Post No. 13,810
Date uploaded in London – 24 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அடச் சீ, கழுதை! கழுதை பற்றி எட்டு ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!( Post No.13,810)
முதலில் இரண்டு நியாயங்களைக் காண்போம்.
ஸம்ஸ்க்ருதத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லாத நியாயங்கள் சுமார் ஆயிரம் உள்ளன. அருந்ததி நியாயம் , மர்கட நியாயம் முதலியன பலருக்கும் தெரிந்திருக்கும் . கழுதை நியாயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .
रासभरतितन्यायः ராசபரதிதந்யாயஹ என்பது இதன் பெயர்
கழுதை கத்துவது முதலில் உரத்த குரலில் துவங்கும்; பின்னர் குறைந்துகொண்டே வரும்; ரோட்டில் ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ்கார் சங்குகள் ஒலிப்பதைக் கேட்கிறோம்; அவை தூரத்தில் செல்லச் செல்ல ஒலி குறைந்து கொண்டே வரும்.; ஆக தற்காலத்தில் ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ் கார் நியாயம் என்று கூடப் பெயர் வைக்கலாம்.
இதன் கருத்து சில விஷயங்கள் முதலில் பெரிதாகப் பேசப்படும். நாட்கள் செல்லச் செல்ல சத்தம் குறைந்துகொண்டே வரும்.
பத்திரிகைகளில் இதை நன்றாகவே பாக்கிறோம். முதலில் பெரிதாக அடிபடும் விஷயங்கள் முடிவு தெரிவதற்குள் அடுத்த கழுதை வந்து சப்தம் போடுகிறது!
****
புரிடான் கழுதை முரண்பாடு
சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பிரெஞ்சு தத்துவ ஞானி ஜான் புரிடான் ஒரு கழுதை முரண்பாட்டைச் சொன்னார்.
பசியால் வாடும் ஒரு கழுதை நடுவில் நிற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு சமதூரத்தில் ஒரு புறம் தண்ணீர் எதிர்ப்புறத்தில் உணவு வைப்போம். அது எந்தப் பக்கம் போகும்?
அவர் சொல்கிறார் எந்தப் பக்கமும் போகாமல் செத்து விடும்.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் நவீன கால உரைகாரர்கள் சொல்லுவர்.
இரண்டு கழுதைப் பேர்வழிகள் தேர்தலில் நிற்கிறார்கள்; நடுவில் நிற்கும் கட்சி சாரா வாக்காளர் யாருக்கும் வோட்டுப் போடாமல் இருந்து விடுவார் இதுதான் புரிடான் கழுதை முரண்பாடு “Buridan’s ass” or “Buridan’s donkey”:
The French philosopher Jean Buridan (1300-1358) is the namesake of the philosophical paradox known as “Buridan’s ass” or “Buridan’s donkey”:
The paradox: A hungry and thirsty donkey is placed exactly between a stack of hay and a pail of water. Because there’s no reason to choose one over the other, the donkey is unable to decide and starves to death.
****
வேண்டாத ஆறு
1.பாலஸகித்வம் அகாரண ஹாஸ்யம் ஸ்திரீஷு விவாதம் அஸஜ்ஜன சேவா
கர்தப யானம் அஸம்ஸ்க்ருத வாணீ ஷட்ஸு நரோ லகுதாம் உபயாதி
மனிதனை இழிவு அடைய வைக்கும் ஆறு செயல்கள் :
1.சிறுவர்களுடன் நட்புகொண்டு அவர்களுடன் திரிவது;
2.காரணமின்றி சிரிப்பது;
3.பெண்களோடு வாக்குவாதம் செய்வது;
4.கெட்டவனுக்கு பணியாற்றுவது / சேவை செய்வது;
5.கழுதை மீது சவாரி செய்தல்;
6.சம்ஸ்க்ருத மொழி அறிவு இல்லாமல் அதைப் பயன்படுத்துவது;
ஆகிய ஆறும் ஒருவரை நகைப்புக்குள்ளாகி விடும்.
ராமாயணத்தை பலரும் ராமயாணம் என்பர். வேங்கடாசலபதியை வெங்கடாஜலபதி என்பர் ; இது ஸம்ஸ்க்ருதம் அறியாமையைக் காட்டிவிடும் கேது எனற கிரகத்தை KETU என்று சொல்லவேண்டும்; KEDHU என்று சொல்லக்கூடாது.
****
2.முக்தா பலைஹி கிம் ம்ருக பக்ஷிணாம் ச
மிஷ்டான்ன பானம் கிமு கர்த்தபானாம்
அந்தஸ்ய தீபோ பதிரஸ்ய கீதம்
மூ கஸ்ய கிம் சாஸ்த்ரா கதா ப்ராஸங்கஹ
விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் முத்துக்களால் பயன்?
கழுதைகளுக்கு அறுசுவை உணவைப் படைப்பதால் என்ன பயன்?
குரு ட னுக்கு பலவண்ண விளக்குகளும்
செவிடனுக்கு இனிய சங்கீதமும் பயன் தருமா ? தராது;
அது போல
முட்டாளுக்கு சாஸ்திர அறிவுரைகளை எடுத்துரைப்பதும் பலன் தராது .
நீதி – நாய்வாலை நிமிர்த்த முடியாது
பாத்திரம் அறிந்து தானம் செய்
****
3.வாங் மாதுர்யாத் சர்வ லோக ப்ரியத்வம்
வாக் பாருஷ்யாத் சர்வ லோக அப்ரியத்வம்
கிம் வா த்ரவ்யம் கோகிலே நோ பநீதம்
கோ வா லோகே கர்தபஸ்யா (அ )பராதஹ
குயிலினிடத்தில் அதன் குரல் இனிமையால் எல்லோருக்கும் ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது ;
கழுதையின் குரலால் ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது ;
அதே போல ஒருவரின் இனிமையான சொற்களால் எல்லோருக்கும் மகிழ்ச்சியும் கடுஞ் சொற்களால் வெறுப்பும் உண்டாகின்றது
(கருத்து- எப்போதும் இனிமையே பேசுக)
*****
கழுதையும் குதிரையும்
4.போதித்தோ (அ)பி பகு சூக்தி விஸ்தரைஹி
கிம் கலோ ஜகதி சஜ்ஜனோ பவேத்
ஸ்நாபிதோ(அ)பி பஹூசோ நதி ஜலைஹி
கர்த்தபஹ கிமு ஹயோ பவேத் க்வசித்
எத்தனை நல்லுபதேசம் செய்தாலும் முட்டாள் திருந்த மாட்டான்; எவ்வளவு புண்ணிய நதி நீர்களில் கழுதையைக் குளிப்பாட்டினாலும் குதிரை ஆகாதல்லவா!
****
கழுதையின் தூசி
5.அஜா ரஜஹ கரா ரஜஹ ததா சம்மார்ஜநீ ரஜஹ
தீப மஞ்சகயோஹா சாயா சக்ரஸ்யாபி ச்ரியம் ஹரேத்
கழுதையின் தூசி , ஆட்டின் தூசி துடைப்பத் தூசி– இவை பட்டாலோ, விளக்கு அல்லது கட்டிலின் நிழல் பட்டாலோ இந்திரனின் செல்வம் கூட அழிந்து விடும் ( நம் மீது பட்டால் நாம் எம்மாத்திரம்?)
****
6.ஏகேனோபி ஸுபுத்ரேண சிம்ஹீ ஸ்வபிதி நிர்பயம்
ச ஏவ தசபிப் புத்ரைர் பாரம் வஹதி கர்த்தபீ.
–சுபாஷித ரத்ன சமுச்சயம்
ஒரு குட்டியை என்ற பெண் சிங்கம் அச்சமின்றி உறங்கும். ஆனால் பத்து குட்டிகளை ஈன்றாலும் கழுதை தனது பாரத்தை தானே சுமக்கவேண்டடிவரும்.
(அவரவர் வினைப்பயன் இது என்பது கருத்து)
****
7.யதா கரச் சந்தன பாரவாஹீ பாரஸ்ய வேதா ந து சந்தனஸ்ய
ததைவ லோகா பஹுஸாஸ்த்ரயு க்தாஹா தர்மேண ஹீனாஹா பசுபிஸ் சமானஹா —சமயோசித பாஹ்ய மாலா
சந்தனத்தைச் சுமந்து செல்லும் கழுதைக்கு அதன் சுமை மட்டுமே தெரியும்; அதன் வாசனை தெரியாது. அது போலப் பலர் , நூல்களைக் கற்றாலும், அதன் உட்பொருள் தெரியாமல் விலங்குகளைப் போல அலைகிறார்கள்.
ஒப்பிடுக —
கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி /கற்பூர வாசனை?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமா?
****
8.கரம் லிம்பாமி கந்தேன புஷ்பய் ராபூஷாயாமி தம்
ருஷ்டஹ ச பத்ப்யாம் மாம் ஹந்தி மூர்கபூஷா பலம் த்விதம்
கழுதைக்கு சந்தனம் பூசுகிறேன்; அதை மலர்களால் அலங்கரிக்கிறேன் என்று போனால் அது கோபத்தால் கால்களைக் கொண்டு எட்டி உதைக்கிறது. முட்டாளை வழிபட்டு அவனை உயர்ந்த இடத்தில் வைப்பவனுக்கும் இதே கதிதான்.
—subham—
Tags- அடச் சீ, கழுதை! கழுதை, எட்டு, ஸம்ஸ்க்ருத கவிதைகள், கழுதை நியாயம், Buridan, donkey, ass, புரிடான் கழுதை முரண்பாடு