடாது.

சமாயாதி யதா லக்ஷ்மீர் நாரிகேலபலாம்புதம் |

விநியாதி யதா லக்ஷ்மீர்கஜபுக்த கபித்தம் |\

(லக்ஷ்மி ப்ரவேசம் என்னும்) வளமையானது தேங்காய்க்குள் இருக்கும் இளநீர் போல வருகிறது. யானை விழுங்கும் விளாம்பழம் போல போகும் போது போய்விடுகிறது.

யத்ரவித்யாகமோ நாஸ்தி யத்ர நாஸ்தி தனாகம: |

யத்ர சாத்மசுகம் நாஸ்தி ந தத்ர திவசம் வசேத் |\

எங்கு கற்பதற்கு வாய்ப்பு இல்லையோ, பணம் சம்பாதிப்பதற்கு வழி இல்லையோ, ஆத்மாவிற்கு சுகம் அளிக்கும் விஷயம் இல்லையோ அங்கு ஒருவன் தனது ஒரு நாளைக் கூடக் கழிக்கக் கூடாது.

ருணதாதா ச வைத்யஸ்ச ச்ரோத்ரிய: சுஜலா நதி |

யத்ர ஹோதே ந வித்யந்தே ந தத்ர திவசம் வசேத் |\

எங்கு ஒருவன் கடனை வாங்கி விட்டு ஒருபோதும் திருப்பித் தராமல் இருக்கிறானோ,, எங்கு வைத்தியரோ,  கல்வி கற்ற பிராமணனோ,  நிறைய நீர் இருக்கும் நதியும் இல்லையோ அங்கு ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது.

யஸ்மின்னதேஷே ந சம்மானோ ந ப்ரேம் ந் அச பாந்தவா|

ந ச வித்யாகம: கச்சின்ன தத்ர திவசம் வசேத் ||

எந்த தேசத்தில் சன்மானம் தந்து ஆதரவு தெரிவிப்பவர் இல்லையோ எங்கு அன்பு செலுத்தும் உறவினர் இல்லையோ எங்கு கல்வி கற்கும் வாய்ப்பு இல்லையோ அங்கு ஒருவன் ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது.

வ்ருத்தகாலே ம்ருதா பார்யா ப்ரஹஸ்தானாம் தனம் |

போஜனம் ச பராதீனோ த்ரயம் பும்ஸாம் விடம்பனம் ||

மூன்று விஷயங்கள் நகைப்பைத் தரும் ஏளனத்திற்குரியவாக ஒருவனுக்கு அமைந்து விடும்.

1.வயதான காலத்தில் மனைவி இறந்து விடுவது 2. பணம் இன்னொருவன் கையில் இருப்பது 3. அடுத்தவன் தயவில் சாப்பிட வேண்டியிருப்பது.

மிதமாயுர்வயோநித்யம் நைதி யாதம் கதாசன |

பராம்ருஷந்தி ததபி ந பவம் போகலோலுபா: ||

வாழ்நாள் மிகவும் குறைவானது. வயது நிரந்தரமானதல்ல. எது கழிந்ததோ அது மீண்டும் வராது.  ஆனால் உலகியல் போகத்தில் அனுபவித்துக் கொண்டே இருப்பவர்கள் இது பற்றி அக்கறை செலுத்துவதே இல்லை.

அஜாயுத்தம்ருஷிச்ராத்தம் ப்ரபாதே மேகடம்பரம் |

தம்பத்யோ: கலஹச்சைவ பரிணாமே ந கிச்சன் |\

இரண்டு ஆடுகளுக்கு இடையே நடக்கும் யுத்தம்,  ரிஷிகளுக்குச் செய்யும் ச்ராத்தம்,  காலையில் கூட்டமாகச் சேரும் மேகம், தம்பதிகளுக்கும் ஏற்படும் சண்டை இவை யாவும் வீண் தான்; ஒன்றும் சாதிக்காது!

முகேன கரலம் முச்சன்மூலே வஸதி சேத்பணீ |

பலசந்தோஹகுருணா தருணா கிம் ப்ரயோஜனம் |

மரத்தின் அடியில் படமெடுத்து விஷத்தைக் கக்கும் பாம்பு இருக்க, பழங்கள் நிறைந்திருக்கும் அந்த மரத்தால் தான் பயன் என்ன?

 Pandaripuram Yaththirai (Pandharpur Yatra)

***

Leave a comment

Leave a comment