தமிழ் மக்கள் வாழ்வில் கலந்த மஹாபாரதம்; கிராமம் தோறும் நாடகம் ! (Post.13,118)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,118

Date uploaded in London – –   23 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

தமிழ் மக்கள் வாழ்வில் கலந்த மஹாபாரதம்கிராமம் தோறும் மஹாபாரத நாடகம் !

தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் ஒரு அதிசயத் திருவிழா ஆயிரக்கணக்கான ஊர்களில் ஆயிரக் கணக்கான கோவில்களில் நடக்கிறது ; அதாவது, மகாபாரதத்தின் கடைசி நாள் போர் நடித்துக் காண்பிக்கப்படுகிறது . மஹாபாரதப் போரில் 18-ம் நாள் போரில் துரியோதனனை பீமன் கொல்லுவதை பெரிய அளவில் நடித்துக் காட்டி தர்மம் வெல்லும் அதர்மம் அழியும் என்று காட்டுகிறார்கள் ; கீழே இணைத்ததுள்ள பத்திரிக்கைச் செய்திகள் நாலைந்து கிராமங்களில் நடந்த நிகழ்ச்சிகள்தான் . ஆயினும் இவைகளில் உள்ள பொதுவான அம்சங்கள் மஹாபாரதம் கிராம மக்கள் வாழ்வில் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது . சங்க காலத்திலேயே மஹாபாரதம் மக்கள் மனதில் வேரூன்றியதை சங்க இலக்கிய புலவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிவிட்டனர். பின்னர் வந்த சிலப்பதிகாரம், தேவாரம், திவ்யபிரபந்தம், திருப்புகழில் மஹாபாரத விஷயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவை தவிர அர்ஜுனன்- அல்லிராணி காதல் பாடல்கள் நாட்டுப்புறத்தில் உள்ளன. மதுரைத் தமிழ்ச்சங்கம் மகாபாரதத்தை மொழிபெயர்த்ததாக கல்வெட்டுகள் பேசுகின்றன.பிற்காலத்தில் வில்லிபுத்தூரார் பாரதம் உள் பட நிறைய பாடல்கள் கிடைக்கின்றன.

பொது அம்சங்கள்

கிராமம்தோறும் திரவுபதி அம்மன் கோவில் அல்லது தர்மராஜா (யுதிஷ்டிரன்) கோவில் இருக்கிறது.

அங்கு கோடை காலத்தில் துரியோதனன் படுகளம் என்ற பெயரில் விழா நடக்கிறது .

18 நாட்களுக்கு மஹாபாரத சொற்பொழிவு நடத்தப்படுகிறது

பல கிராமங்களில் ஒவ்வொரு நாளும் அந்த நிகழ்ச்சியை கிராம இளைஞர்கள் நடித்துக் காட்டுகினறனர் .

அப்பொழுது பிரம்மாண்டமான துரியோதனன் உருவத்தைச் செய்து வண்ணங்களால் அலங்கரிக்கின்றனர் .

18ம் நாளில் அவனை பீமன் கொல்வதைக் காண சுற்று வட்டார கிராம மக்கள் பல்லாயிரக் கணக்கில் கூடுகின்றனர்

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் பிராமணர் அல்லாதோர் நடத்தும் கோவில்களில் இவை நடைபெறுகின்றன. மக்களின் அடிமட்டம் வரை மஹாபாரதம் ஆழமாகப் பரவியதை இது காட்டுகிறது.

இந்தச் செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு நன்றி  யூ ட்யூபிலும் இவைகளைக் காண முடிகிறது .

நான் எழுதிய இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  என்ற நூலில் இந்த திரவுபதி அம்மனும் மஹாபாரத நிகழ்ச்சிகளும் இலங்கை வரை பரவி இருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளேன் .

XXXX

கீழ்பாலூரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி- பக்தர்கள் பங்கேற்பு

By மாலை மலர்21 மார்ச் 2024

மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது . துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .
125 அடியில் அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் படுகளம் அருகே நாடக கலைஞர்கள் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை காண கீழ்பாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

XXXX

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

APRIL 16, 2023 DAILY THANTHI

ராணிப்பேட்டை

நெமிலி திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. ராணிப்பேட்டை நெமிலி திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி அக்னி வசந வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 30 அடி நீளமுள்ள துரியோதனன் உருவம் செய்யப்பட்டு அதனை சுற்றி பீமனும், துரியோதனனும் பாடல் பாடி ஒருவரையொருவர் சண்டையிட்டுகொண்டனர்.

தொடர்ந்து கட்டைக்கூத்து கலைஞர்கள் பீமன், துரியோதனன் வேடமிட்டு பீமன் துரியோதனனை கொல்லும் நிகழ்ச்சியை நடித்துக் காட்டினர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

XXXX

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

UPDATED : ஏப் 14, 2023 11:41 AM

ADDED : ஏப் 14, 2023 11:41 AM DINAMALAR

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை தர்மராஜா கோவில் தெருவில், ஏழு கிராமங்களுக்கு சொந்தமான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த மகோத்சவ திருவிழா கடந்த மாதம், 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், கிருஷ்ணகிரி செல்வநாடக சபா குழுவினரின், பல்வேறு இதிகாச மஹாபாரத தெருக்கூத்து கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தன

நேற்று, இதன் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் முன்பு, 30 அடி நீள துரியோதனன் உருவ பொம்மையை மண்ணால் செய்து, அதில் பீமனும், அர்ச்சுணனும் போரிடும் காட்சிகள் நடத்தி, இறுதியில், போர் வாளால் துரியோதனனை அர்ச்சுணன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரவுபதி அம்மனை துரியோதனன் உடல் மீது வைத்து சபதம் நிறைவேறும் வகையில், திரவுபதி கூந்தல் முடிக்கும் நிகழ்வும் நடந்தன. இதில், ஆண்களும், பெண்களும் துடைப்பத்தால் தலையில் அடி வாங்கி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஏழு ஊர் நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

XXXX

தினத்தந்தி மே 7, 2023

வாணியம்பாடியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. திருப்பத்தூர் வாணியம்பாடியை அடுத்த ராமையன் தோப்பு பகுதியில் உள்ள தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன

இதில் நாடக கலைஞர்கள் கலந்துகொண்டு துரியோதனின் ராட்சத உருவத்தை உருவாக்கி பீமன் தன் கையில் வைத்துள்ள கதாயுதத்தால் துரியோதனின் முட்டி பகுதியில் தாக்கி பட

XXXXX

திண்டல் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி Byமாலை மலர்11 மார்ச் 2023

கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம் தரித்தும், பஞ்சபாண்டவா் வேடம் அணித்தும் நடித்துக்காட்டிய காட்சி.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம் திண்டல் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் 7 கிராமமக்கள் மழை வேண்டி பொதுமக்களும் நோய் நொடியின்றி வாழ மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் மஹாபாரத சொற்பொழிவுகள் நடத்திய பின் கூத்துக்கலைஞா்கள் கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றால் மழைவரும் என்பது மக்களின் நம்பிக்கை.

திண்டல் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள 7கிராம மக்கள் ஒன்றினைந்து மஹாபாரத கதைகளை பகல் பொழுதில் வேதம் பயின்றவா் பொதுமக்களுக்கு சொல்லுவார்.

அவா் குறிப்பிடும் கதைகளுக்கு ஏற்ப இரவு பொழுதில் கூத்துக்கலைஞா்கள் நடித்துக்காட்டுவார்கள். இதனையடுத்து மஹாபாரத சொற்பொழிவில் நேற்று 18 ம் நாள் 18 ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றிவேல் நாடக சபா கோபால் மற்றும் கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம்  தரித்தும் பஞ்சபாண்டவா் வேடம் அணித்தும் நடித்துக்காட்டினா். இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து சென்ற சென்றனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் தர்மகர்த்தா, மண்டு கவுண்டர் மற்றும் 7 ஊர் கவுண்டர்கள் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
XXXXX

வந்தவாசி மருதாடு கிராமத்தில் நடைபெற்ற அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை ஏராளமான பொது மக்கள் கண்டு களித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். இதற்கிடையே இந்தாண்டு அக்கி வசந்த விழா கடந்த மாதம் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் திரௌபதியம்மன் கோயில் முன்பாக மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களாக கட்டைக்கூத்து நாடக கலைஞர்களால் மகாபாரத நாடகம் தினமும் இரவு நேரத்தில் அரங்கேற்றி வந்தது.

இதற்கிடையே மகாபாரத இறுதியில் துரியோதனை பீமன் வதம் செய்து துரியோதனின் உதிரத்தை பஞ்சாலி கூந்தலில் தடவி கூந்தலை முடிக்கும் சாப நிறைவேற்றம் நிகழ்வு நடைபெற்றது.

இதில் துரியோதனை பீமன் வதம் செய்யும் படுகளம் நிகழ்வை மறுதாடு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

XXXX

எறும்பூர் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை சேத்துப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த எறும்பூர்
எறும்பூர் கிராமத்தில் 21 ஆண்டுக்கு பிறகு திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மகா பாரத

சொற்பொழிவும், கண்ணன், தர்மன், பீமன், நகுலன் ஆகிய உற்சவ சுவாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது. இந்த நிலையில் துரியோதனன் படுகளமும், தீமிதி விழாவும்
நடைபெற்றது. துரியோதனன் படுகளமும், தீமிதி விழாவும் நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்தனர். இதில் சென்னை, காஞ்சீபுரம், வந்தவாசி, வந்தவாசி, செய்யாறு, ஆரணி, சேத்துப்பட்டு ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

xxxxx

துரிஞ்சிகுப்பம் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில், துரியோதனன் படுகளமும், தீமிதி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

போளூர் அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில்  ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 1-ஆம் தேதி மகாபாரத அக்னி வசந்த  பெருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக – அலங்காரங்களும் நடைபெற்றது. இதனையடுத்து தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவும், இதிகாச நாடகங்களும் நடைபெற்றன., விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் சிறப்பாக நடைபெற்றது.  களிமண்ணால் துரியோதனன் உருவபொம்மை வடிவமைக்கப்பட்டு, பூசாரிகளின் சிறப்பு வழிபாடுகளுடன் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், மாலையில் நடைபெற்ற அக்னி வசந்த விழாவில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

 from sri lanka



—-SUBHAM—-

Tags – மகாபாரதம், திரவுபதி அம்மன், தீ மிதி, தர்மராஜா கோவில், துரியோதனன் படுகளம் , பீமன், நாடகம்

Leave a comment

Leave a comment