ரமணர் பற்றிய சுவையான புதிய நூல் ‘அஹம் ஸ்புரணா’ (Post No.13,192)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,192

Date uploaded in London – –   30 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ரமணர் பற்றி  எவ்வளவோ நூல்கள் வந்துவிட்டன; அவர் சமாதி அடைந்தோ 75 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி 30-12-1879 TO 14-04-1950

இன்னும் புதிய நூல்களா ? ஆமாம் அஹம் ஸ்புரணா – ஆத்ம ஞானத்தின் ஒளிக்கீற்று  என்ற புதிய நூல் புதிய விஷயங்களுடன் வெளி வந்துள்ளது.

எப்போது?

2023ம் ஆண்டு

யார் வெளியிட்டது ?

ஒப்பன் ஸ்கை பிரஸ் OPEN SKY PRESS

அஹம் ஸ்புரணா என்றால் என்ன பொருள் ?

ஸ்புரணா என்றால் துடிப்பு. நான் என்னும் துடிப்பு என்பதே தலைப்பு

என்ன புதிய விஷயங்கள் உள்ளன?

1936 ஆம் ஆண்டு கஜபதி ஐயர் என்பவர் திருவண்ணாமலையிலுள்ள  ரமணாஸ்ரமத்துக்கு வந்தார். ஆங்கில இலக்கியத்தல் புலமை பெற்றவர். அவர் ஆச்ரமத்தில் தங்கிய ஆறு மாத காலத்தில் ரமணரின் உரையாடல்களை அப்படியே குறிப்பு எடுத்து வைத்திருந்தார்.  அந்தக் குறிப்பேட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் புஸ்தகமாக வெளியிட்டார்கள்.

அதை பெங்களூரு சந்தானம் நாகராஜன் அப்படியே தமிழில் அற்புதமாக மொழிபெயர்த்து தந்துள்ளார்.

சந்தானம் நாகராஜன், இளம் வயதிலேயே  மதுரை சொக்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள ரமணர் வீட்டிற்குச் சென்று தியானம் செய்தவர் . நமது பிளாக்கில் எண்ணற்ற ரமணர் கட்டுரைகளை எழுதியவர். அப்படி ஆழம் இருந்ததால் மொழிபெயர்ப்பில் தெளிவும் இருக்கிறது . . ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மஞ்சரி , காஞ் சி பரமாசார்யாரின் (1894- 1994)  தெய்வத்தின் குரல் போல எளிதில் ரமணர் உரைகளைப் படித்துவிடமுடியாது ; ஏனெனில் உயர்ந்த தத்துவ விசாரணையை அவர் திரும்பத் திரும்ப சொல்கிறார் . நான் யார் என்று சிந்திக்கச் சொல்கிறார். இந்தக் கருத்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு பதில் வழியாக வரும்

xxxx

இந்தப் புஸ்தகத்தில் ஒரு தனிச் சிறப்பு

எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் நீங்கள் படித்து புதிய விஷயங்களை அறியலாம். தொடர்ச்சியாக படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படி படித்தாலும் அதிலும் பலனுண்டு.

எத்தனை பக்கங்கள் ?

362+ அட்டைகள்

விலை என்ன?

புஸ்தகத்தில் விலை குறிப்பிடப்படவில்லை.

எத்தனை அத்தியாயங்கள் ?

ஐம்பதுக்கும் மேலான அத்தியாயங்கள்

1936 ஜூலை 6 முதல் 1936 செப்டம்பர் 30 வரையில் ஆஸ்ரமத்தில் என்ன நடந்தது என்ற சுவையான விஷயங்களை அறிய முடிகிறது. 

xxxx

வேறு என்ன உள்ளன ?

ரமணரின் , அவர்களுடைய சீடர்களின்,  அற்புதமான படங்கள் உள்ளன . காஞ்சிப் பெரியவர்  பால் பிரன்டன் ( PAUL BRUNTON ) என்பவரை ரமணரிடம் அனுப்பியதும் அவர் A SEARCH IN SECRET INDIA   செர்ச் இந்த சீக்ரெட் இண்டியா என்ற புகழ்மிக்க புஸ்தகத்தையும் நாம் அறிவோம். அவருடைய படமும் உள்ளது.

ஒபன் ஸ்கை பிரஸ் இயக்குனர் ஜான் டேவிட் எழுதிய முன்னுரையில் புஸ்தத்தின் தேவை, அதை உருவாக்கும்போது ஏற்பட்ட இடர்ப்பாடுகள் ஆகியவற்றை எடுத்துரைத்துள்ளார். அதைப் படித்தவுடன் புஸ்தகத்தின் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடி விடுகிறது. புஸ்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த பெங்களூரு நாகராஜன், மற்றும் தட்டச்சு செய்து உதவிய பலருக்கும் நன்றியுரை கூறியிருக்கிறார்.

கஜபதி ஐயர் 1948ம் ஆண்டு தான் எடுத்த குறிப்புகளுடன் ரமண மகரிஷியை சந்தித்தார். உடனிருந்த ராஜேஸ்வராநந்தாவும் புஸ்தகமகா அது வெளியாவதற்கு ஆதரவு தெரிவித்தார்.

பகவான் ரமணர் சிரித்தவாறே சொன்னார் ,

பார் இந்தக் குழந்தை எவ்வளவு அழகாக எல்லாவற்றையும் எழுதி இருக்கிறது .

ரமணர் அனுமதியின்றி குறிப்பு எடுத்ததை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தபோதும் பரவாயில்லை என்று ஒரே வரியில் ‘அப்ரூவல்’ கொடுத்துவிட்டார் பகவான்.

திருவண்ணாமலை அதிதி ஆஸ்ரமத்தின் நிறுவனர் சுவாமி ஹம்சானந்தா எழுதிய அழகான முன்னுரையில் இந்தப் புஸ்தகத்தில் பெருமையை எடுத்துரைக்கிறார் . இதில் உள்ள விஷயங்களை  ஐயப்படவேண்டியதில்லை என்று அவரும் முத்திரை குத்தியுள்ளார்

புஸ்தகம் முழுவதையும் சுருக்கித் தருவது மதிப்புரையாகாது  ; ஆகையால் இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் தருகிறேன்

16 ஜூலை 1936

காலமும் விஞ்ஞானமும்

காலம் பற்றி அருமையாக விளக்கும் ரேவதி-காகுத்தமி கதை (THEORY OF TIME DILATION) இதில் உள்ளது. 1930-களில் ஐன்ஸ்டீனின் கொள்கைகள் பெரிதும் விவாதிக்கப்பட்டதால் ரமணர் இதுபற்றி பேசியிருக்கலாம்.

இன்னும் ஒரு சுவையான விஷயம் !

ஒரு சின்னப்பையன் ஆஸ்ரம தியான மண்டபத்தில் பம்பரம் விளையாடினான் . எல்லோருக்கும் அது தொல்லை தந்தது. பையனின் அப்பா, உடனே நிறுத்து என்று அதட்டினார். அப்பா, இந்த பம்பரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது; அது ஆடி முடித்தவுடன் நன் இனிமேல் விளையாடவில்லை என்றான். தந்தைக்கோ கடும் கோபம். அவனை அப்படியே தூக்கித் தாயின் மடியில் அமர்த்திவிட்டுப்போன்னார் . தாயும் சிறுவனுக்கு நல்ல வார்த்தை சொல்லி தூங்க செய்துவிட்டார். இத்தனையையும் ரமணரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

சற்று நேரத்திற்குப் பின்னர் சிறுவனின் தந்தை ரமணரிடம் சென்று பல தத்துவக் கேள்விகளைக் கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திருந்தார். ரமணர்  சொன்னார்: உன் கேள்விக்கு உன் மகனே பதில் சொல்லிவிட்டானே (பம்பரம் ஆடி முடியும் வரை காத்திரு) என்றார். அவரவர் பூர்வ ஜென்ம கருமவினை (ஆடி அடங்கும் வரை) ஆடி முடியும் வரை பலன் கிடைக்காது. முயற்சி செய்வதில் தவறில்லை .

இப்படி பல சுவையான நிகழ்வுகளும் புஸ்தகத்தில் இருப்பதால் மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது . அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டிய நூல் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை.

Aham Sphurana | Bhagavan Sri Ramana Maharishi | Open Sky Press | Spirituality | Tamil | Pustaka

₹650.00₹650.00

XXX

OLDR ARTICLE ON THE SAME BOOK

அஹம் ஸ்புரணா – தமிழில் (Post No.12,962)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,962

Date uploaded in London      28 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நூல் மிக அழகிய முறையில் வடிவமைத்துக் கொடுத்தவர் ஓம் என்னும் பகவானின் மேலை நாட்டு பக்தர்.

தமிழில் இதை திருத்தமுற வெளியிட வழி வகுத்தவர் pustaka.comஇன் உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ்.

நூல் பற்றிய விவரங்களை www.openskypress.com இல் பெறலாம்.

இணையதளத்தில் உள்ள பெரும் விற்பனை நிலையங்களில் ஆர்டர் செய்து நூலைப் பெறலாம்.

Opensky pressஇன் Whatsapp நம்பர் : 49 152 22 473 253

xxxx

புத்தக அறிமுகம் , அஹம் ஸ்புரணா ,ரமணர்

Leave a comment

Leave a comment