முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 27 (Post No.13,189)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,189

Date uploaded in London – –   29 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 27

xxxx

278. பிரமியத்திற்கு

சந்தன மூலம், அதாவது சந்தன மறைத்து வேரின் பட்டையை ஆப்பிளில் அரைத்துக் காய்ச்சி யுண்டுவந்தால் மேகம்- பிரிமியம் தீரும். தேகத்தில் அழகுண்டாகும் .

இதுவுமது

சந்தன மூலத்தைக் கிஷாயம் வைத்து உண்டுவந்தால் மேற்கூறியவியாதிகள் தீரும்.

இதுவுமது

சந்தன அத்தர் முதல் தரமானது அரைக்கால்  ரூபாயிடையெடுத்து ஒரு செவ்விளநீரைக் கண்திறந்து அதில் விட்டு நன்றாய்க்  குலுக்கி சாப்பிடவும். இப்படி மூன்று வேளை சாப்பிட்டால்  கொடூரமான வெள்ளையுடனே  தீரும்..

XXXX

அஸ்தி காங்கை தீர

சதையொட்டி இலையாய்ப் பாலில் அரைத்துக் கலக்கி உண்டு வந்தால் வெட்டை எரிவு காந்தல் இவை தீரும்.

xxx

வண்டு கடி சொறி தேமல் தீர

சரக்கெண்ணெய் மூலத்தைப் பாலில் அரைத்து கலக்கி உண்டு வந்தால் வண்டு கடி சொறி தேமல்  விஷ நீர் முதலியவை தீரும்.

xxxx

பித்த குன்மசாந்தி

சத்திசாரணை மூலத்தை  பால் விட்டரைத்து பில்லை  தட்டியுளர்த்திப் பொடி செய் து கொஞ்ச ம் சீனி கலந்து வைத்துக்கொண்டு திருக்கடிப் பிரமாணம் நெய்யிலாவது தேனிலாது உண்டுவந்தால் பித்த குன்மம் சாந்தியாகும் . பத்தியமில்லை

xxxx

மேக சூட்டுக்குத் தைலம்

சவுரிப் பழம் 2- மிளகு 1 பலம்  இதுகளை பசும்பால் விட்டரைத்து கால்படி நல்லெண்ணெயிற் கரைத்துக் காய்ச்சி  வடித்து  தலை முழுகி வந்தால் மேக சூடு சாந்தியாகும் .

xxxx

மேக வியாதிக்கு

சங்கம் குப்பிச் சாற்றை தனியாயாவது ஆமணக்கெண்ணெய்யுடன் கழண்டாவது  கலந்தாவாவது , காலையில் ஒரே வேளை யாக சுமார் ஓன்றரைப் பலத்திற்கு குறையாமல் கொடுத்துவந்தால் இரண் டொரு  தடவை வலம் உதையும் . கண்டமாலை – மேகவெள்ளையிவை சாந்தியாகும் .

xxxx

நாசிகாபரணம்

சமுத்திராப்பழ த்தைச்  சூரணித்து , மூக்கிலுள்ள ரிணங்களுக்கு நசியம் செய்துவந்தால் மூக்கு  ரிணம் ஆறும். தலை பா ரம் தீரும் .

xxxx

மயிர் வளர

சடாமாஞ்சியை  எண்ணெயிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு தலை முழுகி வந்தால் மயிர் வளரும். சற்று வாசனையுள்ளதா கவுமிருக்கும் .

xxxx

மாந்தங்களுக்கு

சதா ப்பிலையை சித்தாமணக்கெண்ணெயுடன்  காய்ச்சியாவது , மேற்படி இலைச்  சாற்றைத் தனியாயாவது  குழந்தைகளுக்கு உபயோகித்து வந்தால் மாந்தம் அணுகாது .

xxxx

கபம் அல்லது சிரசு நோய்

சதக்குப்பையை சூரணி த்து சக்கரை கூட்டி திருகடியளவுண்டுவந்தால் கபம் – சிரசு  நோய் – செவி  நோய் – பீனிசம் – மூலக்கடுப்பு- இவை சாந்தியாகும்.

xxxx

தாது நஷ்டத்திற்கு

சண்பக மொக்கைக் கிஷாயம் செய்து , பால் சக்கரைபோட்டு உட் கொ ண்டுவந்தால்  அஸ்தி சுரம் – பித்த சுரம் – கண் அழலை – மேகம் இவை தீரும் ; தாது கட்டும் .

xxxx

நாடியிருக

சத்தி சாட்டரணை மூலத்தைச் சூரணித்து சக்கரை கலந்து திருகடியளவு உண்டுவந்தால்மேகம் விப்புருதி தீரும்.

விந்து உண்டாகும் .

xxxx

290. வயிற்று நோவுக்கு

சப்பாத்தி சமூலத்தைக் கொண்டுவந்து எண்ணெயுடன் சேர்த்துக்  காய்ச்சி  பிரசவ வேதனை போன்ற வயிற்று நோவுக்கு க் கொடுக்கப்படும் .

xxxx

தகுந்த ஆகாரம்

சவ்வரிசியை அரை அவுன்ஸுயெடுத்து  நாலு திராம் தண்ணியில் போட்டு 2 மணிநேரம் ஊறிய பின் அடுப்பிலேற்றி கால் மணி நேரம் வேகவைத்து அதன்பின்பு பசும்பாலும் சக்கரையும் கலந்து இறக்கி வாசனைக்காக கொஞ்சம் ஜாதிக்காய் தூளாவது கருவாப்பட்டை தூளாவது கலந்து சாப்பிட்டால்  கொடிய ரோகம் இருமல் இவைகளால் அவஸ்தைப்படும் பலவீனமுடையவருக்கு நல்ல பலனையுண்டுபண்ணும் . கைகால் அசதி நீங்கும். இது எத்தனை தடவை வேண்டுமானாலும் அவ்வப்போது செய்து கொடுக்கலாம்.

xxxx

சக்கரை வேம்பு இலை

காயசித்தியாகும் கட்டிய சிலேஷ்மமறும்

தூயவிந்துநாதமிவை சுத்தியாம் — தூய்வதற்கு

எத்திக்குங் கிட்டும் இலையருந்தில்  வாயெல்லாம்

தித்திக்கும் வேம்பதையே தேடு

பொருள்

சக்கரை வேம்பு — இஃ து தூயவர்களுக்கு எ த்திக்கிலும் கிடைக்கும் .இந்த சக்கரை வேம்புயிலையை விடாமல் மண்டலக்  கணக்காய்த் தின்றுவந்தால்  காயசித்தியாகும்;   இரத்தம் இருகும் . சுக்கில சுரோணிதங்கள் சித்தியாகும். இதைத் தின்றால் வாய் தித்திக்கும்.

xxxx 

காணா வாய்வுகட்கு

சந்திரமல்லி மூலத்தைப் பாலில் அரைத்தருந்தி வந்தால்  தனுர் வாதம் முதலியதும்  உடம்பு வாதிக்கும் காணா வாய்வுகள் யாவும் தீரும்.

xxxx

உந்தி நோவுக்கு

சந்திரகாந்தி சமூலத்தைப் பால் விட்டரைத்து பாலில் கலக்கி யுண்டுவந்தால் நாபியிலுண்டாகும்  தழலெரிச்சல் – நீர்க்கடுப்பு இவை தீரும் .

xxxx

வியாதியுற்பத்தி

சக்கரைவள்ளிக் கிழங்கை அடிக்கடியுண்டு வந்தால்  வயிற் ம ந்தம் – முளை மூலம் – வயிற்றெ ரிச்சல் – வயற் கடுப்பு – மருந்து முறிவு  இத்தனை துற்குணங்களுண்டாக்கும்

xxxx

296. சொறிகளுக்கு

சரக்கொன்னை பூவை எலுமிச்சம்பழச் சாறு விட்டு  அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி – கரப்பான்- தேமல் – இவை தீரும்.

தொடரும் …………..

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 27 ,சதையொட்டி, சந்திரகாந்தி,சடாமாஞ்சி , சதகுப்பை 

Leave a comment

Leave a comment