கொண்ணைக்காய்,
Date uploaded in London – – 24 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 25
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
மூலிகை Part 25
xxxx
255. கை
காமாலை
கையாந்தகரை அல்லது கரசனாங் கண்ணியாம்
பொற்றலைக் கையாந்தகரை பொன்னி மரமாக் கும் உடலை
சுத்தமுறக்கட்டும் சுரங் கெடுக்கும் — சிற்றிடையாய்
சிந்தூரம் செலவாகும் சிந்தைதனைத் துலக்கும்
முந்திவரு குன்மமொழிக்கும்
கையாந்தகரை தும்பை, அம்மான் பச்சரிசி வகைக்கு ஒரு பிடியெடுத்து இடித்து சாறு பிழிந்து அதில் பனிரெண்டு மிளகு எண்ணிஎடுத்து அரைத்துக் கலக்கி அத்துடன் வெள்ளாட்டுப் பாலாவது ஆவின் பாலாவது கால் படி விட்டுக் கலக்கி சீனி சக்கரை ஒரு விராகநிடை போட்டுக் கொடுக்கவும். இப்படி ஆறு நாள் கொடுக்க காமாலை நிவர்த்தியாகும் .
XXXX
கொ
வாய்வினாலுண்டான உடம்புக் குத்தலுக்கு
கொடிவேலி வேரின் பட்டை, பரங்கிப்பட்டை பிரப்பங்கிழங்கு – மிளகு வகைக்கு விராகநிடை 3 எடுத்து , இடித்து 4 படி ஜலத்தில் போட்டு அரைப்படி கிஷாயமாக இறக்கி நாளொன்றுக்கு மூன்று தரம் அரிக்கால் (அரைக்கால்) படி வீதம் கொடுத்தால் மேற்படி வியாதி தீரும் .
XXXX
பித்த மூல கிராணிக்கு
கொட்டக்கரந்தையும் சீரகமும் சரியிடையாய் எடுத்து அரைத்து வில்லை தட்டி நல்லெண் ணெயில் வேகவைத்துத் தின்றால் மலம் வெண்மையாயும் உத்திரமாயும் கழித்தல் காத்து பரிதல் இவை தீரும் .
XXXX
சுளுக்கு சுரத்திற்கு
கொத்தமல்லி சுக்கு மிளகு திப்பிலி பேராமுட்டி – வகைக்கு விராகநிடை 3 எடுத்து ஒன்றிரண்டாயிடித்து அரைப்படி ஜலத்தில் போட்டு அரைக்கால் படியாக இறக்கி ஒரு நாளைக்கு மூன்று தடவை கொடுக்கவும் .
XXXX
அக்கி முதலிய சிறு விஷத்திற்கு
கொல்லன் கோவைக்கிழங்கை (ஆகாசக்கருடன் கிழங்கு ???) வஸ்திரகாயம் செய்து சரியிடை சீனி கூட்டி திருகடிப் பிரமாணம் இரு வேளையும் தின்று வந்தால் அக்கி அரிப்பு குடல் நோய் கண்டமாலை கிரந்தி சில்லறை விஷங்கள் யாவும் தீரும் .
XXXX
கிருமி பேதி
கொண்ணைக் கொழுந்தை உப்பில்லாமல் வெவித்து இரவில் படுக்கப்போகும்போது தின்றுவிட்டு காலையில் கொஞ்சம் சித்தாமணக்கெண்ணெய் புசித்தால் பேதியாகும் திமிர் பூச்சிகள் வந்துவிடும்.
XXXX
மலச்சிக்கலுக்கு
கொண்ணைக்காய், கொழுந்து இவைகளைக் கிஷாயம் வைத்து அருந்தினால் வயிற்று வலி வாய்வு தீரும்; மலச்சிக்கலைக் கண்டிக்கும்; சமமாயெடுத்து கிஷாயம் செய்து அந்தி சந்தியில் கொடுத்து வரவும் ; பால் அன்னம் புசிக்கவும்
(அதை பின்னங்காய் என்றும் கூறுவார்கள் “குண்டு விளையாடுவதற்கு பயன்படும்,அதன் ஓடு காய்ந்தபின் “பிரவுன்”கலரில்”அக்குரூட்”போலவும் இருக்கும் ஓடு ஓங்கி தட்டினால் உடைந்துவிடும், )
xxxx
வெள்ளைக்கு
கொடிக்கள்ளிக் கொழுந்தை அரைத்து எலுமிச்சங்காயளவு எடுத்து அத்துடன் 32 மிளகு அரைத்து கலந்து வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு கொட்டைப்பாக்களவு கொடுக்கவும். இப்படி 3 நாள் கொடுத்து பசும் மோரும் சாதமும் கொடுக்கவும்; உப்பாகாது
xxxx
சிறு சிரங்கு சொறி சிரங்கு
கொடிக்கள்ளியை வாட்டிச் சாறு பிழிந்து வயதிற்கும் திரே க பலத்திற்கும் தக்கபடி நிதானம் பார்த்துக் கொடுத்தால் நிவர்த்தியாகும்.
xxxx
பசியுண்டாக
கொழிஞ்சி வேர் கிஷாயம் வைத்து அதில் சீனி கொஞ்சம் போட்டு நோயாளிகளுக்கு கொடுத்துவந்தால் பசியுண்டாக்கும் .
—subham—
Tags- முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—25