முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—20 (Post No.13,115)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,115

Date uploaded in London – –   22 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில்193 வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 20

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—20

194.திடமுண்டாக

கல்லத்திக் கொழுந்தைப் பாலில்  அரைத்துக் கலக்கி தினமும் இருவேளையும் உட்கொண்டு வந்தால் மனது திடப்படும் அஸ்தி நீங்கும் தாது கிட்டும் .

xxxx

195.பசியுண்டாக

களாக்காயுடன் இஞ்சிவேர் இவைகளைக் கூட்டி வடகம் அல்லது ஊறுகாய் செய்துவைத்துக் கொண்டு உண்டியுடன் அருந்தி வந்தால் அரோசகம் ரத்த பித்தம் காத்து விடாய் தாகம் பித்த ஓக்காளம் இவை நீங்கும் பசியுண்டாகும் ஆனால் சுரரோகிகட்கு ஆகாது

xxxx

196.திரி தோஷமும் தீர

கலவைக்கீரையை மிளகு முதலிய கார சாரத்துடன் உபயோகித்தால் பித்தம் மலக்கட்டு குடல் வாதம் அரோசகம் முக்கால் ரோகம் இவை தீரும். அபாணவாய்வு சுத்தியாகும் பசிதீபனமுண்டாகும்  திருவோஷமும் நீங்கும் பத்தியத்திற்கும்  ஆகும் .பெண்கள் வயிற்று அழுக்கு  தள்ளும் .

XXXX

197.சர்வ சூட்டுக்கும்

கல்யாணப் பூசணிக்காய் வடகம் செய்தாவது  காரசாரத்துடன் சமைத்து உண்டியுடனாவது அடுத்தடுத்து உட்கொண்டுவந்தால் உள்  அ னல்   உட்சுரம் வேட்டை சூடு  நீர்க்கட்டு இவை தணியும். வாய்வுண்டாகும்  இதை லேகிய பாகமாய் செய்து  அருந்தினால் சர்வ வாய்வும் சூடும் தணிந்து  உடம்பை புஷ்டியாக்கும். இந்த லேகியம் செய்யும் முறையை (பார்வதி பரணீயத்தில்) பார்த்துக்கொள்ளவும் .

XXXX 

198.மதுமேக சாந்தி

கருங்காலி வேரின் பட்டையைக்கொண்டுவந்து பாலில் அரைத்துக் கலக்கியாவது மேற்படி பட்டையை இடித்து வஸ்திரகாயம் செய்து சீனி கலந்து  திருக்கடிப்பிரமாண ம் இரு போதும் தின்றுவந்தால்  மது மேகம் சாந்தியாகும்.

XXXX

199.தேக பலத்திற்கு

கல்தாமரையைப் பாலில் அரைத்துக் கலக்கி உட்கொண்டுவந்தால் வீரிய விருத்தியும் தேக பலமும் உண்டாகும். குட்ட வியாதியுள்ளவர்க்கு ஆகாது

XXXX

200.வாந்தி நிறுத்த

கலைமான் கொம்பு திப்பிலி அதிவிடயம் இவைகளை சமனாக எடுத்துப் பொடித்து வஸ்திரகாயம் செய்து கடிகைப் பிரமாணம் எடுத்து தேனில் குழைத்துக் கொடுக்கவும் .

XXXX

கா

XXXX

201.அதிசாரத்திற்கு

காட்டாத்தி மூலத்தைப் பாலில் அரைத்து பாலில் கலக்கி உட்கொள்ளவும்  இப்படி அந்திசந்தி மூன்று நாள் கொள்ள அதிசாரம் மந்தம் காசம் இவை சாந்தியாகும்.

XXXX

202.பேதிக்கு

காட்டாமணக்கின் முத்தின் பருப்பை மி தமாயெடுத்துப் பால் விட்டரைத்து பாலில் கொடுக்க பேதியாகும். ஆனால் சில உடம்புக்கு ஆகாது .

XXXX

203.பாண்டு சோகைக்கு

காட்டாமணக்கின் வேரைப் பாலில் அரைத்து பாலில் கலக்கித் தேகத்திற்குத் தாக்கப்படி யுண்டுவந்தால் பாண்டுசோகை காமாலை வீக்க இவை சாந்தியாகும்.

XXXX

204.சகல மூலத்திற்கும் பொதுப் பிரயோகம்

காட்டுக் கருணை கரிக் கருணை பிரண்டை மருள் கிழங்கு இவைகள் வகைக்குப் பலம் ஒன்று உலர்த்தி  சூரணித்து வேளைக்கு கொட்டைப்பாக்களவு  எடுத்து தேனில் குழைத்து தின்றுவந்தால் சர்வ மூலமும் சாந்தியாகும்.. இச்சா பத்தியம் .

XXXX

205.முலைக் காம்பு ரிணத்திற்கு

காசுக்கட்டி 2 விராகநிடை  எடுத்துக் பொடித்து  நாலு திறா ம்  தண்ணீரை நன்றாய்க் கொதிக்க வைத்திறக்கி அதில்போட்டு ஆறவைத்து எடுத்துக்க்கொள்ளவும் அடிக்கதி முலைக்காம்புகளில்  ரிணம் உண்டாகும் பெண்கள்  கெர்ப்பமாயிருக்கும்போது பிரச விக்கிறதற்கு இரண்டு மாதம் இருக்கும்போது   தினந்தோறும் மேற்படி தண்ணியைத் தொட்டு காம்புகளில் தடவி வந்தால்  குழந்தை பிறந்து பால் குடிக்கும் சமயத்தில் ரிணம் உண்டாகாது. .

—SUBHAM—

TAGS- மூலிகை-20, முனிசாமி முதலியார் ,மூலிகை அதிசயங்கள்,

Leave a comment

Leave a comment