
Post No. 13,550
Date uploaded in London – 16 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –30
உண்மை என்பதை ஒரு முக்கிய குறிக்கோளாகக் கொண்ட ஒரே மதம் இந்து மதம் மட்டுமே. ஏனெனில் குருகுலத்தில் ஐந்து வயதுப் பையன் நுழைந்தவுடன் வாத்தியார் சொல்லித் தரும் முதல் வாக்கியம் சத்யம் வத, தர்மம் சர , ஸ்வாத்யாயான் மா ப்ரமதஹ என்பதாகும்.தைத்ரீய உபநிஷத்தில் உள்ள இந்த மந்திரத்தின் பொருள்:
‘सत्यं वद। உண்மையே பேசு;
घर्मं चर। தர்மத்தைக் கடைப்பிடி;
स्वाध्यायान् मा प्रमदः।’ ‘சோம்பேறித்தனத்துக்கு இடம் கொடுக்காதே
அடுத்ததாக மாணவர்கள் கற்றுக்கொள்வது :
. ‘मातृदेवो भव- மாத்ரு தேவோ பவ – தாயார் தெய்வம்
। पितृदेवो भव। – பித்ரு தேவோ பவ – தந்தை தெய்வம்
आचार्यदेवो भव। – ஆசார்ய தேவோ பவ — ஆசிரியர்/ வாத்தியார் தெய்வம்
अतिथिदेवो भव।’ – ‘அதிதி தேவோ பவ – விருந்தாளி தெய்வம்
இதுவும் தைத்ரீய உபநிஷத் மந்திரம் (1-11) ஆகும்
இதை அப்படியே தமிழிலும் நம்மவர்கள் மொழி பெயர்த்தனர்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே-
என்று திருமந்திரத்தில் திருமூலர் செப்புகிறார்.
விருந்தோம்பல் (அதிதி தேவோ பவ ) என்பதை உலகில் எங்கும் சிறுவர்களுக்கு கற்பித்ததில்லை. திருக்குறள், நாலடியார் முதலிய நீதி நூல்களில் இதற்கென ஒரு அத்தியாயமே ஒதுக்கியது உபநிஷத் மந்திரத்திற்கு வலுச் சேர்க்கிறது.
விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ஸத்ய / உண்மை என்ற சொல் குறைந்தது எட்டு நாமாக்களிலாவது வருகிறது.
SATHYAMEVA JAYATE- INDIAN EMBLEM
1.சத்யஹ – நாம எண் 106-
கடவுள் என்பவர் ஸத்யம் / உண்மை வடிவானவர்.
தைத்ரீய உபநிஷத் சொல்கிறது
சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம .= இறைவனே உண்மையின் வடிவம்;அறிவின் வடிவம்; எல்லையற்ற பரம்பொருளின் வடிவம் ; பிரம்ம = கடவுள் – இறைவன்- ஆண்டவன்
மீண்டும் 2-6-1 மந்திரத்தில்
ஸச்ச த்யச்சா பவேத் = அருவமும் உருவமும் ஆனவர்;
ஐதரேய ஆரண்யகம் 2-1-56 சொல்வதாவது
ஸதிதி ப்ராணாஹா தீத்யன்னம் . யமித்யஸா வாதித்யஹ = ஸத் -பிராணன் /உயிர் , ; இதி -அன்னம் ; யம் – சூரியன் ஆகையால் ஆண்டவன் என்பவன் உயிர், உணவு, ஒளி ரூபத்தில் உள்ளான்
xxxx
2. சத்யஹ – நாம எண் 212-
உண்மையின் ஒட்டு மொத்த வடிவமாக உள்ளவர்.
தஸ்மை சத்யம் பரமம் வதந்தி — ஆகையால் சத்யமே உயர்ந்தது
அல்லது பிருஹதாரண்யக உபநிஷத் 2-3-6 சொல்கிறது:
ப்ராணா வை சத்யம் தே ஷாம் ஏஸ ஸத்யம் – பரமாத்மனே சத்யம்
(உண்மையை கடவுள் என்று சொல்லும் ஒரே மதம் இந்துமதம் . ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உண்மையைக் கடைப்பிடிக்காவிடில் என்ன நிகழும்? அரசியல்வாதிகளும், ஆளும் அரசாங்கமும் சொன்ன சொல்லக் காப்பாற்றாவிடில் என்ன நிகழும் ? சூரியனும் சந்திரனும் கிரகங்களும் அவைகள் ஏற்றுக்கொண்ட பாதைகளை பின்பற்றாவிடில் என்ன நிகழும்? என்று யோசித்துப் பார்த்தால் இதன் பொருள் விளங்கும்.
ஸத்ய வ்ரதம் ஸத்யபரம் த்ரி ஸத்யம் ஸத்யஸ்ய யோனிக்கு நிஹிதம் ச ஸத்யே .
ஸத்யஸ்ய ஸத்யம் ருத ஸத்யநேத்ரம் ஸத்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபந்நாஹா — என்று பாகவதம் 10-2-26 சொல்கிறது
xxxx
3. சத்ய பராக்ரமஹ–நாம எண் 213–
வீண் போகாத பராக்ரமம் உடையவர்
xxxx
4.ஸத்ய தர்ம பராக்ரமஹ –நாம எண் 289–
பொய்க்காத ஞானம் முதலிய குணங்களும் வீரச் செயல்களும் உடையவர் தர்மங்கள் எனப்படும் தமது கல்யாண குணங்களும்பராக்கிரமம் எனப்படும் திவ்ய சேஷ்டிதங்களும் வீண் போகாமால் உலகத்தை உய்விக்கும்படி இருப்பவர் என்பது பட்ட பாஸ்கரர் உரை.
xxx
5.ஸத்ய ஸந்தஹ- நாம எண் 510-
சங்கல்பம் தவறாதவர் .
.ஸத்ய வ்ரதம் .ஸத்ய பரம் த்ரி.ஸத்யம் .ஸத்யஸ்ய யோனிம் நிஹிதம் ச .ஸத்யே
ஸத்யஸ்ய ஸத்யம் ருத ஸத்யநேத்ரம் ஸத்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபன்னாஹா
–பாகவதம் 10-2-27
ஸத்யகாமஹ ஸத்யஸங் கல்பஹ — சாந்தோக்ய உபநிஷத் 8-1-5
சீதையே ! நான் உயிரையும் விடுவேன் ; உன்னையும் விடுவேன் ; லெட்சுமணனையும் விடுவேன் ; பிரதிக் ஞை
செய்தபின் அதை விட்டேன் –ஸ்ரீ ராமாயணம்
6.ஸத்ய ஸங்கல்பகஹ –
அவருடைய ஸங்கல்பம் நிறைவேறியே தீரும்
xxxx
ஞானானாம் உத்தமம் – நாம எண் —454–
உத்தம ஞான வடிவினர்.
ஸத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம -தைத்ரீய உபநிஷத் 2-1
பிரம்மம் என்பது உண்மை; அறிவு மயமானது; வரம்பற்றது/ எல்லையிலாதது .
என் கருத்து
இந்த சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம — சத்ய சாய்ப்பாபா பஜனைகளில் பாடப்படுவதால் மிகவும் பிரபலமாகிவி ட்டது . அவரே இதை பாடு வதும் உண்டு
xxxx
ஸத்ய தர்ம — நாம எண் — 529-
உண்மையான தர்மம் ஞானம் இவற்றை உடையவர்.
பட்டபாஸ்கரர் சொல்கிறார்- தன்னை வந்ததடையும் மக்களுக்கு , சரணாகதி கொள்கையை ஆரம்பம் முதல் கடைசிவரை கடைப்பிடிப்பவர். (விபிபீஷண சரணாகதி முதலியன )
xxxx
8.ஸத்யஹ — நாம எண் 869–
நல்லோர்க்கு நல்லவர். ஸத்யத்திற்கு ஆதாரமாய் இருப்பவர்
பட்ட பாஸ்கரர் சொல்கிறார்- ஸத்யத்தில் அவர் நிலை பெற்றிருக்கிறார் ; அவரிடத்தில் ஸத்யம் நிலை பெற்றிருக்கிறது.
xxx
ஸத்ய தர்ம பராயணஹ — நாம எண் –870-
ஸத்தியத்தையும் தர்மத்தையும் முக்கியமாக்க கொண்டவர்
xxxx

ஓம்
இந்தியாவில் உதித்த எல்லா மதங்களும் ஓம் என்னும் பிரணவத்தைப் போற்றித் துதிக்கின்றன. இதுவும் கர்மா, மறுபிறப்புக் கொள்கையும் இந்து, புத்த, சமண, சீக்கிய மதங்களுக்குப் பொதுவானவை.
தமிழில் திருவாசகம் முதல் பாடல் ஓம் என்னும் மந்திரத்தில் துவங்கி ஓம் என்னும் ஓரெழுத்தில் கடைசி பாடல் முடிகிறது .திரு மந்திரத்தில் 300 பாடல்களுக்கு மேல், ஓம் என்னும் ஏகாக்ஷரம் பற்றியவை.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் (வி.ச)
பிரணவ – நாம எண் 409-
ஓம் என்று ஒலிப்பவர் ; ஓம் என்ற மந்திரத்தால் வணங்கப்படுகிறவர்.
கருவினைச் சிதைத்த பாவமும் கூட ஒரு மாதத்துக்கு 16 பிராணாயாமம் செய்யும்போது ஓம் என்னும் பிரணவத்தை உச்சரிப்பதன் மூலம் அகலும் என்று மனு கூறுகிறார்.
सव्याहृतिप्रणवकाः प्राणायामास्तु षोडश ।
अपि भ्रूणहनं मासात् पुनन्त्यहरहः कृताः ॥ 11-२४८ ॥
savyāhṛtipraṇavakāḥ prāṇāyāmāstu ṣoḍaśa |
api bhrūṇahanaṃ māsāt punantyaharahaḥ kṛtāḥ ||Manu 11- 248 ||
Sixteen ‘Breath-Suppressions’ with the Vyāhṛtis and the Praṇava, performed daily, purify, in a month, even the ‘murderer of the embryo’ (Brāhmaṇa).—(248)
பிரணாம் (வணங்குதல்) செய்யும்போது வேதங்கள் ஓம் சொல்லுவதால் இதைப் பிரணவம் என்று அழைப்பதாக ஸநத்குமார சொல்கிறார்.
வேதங்கள் அவரை வணங் குவதால் பிரணவம் எனப்படுகிறது என்று சங்கரர் சொல்கிறார்.
—subham—
Tags- விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –30, ஓம் பிரணவம், மனு