WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.154
Date uploaded in London – — 19 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புராணத் துளிகள்! – 1
ச. நாகராஜன்
புராணங்கள் கூறும் வாழ்க்கை நெறிகள் அபாரமானவை.
அவற்றில் சில:
மத்ஸ்ய புராணம்
இந்த லோகத்தில் நல்ல குணம் மற்றும் செல்வத்தில் மேல் நிலை ஒருவருக்கு மாத்ரு பக்தியினால் (தாயாரிடம் பக்தி செலுத்துவதால்) உண்டாகிறது.
மத்யம லோகம் என்று சொல்லப்படும் அந்தரிக்ஷ லோகத்தில் உயர்வு
பித்ரு பக்தியினால் (தந்தையிடம் பக்தி செலுத்துவதால்) உண்டாகிறது.
ப்ரம்ம லோகத்தில் உயர்வு குரு பக்தியினால் உண்டாகிறது.
அக்னி புராணம்
கோடி பசுக்களை தானம் செய்யும் பலன் ஒருவருக்கு மூன்றே மூன்று தினங்கள் ஸ்நானம் செய்வதால் ஏற்படும். ஆனால் இந்த மூன்று தினங்களும் ஸ்நானம், மாசி (மாக) மாதத்தில் ப்ரயாகையில் செய்யப்பட வேண்டும்.
விஷ்ணு புராணம்
எந்த ஒருவன் மனதாலும் வாக்காலும் செயலாலும் மற்றவருக்குக் கெடுதல்களை விளைவிக்கிறானோ அவன் அநேக அசுப ஜன்மங்களை எடுத்துக் கஷ்டப்படுவான். (மோசமான ஜன்மங்கள், மோசமான பலன்கள் உறுதி)
பவிஷ்ய புராணம்
ஹே, சிவ,
ராமாயணம் என்ற பெயரைக் கொண்ட புத்தகத்தை ஒருவன் தானம் செய்தால் அவன் வாஜ்பேய யாகம் செய்த புண்ணியத்தை அடைவான். அவன் விஷ்ணு லோகம் அடைவான்.
கருட புராணம்
மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள். அதை விட குறைவாகவே இருக்கும்.
அதில் பாதி இரவில் கழிந்து விடுகிறது.
அதிலும் பாதி இளமைப்பருவத்தில் கழிந்து விடுகிறது.
அதிலும் வியாதி, சோகம், மூப்பு, ஆகியவற்றில் கழிந்து விடுகிறது.
வாயு புராணம்
பாதையை (நேராகப்) பார்த்து வழி நடக்க வேண்டும்,
நீரை ஆராய்ந்து பரிசோதித்த பின்னர் குடிக்க வேண்டும்.
பேச்சை சத்யமாகப் பேச வேண்டும்.
இதுவே தர்ம சாஸ்திர சம்மதமாகும்.
பத்ம புராணம்
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எதுவாக இருந்தாலும் சரி, அது இருக்கிறதோ இல்லையோ, – சாஸ்திரம் விதிக்கின்ற ரூபத்திலேயே பலன் உண்டாகிறது. வேறு விதத்தில் அல்ல!
மார்கண்டேய புராணம்
எங்கு ஒரு புத்ரனானவன் தந்தை, தேவதைகள், ஆகியவர்களை பூஜிக்கிறானோ எங்கு ஒரு பத்தினியானவள் தனது கணவனுக்கு சேவை செய்கிறாளோ அங்கு தரித்திரம் இருக்காது.
பாகவத புராணம்
எவன் ஒருவனின் சிரவணமும் கீர்த்தனமும் புண்யமயமாக இருக்கிறதோ, அவனை கிருஷ்ணன் தனது ஹிருதயத்தில் வைத்துக் கொள்கிறான். அவனது துர்வாசனைகள் அனைத்தும் அழிந்துபடுகின்றன. ஏனெனில் கிருஷ்ணன் சஜ்ஜனங்களின் இதயத்தில் இருப்பவன்.
கூர்ம புராணம்
அனாசக்தி பாவத்துடன் செய்யப்படும் கர்மங்களால் (செயல்கள்) சென்ற ஜன்மத்தில் செய்த பாவம் இந்த ஜன்மத்தில் செய்த பாவம் ஆகிய அனைத்தும் அழிந்து போகின்றன. மனம் நிர்மலம் ஆகிறது. மனிதன் ப்ரஹ்மவித் ஆகி விடுகிறான்.
ப்ரஹ்ம புராணம்
பாரதத்தில் ஜன்மம் எடுத்த ஒரு உத்தமன் சிறந்தவன் (தன்யன்) அவனுக்கு, தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் ஆகிய அனைத்து புருஷார்த்தங்களும் சித்திக்கின்றன
வராஹ புராணம்
குருவானவர் வித்வானோ அல்லது வித்வான் இல்லையோ சிஷ்யனுக்கு அவரே ஜனார்தனன் ஆகிறார்.
ப்ரஹ்மவைவர்த புராணம்
எவன் ஒருவன் குருவின் ஆக்ஞையை பாலனம் செய்கிறானோ அவனே பண்டிதன், அவனே ஞானி. அவனே கல்யாண்வான். அவனே
புண்யசாலி. அவனது ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் நல்லதே நடக்கும்.
வ்ருஹநாரதீய புராணம்
மூன்று தானங்கள் உத்தமமானவை.
1. கோ தானம் 2. பூமி தானம் 3. வித்யா தானம்
இந்த மூன்றும் ஒருவனை நரகத்திலிருந்து விடுவிக்கிறது. இந்த மூன்றில் வித்யாதானம் இன்னும் சிறந்தது.
ஸ்கந்த புராணம்
பாரதத்தில் ஜன்மம் எடுப்பது, சிவனுக்கு பூஜை செய்வது, கங்கையில் ஸ்நானம் செய்வது, சிவ பக்தி ஆகியவை துர்லபமானவை. (எளிதில் கிடைக்காதவையாகும்)
—subham—