
Date uploaded in London – 9 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஆந்திர மாநிலத்தில் உள்ள 108 கோவில்கள் – கட்டுரை 5

எங்கே உள்ளது?
ஆந்திரத்தில் கர்நூல் மாவட்டத்தில் நந்தியால் அருகிலுள்ளது. திருப்பதியிலிருந்து 500 கி.மீ . தொலைவு. சென்னை , திருப்பதி முதலிய நகரங்களிலிருந்து பஸ்கள் செல்கின்றன.
ஹைதராபாத் நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது.
மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும். இரவு நேரத்தில் மலையில் செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ஏனெனில் அடர்ந்த காட்டு வழிப்பாதை அது.
ரயிலில் போக வேண்டுமாயின், சென்னை- விஜயவாடா பிரிவில் வரும் ஓங்கோல் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 180 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீசைலத்தை பேருந்துகள் மூலமாக அடைய முடியும்.
XXXX
சிறப்புகள் என்ன?
12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்று. தங்கக் கவசமிட்ட கோபுரம் ஜொலிக்கும் கோவில் இது
18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றகாவும் திகழ்கிறது
ஆதி சங்கரர் தன்னுடைய புகழ்பெற்ற ‘சிவானந்த லஹிரி’ எனும் துதியை இயற்றிய இடம்.
நந்தி அவதரித்த தலம் ஸ்ரீசைலம் ஆகும்.
தேவாரம் பாடல் பெற்ற தலம் ஸ்ரீசைலம் ; :தேவாரம் பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
புராண பெயர்(கள்): திருப்பருப்பதம்
மூலவர்: மல்லிகார்ஜுனர்,(ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
தாயார்: பிரமராம்பாள், பருப்பநாயகி
தல விருட்சம்: மருதமரம்

பிரமரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வண்டு என்று பொருள். மல்லிகா என்றால் மல்லிகை மலர் ; அர்ஜுனன் என்றால் மருத மரம்; மல்லிகை மணமுடைய சிவனை அம்பிகையான வண்டு சுற்றிக்கொண்டே இருப்பதால் அவள் பெயர் பிரம ராம்பா
நாராயண தீர்த்தர் பாடிய க்ஷேமம் குரு கோபால பாட்டிலும் கூட அவர் கிருஷ்ணனைச் சுற்றி துதி பாடும் பிரமரமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்.
இங்குள்ள பிரம்மராம்பிகை அம்பாள் சன்னதி 51 சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும், 18 மகா சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சொற்பொழிவில் மூன்று மருத மரத் தலங்களை அழகாக விளக்குகிறார். ஆந்திரத்தில் முதல் மருத மரத் தலம் ஸ்ரீ சைலம். கடைசியில் தமிழ் நாட்டிலுள்ள தலம் திருப்புடை மருதூர் ; இதற்கு இடைப்பட்ட தமிழ்நாட்டுத் தலம் திரு இடை மருதூர் . மூன்றிலும் சிவபெருமான் வீற்றிருக்கிறார் .
அன்னை பிரமராம்பாள் அருளோடு சிம்ம வாகனம் பெற்று கருணையே வடிவாய் காட்சி தருகிறார் . இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.
இங்குள்ள மிகப் பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது.
கர்ப்பகிரகத்தில் உள்ள ஜோதிர்லிங்கம் ,. அர்ஜூனனின் வில்லால் அடிபட்ட வடுவுடன் காணப்படுகிறது.
காசி நகர் விஸ்வநாதர் கோவிலைப் போலவே லிங்கத்தின் மேல் பக்தர்கள் சுவாமியின் அருகில் சென்று வில்வம், மலர்கள் போட்டு லிங்கத்தைத் தொட்டுக் கும்பிடலாம்.

ஸ்ரீசைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. கந்த புராணத்தில் ஸ்ரீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக்கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது
கிருதயுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும், ஆதிசங்கரரும், பூஜைகள் செய்த புண்ணிய தலம்.
நாயன்மார்கள் , ஆதிசங்கரர் முதலிய சிவ பக்தர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்ததால் இதன் பழமை தெரிகிறது
நந்தி தவம் செய்த “நந்தியால்’ என்ற இடம் மலையின் கீழே உள்ளது.
இந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக்கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்க, திட்டமிட்டார் ஆனால்
ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி பெரிய வாள் ஒன்றை அளித்து முஸ்லீம் மன்னர்கள் ஆட்சியை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். . கோவிலின் உள்ளே அன்னை வீரவாள் வழங்கிய காட்சி சிற்பமாக கண்ணை கவர்கிறது. இதே போல ஒரு படத்தை சென்னை காளிகாம்பாள் கோவிலிலும் காணலாம். சிவாஜி சென்னை வரை வந்து காளிகாம்பாளையும் தரிசித்தார்.
மல்லிகார்ஜூன ஆலயம் மிகப்பெரியது. பல வம்சத்து அரசர்களால் இங்கு பல பாகங்கள் கட்டப்பட்ட இக்கோவிலைச் சுற்றி 20 அடி உயரம் கொண்ட கனமான மதில் சுவர் உள்ளது. கருவறையில் விமான உச்சியின் நான்கு மூலைகளிலும் தரிசூலங்கள் பொருத்தப் பட்டுள்ளன. மைசூர் லிங்காயத் குலத்தைச் சார்ந்த வீரசைவர்களே பரம்பரையாக பூஜைகளை நடத்துகின்றனர்.
சிவராத்திரி அன்று 180 மீட்டர் நீளமுள்ள வெண் ஆடையை கீழிருந்து கோபுரம் வரை சென்று நந்தி மண்டபத்தையும் பிணைத்து அலங்காரமாகச் சுற்றப்பட்டிருக்கும். இதற்கு `மங்களபாக’ என்று கூறுகிறார்கள். விழா முடிந்தவுடன் பிரசாதமாக இத்துணி விநியோகிக்கப்படுகிறது.

மூலவர்: மல்லிகார்ஜுனர்,(ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்).
அம்மன்: பிரமராம்பாள், பருப்பநாயகி
தல விருட்சம்: மருதமரம், திரிபலா
தீர்த்தம்: பாலாநதி
புராண பெயர்: திருப்பருப்பதம்
ஊர்: ஸ்ரீசைலம்
மாவட்டம்: கர்நூல்
மாநிலம்: ஆந்திர பிரதேசம்
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார்,பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி,சேக்கிழார் முதலியோர்
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்.
தேவாரப் பதிகம்!
“சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.
-திருஞானசம்பந்தர்
கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.
ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள், பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் உள்ளன.
தெற்கு வாயில் கோபுரம் “ரங்க மண்டபம்’ எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது.
சனகல பசவண்ணா நந்தி: இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என பக்தர்கள் நம்புகின்றனர்
சாட்சி கணபதி: ஸ்ரீசைல சிகரத்திற்கு 2. கி.மீ. தூரத்தில் சாட்சி கணபதி கோவில் உள்ளது. மஹா விஷ்ணுவானவர், விநாயகரின் உருவத்தில் உட்கார்ந்திருந்திருக்கிறார். நல்லோரை மட்டும் மோட்சத்துக்கு சிபாரிசு செய்வதால் இவர் சாட்சி கணபதி:என்று அழைக்கப்படுகிறார். மலை மீது ஆகாச கங்கை அருவி.
சிவபக்தையான அக்க மகா தேவியின். சிலை ,ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் உள்ளது .
–subham–
tags- ஸ்ரீசைலம், ஜோதிர்லிங்க ஸ்தலம், Part -5 , மருத மரம், பிரம்மராம்பிகை , பிரமரம் , வண்டு , ஆந்திர மாநிலம், கோவில், திருப்பருப்பதம், தே வார தலம் , இடை மருதூர் , புடை மருதூர் ,பசவண்ணா நந்தி,சாட்சி கணபதி, சிவாஜி
















