Oroxylum Indicum
Date uploaded in London – – 13 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Parmelia Perforata
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நாகார்ஜுனா , ஒரு புத்த மத தத்துவ வித்தகர், ரசவாத நிபுணர், மாயாஜால மன்னன் , ரசாயனவியல் அறிஞர், மருத்துவம் முதல் மாயாஜாலம் வரை பல புத்தகங்களை எழுதிய ஆசிரியர் ஆவார்.
அவர் எழுதிய யோக ரத்னமாலாவில் 140 சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இருக்கின்றன . அதிலிருந்து மேலும் பல அற்புதங்களைக் காண்போம் .
துந்துபா (இரட்டை வாய் பாம்பு) பாம்பின் ரத்தத்தை ஒரு சிறிய கொள்கலத்தில் (Capsule) விடவும் ;அதை மூடிவிட்டு, வாய்க்குள் வைத்துக்கொள்ளவும் ; பின்னர் தண்ணீரில் இறங்கினால் வீட்டிற்குள் இருப்பது போல எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம்.
xxxx
ஸ்யோனக் விதைகளால் ஆன இரண்டு செருப்புகளை செய்யுங்கள் ; அவைகளை அணிந்து கொண்டால் வீட்டில் தரையில் நடப்பது போல, தண்ணீரிலும் நடக்கலாம்.
ஸ்யோனக் =ஓரோக்ஸைலம் இன்டிகம் OROXYLUM INDICUM செடி).
XXXX
வெண்ணெய், சுவர்ணகைரிகா (ரெட் ஆக்ர் என்னும் இரும்பு தாதுள்ள மண் ), துர்கந்தா, மீன் எண்ணெய் ஆகியவற்றால் எண்ணெய் தயாரிக்கவும். அதை உடம்பு முழுதும் பூசிக்கொண்டு தண்ணீரில் இறங்கினால் முதலையைப் போல எளிதாகத் தண்ணீரில் வலம் வரலாம்.
சுவர்ணகைரிகா /(ரெட் ஆக்ர்) RED OCHRE=is a natural clay earth pigment, a mixture of ferric oxide and varying amounts of clay and sand. In Ancient Egypt, red ochre was used in celebrations as a symbol of life and victory and was used as an early form of cosmetics by women.
துர்கந்தா /Durgandha in India is the name of a plant defined with Allium cepa in various botanical sources. This page contains potential references in Ayurveda, modern medicine, and other folk traditions or local practices It has the synonym Allium ascalonicum auct. (among others).
XXXX
தீ மிதி விழா / பூக்குழி இறங்கல் / நெருப்பு மீது நடத்தல்
Fire Walking in Greece
அட்டைப் பூச்சி, சசிஜா (பிரமாலியா பெர்போரேட்டா தாவரம்), தவளை, பாடலம் (பாதிரி) ஆகியவற்றைக் கொண்டு எண்ணெய் தயாரிக்கவும். அதைப் பாதங்களில் பூசிக்கொண்டு நடந்தால் நெருப்பு உங்களைச் சுடாது ; எளிதாக அனல் மீது நடக்கலாம்
XXXX
முண்டி(Sphaeranthus indicus Linn) , அட்டைப் பூச்சி, ஷைபல் PARMELIA PERFORATA/ பர்மேலியா பெர்போரேட்டா) ஆகியவற்றுடன் தவளைக் கொழுப்பைக் கலந்து பசை அல்லது களிம்பு செய்யுங்கள்; கைகளிலும் கால்களிலும் பூசிக்கொண்டு தீ மீது நடந்தால் அனல் குளிர்ச்சியாக இருக்கும்; உடலுக்கு ஒரு தீங்கும் வராது
XXXX
தண்ணீரில் விழுந்த யோகி
பக்தர்கள் தீ மீது நடப்பதும், தண்ணீர் மீது நடப்பதும் ரசாயனப் பூச்சுகளால் அல்ல ; அவை நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பது ; மனதை ஒருமுகப்படுத்தி சில அற்புதங்களை செய்யலாம் . தவம் செய்து அஷ்டமா சித்திகளையும் பெறலாம். இதன் மூலம் எட்டு வகை அற்புதங்களை நிகழ்த்தலாம் ; ஹட யோகம் போன்ற யோகப் பயிற்சிகளாலும் இப்படிச் செய்யலாம்.
ஆதி சங்கரரின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவர் பத்ம பாதர் (தாமரைக் காலன்); குரு அழைத்தவுடன், நதி குறுக்கே இருப்பதையும் மறந்து, தண்ணீர் மீது ஓடிவந்தார். அவர் கால் வைத்த இடம் எல்லாம் தாமரை மலர்ந்து அவரது பாதங்களைத் தாங்கின ; இதனால் அவருக்கு பத்ம பாதர் / தாமரைக் காலன் என்று பெயர்.
XXXX
சத்ய சாய் பாபாவுக்கு ஹட யோகி சவால்
சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஹட யோகி சத்ய சாய் பாபாவுக்கு சவால் விட்டார்; என்னைப் போல தண்ணீரில் நடக்க முடியுமா என்று சொல்லிவிட்டு பெரும் கூட்டத்தைக் கூட்டி, பத்திரிகையாளர்களையும் அழைத்துவிட்டு, பெரிய நீர்த் தொட்டிக்குள் காலை வைத்தார். தொபுக் என்று தண்ணீரில் விழுந்தார். எல்லோரும் நகைத்தனர் ; அஹங்காரம் , மம காரம் (யான் எனது என்னும் செருக்கு- திருக்குறள் ) இருந்தால் யோகம் பலிக்காது .
2016ம் ஆண்டிலும், 2018ம் ஆண்டிலும் எஸ் ஆர் ராவ் என்ற சர்ச்சைக்குரிய யோகி, தனது ‘ஷோ’ வுக்கு டிக்கெட் வைத்து 600 பேர் முன்னிலையில் முயன்றார் ;பெரிய நீர்த் தொட்டிக்குள் காலை வைத்தார். தொபுக் என்று தண்ணீரில் விழுந்தார். எல்லோரும் நகைத்தனர்; டிக்கெட் பணத்தைத் திருப்பிக்கொடு என்று கலாட்டா செய்தனர் ; மீண்டும் நடக்கும்போது வரலாம் என்று சொல்லி சமாளித்தார்; ஆயினும் அவரால் எந்தக் காலத்திலும் அப்படி தண்ணீர் மீது நடக்க முடியவில்லை .
XXXX
அற்புதங்களின் பட்டியலைத் தரும் தாயுமானவர் மனதை அடக்குவது, அதை விடக் கடினம் என்கிறார்.
கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;
கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;
ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்தைந்து லோகத்தையும்
வேதித்து விற்றுன்ண்ணலாம்;
வேறொருவர் கானாமல் உலத்துலாவரலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடிருக்கலாம்
மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;
சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது!
XXXXX
ஹேம சந்திரர் எழுதிய த்ரிசதிசலாகா புருஷ சரிதத்தில் வரும் விஷயம் பின்வருமாறு:
“ஊசியின் காதில் நுழையும் அளவுக்கு உருவத்தைக் குறுக்கலாம்.
மேரு மலையை முழங்கால் அளவாகக் காட்டும் வரை உயரலாம்
காற்றை விட லேஸாகலாம்.
இந்திரனின் வஜ்ராயுதத்தை விட வலிமை பெறலாம்.
பூமியில் இருந்தவாறே கிரஹங்களைத் தொடலாம்
நீரின் மீது நடக்காலாம். பூமிக்குள் புகுந்து எழலாம்
பொந்துக்குள் நுழைவது போல மலைகளுக்குள் எளிதில் நுழையலாம்.
உருவமே தெரியாமல் மறையலாம்; வானம் முழுதும் வியாபித்தும் நிற்கலாம்.”
அஷ்டமா சித்திகள் — அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள்.
—SUBHAM—
Tags- சத்ய சாய் பாபா, ஹட யோகி சவால், தீ மிதி விழா, பூக்குழி இறங்கல், நெருப்பு மீது நடத்தல், நீர் மேல் நடக்கலாம்.