Date uploaded in London – – 20 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
மூலிகை Part 24
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—24
246 . குழந்தைகள் இருமலுக்கு
குண்டுமணி வேரைக்கொண்டுவந்து புது வேராய்ப் பார்த்து இரண்டு அவுன்சு எடுத்து சிதைத்து அரைப்புட்டி ஜலத்தில் போட்டு அரை மணி நேரம் வரை வேகவைத்து வடிகட்டி அதில் எட்டவுன்சு கற்கண்டாவது தேனாவது கலந்து மறுபடியும் அடுப்பேற்றி காய்ச்சி பாகுபதத்தில் இறக்கி வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு 4-5 வேளை கொடுக்கலாம். இருமல் சாந்தியாகும் குண்டு மணி வேருக்கு நாட்டு அதிமதுரம் என்ற பெயருமுண்டு.
XXXX
குழந்தைகள் வாய்ப்புண்ணுக்கு
குண்டுமணியின் இலையின் சாற்றை கு ழந்தைகள் வாயில் வெள்ளை நிறமாகக் காணும் புண்களுக்கு கொஞ்சம் தடவி விட்டால் குணமாகும்.
XXXX
குழந்தைகள் மாந்தத்திற்கு
பொதுப் பிரயோகம்
குட்டி விளாம்பாலையை வதக்கி சாறு பிழிந்து ஆமையோடு வசம்பு இரண்டும் சுட்டுக் கரியாக்கி பொடி செய்து கொஞசம் போட்டுக் காய்ச்சி 1 அல்லது 2 சங்கு வீதம் மூன்று வேளை கொடுக்க சகலமும் சாந்தியாகும்
XXXX
கூ
கூந்தல் குதம்பையிலையைப் பாலில் அரைத்துக் கலக்கியுட்கொண்டுவந்தால் குலையைப் பற்றிய ரோகமும் ஜென்னிபத ரோகமும் மகா வைத்த ரோகமும்ஒழு க்கும் பித்தத்தை விருத்தி செய்யும் கிரமப்படி உபயோகித்தால் மண்டூரத்தை செந்தூரிக்கும்
கூழைக் கிழங்கு
மேனியிடும் வாய்க்கு மிருதுவாகு மாக்கியுண்டால்
தானிருமல் வெப்பதிக தாகமில்லை — யேனிருக்கு
மம் பேரிளங் கிழங்கு யாவருக்கு மாணப்பூங்
கொம்பே கூழைக்கிழங்கைக் கூறு
கூழைக்கிழங்கை சமைத்து உட்கொண்டுவந்தால் தேக புஷ்டியுண்டாகும் இருமல் , சுரம் தாகம் இவைகளை போக்கும்; தின்பதற்கு இனிப்பாகவும் வாய்க்கு உணவாகவுமிருக்கும் .
XXXX
கெ
இரத்த வெள்ளைக்கு
கெச்சக்காய் = கழற்சிக்காய்
கெச்சக்காயிலையை இடித்து சாறு பிழிந்து அரைப்பல ம் எடுத்து அரையாழாக்கு தயிரில் கலந்து காலையில் கொடுக்கவும் . சிறு லவங்கப்பட்டையை அரைத்து களஞ்சிக்காயளவு மாலையில் கொடுக்கவும்.
கடும் பத்தியமிருக்கவும் ; இப்படி 3 அல்லது 5 நாள் கொடுக்கவும் .
XXXX
விரை வாதத்திற்கு
கெச்சக்காய் = கழற்சிக்காய்
கெச்சக்காய் பருப்பு 4 எடுத்து கோழிமுட்டை வெள்ளை அம்பில் விட்டு அரைத்து வடைபோல் தட்டி ஒரு பலம் சித்தாமணக்கெண்ணெய் அடுப்பிலேற்றி மேற்படி வடையைப்போட்டு நண்ராய்ச் சிவக்க சுட்டு எடுத்து அதி மாலை யில் அந்த வாடையைத் தின்றுவிட்டு அதில் மிஞ்சியிருக்கும் எண்ணெயைக் குடித்து விடவும். 5-6 விசை பேதியாகும் . இச்சா பத்தியம் . இப்படி மூன்று நாள் கொடுக்கவும் .
XXXX
விரை வீக்கத்திற்கு
கெச்சக்காயிலையை துளி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி விரையின் மேல் வைத்துக் கட்டி வைக்கவும். காலியில் பே திக்கு சாப்பிடவும் .
கெச்சக்காய் = கழற்சிக்காய்
XXXX
கே
254- கேணி ஜலம்
ஆசாரக்கேணி நீரருந்த வதிதாகம்
வீசாகச் சூடு பசி மெய்க்காந்தல் — மாசூலை
மெய்யுள் வலிசந் துளைப்பு வீழ் மயக்கம் சோகை பி த் தம்
பையவரு மிணையும் பார்
கேணி என்னும் குற்றமில்லாத கிணற்று ஜலத்தை அருந்துவதினால் மிகுந்த தாகம்– உஷ்ணம்– தீபனம் –தேக அழலை—சரீரத்துட் கடுப்பு– இடுப்பு குடைச்சல் –மயக்கம் — வீக்கம்– பித்தகோஷம் — சுவாசம் இவை நீங்கும்- கண் பிரகாசம் கொடுக்கும் — ஆனால் நீடித்து அருந்த வேண்டும் .
–சுபம்–
Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 24, கெச்சக்காய், கழற்சிக்காய், குண்டுமணி, கேணி ஜலம்