Date uploaded in London – – 22 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்களில் இன்னுமொரு குறிப்பிடத்தக்க பொருள் பீரங்கிக் கடிகாரம் ஆகும். அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் நண்பகல் நேரத்தைக் குறிக்க இதை பயன்படுத்தியதால் இதை நண்பகல் பீரங்கி NOON CANON என்றும் அழைத்தனர். இது சூரிய ஒளியால் இயங்குவது. சூரியஒளியானது நடுப்பகல் நேரத்தில் லென்ஸ் என்னும் பூதக்கண்ணாடி மீது விழும் வகையில் ஆடிகள் இருக்கும். அப்பொழுது விழும் ஒளி குவியும் இடத்தில் வெப்பம் அதிகரிக்கும். அது பீரங்கிக் குண்டு மீது விழுந்து அதை வெடிக்கச் செய்யும் (படத்தில் காண்க )
அங்குள்ள மார்பிள் / சலவைக்கல் சிலைகளும் அழகானவை . நம்முடைய நவராத்ரி கொலு பொம்மைகளைப் போல காட்சி தருகின்றன. அரண்மனை முழுதும் காணப்படும் மரவேலைகளைப் பார்த்து ரசிக்கும்போது, இவைகளை செய்ய எவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதை ஊகித்தறியலாம்.
பலவிதமான விளக்குகளும் காட்சியில் உள்ளன. இவைகளைப் பார்த்தபோது கொழும்பு மியூசியம் என் நினைவுக்கு வந்தது . இப்பொழுதும் மலையாளக் கோவில்களில் தீபங்கள் மிகவும் புகழ்பெற்றவை. கோவில் வாசலில் விளக்குகள் இருப்பதோடு பிரகார சுவர்களிலும், மரச் சட்டங்களிலும் விளக்குகளை வைத்து லட்ச தீப விழாக்களைக் கொண்டாடுகிறார்கள் .
காட்சிக்கு வைத்துள்ள அரண்மனை மியூசியம் தவிர உண்மையில் மன்னர் குடும்பம் வசிக்கும் அரண்மனைகளும் உள்ளன. அவை திருவனந்தபுரம் கோவில் ரகசியங்கள் போல மறைந்து இருக்கின்றன.
தற்காலத்தில் தந்தத்திலான பொருட்கள் தடை செய்யப்பட்டுவிட்டன. யானைகள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உலக நாடுகள் இதை அமல்படுத்தியுள்ளன. ஆயினும் அரண்மனை மியூசியத்தில் பழங்கால தந்தங்களும், தந்த சிம்மாசனங்களும் அப்படியே இருக்கின்றன. சங்கத் தமிழ் இலக்கியம், காளிதாசன் காவியங்களில் தந்த சிம்மாசனம், தந்த உலக்கை பற்றியெல்லாம் காணலாம்.
விக்ட்டோரியா மஹாராணிக்கு திருவாங்கூர் மன்னர் தந்த சிம்மாசனம் ஒன்றை அனுப்பினார்.
—subham—
Tags- பாலஸ் அதிசயங்கள் 8 , மார்பிள் சிலைகள் , பீரங்கிக் கடிகாரம், தந்த சிம்மாசனம், Palace Museum, Rare objects, Part 8, Thiruvananthapuram, Ivory, Noon Canon