Date uploaded in London – – 19 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
பகுதி 2
நேற்று இதன் முதல் பகுதி வெளியானது
பெங்களூரில் அரிய ராமாயண படங்கள்
கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூரில் ‘மேப்’ Museum of Art & Photography (MAP) என்னும் மியூசியம் உள்ளது. அங்கு காஞ்சன (தங்கம்) சித்திர ராமாயணம் என்னும் புஸ்தகத்தில் எண்பது பக்கங்களை மட்டும் காட்சிக்கு வைத்துள்ளனர். அது பற்றிய விளக்கங்களை ஆடியோ /ஒலி மூலம் கேட்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
காசியில் உதித் நாராயணன் என்ற மன்னர் (Maharaja Udit Narayan Singh of Banaras) சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சன சித்திர ராமாயணத்தை புகழ்பெற்ற தங்க வினைஞர்கள் மூலம் உருவாக்கினார். ஏராளமான தங்கத்தையும் நீலக் கற்களையும் கொண்டு பக்கம் பக்கமாக அரிய ராமாயணக் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்கினார். இதிலுள்ள பக்கங்கள் 500 க்கு மேல். ஆயினும் இதன் மதிப்பை அறியாத பணத்தாசை பிடித்தவர்கள் அதை பக்கம் பக்கமாகப் பிரித்து விற்று வந்தனர். நல்ல வேளையாக ரிச்சர்ட் சிக்னெர் என்ற நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் 1970ம் ஆண்டுகளில் புஸ்தகம் முழுவதையும் ( The book was documented in its entirety in the 1970s by Prof Richard Schechner of New York University, IN 1970s)
(எல்லா பக்கங்களையும ப டம் எடுத்து வைத்திருந்தார். இப்பொழுது மேப் M.A.P மியூசியம் அவற்றில் 80 பக்கங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது.
இதன் சிறப்பினை அறிய உதவும் சில தகவல்கள்
ராஜஸ்தானில் மேவார் மஹாராஜா மஹாராணா ஜகத் சிங் இதே போல மேவார் ராமாயணாவை 17-ம் நூற்றாண்டில் உருவாக்கினார் அதில் 450 ஓவியங்கள்தான் இருந்தன. ஆனால் காஞ்சன சித்திர ராமாயணத்திலோ 548 பக்கங்களில் ஓவியங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பக்கத்திற்கும் எதிராக ராமாயணக் கதையும் எழுதப்பட்டுள்ளது .
இதை காக பூசுண்டி முனிவர் கருடனுக்குச் சொல்லுவது போல எழுதியுள்ளனர்.
ஒரு எடுத்துக்காட்டை பாருல் சிங் எடுத்துக் காட்டுகிறார். அவரும் கவிதா சிங்கும் இந்தப் புஸ்தகத்தை மேப் மியூசியம் மூலமாக 2023ல் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள் . மேப் மியூசியத்தில் இதைக் கட்சியாக உருவாக்கிய கவிதா சிங் புற்றுநோயில் இறந்துவிட்டார். அவருக்கு உறுதுணையாக நின்றவர் , பிஎச். டி . மாணவர் பாருல் சிங் .
ராவணனும் அங்கதனும் ஒருவருக்கு ஒருவர் சவால் விடுவதையும் ஏச்சுப்பேச்சு பேசுவதையும் 9 பக்கங்களில் படமாக வரைந்துள்ளனர். அதில் அவர்களுடைய முக பாவங்கள் எப்படி மாறுகின்றன என்பதைக் கண்டால் அவை எவ்வளவு தத்ரூபமானவை என்பது விளங்கும் என்கிறார் பாருல் சிங்.
இந்த நூலில் வர்ணனை உள்பட 1100 பக்கங்கள் உள்ளன. இதை 1796 முதல் 1814 வரை 18 ஆண்டுகளில் பல்வேறு கலைஞர்கள் வரைந்துள்ளனர் . வரிக்கு வரி தங்க வரிகள். தங்கத்தை அள்ளித் தெளிக்க சிறிதும் தயங்கவில்லை . கலைஞர்களும் பல்வேறு பாணியைப் பின்பற்றுவோர் ஆவார்கள். இதனால் பலர் கைவண்ணத்தைக் காணமுடிகிறது .
இந்த நூல் துளசிதாஸ் எழுதிய ராமசரித மனஸ் நூலை அடிப்படையாகக்கொண்டு வரையப்பட்டுள்ளது.
மியூசியத்திலுள்ள படங்கள் 80ம், ஒரிஜினல் புஸ்தகத்திலிருந்த 548 படங்களிலிருந்து கிடைத்தவையாகும். இவைகளை விளக்கங்களுடன் புஸ்தகமாகவும் வெளியிட்டுள்ளது மேப் மியூசியம் பல்வேறு பாணியைப் பின்பற்றும் கலைஞர்கள் ஒன்றுகூடி இந்த புஸ்தகத்தை வரைந்தால் கலைஞர்களின் பார்லிமென்ட் உருவாக்கிய நூல் இது என்று கூறுகின்றனர் . கலைஞர்களின் பெயர்கள் இல்லையென்றாலும் படங்களை பார்த்தமாத்திரத்தில் அவை அவந்தி ஜெய்ப்பூர், மூர்ஷிதாபாத், டில்லி, லட்சுமணபுரி பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பது தெரிகிறது.
போர்க்களத்தில் லெட்சுமணன் மூர்ச்சையாகி விழுந்தவுடன் அனுமன், சஞ்சீவினி மூலிகையைக் கொண்டுவரும் காட்சி ஒரே படமாக வரையப்பட்டுள்ளது. பல ஓவியங்களில் நூற்றுக் கணக்கான கதா பாத்திரங்களையும் காணலாம். 18 ஆண்டுகளில் உருவான இந்தப் புஸ்தகத்துக்கு அந்தக் கால பணத்தில் ரூ 150,000 செலவழிந்தது. இந்தக் காலக் கணக்கில் அது பல கோடிகளாகும் . இந்த புஸ்தகம் வெளியானவுடன் மேலும் பல புஸ்தகங்களை, ஓவியங்களை அச்சிட பலரும் முயற்சித்தனர். ஆயினும் காஞ்சன ராமாயணத்தை மிஞ்ச எவராலும் இயலவில்லை.
–subham—
Tags- மேப்’ மியூசியம் , Museum of Art & Photography (MAP) , காஞ்சன சித்திர ராமாயணம், ராமசரித மனஸ், காக பூசுண்டி முனிவர், மன்னர் உதித் நாராயணன், தங்கத்தில் ராமாயணம்