Date uploaded in London – – 10 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் -2
இந்தக் கட்டுரையின் முதல் பகுதி மார்ச் 25ம் தேதி வெளியானது.
நாகார்ஜுனா சொல்லும் மேலும் பல அதிசய வி யங்களைக் காண்போம்
கண்ணாடியில் முன் பிறப்பைக் காணலாம்
ஒரு கண்ணாடியில் கரவீர (NERIUM ODORUM அரளி) பல்லாடக BHALLAATAKA / EVOLVULUS ALSINOIDES , ஆமலதாஸ் AMALTAS ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்தால் அதில் குதிரை கழுதை ஒட்டகம் ஆகிய உருவங்கள் தெரியும்
XXXX
அழிஞ்சில்மர ALANGIUM LAMARCKU எண்ணெயால் எரிக்கப்பட்ட சாம்பலை எடுத்து பசு நெய்யில் மை தயாரிக்கவும் . அதை புஷ்ய நட்சத்திரத்தன்று கண்களில் இட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தால் உங்கள், PREVIOUS BIRTHS முன் பிறவிகளைக் காணலாம் .
இதோ சம்ஸ்க்ருதத்தில் ,
அங்கோல தைல கஜ்ஜல சுரபி க்ஷீரைர் த்ருகஜ்ஜனம் புஷ்யே
பச்யதி தர்ப்பண மத்யே ரூபாணி பவாந்த்ரே யானி
XXXX
தகரை பழங்கள், அழிஞ்சில் மர எண்ணெயைக் கொண்டு கண் மை / க்ரீம் தயாரிக்கவும். அதைக் கண்களில் இட்டுக்கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்தால் தெய்வீக உருவங்கள் தெரியும். அவை மறைய, தகரை பழங்களினால் மட்டும் ஆன க்ரீமை தடவிக்கொண்டால் போதும்
(விவேகாநந்தரும் தவம் செய்யும் எவரும் பூர்வ ஜன்மத்தைக் காண முடியும் என்று சொல்கிறார். பூர்வ ஜென்ம விஷயங்கள் FILM ROLE பிலிம் சுருள் போல நம்முள் இருப்பதாகவும், அதை விரித்துப் பார்த்தால் நம்முடைய பூர்வ ஜென்மம், சினிமா காட்சி போல தெரியும் என்றும் சம்பாஷணைகள் என்ற புஸ்தகத்தில் சொல் கிறார்; இந்துமத புராண இதிகாசங்களில் பூர்வ ஜன்மக் கதைகள் நிறைய வருகின்றன.)
Tagar (Valeriana wallichii) Synonyms:
Tamil: Tagarai
Telugu: Grandhi Tagaramu
Urdu: Tagar
Sanskrit: Kalanusari, Kalanusarika, Nata
Assamese: Tagar
Bengali: Tagar Paduka
English: Indian Valerian
Gujrati: Tagar Ganthoda, Tagar Gantho, Ghodawaj
Hindi: Mushkbala, Sugandhabala
Kannada: Mandibattal, Mandyavanthu, Mandibattalu, Tagar
Kashmiri: Bala, Mushkbala
Malayalam: Thakaram
Marathi: Tagar, Ganthode
Oriya: Tagarapaduka, Jalashiuli
Punjabi: Mushkobala, Sugandhbala
XXXX
வெள்ளை அர்க/ எருக்கஞ் செடி CALOTROPIS , மஞ்சிஷ்டா/ RUBIA CORDIFOLIO குருவியின் தலை, குஷ்டா /SAUSSUREALAPPA CARKA ஆகிய நான்கையும் பொடி செய்து ஒருவர் தன் ரத்தத்தில் கலந்து மாத்திரை செய்ய வேண்டும். யாரை வசப்படுத்த வேண்டுமோ அவர்களது உணவிலோ பானத்திலோ கலந்து கொடுத்தால் அவர்கள் உங்கள் அடிமைகளாகி விடுவார்கள் . இதன் மூலம் உலகையே வசப்படுத்தலாம் .
இந்த ஸ்லோகம் வசீகரணம் என்னும் அத்தியாயத்தில் வருகிறது.
XXXX
நாலாவது ஸ்லோகமாக வரும் விஷயம் ,
மயான த்திலுள்ள சடலம் ஒன்றின் வாயில் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியன்று ஹரிதல் /ARSENIC DIOXIDE மற்றும் குஷ்டாவை /SAUSSUREA LAPPA CARKA இரவு முழுதும் வையுங்கள்; மறுநாள் காலையில் அதைக்கொண்டு திலகம்/ பொட்டுவைத்துக் கொள்ளுங்கள் . அதைக் காண்போர் அனைவரும் இந்த மூவுலகிலும் உங்களுக்கு வசமாவார்கள்
இனி ஐந்தாவது ஸ்லோகத்தைக் காண்போம் ,
ஒரு சடலத்திலிருந்து எடுத்த கண், நாக்கு, இருதயம், மூக்கு, நெற்றி ஆகியவற்றால் மயானத்தில் டென்னெய் செய்து தலையின் தடவிக்கொண்டால் , உங்கள் தலைமுடியைக் காணும் பெண்களும் மன்னர்களுமுங்களுக்கு அடிமை ஆகிவிடுவார்கள் .
இது என்ன ஒரே அபத்தக் களஞ்சியமாக இருக்கிறதே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆயினும் இதை சீன மொழியில் மொழிபெயர்த்துப் பின்னர் நம் நாட்டில் அழிந்த புஸ்தகத்தை — யோக ரத்னமாலாவை- ஒருவர் சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்து , அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து லண்டன் பலக்லை கழக நூலகத்திலும் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல 2000 ஆண்டுக்கு முந்தைய இந்த சம்ஸ்க்ருத நூலுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தி /உரையும் எழுதியுள்ளனர் .
XXXX
(மதுரையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இரவு நேரத்தில் வரும் குடுகுடுப்பைக்காரன் பற்றி இவ்வாறு பல கதைகள் சொல்லுவார்கள் ; அம்புலிமாமா கதைகளில் மந்திரவாதிகள் பற்றிக் கதைகள் படித்திருக்கிறோம்; இவைகள் உண்மையா என்று எவரும் ஆராய்ச்சிசெய்தால்தான் தெரியும்)
XXXX
வித்வேஷ கரணம் / வெறுப்பு உண்டாக்கல்
வீட்டில் சண்டை உண்டாக்கும் குளிகை
உரகாரி சிரோ ஐனி தோ தூப வரஸ் தாம்ர சூட சிரஸா ச
திரிபுவன பவனேஷு கதஹ க்ஷி ப்ர ப்ரீதிம் விநாஸஸ்யத்யேவ
பொருள் – மயில் தலை , குயில் தலை ஆகிய இரண்டையும் பொடி செய்து அதன் மூலமாக அதன் மூலம் சாம்பிராணி, ஊதுபத்தி செய்து வீட்டில் வைத்தால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அமைதி நாசமாகும்
XXXX
காகம், ஆந்தை ஆகியவற்றிம் சிறகுகளைக் கொண்டு தயாரிக்கும் வாசனைப் பொருளை/ ஊதுவத்தி/ சாம்பிராணி பயன்படுத்தியும் பயங்கர சண்டையை உருவாக்கலாம்.
XXXX
பைத்தியம் உண்டாக்க
லாங்கலி /GLORIOSA SUPERBA , பன்றியின் வீட்டை, ஒட்டகத்தின் முடி ஆகியவற்றை ஒரு குதிரையின் குளம்புக்கு அடியில் வைத்து விட்டு அதை எடுத்து ஒரு வீட்டின் வாசலில் புதைத்தால் அந்த வீட்டிலுள்ளவர்கள் பைத்தியம் பிடித்து அலைவார்கள் .
(இது போன்ற விஷயங்கள் உண்மைதான் என்பதை அதர்வண மந்திரங்களும் கந்த ஷஸ்டிக் கவசமும் காட்டுகின்றன :
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் … … 125
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட
……………………………..
XXXX
ஒரு பிணத்தின் முதுகெலும்பை ஒரு வீட்டின் வாசலில் புதைத்தால் அந்த வீட்டிலிருந்து செல்வங்கள் மறையும் ; வீடு சுடுகாடு போலக் காட்சி தரும் .
XXXX
மேலும் பல அதிசயங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.
TAGS- மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை, நாகார்ஜுனா தகவல் -2