கயா ஸ்ரார்த்தம்..Facebook item

கயா ஸ்ரார்த்தம்..Facebook item

Posted by London swaminathan on 7th July 2024

GAYA 5 JULY 2024

Koman Raghunathan is with Krishna Veni and Rukumani Raghunathan.

11 h  · 

கயா ஸ்ரார்த்தம்.. இந்தப் புண்ணிய தேசத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதப் பிறப்பும் தனது மரணத்திற்குப் பின் தனது வாரிசுகளில் யாராவது ஒருவராவது கயா வந்து தனக்கான திதியைக் கொடுக்க மாட்டார்களா என ஏங்கித் தவிக்குமாம்.. சில பெற்றோர்கள் பல பிள்ளைகளைப் பெற்றும் எந்தப் பிள்ளையும் இதனைச் செய்யாமல் இருப்பார்கள்.. சிலர் ஒன்றைப் பெற்றிருந்தாலும் அவன் மூலம் அந்தப் பலனைப் பெறுவர்.. சிலருக்கோ பிள்ளைகள் பலர் இருந்தாலும் அத்தனைப் பேருமே கயா சென்று சிரார்த்தம் செய்து அந்த ஆத்மாவைத் திருப்திப்படுத்துவர்.. இந்த ஸ்ரார்த்தம் செய்வது குழந்தைகளுக்கான கொடுப்பினை அல்ல.. பெற்றவர்களுக்கே கொடுப்பினை..

நேற்று ஆக்ராவில் இருந்து புறப்பட்ட நாங்கள் இன்று காலை கயா வந்து சேர்ந்தோம்.. வடக்கே இரயிலில் பிரயாணம் செய்வது பற்றித் தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம்..

தாமதமாக கயா வந்து சேர்ந்தாலும்.. எந்தக் குறையும் இன்றி கயா ஸ்ரார்த்தம் நல்லபடி நடந்தது..

இந்த கயா ஸ்ரார்த்தத்திற்கு ஒரு கதையே உண்டு.. திரேதாயுகம்.. ஸ்ரீராமன் தன்னவளோடும் தன் தம்பியோடும் ஆரண்யத்தில் இருந்த காலம்.. இந்தப் பகுதியில் இருந்த சமயம் தசரதனுக்கு அன்று திதி கொடுக்க வேண்டிய நாள்..

சீதா.. நானும் தம்பியும் காய்கறிகள் தேடியெடுத்து வருகிறோம்.. தயாராக இரு.. இன்று தந்தைக்கு ஸ்ரார்த்தம்.. சொல்லிவிட்டு அண்ணனும் தம்பியும் அங்கிருந்து நகர.. தசரதனின் ஆத்மாவோ பிண்டம் வேண்டி சீதையின் முன் நிற்கிறது..

அப்பா.. அவர்கள் வந்ததும்.. உடனடியாக தளிகை செய்து தங்களுக்கு அளிக்கிறோம்.. சீதா சொல்ல.. அம்மா.. ஜானகி.. பசி பொறுக்கலையே.. இருப்பதைக் கொடும்மா என அந்த ஆத்மா இறைஞ்சி நிற்க.. தன் கையில் இருந்ததைக் கொண்டு பிண்டம் வைத்தாள் மிதிலையின் செல்வி.. மகிழ்ச்சியோடு நகர்ந்தது தசரதனின் ஆத்மா..

இராமன் திரும்ப.. நடந்ததைச் சொல்ல.. நம்பவில்லை ஸ்ரீராமன்.. என் தந்தைக்கு நீ பிண்டம் இட்டதற்கு இங்கே யார் சாட்சி.. இராமன் கேட்க.. ஸ்ரீராமனே.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. இங்குள்ள அனைத்துமே சாட்சி.. இந்தப் பல்குனி நதி.. இந்தப் பசு மாடு.. இந்த ஆலமரம்.. இப்படி சீதா அடுக்க.. இராமனின் கோபத்திற்கு பயந்து மௌனமாய் இருந்தன நதியும்.. பசுவும்.. சாட்சி சொல்லி நிமிர்ந்து நின்றது ஆலமரம்..

சாட்சி சொல்ல மறுத்த நதியும் பசுவும் சபிக்கப்பட்டன.. அதுவரை மனிதனைப் போல பேசிவந்த பசுக்கள் அந்தச் சக்தியை இழந்தன.. பல்குனி நதியாே வறண்டு போனது.. சாட்சி சொன்ன ஆலமரமோ இன்றும் பெருமையுடன் நிற்கிறது..

கயா என்ற இந்த ஊரின் பெயர் காரணம் கயாசுரனை திருமால் அழித்த இடம்.. நாற்பது செமீ அளவுள்ள விஷ்ணுபாதம்.. கயாசுரனை பூமிக்கடியில் பதிக்கும் முன்.. விஷ்ணு தனது திவ்யமான திருவடியை.. கயாசுரனின் மார்பில் வைத்தபோது பதிந்த தடம். இன்றும் நாம் காணலாம்..

கயா என்ற வார்த்தைக்கு அரசமரம் என்ற அர்த்தமும் உண்டு..

ஸ்ரார்த்தம் கொடுக்கும்போது.. பதினாறு பிண்டங்கள் தாய்க்கு மட்டும் தரப்படுகின்றன.. தந்தைக்கு ஹோமம் உண்டு.. தாய்க்கு அது கிடையாது.. இன்று ஸ்ரார்த்தம் செய்து வைத்த பிரகஸ்பதி தாய்க்கு பிண்டம் வைப்பது எத்தனை முக்கியமானது என்றும்.. அந்தப் பதினாறில் எட்டு அவள் தன் வயிற்றில் வைத்து நம்மைக் காத்ததற்கும்.. பிறப்பிற்குப் பின்னர் நம்மை வளர்க்க அவள் பட்ட பாட்டிற்காக மிச்சம் எட்டு என்றும் தெளிவாகச் சொன்னார்..

தாய் நம்மைப் பெறுவதற்கு பட்ட பாட்டினைப் பற்றி அவர் சொல்லச் சொல்ல என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.. ஒரு மகனாய் என்னால் அழத்தான் முடிந்தது..

அந்தப் பல்குனி நதி.. அந்த ஆலமரம்.. இரண்டிற்கும் ஸ்ரார்த்தம் செய்யப்பட்ட பிண்டங்கள் சேர்க்கப்படுன்றன.. மூன்றில் இரண்டு பங்கு இங்கே போக.. ஒரு பங்கானது விஷ்ணுவின் பாதத்தில்.. அந்தப் பாதத்தின் அருகே ஒரு சின்ன ஓட்டைதான் இருக்கிறது.. பலராலும் இடப்படுகின்ற இந்தப் பிண்டங்கள் அந்த ஒற்றை ஓட்டை வழியே வெளியேறுகிறது.. அது எங்கே போகிறது.. எப்படிப் போகிறது என்பது பெருமான் மட்டுமே அறிவார்..

அந்த நதி.. அந்த ஆலமரம்.. என் இனிய நண்பர்களுக்காக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.. புகைப்படம் எடுத்து நாம் எல்லோரும் ஸேவிக்கும்படியாக செய்வித்த சிரஞ்சீவி. ஸ்ரீவத்ஸனுக்கு பல்லாண்டு.. பல்லாண்டு..

அன்புடன் கோமான்..

–subham–

tags கயா ஸ்ரார்த்தம்., .Facebook item, கோமான்..

Leave a comment

Leave a comment